Friday, April 12, 2013

ஐஸ்வர்யம் தரும் அலைமகள்









ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் சுவர்ணரஜ தஸ்ரஜாம் 
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ 

அக்னி தேவனே! பொன் போன்ற காந்தி உடையவளும், பாபங்களைப் போக்குபவளும், பொன்னாலும் வெள்ளியாலுமான ஹாரங்களை அணிந்தவளும், சந்திர பிம்பம் போன்றவளும், பொன்மயமானவளுமாகிய ஸ்ரீதேவியை எனக்கருள் புரியுமாறு எழுந்தருளச் செய்வீர்,


ஸ்ரீ என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லும், திரு என்ற தமிழ்ச்சொல்லும்
சோபை, ஐச்வர்யம், ஒளி, கீர்த்தி, ஸித்தி ஆகியவற்றைக் குறிக்கிறது. '

ஸ்ரீ' என்ற சொல் முதன் முதலில் வேதங்களில் அழகு, இனிமை ஆகியவற்றைக் குறிப்பிடவே உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது,

 'ஸ்ரீ' என்ற சொல் லக்ஷ்மியைத் தான் குறிக்கிறது'


பாற்கடலில் உதித்து மஹாவிஷ்ணுவை மணாளனாக அடைந்த அந்த சக்தியையே நாம் மஹாலக்ஷ்மி என்கிறோம். 

லக்ஷ்யம் என்றால் அடையாளம் என்று பொருள்.

இறைவன் இருக்கிறான் என்பதற்கு பகிரங்கமான அடையாளமாகவும், மகத்தான லக்ஷ்யமாகவும் விளங்குவதால் அவள் மஹாலக்ஷ்மி என்ற பெயரைப் பெற்றாள்...

அவள் ஸ்வர்க்கத்தில் ஸ்வர்க்கலக்ஷ்மி, 
பூவுலகில் அரசர்களிடையே ராஜ்ய லக்ஷ்மி, 
வீடுகளில் இல்லத்தரசிகளின் உருவில் க்ருஹலக்ஷ்மி 
என்றெல்லாம் புகழ் பெறுகிறாள். 
உலகையும் உடலையும் துறந்த ஞானிகள் கூட 
மோக்ஷ லக்ஷ்மியின் கடாக்ஷத்தை விரும்புகிறார்கள்.

பாரதத்தின் பெண் தெய்வங்களுள் ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் ஸ்தானம் உயர்ந்தது.

பாற்கடலில் எல்லா ஔஷதிகளையும் போட்டு, மந்தரமலையை மத்தாக்கி, வாசுகி என்ற சர்ப்பத்தை கயிறாக்கிக் கடலைக் கடைந்தனர். 

அதனின்றும் அரிய பல பொக்கிஷங்களான காமதேனு, பாரிஜாத வ்ருக்ஷம், அமுதக்கிரணங்ளோடு கூடிய சந்திரன், தன்வந்திரி பகவான் முதலானவை தோன்றின. 

பின்னர் செந்தாமரையைக் கையிலேந்தியபடி, தாமரை மீது அமர்ந்தருளும் மகாலக்ஷ்மி அபூர்வமான ஒளி வீசும் காந்தியுடன் தோன்றினாள். 

ஒப்பற்ற அந்தக் காட்சியைக் கண்ட மகரிஷிகளும் தேவர்களும் “ஸ்ரீ ஸூக்தம்” என்றும் வேத மந்திரங்களால் அவளைத் துதித்தார்கள். 

 ஸூக்தம் என்பது ஒரே தெய்வத்தைப் பற்றியும், ஒரு பொருளைப் பற்றியதுமான மந்திரங்களின் தொகுப்பு,
ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் சுவர்ணாம் ஹேம மாலிநீம் |
சூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹா ||
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அநபகாமி நீம் 

ஆர்த்ரா - நீரில் தோன்றியவள், 
புஷ்கரிணீ - யானைகளால் வணங்கப்படுகிறவள், 
சூர்யா - கதிரவனை நிகர்த்தவள், 
அனபகாமினி - நிலை தவறாதவள் 
என்ற பல பெயர்களால் வர்ணிக்கப்படுகிறாள். 
ஸ்ரீ ஸூகத்தின் ஒவ்வொரு ரிக்கும் தேஜஸ், பசு, சேவகர் முதலியன, பகையழிவு, கல்வி, ஐஸ்வர்ய விருத்தி, நிலையான செல்வம், தான்ய விருத்தி என்று ஒவ்வொரு பலனைக் கொடுக்கும்.

