Monday, January 7, 2013

திருப்பாவை அமுதம்



தேவஸ்ய மஹிஷீம் திவ்யாம் ஆதௌ கோதரம் உபாஸ்மஹே!
யந் மௌலி மாலிகாம் ப்ரீத்யா ஸ்வீகரோதி ஸ்வயம் ப்ரப:!!

ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை சர்வேஸ்வரரான மகாவிஷ்ணு விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டார்.. அந்த பெருமாளின் பெருமை மிக்க அரசியான ஆண்டாள் நாச்சியாரை முதலில் வணங்குகிறேன்

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி 
ஆணிப்பொன்னால் வண்ணச்சிறுதொட்டில் 
பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான் 
மாணிக்குறளனே தாலேலோ! 
வையம் அளந்தானே தாலேலோ!


ஆண்டாளின் தமிழ் பாலின் ருசியுடையது, தனக்கான பட்டைத் தறியில் தானே நெய்து கொள்வதைப் போல அவளுக்கான சொற்களை அவளே உருவாக்கி திருப்பாவை அமுதமாக அலங்கரித்திருக்கிறாள்...
ஆண்டாளின் திருப்பாவையை தமிழ்கவித்துவத்தின் தனிப்பெரும் சாதனை  என்றால் அதன் உச்ச நிலையே ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி,
நாச்சியார் திருமொழியில் வெளிப்படும் ஆண்டாளின் குரல் திருப்பாவையில் இருந்து பெரிதும் மாறுபட்டது, 
ஆண்டாளின் கவித்துவ உன்னதம் தனி அனுபவமாக அளித்திருக்கிறாள்...

திருப்பாவைப் பாடல்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் ""ஏலோர் எம்பாவாய்'' என்று அமைந்திருக்கும். 
இதற்கு "அன்பிற்குரிய தோழியே' என்று பொருள்.
"ஏல்' என்னும் சொல்லுக்கு "ஏற்றுக் கொள்ளுதல்' என்றும், "ஓர்' என்னும் சொல்லுக்கு "யோசித்துப்பார்' என்றும், "பாவாய்' என்பதற்கு "பெண்ணே' என்றும் பொருள் சொல்வர்.
""தோழியே! இந்த உலக வாழ்வு நிலையற்றது. இறுதியில் நாம் கண்ணனையே அடைந்தாக வேண்டும் என்று யோசித்துப் பார். 
அவனை ஏற்றுக்கொள். 
ஆனால், அவ்வளவு எளிதில் சிக்கமாட்டான். 
அதற்குரிய விரதத்தைக் கடுமையாக அனுஷ்டிப்போம்,''
என்று அழைப்பு விடுப்பதாக திருப்பாவைப் பாடல்களின் கருத்து அமைந்துள்ளது


பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம்,மார்கழி உற்சவம், -ஸ்ரீரங்கம்,





20 comments:

  1. அமுதம் சுவைத்தேன் அருமை

    ReplyDelete
  2. திருப்பாவை எப்போது கேட்டாலும் இனிமைதான். படங்களும் சிறப்பு.

    ReplyDelete
  3. ஆண்டாள் என்றாலே அற்புத அலங்காரமும் அந்த மென்மையான அழகிய காதல் உணர்வும்...

    எத்தனை தடவை பார்த்தாலும் படித்தாலும் புதிதாய் ரசிக்கத் தோன்றும்...அருமை.

    ReplyDelete
  4. பாடல்களும் மார்கழி உற்சவ படங்களும் கண்ணையும் கருத்தையும் விட்டு அகலாது.
    நன்றி.

    ReplyDelete
  5. படங்கள் எல்லாம் மிக அழகு. அதிலும் கண்ணாடி அறையில் பெருமாள் ஆண்டாள் படங்கள் சிறப்பாக உள்ளது.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  6. wow great pictures i had not seen lovely pictures of krishna anywhere else

    ReplyDelete
  7. படங்களுகம் பகிர்வும் சிறப்பு. அனுமன் கல் சுமக்கும் படம் வெகுவாக கவர்ந்தது.

