Saturday, March 2, 2013

தடைகளைத் தகர்க்கும் அனுமன்


சங்கடம் நீக்கியே மங்களம் அருளும்  காற்றின் மைந்தனின் ரூபம்! 
ராம லஷ்மண சீதை யுடனே  என்றும் மனதினில் திகழும்

ஸ்ரீ ராமசந்திர பகவானுக்கு வெற்றி' என முழங்கும் அனுமன் 
ராம லஷ்மண ஜானகீ  மாருதிக்கு வெற்றியெனப் பாடு!வோம் ..!

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடிக்கு அருகில் அனுமார் கோதண்டராமர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வார் ராகுதோஷத்தை தீர்த்து வைக்கிறார். இங்கு அனுமார் புளியமரவடிவில் காட்சி தருகிறார். 

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பரமகுடி நகரின் மேற்கு கடைசியில் பட்டுப்போன புளிய மரமும், விநாயகர் சிலையும் இருந்தன.

குழந்தைபேறு இல்லாமல் வேதனைப்பட்ட பக்தரிடம் வடஇந்தியாவில் இருந்து வந்த.  ஒரு துறவி அஞ்சநேயர் சிலை ஒன்றை கொண்டு வந்தார். 
புளிய மரத்தில் சங்கு சக்கரம் பிரதிஷ்டை செய்கிறேன். இந்த ஆஞ்சநேயருக்கு இங்கே ஒரு கோவில் கட்டு உனக்கு புத்ரதோஷம் விலகி புத்ரபாக்கியம் கூடும் என்றார்.

 பக்தர் அங்கு  கோவில் கட்டியதும் பட்டுப்போயிருந்த புளியமரம் தழைத்தது.

இங்குள்ள ஆஞ்சநேயர் உக்கிரம் அதிகமாக இருந்ததால்  திருப்பதி ஜீயர் ஆலோனைப்படி ராமர், சீதை, லட்சுமணன் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதன்பின் அனுமனின் ஆவேசம்  தணிந்தது.

இங்கு ராமர் சன்னதியின் தென்புறம் சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கு 12 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் கைக்கூடும்.

12  புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்தால் திருமணதடை விலகும்.

24 சனிக்கிழமைகளில் 24 பிரதட்சனம் செய்தால் வேலை வாய்ப்பு கிட்டும்,

 12 வியாழக்கிழமைகளில் ஒவ்வொரு முறையும் 108 முறை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கூடிவரும். கடன் தொல்லை நீங்கும் வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.

 ராகு தோஷம் உள்ளவர்கள் வழிபடுவதற்காக அனுமன் சன்னதிக்கு வலப்புறம் ஒரு சிறிய மாடம் அமைக்கப்பட்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஐந்து தலை நாகர் மற்றும் சந்தான கோபாலகிருஷ்ணர் விக்ரகம் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

நாகபஞ்சமி நாளில் பெண்கள் விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு திருமணத் தடை நீங்கப் பெறுகிறார்கள்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் புத்திரப்பேறு அடைவதாக நம்பிக்கை. ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று நாகசதுர்த்தியாக கொண்டாடும்.அன்று இந்த சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு.

நாக சதுர்த்தி அன்று நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து புதுவஸ்திரம் கட்டி பாலபிஷேகம் செய்து வழிபடலாம்.

வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம்.
அனுமார் கோதண்டராமர் கோவில்

19 comments:

  1. முதல் படத்தின் வண்ணங்கள் கண்ணைப் பறிக்கின்றன.

    ReplyDelete
  2. பரமகுடி ஆஞ்சநேயர் பார்த்தது இல்லை. பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது உங்கள் பதிவு. இறைவன் எங்களெல்லாம் என் பக்தர்களுக்காக அற்புதங்களை நிகழ்த்தி காட்டுகிறான்.

    படங்கள் எல்லாம் தெய்வீகம்.
    நன்றி.

    ReplyDelete
  3. அனைத்து படங்களும் அருமை... குறிப்பாக வடையால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர்...

