

ஓம் க்லீம் தேவகீஸுத கோவிந்த
வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம்
க்ருஷ்ண த்வாமஹம் சரணம் தத: தேவதேவ
ஜகன்னாத கோத்ர வ்ருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்
என்னும் சந்தான கோபல மந்திரம் ஜபித்து சந்தான கோபால பூஜை செய்ய புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் ..!
முகப்பேர் ஸ்ரீ சந்தான லஷ்மி ஸ்ரீ னிவாச பெருமாள் கோவில் சென்றிருந்தோம் ....
சுமார் 200 ஆண்டுகள் பழமையானதாம் ...முகப்பேர் கிராமத்தலைவர் கனவில் மஹாவிஷ்ணு அருளியபடி தலைவரின் நிலத்தில் புதையுண்டு இருந்த ஒன்பதரை அடி உயரத்துடன் அபயஹஸ்ததுடன் கிடைத்த அருமையான விக்ரஹம் சந்தானஸ்ரீ னிவாசப்பெருமாள் மூலவராக அருள்பாலிக்கிறார் ..

ஐந்து நிலை ராஜகோபுரமும் அழ்கான யானை சிலைகளும் வரவேற்கின்றன்..
புத்திரபாக்கியம் வேண்டி வந்தவர்களுக்கு வேண்டிய வரம் அருளியதால் சந்தான ஸ்ரீனிவாசன் என்ற பெயர் ஏற்பட்டதாம் ...
மூலவர் திருப்பதியை நினைவூட்டும் வகையில் திருக்காட்சி அளிக்கிறார்...
மூலவர் திருப்பதியை நினைவூட்டும் வகையில் திருக்காட்சி அளிக்கிறார்...
மிகச்சிறப்பாக நிர்வகிக்கப்படும் ஆலயம் ..
பலிபீடம் என்பது மூலவருக்கு நைவேத்தியம் செய்த பிரசாதத்தை அஷ்டதிக்பாலகர்களும் , தேவர்களும் அமர்ந்து ஏற்கும் இடம் என்வே அங்கு தீபம் ஏற்றக்கூடாது என்று அறிவுப்பு செய்திருக்கிறார்கள்..
துலாபாரம் அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்..
தங்கத்தால் ஆன பெருமாளின்
திருப்பாதங்கள் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன...
திருப்பாதங்கள் ஜொலித்துக்கொண்டிருக்கின்றன...
சந்தான விநாயகர் , அனுமன் , சன்னதிகள் உண்டு .. ஸ்ரீ சந்தான ல்ஷ்மிதாயார் மிகுந்த வரப்பிரசாதி ..
ஆண்டாள் சன்னதி அழகுற திகழ்கிறது ..
அனைத்து சன்னதிகளின் தனித்தனி விமானங்களில் சூரியஒளிக் கதிரகள் கிடைக்கும் வகையில் சிறப்புடன் அமைத்திருக்கிறார்கள் ..
அஷ்டலஷ்மிகளும் மேல் விதானத்தில் அழகுற அருள்பாலிக்கிறார்கள்..
நவக்கிரஹ சன்னதி அருமையாக இருக்கிறது ...
Santhana Gopala Pooja will be performed On the days of Pournami(Full Moon Day), and stars Thiruvonam, Punarpoosam, Swathi, Revathi between
morning 6.00 a.m. to 11.00 a.m.
மகப்பேறு என்றால் குழந்தை வரம் என்று பொருள்.முகப்பேர் பகுதியில் உள்ள பெருமாள் குழந்தை வரம் அளிப்பவர் என்பதால் ஏற்பட்ட பெயராம் . மகப்பேறு என்பதே முகப்பேர் என மருவியதாக கருத்து நிலவுகிறது.
ஸ்ரீ சந்தான சீனிவாசப்பெருமாள் ஆலயம் ,
வெள்ளாளர் தெரு , முகப்பேர்
சென்னை 600 037
போன் : 26248117