ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்ப்படிகாக்ருதிம்!
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!
ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சார்த்துவதன் தத்துவம்.
A RITUAL IS AN ACTION WHICH DONE WITH INTENTION AND ATTENTION.
சடங்கு என்பது குறிகோளுடனும் கவனத்துடனும் செய்யப்படும் ஒரு கிரியை ஆக விளங்குகிறது...
ஒருமைக்கண் தான் கற்றகல்வி எழுமைக்கும் ஏமாப்புடைத்து என்று பூர்வஜன்ம வாசனையாய் கருவிலே திருவாய் மணக்கும் கல்வி !
கல்வித்தெய்வமாய் கலைமகளின் குருவாய் திகழும் குதிரை முக கடவுளாம் ஹயவதனப் பெருமாளை துதிப்பவர்களுக்கு, "குதிரை வேகம்' என்று சொல்லப்படும் சக்தி ஞான விஷயத்தில் ஏற்படும் ..
திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும்.
அசுவம் என்பதற்கு வாஜி என்ற ஒரு பெயரும் உண்டு,
அசுவம் என்பதற்கு ஒளிக் கதிர் என்ற ஒரு பொருளும் உண்டு
சூரியனைப் பற்றிச் சொல்லும்போது
“ சப்த யுஞ்ஜந்தி ரதம் ஏக சக்ரம், ஏகோ அஸ்வோ வஹதி, சப்த நாமா என்கிறது நூல்.
சூரியனை ஏழு குதிரைகள் இழுத்து வருகின்றன அவனுடைய ஒற்றைச் சக்கரத்தேரை ஒரு குதிரை தான் இழுத்து வருகிறது அதற்குத் தான் ஏழு பெயர் என்பது இதன் பொருள்.
சூரியனுடைய ஒளிக் கற்றையைப் பிரித்தால் ஏழு வர்ணங்களைக் கொடுக்கும் ஒன்று சேர்த்தால் வெள்ளை நிறக் கீற்றாக மாறும் ...
வாஜி என்பதை பிரதி பிம்ப முறையில் பார்த்தால் ஜீவா என்றாகும்.
மூச்சுக் காற்றுக்கும் அசுவம் என்று பெயர்,
சரியான முறையில் பூரக கும்பக ரேசகங்களைச் செய்தால் அறிவு தெளிவுறும் என்கிறது யோக நூல்..
ஏலக்காய்க்குள் இருக்கும் வித்து மூன்று பிளவாக இருக்கும் எனவே .திராவிடி என்ற ஒரு பெயரும் உண்டு,
அந்த மூன்று பிளவுகள் எதனைக் குறிக்கின்றன என்று பார்த்தால் . தொல்காப்பியம் கல்வி பற்றிக் கூறும்போது வேண்டிய கல்வி ஆண்டு மூன்றிறவாது என்கிறது,,
அந்த மூன்று ஆவது அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் என்று உபநிஷத் கூறும் தத்வமஸி என்ற பொருளைச் சுட்டி நிற்கிறது..
எந்த இலட்சியம் கரடானதும் செங்குத்தானதுமான பாதையினைக் கொண்டதோ,
எந்த இலட்சியம் வேதங்களில் “அஹம் பிரம்மாஸ்மி” ” நான் பிரம்மமாகிறேன்” என்றும் “தத்வமஸி! தத்வமஸி!” “நீயே அது! நீயே அது!” என்றும் அழைக்கப்படுகிறதோ, அந்த இலட்சியம் தான் “தனக்குள் இருக்கும் பிரம்மத்தை மலரச் செய்தல்”.
காத்திரு
காற்றை
கவனித்துப்
பார்த்திரு
எதுவாக வேண்டுமோ
அதுவாவாய்
அதுவே தத்வமஸி..
ஐயப்பன் சன்னிதானத்தின் முன்னால் "தத்வமஸி' என்று எழுதப்பட்டிருக்கும். "ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார்' என்பது இதன் பொருள்.
தத்வமஸி கொள்கையை அத்வைதமாக உலகிற்கு வழங்கியவர் ஆதிசங்கரர்.

.
கல்வி கரையில கற்பவர் நாள் சில .
கற்றீண்டு மெய்ஞ்ஞானம் காண்பார் தலைப் படுவார்
மற்றீண்டு வாரா நெறி - திருக்குறள்..
கற்றலாவது
1.கேள்வி,
2.விமர்சம்.
3 பாவனை.
அதாவது கேட்ட கல்வியை
விமர்சித்து (ஆய்ந்து) அதன் பொருளை உள் மனத்தில்
உருவகப் படுத்தலே பாவனை ஆகும்.
உருவகப் படுத்தலே பாவனை ஆகும்.
இதனைத்தான் ஏலக்காய் உணர்த்துகிறது,
பித்தர் சொன்னதும் பேதையர் சொன்னதும்
பத்தர் சொன்னதும் பன்னப் பெறுபவோ என்கிறார் கமபர்...