Sunday, September 1, 2013

திருவருள் பொழியும் திருச்செந்தூர் திருமுருகன்.












அபஸ்மார குஷ்டக்ஷயார்ச: ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந்த:
பிஸாசாஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே


பன்னீர் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் எனகிறா  சுப்பிரமண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் 

பன்னீர்   இலையில் மொத்தம் 12 நரம்புகள் முருக பெருமான் தனது 12 கரங்களால் விபூதிப் பிரசாதத்தை வழங்கியதால் பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். 

பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று பெயர் பெற்றதாம் ..!

இறைவனுடைய பூஜைக்குரிய பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் 
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால்  தனி மகத்துவம் உண்டு..!

பன்னீர் இலை விபூதி பிரசாதம்  காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து  சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

பன்னீர் இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

திருநீற்றைப் பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது ஐஸ்வர்யமான செல்வத்தைச் சேமிப்பது போலாகும் 

திருச்செந்தூரின் கடலோரத்தில் அரசாங்கம் கொண்ட மாயோன் மருகன் -
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும்  உள்ளத் துயரை ஒழித்தருள்வான் ..

ஒருகோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும் 
கடற்செந்தில் மேவிய சேவகன்..
வள்ளிக்கு வாய்த்தவனாய் மயிலேறிய மாணிக்கமாய் ஒளிர்பவன் ..

ஆவணி திருவிழாவின்போது  முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம் ..!

கோவிலில் 3 கொடி மரங்கள் உள்ளன. இரண்டு தங்க கொடி மரம் ஒன்று  செப்புக்கொடி மரம், திருவிழாவுக்கு செப்பு கொடி மரத்தில் கொடியேற்றுவர்.

கொடிப்பட்டம் வெள்ளிப்பல்லக்கில் வைத்து கொண்டுவரப்பட்டு பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேதபாராயணங்கள் பாட, வானவேடிக்கை வெடிக்க அதிகாலை   செப்புக்கொடிமரத்தில் சிவாச்சாரியார் ஆவணித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றுவார்கள்..!

தொடாந்து கொடிமரத்திற்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், வாசனைத்திரவியங்கள் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள்,  சிறப்பு அலங்காரமாகி  மகா தீபாராதனை நடைபெறும்..!

வேதவிற்பன்னர்கள் வேதபாராயணமும், திருக்கோயில் ஓதுவார்கள் திருமுறை பாராயணமும் பாட ஆவணித்திருவிழா துவங்கும் ..!.

அப்பர் சுவாமிகள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதிகளில் உழவாரப்பணி செய்தல் நடைபெறும் ..!

தங்கத்தேரில் எழுந்தருளும் உற்சவ மூர்த்தி ஜெயந்தி நாதர் ஆவார்.
திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.

சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட 
வண்ண மயில் ஏறி வருபவன் திருச்செந்தூர் முருகன்.

சுவாமி குமரவிடங்கபெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதிஉலா வருதல், சிவப்பு சாத்தி   ஊர்வலமும் sஇறப்பான காட்சி ..!

சுவாமி ஆறுமுகநயினார் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வருதலும் தேரோட்டமும்  சிறப்பாக நடைபெறுகிறது.
ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அருளி, தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், சப்பரத்தின் பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் ..!

பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைசாத்தி எழுந்தருளி திருவீதிஉலா சுவாமிக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை கண்கொள்ளாகாட்சி..!

தினமும் உச்சிக்கால பூஜை முடிந்தபின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, "கங்கை பூஜை' என்கின்றனர். 

சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. 
திருச்செந்தூர் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. 

திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். 

அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை  கூறினார். எனவே  "குரு தலமாக' கருதப்படுகிறது. 

 மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார்.
இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால்  
"ஞானஸ்கந்த மூர்த்தி' யாகத்திகழ்கிறார்..!
வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும்
தட்சிணாமூர்த்தி,  மான், மழுவுடன் காட்சி தருகிறார். 

குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால்,
குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும்.







Tiruchendur.Elephant

Saturday, August 31, 2013

ஸ்ரீலட்சுமி கணபதி








ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

ஸ்ரீலட்சுமி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 
12 வது திருவுருவமாகத் திகழ்கிறார்..!

எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம், வரதம், இவற்றையுடையவரும் வெண்மை நிறத்தோடு நீலத் தாமரைப் பூவை ஏந்திய இருதேவிமார்களோடு விளங்கி அருள்புரிகிறார்..!.
லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், 
பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி 
ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், 
மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் 
ஏந்தி தன் இரு புறமும் இரு தேவிகளை அணைத்துக் 
கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். 
லட்சுமி கணபதியை வழிபடுவதால் பணம், பொருள்  அபிவிருத்தியாகும்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உக்கிர தேவதையாக விளங்கியபோது, ஆதி சங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்த வினாயகருக்கு உக்கிரம் தணித்த விநாயகர் என்று பெயர்.  
மனசாந்தி வேண்டுவோர்  உக்கிரம் தணித்த விநாயகரை வழிபடுவது சிறந்த பலன்களைத்தரும்...