Monday, July 2, 2012

ஸ்ரீவியாச பௌர்ணமி பூஜை





'
வ்யாஸம் வஸிஷ்டநப்தாரம் ஸக்தே பௌத்ர மகல்மஷம் | 
வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே’


என்ற விஷ்ணு சகஸ்ர நாமத்தில் வியாசர் 
விஷ்ணுவின் அம்சம் என அறிகிறோம்..

வேதங்களைப் பிரித்து தொகுத்தளித்த புண்ணிய புருஷர்வியாசர்
வியாசர் என்றால் வேதங்களைப் பகுத்து விளக்கமளிப்பவர் என்று பொருள்படும்


வியாசர் சுக மகரிஷியின் தந்தை 


வேதங்களின் உட்பொருளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக எடுத்துச் சொல்பவரை வியாசர் என்றார்கள்.
வேத சாரங்களை எளிதாக புரியவைக்க 18 புராணங்களைப் படைத்தார்; 

மகாபாரதம் எனும் காலத்தால் அழியாத காவியத்தை அளித்தார். 


வேதங்களைத் தொகுத்துத் தந்ததால்- வேத வேதாந்த சூத்திரம் எழுதியதால்- தான் உருவாக்கிய மகாபாரதத்தை விநாயகப் பெருமானைக் கொண்டு மேரு மலையில் எழுதச் செய்ததால்- பதினெட்டுப் புராணங்களைத் தொகுத்துத் தந்ததால் வேதவியாசருக்கென்று சிறப்பான ஒரு இடம் உண்டு.


மகத்துவம் மிக்க ஸ்ரீவியாச பகவானுக்கு, மூன்று மத ஆச்சார்யர்கள் செய்யும் பூஜையே ஸ்ரீவியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதமாகும். 


 துறவிகள் வியாச பூஜை செய்வார்கள்.

சாதுர்மாஸ்ய விரதம் என்பது மகான்கள், துறவிகள் ஓரிடத்தில் நான்கு மாதங்கள் தங்கி வேதங்களை ஆய்வு செய்வதாகும். 


இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். 


மழைக்காலத்தில் பாத யாத்திரையாகப் போகும்போது, பல சிறு சிறு பூச்சி வகைகள் மிதிபட நேரிடும் என்று அஞ்சி, இதைத் தவிர்க்க சாதுக்கள் ஒரே இடத்தில் இருந்து சாதுர்மாஸ்யம் மேற்கொள்வார்கள்.

குரு பூர்ணிமா என்று சொல்லப்படும் வியாச பௌர்ணமி நாளில் எங்கிருந்தாலும் குருவை மனதார வணங்கினால், தாங்கள் பெற்ற கல்விச் செல்வம் மேன்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வு ஒளிமயமாகத் திகழும் 

ஸ்ரீவேத வியாசருக்கு மிக விசேஷமான ஆனி மாதம் பௌர்ணமி அன்று ஆரம்பமாகும் ஆனி பௌர்ணமியை வியாச பௌர்ணமி எனப் போற்றுவர். 

குரு பூர்ணிமா, வியாச பௌர்ணமி என்று போற்றப்படும் இந்நாளில், நமக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களை வணங்கு வது- நினைவு கூர்வது சிறந்தது 
சந்நியாசி ஒருவரின் வயது அவர் செய்த வியாச பூஜையின் எண்ணிக்கையைக் கொண்டே கணக்கிடப்படும்.
மகாபாரதத்தை இயற்றிய வியாசர் சப்தரிஷிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர். 


இவர் மகாவிஷ்ணுவின் அருள் பெற்றவர். இவரின் இயற்பெயர் கிருஷ்ண துவைபாயனர் என்பதாகும். இவர் கறுமை நிறத்தவர்; பராசரரின் மகன்.



பதினெட்டாவது புராணமாக ஸ்ரீமத் பாகவதத்தைஇயற்றி பக்தி யென்ற தத்துவத்திற்கே வேதமாக்கியவர் வியாசர் ..


பராசர மகரிஷியின் பெருமைமிகு புதல்வர் வியாசர் ..