    ReplyDelete
  8. Wow that was unusual. I just wrote an very long comment but after I clicked submit my comment didn't appear. Grrrr... well I'm not writing all that over again.
    Anyways, just wanted to say wonderful blog!
    Also visit my homepage - wholesale jerseys

    ReplyDelete

  9. திருப்பாவையில் ஒவ்வொரு பாடலும்
    “ஏலோர்” எம்பாவாய் என்று முடிகிறது. அந்த ஏலோருக்கு பொருள் கூறினால் மகிழ்வேன். பாடலுக்கு நிறைய விளக்கங்கள் கேட்பதுண்டு. இந்த வார்த்தைக்கு பொருள் தெரியவில்லை.

    ReplyDelete
  10. Aha aha
    naril parka mudiyatha kuraiai pooki vittathu yongal Post. Thanks a lot.
    viji

    ReplyDelete
  11. @@ G.M Balasubramaniam said...//
    திருப்பாவைப் பாடல்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் ""ஏலோர் எம்பாவாய்'' என்று அமைந்திருக்கும்.

    இதற்கு "அன்பிற்குரிய தோழியே' என்று பொருள்.

    "ஏல்' என்னும் சொல்லுக்கு "ஏற்றுக் கொள்ளுதல்' என்றும், "ஓர்' என்னும் சொல்லுக்கு "யோசித்துப்பார்' என்றும், "பாவாய்' என்பதற்கு "பெண்ணே' என்றும் பொருள் சொல்வர்.

    ""தோழியே! இந்த உலக வாழ்வு நிலையற்றது. இறுதியில் நாம் கண்ணனையே அடைந்தாக வேண்டும் என்று யோசித்துப் பார்.

    அவனை ஏற்றுக்கொள்.

    ஆனால், அவ்வளவு எளிதில் சிக்கமாட்டான்.

    அதற்குரிய விரதத்தைக் கடுமையாக அனுஷ்டிப்போம்,''

    என்று அழைப்பு விடுப்பதாக திருப்பாவைப் பாடல்களின் கருத்து அமைந்துள்ளது

    ReplyDelete
  12. எனக்கு மிகவும் பிடித்த ஆண்டாள்.. அருமையான படங்கள்.

    ReplyDelete
  13. கண்ணுக்கு அருமையான விருந்தளித்து இருக்கிறீர்கள், இராஜராஜேஸ்வரி!

    ஏலோர் எம்பாவாய் விளக்கம் நன்று!

    ReplyDelete
  14. வணக்கம்

    அருமையான படைப்பு வாழ்த்துக்கள் படங்கள் எல்லாம் எங்கிருந்துதான் எடுக்கிறீங்கள் என்று என்கே புரியாமல் உள்ளது அது ஆண்டவனுக்குத்தான் புரியும் போல,உம்,,,,,ம்,,,,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. What's up, I read your new stuff daily. Your writing style is awesome, keep it up!
    Also visit my web page ... Nike NFL Jerseys

    ReplyDelete
  16. அருமையான படங்கள். கூடவே துதிப் பாடல்கள்.அசத்துகிறீர்கள் அம்மா. மிக மிக நன்றி.குருவாயூரப்பன் கோவில் தூண் பற்றிய விவரம் சிறப்பு.

    ReplyDelete
  17. எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பற்றிய அருமையான பதிவு, அற்புதமான படங்கள்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்ற் & வாழ்த்துகள் திருமதி இராஜ ராஜேஸ்வரி.

    ReplyDelete
  18. அன்பின் இராஜ ராஜேஸ்வரி - ஆண்டாள் பற்றஇய படங்களும் விளக்கங்களூம் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  19. திருப்பாவை அமுதம் ருஸித்தேன்,
    மிகவும் ருசியோ ருசிதான்.

    தெவிட்டாத தேன் அமுதம்.

    படங்கள் எல்லாமே அழகு.

    ReplyDelete