Monday, January 31, 2011

பீனிக்ஸ் பறவை

பறவைகளில் சிறந்தது எது?

உலகப் பறவைகளின் குணாதிசயங்களை அலசினால் பீனிக்ஸ் பறவைக்கோர் தனியிடம் உண்டு!

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி
இந்தப் பறவைக்கு உள்ளது!

இது தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்!

இது ஏன் சாம்பலாகிறது?

பீனிக்ஸ் பறவை ஒரு லட்சியவாதி!
இதற்கு சூரியன் தான் லட்சியம்!
சூரியனைத் தொடவேண்டும் என்பதே
இந்தப்பறவையின் வாழ்க்கை லட்சியம்!

பீனிக்ஸ் பறவை தன் சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்!

சூரியனை நோக்கி உயரும்.

ஒரு குறிப்பிட்ட எல்லையில், சூரியனின் அதீத வெப்பத்தால் உடல் கருகி மண்ணில் விழும்!

மீண்டும் உயிர்க்கும்!
மீண்டும் சூரியனை நோக்கிக் கம்பீரமாய்ப் பறக்கும்!

வெற்றி பெற்ற எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் ஒரு பீனிக்ஸ் பறவை இருக்கிறது!!

அந்த போர்ப் பறவையின் ஆயுள் ரேகையில்
தங்க மயிலின் தன்னம்பிக்கையின் ரேகையும் கூடுகட்டிப் பெருமைப்படுத்துகிறது!!

துளித்துளித்துளிகள் !!

குழந்தைகளுக்கு பெற்றோர் தான் முதல் ஆசிரியர்
அதே சமயம் ஆசிரியர்தான் இரண்டாவது பெற்றோர்.


கட்டைகளைப் புரட்டிப் போட்டால் நெருப்பு எரிவது போல படிக்கும் விஷயங்களையும் சிறிது மாற்றிக் கொண்டால் அயர்ந்துள்ள மூளை கிளர்ந்து எழும்.


உலகம் இறைவனின் தோட்டம். அவன் விரும்பும்போது தனக்குப் பிடித்த பூக்களைப் பறித்துக் கொள்கிறான்.


கண்ணீர் கண்களின் பிரார்த்தனை !


ஒருவரும் முழுமையாக வாழ்வதில்லை
அரைகுறையாகவே வாழ்கிறார்கள்
எவரும் முழுமையாகச் சாவதில்லை
எதையாவது விட்டுவிட்டுப் போகிறார்கள்.


மனிதன் தாராளமாக செலவு செய்யக்கூடியதில்
இன்சொல் முக்கியமானது.

தாய் மண்ணே வணக்கம் !!

Global Village -  உலக குக்கிராமம்



அழகான


ஆழமற்ற
சுருக்கமான
கவனத்தைக் கவர்ந்து. . .

கவனத்தைக் கவர்ந்து

மனதை ஈர்த்து
உள்ளத்தில் தைக்கும் சொல்!

தொடர்புத்தொழில் நுட்பத்தால்
குறுகிப்போனது உலகு!

தொடர்புகள் இருந்தும்
தொலைந்து போனவர்கள்
நிறைந்த இந்த உலகம்
எப்படி கிராமம் ஆகும்??

ஆதித்ய துதி


ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கம் தந்தாய் போற்றி


தாயினும் பரிந்து சால
சகலரை அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிகட்கெல்லாம்
துணைக்கரம் தருவாய் போறி


தூயவர் இதயம் போலத்
துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்துச்
சாரத்தைத் தருவாய் போற்றி


ஞாயிறே நலமே போற்றி
நாயகன் வடிவே போற்றி
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம்!
போற்றி !!   போற்றி !!!

Saturday, January 29, 2011

இந்திரனின் வஜ்ராயுதம்




இந்திரனின் வஜ்ராயுதம் மிகவும் பலம் வாய்ந்தது 
என்பது நமக்குத் தெரியும்
 
வஜ்ராயுதத்திற்கு அவ்வளவு சிறப்பு, மற்ற ஆயுதங்களுக்கு 
இல்லாத வலிமை எப்படி வந்தது தெரியுமா?