வியாசரின் பெருமையைப் பற்றி விஷ்ணுபுராணத்தில் என் பிள்ளை வியாசரைப் பற்றி நீங்கள் சாமானியமாக நினைக்காதீர்கள். விஷ்ணுவினுடைய அவதாரம் அவர் இல்லையென்றால், மகாபாரதம் என்ற அவ்வளவு பெரிய கிரந்தத்தை அவர் இயற்றியிருக்க முடியுமா? ஆகையால், அவரை நாராயணன் என்றே நீங்கள் உணருங்கள்,'' என்கிறார். தந்தையான பராசர மக ரிஷி !

திருமாலின் அம்சங்கள் வியாசரிடத்தில் நிறைந்திருந்தபடியால், அவரை அனுப்பிரவேச அவதாரம் என்று அழைக்கிறோம்..ஒருவருடைய உயர்ந்த குணங்கள் இன்னொருவரிடம் அப்படியே தொற்றிக்கொள்ளுமானால் அதற்கு அனுப்பிரவேச அவதாரம்' என்று பொருள் ..


நாராயணனிட மிருந்து பிரம்ம தேவன் தோன்றி னார்; பிரம்ம தேவனி டமிருந்து வசிஷ்டர் பிறந்தார்; வசிஷ்டரின் மகன் சக்தி; சக்தியின் மகன் பரா சரர்; பராசரருக்கும் மீனவப் பெண் சத்தியவதிக்கும் பிறந்தவர் வியாசர். 


வியாசரின் தாய் சத்தியவதி...


தீர்த்தயாத்திரை வந்த பராசர முனிவர்,பிதுர் சாபத்தினால் (முன்னோர் சாபம்) மீன்வாடை நோயாக தொற்றிக் கொண்ட -மீனின் வயிர்றில் பிறந்த " "மச்சகந்தி'' என்றொரு பெயருடன்  திகழ்ந்த தாய்க்கு உத்தமமான நேரத்தில் பராசரரின் யோகசக்தியால், பிறந்தவர்  வேதங்களை நமக்களித்த வியாசர். 


அன்றுமுதல் மச்சகந்தியின் உடலில் நறுமணம் வீசத் தொடங்கியது. ஒரு யோஜனை தூரம் அந்த நறுமணம் பரவியதால் அவள் ""யோஜனகந்தி'' என்று அழைக்கப் பட்டாள்.


பராசரருக்கும், மச்சகந்திக்கும் பிறந்த மகன், பிறக்கும் போதே ஏழு வயது குழந்தையாக இருந்தார்.  தந்தை ஆசியளித்து ஒரு கமண்டலத்தைப் பரிசாக வழங்கினார். பாசம் மேலீட்ட் தாயை "மீனவப்பெண்ணான நீ என்னைத் தொடக்கூடாது!'' என்று தடுத்த வியாசருக்கு "தாயும் தந்தையும் சமம்' என்று முனிவர் பிள்ளைக்குப் போதித்தார். 
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்தார் வியாசர் ... 


தன்னால் மனம் வருத்தம் அடைந்த தாய்க்கு எப்போது நினைத்தாலும் அப்போதெல்லாம் தாய் முன் உடனே தோன்றி விடுவேன்!'' என்கிற வரம் அளித்தார் வியாசர் ...


தனது நுண்ணறிவால் மனித குலத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கினார். இந்து மதத்தின் ஆதிகுருவாக வேதவியாசர் போற்றப்படுகிறார்.  


ஆஞ்சநேயரைப் போல சிரஞ்சீவி பட்டம் பெற்றவர். சிரஞ்சீவி என்றால் என்றும் வாழ்பவர் என பொருள். 


கலியுகம் தோன்றி எவ்வளவோ ஆண்டுகளாகி விட்ட போதிலும் வியாசரின் மகாபாரதம் இன்றும் மக்களுக்கு வேதம் போல் விளங்குகிறது. 



ஆஷாட மாதம் என்படும் ஆனி பவுர்ணமியின் குருவை வணங்கவேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. 