உபநிஷத்தில் ஸ்ரீலக்ஷ்மியினுடைய மற்ற பெயர்களாக விஷ்ணு பத்னி, ஹிரண்யரூபா, ஸ்வர்ணமாலினி, ரஜதஸ்ராஜா, பத்ம வாஸினி, பத்ம ஹஸ்தா, பத்மப்ரியா, தனதா, ஸ்ரத்தா என்பவை கூறப்பட்டுள்ளது
லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தநயாம் ஸ்ரீரங்கதாமேஸ்வரீம் 
தாஸீபூத ஸமஸ்த தேவவனிதாம் லோகைக தீபாங்குராம் |
ஸ்ரீமந்மந்த கடாஏ லப்த விபவ ப்ரஹ்மேந்த்ர கங்காதராம் 
த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம் 

பாற்கடலரசனின் புத்ரியும், ஸ்ரீ ரங்கநாயகியும், தேவஸ்திரீகளனைவரையும் பணிப் பெண்களாய்க் கொண்டவளும், உலகுக்கெல்லாம் விளக்கு போன்றவளும், இந்திரன், பிரும்மா, சிவன் ஆகியோரின் பெருமைக்குத் தன் அழகிய கடைக்கண் பார்வையைக் காரணமாக உடையவளும், மூவுலகையும் குடும்பமாக முகுந்தனுக்குப் பிரியமான உனக்கு வந்தனம் செலுத்துகிறேன்.

 பாற்கடலினின்றும் உதித்த மஹாலக்ஷ்மி
ஸ்ரீமந் நாராயணனின் திருமார்பில் உறைந்தாள். 

எனவே அவளுக்கு வக்ஷஸ்தல வாஸினி என்ற பெயரும் உண்டு.

 பெரியாழ்வார் “வடிவாய் நின்வள மார்பினில் வாழ்கின்ற மங்கைக்கும் பல்லாண்டு” என்று பாடியுள்ளார். 

ஸ்ரீ வேதாந்த தேசிகரும் ஸ்தானம் யஸ்யா: ஸரஸிஜவனம் விஷ்ணு வக்ஷஸ்தலம் வா |என்று திருமகளின் உறைவிடமாக, தாமரையையும் திருமாலின் மார்பையும் குறிப்பிடுகிறார்.

 யானையின் மத்தகம், பசுவின் பின்பாகம், பதிவிரதைகளின் வகிடு, வில்வ வ்ருக்ஷம் போன்றவற்றில் “ஸ்ரீ” வாஸம் செய்வதாக நூல்கள் கூறுகின்றன.

அம்மா! உன் பதியோ புருஷோத்தமன். அரவரசன் உனக்குப் புல்கும் அணையும் ஆஸனமும் ஆகியுள்ளான். 

வேதாத்மாவான கருடன் வாஹன வடிவு கொண்டான். 
உலகம் முழுதும் கவர்ந்திழுக்கும் இயற்கை ப்ரக்ருதி உனக்குத் திரை. தேவர்களும், தேவியரும் உன்னிடம் பணி புரியும் ஸேவகர்கள் ஆவர்.

 உன் திருநாமமும், மகத்துவம் வாய்ந்த - சுருக்கமான'ஸ்ரீ' என்னும் ஒற்றை எழுத்தே ஆகும். இப்படி ஸர்வேஸ்வரியாக உள்ள உன்னை எப்படிச் சொல்வேன்”
தாயே! உன் சிறிய அருள் பார்வையும் போதும். அது இல்லாததாலன்றோ உலகம் முன்பு ப்ரளய காலத்தில் அழிந்து மீண்டும் பிறந்தது?” என்று வர்ணிக்கிறார். “அரவிந்த லோசனன் மகிஷியான உன் அனுக்கிரஹமின்றி இவ்வுலகிலோ மேலுகிலோ, இப்போதோ எப்போதோ மனிதர்களுக்கு ஏதும் மகிழ்ச்சி உண்டாகாது அன்றோ?” -

ஸ்ரீஇராமானுஜருடைய சீடரான கூரேசரும் தான் இயற்றிய ஸ்ரீஸ்தவத்தில் ஸ்ரீலக்ஷ்மியினுடைய கடாக்ஷத்தாலேயே ஸ்ரீமன் நாராயணன் தன்னை உயர்வு பெற்றவராகக் கருதுகிறார் என்கிறார்..