ததீசி முனிவர், பேராசையோ பொறாமையோ துளியும் இல்லாதவர். 

பாற்கடலைக் கடையும் பணி நடந்தபோது அவ்வளவு தேவர்களும், அஷ்டதிக் பாலர்களும், சகல தேவதைகளும் தாங்களது விசேஷமான சக்திகள் அடங்கிய ஆயுதங்களை ததீசி முனிவரிடம் தான் ஒப்படைத்தனர்.

ததீசி முனிவர் மிகசிறந்த ஆசாரசீலர். தன்னை நம்பி , பிறகு வந்து பெற்றுக் கொள்வதாகக் கூறி ஒப்படைத்த ஆயுதங்களைக் கண்போல் காக்க விரும்பினார்  ஆனால் பாற்கடல் கடையப்பட்டு அமுதமும் கிடைத்து விட்ட நிலையில் தேவர்களுக்கு இனி அந்த ஆயுதங்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றிவிட்டது.

ததீசிமுனிவரிடம் வந்து ஆயுதங்களைத்திரும்பக் கேட்கவே இல்லை. வெகு நாள்வரை பாதுகாத்து வைத்து இருந்த முனிவர் யாரும் வந்து கேட்காத நிலையில், அவற்றைத் தூக்கி எறிய மனமில்லாமல், அவ்வளவு ஆயுதங்களையும் பொடியாக்கி, அதை ஒரு உருண்டையாகச் சுருக்கி விழுங்கி, அந்த சக்திகள் அனைத்தும் தனது முதுகெலும்பில் உருக்கொள்ளுமாறு செய்து கொண்டார்.

இதனால் தான் அவரது முதுகெலும்பு உலகில் அவ்வளவு ஆயுதங்களாலும் ஏதும் செய்ய இயலாத ஒரு சிறப்பு கொண்டதாக மாறி இருந்தது.


அனைத்து ஆயுதங்களும் உருத்திரண்ட ததீசி முனிவரின் முதுகெலும்பால் ஒரு ஆயுதம் செய்தால், அந்த ஆயுதமே விருத்திகாசுரனை அழிக்கும் என்று விஷ்ணுமூர்த்தி இந்திரனுக்குக் கூறினார்.

தமிழ் திரைப்படம் பாபாவிலும் நமது சூப்பர் ஸ்டாரின் முதுகெலும்பு வேணும் என்று வில்லன் கொக்கரிப்பது ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!


தேவலோக சிற்பி விஸ்வகர்மா ததிசி முனிவர் உயிர் தியாகத்திற்கு பிறகு அவரது முதுகெலும்பிலிருந்து சக்தி வாய்ந்த வஜ்ராயுதத்தை வடிவமைத்து இந்திரனுக்குக் கொடுத்தார்.


இந்திரன், ஐராவதம், வஜ்ராயுதம்

Thursday, January 27, 2011

சிவனின் கோபம்

பிரம்மாவின் குமாரரான தட்சப்பிரஜாபதிக்கு 16 பெண்கள்.

அவர்களில் ஸ்வாஹாவை அக்னிதேவரும், ஸ்வதாவை பித்ருவிற்கும், சதிதேவியை பரமசிவனாரும், மற்ற பெண்களை தர்ம தேவர்களும் திருமணம் செய்து கொண்டனர்.

(நாம் ஹோம குண்டத்தில் "ஸ்வாஹா" "ஸ்வதா" என்று சொல்லி கொடுக்கும் ஆகுதி இம்மனைவிகளின் மூலமாகவே அக்னியையும் பித்ருக்களையும் சென்றடையும்)

ஒரு முறை பிரஜாபதிகள் சேர்ந்து நடத்திய யாகத்திற்கு மாமனாராகிய தடசன் வந்தபோது அங்கிருந்த பரமசிவன் , அவருக்கு எழுந்திருந்து மரியாதை செலுத்தவில்லை.