வடமாநிலங்களில் ஆனி பவுர்ணமியை குரு பூர்ணிமா என சிறப்பாக கொண்டாடுகின்றனர். 


ஞானத்தை உணர்ந்துவதால் குரு பரம்பொருளாக சொல்லப்படுகிறார். 


மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தந்தைக்கு அடுத்தபடியாக குருவே வருகிறார். அன்னை மீது கொள்ளும் பக்தியால் இப்பிறவியில் இன்பம் பெறலாம். தந்தை மீது கொள்ளும் பக்தியால் மறுபிறவியில் இன்பம் பெறலாம். குரு பக்தியால் பிறப்பற்ற நிலையை எய்தலாம். 



வியாச காசியில்வியாசருக்கு நினைவுச் சின்னமும் சமாதிபோல் அமைத்திருக்கிறார்கள். அந்தச் சமாதியில் அறுபத்து நான்கு கலைகள் கொண்ட சக்கரம் உள்ளது. வேத வியாசர் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றவர் என்பதை இந்த அபூர்வச் சக்கரம் எடுத்துக் காட்டுகிறது.

வியாச காசி வாரணாசியில் கங்கை நதியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஊர். மிகச் சிறந்த தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்திற்கு படகில் செல்லலாம். சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ளது.

 காசிக்கு வரும் பக்தர்கள் படகிலேயே வந்து வியாச காசியைத் தரிசித்துச் செல்கிறார்கள்.


ரிஷிகேசத்திலிருந்து புனித கங்கை ஏழு கிளைகளாகப் பாய்ந்து ஓடுகிறது. பிரவாகம் எடுத்தோடுகிற இந்தப் புனித கங்கையின் கரையில், ஹரித்வார் எனும் புண்ணிய க்ஷேத்திரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள ‘ஸப்த ஸரோவர்’ எனுமிடத்தில், சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில், ஸ்ரீவேதவியாச பகவானுக்கு ஓர் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது..

கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீவேத வியாசர் எழுந்தருளியிருக்க, நான்கு பக்கங்களிலும் நான்கு வேதங்களைப் பிரித்துக் கொடுத்த ஸ்ரீவேத வியாசரின் நான்கு சீடர்களுக்குத் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன. 


 ஸப்த ரிஷிகளான ஸ்ரீகாஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், கௌதமர், ஜமதக்னி ஆகியோருக்கு நான்கு பக்கச் சுவர்களிலும் கண்ணைக் கவரும்படியான திருவுருவங்களை வரைந்து வைத்துள்ளனர். 
 
அஷ்டதிக் பாலகர்களும், துவார பாலகர்களுக்குப் பதிலாக இரண்டு முனி குமாரர்களும் கோயில் முகப்பில் எழுந்தருளியுள்ளார்கள். 


பிராகாரச் சுவர்களில் ஸ்ரீலலிதா தேவியுடன் கூடிய தசரத ராமன், ஸ்ரீநரஸிம்மன், ஸ்ரீவெங்கடாஜலபதி, கீதாச்சார்யன் ஸ்ரீகண்ணன், கீதோபதேசம் மற்றும் ஸ்ரீவியாச பகவானின் வாழ்க்கையில் நடந்த சில முக்கியச் சம்பவங்களையும் சித்திரங்களாகத் தீட்டியுள்ளனர்.
 




Sunday, July 1, 2012

தில்லையம்பல நடராஜர்







அல்லலென் செயும் மருவிணையென் செயுந்
தொல்லை வல்வினை தொந்த்ந்தான் என் செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனாருக்கு
எல்லையில்லாததோர் அடிமை பூண்டேனுக்கே

தில்லை நடன சபாபதியை பற்றி பாடப்பட்டுள்ளன. இறைவனுடைய பெருமைகளையெல்லாம் அந்த ஆயிரம் நாவு படைத்த ஆதிஷேஷனாலேயே முழுதும் கூற முடியாது
Shiva
நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவம் முதலில் தாருகாவனத்தில்தான் நடந்தது. . 