மஹாலக்ஷ்மியின் கண்பார்வை எங்கெல்லாம் விழுகிறதோ, அங்கெல்லாம் ஐச்வர்யங்களும் இதோ இதோ என்று வந்து சேர்கின்றன என்று கூறுகிறார்.
 தேவேந்திரனும் உன்னுடைய கருணையான கண்பார்வையின் மகிமையால் இழந்த மூவுலகையும் திரும்பப் பெற்றான் 

அமுதத்தைப் பருகி, மஹாலக்ஷ்மியின் அனுக்ரஹத்தை அடைந்த தேவேந்திரன் - உன் அருளால் நல்ல மனைவி, சத்புத்திரர்கள் குடியிருப்பு, சினேகிதர்கள் எல்லோரும் செம்மைப்படுகின்றனர். 
சரீரம் ஆரோக்யம் பெறுகிறது. 
எதிரிகள் அழிகிறார்கள். 
தர்மம் தழைக்கிறது; சுகம் நிலைக்கிறது. 
உனது கடைக்கண் பார்வையால் இத்தனையும் கிடைக்கிறது. 
மனோபலம், சத்தியவாக்கு, மனசுத்தி, நன்னடத்தை யாவும் அருளும் உலகமாதா நீ, நீ குடிகொண்ட மார்புடைய மஹாவிஷ்ணு உலகுக்கெல்லாம் பிதா, அசையும் பொருளும் அசையாப் பொருளும் உங்களுக்குள் அல்லவா அடங்கி உள்ளன?

ஸ்ரீஸூக்தத்தில் லக்ஷ்மியை
ஸித்தலக்ஷ்மீ மோக்ஷலக்ஷ்மீர் ஜயலக்ஷ்மீ ஸரஸ்வதீ 
ஸ்ரீலக்ஷ்மீர் வரலக்ஷ்மீஸ்ச்ச ப்ரஸந்நா பவ ஸர்வதா||
என்று அந்த வரலக்ஷ்மி வரம், அங்குசம், பாசம், அபய முத்திரை ஆகியவற்றைக் கைகளில் கொண்டவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், கோடி சூர்ய ப்ரகாசம் பொருந்திய மூன்று கண்களையுடையவளும் ஆன ஜகதீஸ்வரியைத் துதிக்கிறார்.

வேத ரூபிணியும் ஜகன்மாதாவுமான ஸ்ரீதேவியை தினந்தோறும் 
துதித்துகல ஸம்பத்தையும் அடைவோம்.

20 comments:

  1. நல்ல படங்கள் மற்றும் தகவல்கள்.....

    ReplyDelete
  2. புதுபுது தகவலை பொழுதுக்கும் தருகின்ற உங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.வாழ்த்துக்களுடன் தொடருங்கள்

    ReplyDelete
  3. தகவல்கள் , படங்கள் ,மற்றும் விளக்கங்கள் அருமை

    ReplyDelete
  4. superb pictures of krishna, rukmini

    ReplyDelete
  5. Aha Nice post dear.
    Very well explained about Sri suktham and Shree stuthi.
    Fentastic pictures. So lakshmikadaksham.
    Thanks for the post.
    viji

    ReplyDelete
  6. அருமையான படங்களுடன் சிறப்பான தகவல்... நன்றி அம்மா...

    ReplyDelete
  7. அலைமகளின் விவரம் அறிந்தேன் லஷ்யம் என்றால் அடையாளம் என்று பொருள் நல்ல விளக்கம் மேலும் இந்த வரிகளுக்கு மேல் கொடுத்துள்ள சிலை மிக அருமை

    ReplyDelete
  8. மஹாலக்ஷ்மியின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடப் ப்ரார்த்திக்கின்றேன்.

