













அழகன் முருகனின் வாகனம் அழகு மயில்..
உள்ளம் கவர் கள்வனாம் கண்ணனின் மகுடத்தில் வீற்றிருப்பதும் மயிலிறகு..
கல்விக்கடவுளாம் கலைமகள் வீற்றிருப்பதும் மயில் மீதுதான்..
நம் தேசீயப்பறவையும் மயில்தான்..!
குறிப்பாக, மயில் போன்ற உடல் அமைப்பு, கழுத்து, தோகைகள் என மூலவரை பார்த்த வண்ணம். மயில் தோற்றத்தில் தேனீக்களை கண்டு ரசித்து பரவசமடைந்து, "அரோகரா' கோஷமிட்டு முருகனையும், தேனீக்களையும் வணங்கிச் சென்றனர். வடபழனி முருகன் கோவிலுக்குள் தேன்கூடு எங்கும் இல்லாத நிலையில், திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள், மயில் தோற்றத்தில் வந்து அமர்ந்து ஆச்சர்யமளித்தன..! இந்தியாவில் மட்டுமல்ல ஆச்சர்யக்காட்சி..!ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் உள்ள பாலமுருகன் கோயிலில் சஷ்டியன்று, ஒரு மயில், சுவாமி சன்னிதானத்திற்கு வந்து சிறிது நேரம் நின்ற அந்த மயில், பின்னர் வெளியே வந்து, சுவாமி முன் வைக்கப்டடிருந்த தீர்த்தத்தைப் பருகியது.