    ReplyDelete
  4. கருத்துக்களும் , படங்களும் அருமை

    ReplyDelete
  5. அசர வைக்கும் கம்பீர படங்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete
  6. அனுமனின் தரிசனம்
    அக ஒளி பரப்பும் தினம்
    ஒவ்வொரு சனிக்கிழமை ஆகும்.

    ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே

    அந்த வேதத்தைப் பகரும் புலவன்
    அனுமன் .

    நன்றி பல

    சுப்பு தாத்தா

    ReplyDelete
  7. திறந்தவுடன் முதல் படம் அருமை அருமை பிறகு ராமரும் அனுமாரும் செய்யும் ஆலிங்கனம் எனக்கு மிகவும் பிடித்தது இதுபோல் எங்கும் நான் கண்டதில்லை நன்றி நன்றி

    ReplyDelete
  8. பரமக்குடி அனுமன் கோயில் பற்றி அறிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  9. "தடைகளைத் தகர்க்கும் அனுமன்"

    இன்று சனிக்கிழமைக்கு ஏற்ற நல்ல பதிவு.

    முதல் இரண்டு படங்களும் கீழிருந்து மூன்றாவது படமும் திறக்கப்படவில்லை.

    மற்ற எல்லாப்படங்களும் மிகவும் நன்றாக உள்ளன.

    கீழிருந்து இரண்டாவது படமும், அதிலுள்ள [பச்சைக்கலர்] ஸ்ரீ ஹனுமனும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  10. இராமனாதபுரம் மாவட்டம் பரமகுடி அருகே உள்ள கோதண்டராமர் கோயிலைப்பற்றியும், அதன் சிறப்பைப்பற்றியும், ராகு தோஷம் நிவர்த்தி செய்யும் ஸ்ரீ சக்ரத்தாழ்வார் பற்றியும், புளிய மர வடிவில் உள்ள ஸ்ரீ ஹனுமன் பற்றியும் சிறப்பாகச்சொல்லியுள்ளீர்கள்.

    சந்தோஷம்

    >>>>>>>

    ReplyDelete
  11. நினைத்த காரியம் நிறைவேற

    திருமணத்தடைகள் விலக

    வேலைவாய்ப்புகள் கிட்டிட

    குழந்தை பாக்யம் கூடிவர

    கடன் தொல்லை நீங்க

    வ்ழக்குகளில் வெற்றிபெற

    ஸ்ரீ சக்ரத்தாழ்வாரை வணங்குவது பற்றியும்,

    நாக தோஷ நிவர்த்திகளுக்கான பரிகாரங்கள் பற்றியும்

    மிகச்சிறப்பாக எடுத்துக்கூறியுள்ளீர்கள்.

    படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  12. வழக்கம் போல மிகவும் அருமையான பதிவு / பகிர்வு.

    பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்

    நன்றியோ நன்றிகள்.

    ooooo.

    ReplyDelete
  13. ’ராம நாம தாரகம் ஸதா ஸ்மராமி’
    என்று எப்பொழுதும் ஸ்ரீராமனின் அருகிலேயே இருக்கும் பகத ஹனுமானின் அழகிய வர்ணப் படங்களும் அருமையான பதிவும்...

    பகிர்விற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  14. ஆஞ்சனேயரைப் பற்றிய தகவல்கள் சிறப்பு. படங்கள் அனைத்தும் கண்ணையும் மனதையும் கவரும் விதமாக இருக்கு.நல்லதொரு பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  15. அனுமனின் பற்றிய தகவல்கள்!அழகான படங்கள், கோதண்டராமர்கோவில் தகவல் அருமை.நன்றிகள்.

    ReplyDelete
  16. அழகிய படங்களுடன் புதுப் புது தகவல்கள்!

    ReplyDelete
  17. ஆபத் சகாயன் அனுமனை பற்றிய அற்புத தகவல்கள்! அழகிய படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. //முதல் இரண்டு படங்களும் கீழிருந்து மூன்றாவது படமும் திறக்கப்படவில்லை.//

    இப்போது எல்லாப்படங்களுமே நன்கு காட்சியளிக்கின்றன.

    முதல் படமும் மிகவும் அழகாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  19. அனுமனின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

    ReplyDelete