    எத்தனை விடயங்களை இத்தனை சிறப்பாகத் தொகுத்து பதிவாகத் தந்திருக்கின்றீர்கள்...
    அத்தோடு அழகழகான அற்புதமான படங்கள். கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

    வெள்ளைக்கிழமை மனதுக்கு உகந்த நல்ல பதிவு.
    பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி...

    ReplyDelete
  9. ’ஐஸ்வர்யம் தரும் அலைமகள்’ என்ற தலைப்பே அழகு.

    இன்று வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற பதிவு.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  10. ’ஐஸ்வர்யம் தரும் அலைமகள்’ என்ற தலைப்பே அழகு.

    இன்று வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற பதிவு.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete

  11. //ஸ்ரீ என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லும், திரு என்ற தமிழ்ச்சொல்லும்
    சோபை, ஐச்வர்யம், ஒளி, கீர்த்தி, ஸித்தி ஆகியவற்றைக் குறிக்கிறது. '

    "ஸ்ரீ" என்ற சொல் முதன் முதலில் வேதங்களில் அழகு, இனிமை ஆகியவற்றைக் குறிப்பிடவே உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது,

    'ஸ்ரீ' என்ற சொல் லக்ஷ்மியைத் தான் குறிக்கிறது'//

    வெகு அழகான தகவல்கள் “ஸ்ரீ” போலவே !

    >>>>>>>

    ReplyDelete
  12. "ஸ்ரீ” என்ற சம்ஸ்கிருதச்சொல்லுக்கு “விஷம்” என்றும் ஓர் பொருள் உண்டாம்.i

    அதனாலேயே விஷமுண்ட நீலகண்டனாகிய சிவபெருமானை ”ஸ்ரீகண்டன்” என்றும் சொல்லுகிறார்கள்.

    இந்த இடத்தில் : ”ஸ்ரீ” என்றால் விஷம் என்றும், ஸ்ரீகண்டன் என்றால் விஷமுள்ள கழுத்தை உடையவன் என்றும் பொருள் கொள்ளல் வேண்டும்.

    >>>>>

    ReplyDelete
  13. //பாற்கடலில் எல்லா ஔஷதிகளையும் போட்டு, மந்தரமலையை மத்தாக்கி, வாசுகி என்ற சர்ப்பத்தை கயிறாக்கிக் கடலைக் கடைந்தனர்.

    அதனின்றும் அரிய பல பொக்கிஷங்களான காமதேனு, பாரிஜாத வ்ருக்ஷம், அமுதக்கிரணங்ளோடு கூடிய சந்திரன், தன்வந்திரி பகவான் முதலானவை தோன்றின.

    பின்னர் செந்தாமரையைக் கையிலேந்தியபடி, தாமரை மீது அமர்ந்தருளும் மகாலக்ஷ்மி அபூர்வமான ஒளி வீசும் காந்தியுடன் தோன்றினாள்.

    ஒப்பற்ற அந்தக் காட்சியைக் கண்ட மகரிஷிகளும் தேவர்களும் “ஸ்ரீ ஸூக்தம்” என்றும் வேத மந்திரங்களால் அவளைத் துதித்தார்கள்.

    ஸூக்தம் என்பது ஒரே தெய்வத்தைப் பற்றியும், ஒரு பொருளைப் பற்றியதுமான மந்திரங்களின் தொகுப்பு,//

    ஸ்ரீ ஸூக்தம் பற்றிய வெகு அழகான விளக்கம் வியப்பளிக்கிறது.

    ஸ்பெஷல் நன்றிகள், பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  14. //உபநிஷத்தில் ஸ்ரீலக்ஷ்மியினுடைய மற்ற பெயர்களாக விஷ்ணு பத்னி, ஹிரண்யரூபா, ஸ்வர்ணமாலினி, ரஜதஸ்ராஜா, பத்ம வாஸினி, பத்ம ஹஸ்தா, பத்மப்ரியா, தனதா, ஸ்ரத்தா என்பவை கூறப்பட்டுள்ளது//

    அனைத்துப்பெயர்களும் அழகோ அழகு தான் !