தாருகாவனத்து முனிவர்கள் கடவுள் கிடையாது தாங்கள் செய்கின்ற வேள்விகளினாலேயே எல்லாபலன்களும் கிட்டுகின்றன எனவே கடவுளை வணங்க வேண்டியதில்லை என்று இறுமாந்திருந்தனர். 

முனி பத்தினிகளும் தங்கள் கற்பின் மேல் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். 

அகந்தை கொண்ட முனிவர்களை அஞ்ஞானத்தை போக்க சிவ பெருமான் சுந்தர மூர்த்தியாகவும்(பிக்ஷ‘டணர்), மஹா விஷ்ணு மோகினியாகவும் தாருகவனத்துக்கு சென்றனர் ஐயனின் அழகைக் கண்ட முனி பத்னிகள் மதி மயங்கி, தன்னிலை இழந்து அவர் பின்னே செல்ல தொடங்கினர், 

முனிவர்களும், மோகினியின் மாய அழகிலே ஈர்க்கப்பட்டு அவள் பின்னே சென்றனர்.

 பின் தாங்கள் தோல்வி அடைந்ததை உண்ர்ந்த அவர்கள் ஒரு யாகம் நடத்தி பிக்ஷாடனரையும் , மோகினியையும் கொல்ல முதலில் புலியை அனுப்பினர், அதை தோலாக்கி இடையிலே அணிந்தார் சிவபெருமான், 

மானின் கொம்புகளை உடைத்து அதை சாந்தமாக்கி வலக்கையிலே தாங்கினார், மழுவை இடக்கையிலே ஏந்தினார், வேள்வி குண்டத்தில் இருந்து வந்த பாம்புகள் ஆபரணமாகின, முயலகன் என்ற பூதம் அடக்கப்பட்டு காலிலே மிதிக்கப்பட்டான். 

வேத மந்திரங்களே ஐயனின் பாத சிலம்புகள் ஆயின. 

பிறகு அந்த வேள்வியியே அழித்து அந்த தீயை கையிலே எந்தி முனிவர்களின் அகந்தையை வென்ற பிறகு முதன் முதலில் ஆனந்த தாண்டவம் ஆடினார் 
செம்பவள மேனி எம்பெருமான் என்று புராணங்கள் கூறும் இந்நிகழ்ச்சியே ஆனி உத்திர திருவிழாவின் போது எட்டாம் நாள் நிகழ்ச்சி பிக்ஷ‘டணர் கோலமாக நடைபெறுகின்றது.

ஓம் என்ற பிரணவத்தின் வடிவமே நடராஜர். 

மாயா மலத்தை ஓட்டி, கன்ம மலத்தை சுட்டு, ஆணவ மலத்தை அதன் வலி கெடுமாறு அழுத்தி, ஆன்மாக்களை அருளாலே மேலே தூக்கி ஆனந்தக்கடலிலே மூழ்கியிருக்கச் செய்வதே இறைவன் ஆடும் தாண்டவத்தின் கருத்தாகும். 


திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர், 

அவர் சொல்லச் சொல்ல இதை எழுதியவர் தில்லையம்பல நடராஜப்பெருமானே அந்தணர் வடிவத்தில் வந்து ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதினார். 

"மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியது என்று திருவாசக ஏட்டில் கையெழுத்திட்டு சிற்சபையின் பஞ்சாட்சரப்படியில் வைத்து விட்டு மறைந்து விட்டார். 

திருவாசக ஏட்டைக் கண்ட கோயில் அந்தணர்கள் மாணிக்கவாசகரை அழைத்து திருவாசகத்திற்கு விளக்கம் தருமாறு வேண்டினர். 

அவரும் தில்லை நடராஜரின் சன்னதிக்கு வந்துநின்று "அம்பலக்கூத்தனே" அதன் பொருள் என்று கூறி இறைவனுடன் இரண்டறக் கலந்தார். 
அதனால் "தில்லை பாதி திருவாசகம் பாதி" என்ற பழமொழி உண்டானது. 

திருவாசகம் வேறு, தில்லை நடராஜர் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. திருவாசகம் முழுவதும் சிதம்பரப்பெருமானின் திருவடியையே போற்றுகிறது.