    உச்சரிக்கவே மகிழ்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  15. //பாற்கடலரசனின் புத்ரியும், ஸ்ரீ ரங்கநாயகியும், தேவஸ்திரீகளனைவரையும் பணிப் பெண்களாய்க் கொண்டவளும், உலகுக்கெல்லாம் விளக்கு போன்றவளும், இந்திரன், பிரும்மா, சிவன் ஆகியோரின் பெருமைக்குத் தன் அழகிய கடைக்கண் பார்வையைக் காரணமாக உடையவளும், மூவுலகையும் குடும்பமாக முகுந்தனுக்குப் பிரியமான உனக்கு வந்தனம் செலுத்துகிறேன்.//

    நானும் ஸ்ரீரங்கநாயகியான ஸ்ரீ இராஜராஜேஸ்வரிக்கு என் வந்த்னங்களை இங்கு செலுத்திக்கொள்கிறேன். ;)))))


    >>>>>

    ReplyDelete
  16. //ஸ்ரீ வேதாந்த தேசிகரும் ஸ்தானம் யஸ்யா: ஸரஸிஜவனம் விஷ்ணு வக்ஷஸ்தலம் வா |என்று திருமகளின் உறைவிடமாக, தாமரையையும் திருமாலின் மார்பையும் குறிப்பிடுகிறார்.

    யானையின் மத்தகம், பசுவின் பின்பாகம், பதிவிரதைகளின் வகிடு, வில்வ வ்ருக்ஷம் போன்றவற்றில் “ஸ்ரீ” வாஸம் செய்வதாக நூல்கள் கூறுகின்றன.//

    மிக அருமையான விளக்கங்கள். வாஸம் செய்யும் இடங்கள் எல்லாமே கேட்கவே மிகவும் மணக்கின்றன. மனதுக்கு நிறைவாக மகிழ்ச்சியளிக்கிறது. ;)

    >>>>>

    ReplyDelete
  17. //மஹாலக்ஷ்மியின் கண்பார்வை எங்கெல்லாம் விழுகிறதோ, அங்கெல்லாம் ஐச்வர்யங்களும் இதோ இதோ என்று வந்து சேர்கின்றன என்று கூறுகிறார்.//

    நான் கூறுகிறேன் ..... தங்களின் இந்தத்தலைசிறந்த பதிவினைப் படித்தாலே போதும் என்று ..... . சகல ஐஸ்வர்யங்களும் தானே ஓடோடி வந்து சேருமென்று.

    >>>>>

    ReplyDelete
  18. //வேத ரூபிணியும் ஜகன்மாதாவுமான ஸ்ரீதேவியை தினந்தோறும்
    துதித்து சகல ஸம்பத்தையும் அடைவோம்.//

    தினந்தோறும் துதித்துக்கொண்டுதான் வருகிறேன். ஏனோ ஸ்ரீ தேவியின் கடைக்கண் பார்வை என் மீது விழாமல் விலகி விலகிச்செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

    என்றுதான் என் ஸ்ரீதேவியின் கடைக்கண் பார்வை தங்குதடையின்றி என் மீது விழுந்து என்னை மகிழ்விக்குமோ ..... அன்று தான் சகல ஸம்பத்தையும் நானும் அடையமுடியும்.

    >>>>>

    ReplyDelete
  19. வெள்ளிகிழமை மகாலட்சுமி தரிசனம் பேரின்பம்.
    அவள் அருள் எல்லோருக்கும் குறைவின்றி கிடைக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  20. இன்றைய தங்களின் பதிவு வெகு அருமையாக உள்ளதுங்க !

    காட்டியுள்ள படங்கள் யாவுமே அழகோ அழகுதாங்க !!

    வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    விளங்கங்கள் யாவும் தங்கமோ தங்கம், சுத்தத்தங்கம், பத்தரை மாத்துத் தங்கம். வைரமாக ஜொலிக்கின்றன.

    தங்களின் கடுமையான உழைப்புக்கு தலைவணங்கி மனதாரப் பாராட்டுகிறேன்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் ந்ன்றியோ நன்றிகள்

    ooooo 877 ooooo

    ReplyDelete