கோபமுற்ற தட்சன் பரமசிவனுக்கு இனி யாகத்தில் அவிர்பாகம் கிடைக்காது என்று சபித்து விட்டார். அன்று முதல் தட்சனும், பரமசிவனும் பகையானார்கள்.

பலநாள் கழித்து தட்சன் நடத்திய மிக உயர்ந்த யாகத்திற்கு ஸதி தேவி தனக்கு அழைப்பு இல்லாவிடிலும் செல்ல விரும்பி சிவனிடம் அனுமதி வேண்டினாள்.

அஹங்காரமுள்ள, ஆத்மஞானமில்லாத இடத்திற்குச்சென்றால் அவமானம் ஏற்படும் என்று தடுத்தார்.

ஆனாலும் கேட்காமல் சதிதேவி யாகத்திற்கு சென்று அவமானப்பட்டு உயிர் துறந்தாள்.

அதைக் கேட்ட பரமசிவனின் கோபம் கொண்டமேனியிலிருந்து ஆயிரம் கைக்கள் கொண்ட வீரபத்திரர் தோன்றி ,தட்சரையும் யாகத்தையும் அழித்தார்.

பரம்மா பொறுமையின் பெருமையை சிவனுக்கு உபதேசித்து அவரை சாந்தப்படுத்தவே, சிவனும் தட்சரை உயிர்ப்பித்தார். அங்கு திருமாலும் கருடன் மீதுதோன்றி அனுக்கிரகித்தார்.

வெட்டப்பட்ட தட்சனின் தலையில் ஆட்டின் தலை பொருத்தப்பட்டது.

ருத்ரமந்திரம் "மே மே" என்று முடியும் வகையில் இருப்பது இதனால்தான்.

Wednesday, January 26, 2011

சியமந்தக மணியைத் தேடிய சியாமள வண்ணன்



god krishna

திருமாலுக்கு அவதாரங்களோ பலப்பல. அவற்றில் குறிப்பாக, பூர்ணத்துவமான அவதாரங்களாக இரமாவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தையும் சொல்ல வேண்டும் 

பிரம்மாவுக்கு நாராயணணைத் தரிசிக்கவேண்டும் என்ற ஏக்கம் எழுந்த்தது.

ஜாம்பவான் என்கிற கரடி வடிவெடுத்து ராமரைத் தரிசித்தார்.




சீதையைப் பிரிந்து வருந்திய ராமருக்கு சீதையைக்கண்டுபிடிக்கும் முயற்சியில் மூளையாகச் செயல்பட்டார்.

அனுமாருக்கு அவரது பறக்கும் சக்தியை நினைவூட்டினார்.




இந்திரஜித்துக்குப் பதிலடி கொடுக்கமுடிந்தவர் ஜாம்பவன் மட்டுமே.

இராவனணைக்கூட மயக்கம் வருமளவுக்கு அடித்து வீழ்த்தியவர் ஜாம்பவன்.
              

அயோத்தியில் இராமர் பட்டாபிஷேகம் முடிந்து ஊர் திரும்பும் வேளை அனைவரையும் அன்புடன் ஆலிங்கனம் செய்தார் இராமபிரான்.


ஜாம்பவானுக்கு சொல்லொனாத ஆசை ராமரைக் கட்டித்தழுவிக் கண்ணீர் வடிக்க!






தன் உடலில் இருக்கும் அடர்ந்த உரோமத்தால் அழகனாக மென்மையான இராமரின் உடலுக்கு வருத்தம் உண்டாகுமோ!! என்று தன் ஆசையை அடக்கிக்கொண்டு கண்ணீர் உகுத்தார்.



அடுத்த துவாபரயுகத்தில் கிருஷ்ண அவதாரத்தில், சியமந்தகமணியைத்தேடி காட்டுக்குள் சென்றார் கிருஷ்ணபரமாத்மா! 

ஜாம்பவான் தன் மகள் ஜாம்பவதியுடன் ஒரு குகையில் தங்கியிருந்தார்.


சிங்கம் ஒன்று பிரச்சேத்னனைக் கொன்று ,அவன் அணிந்திருந்த சியமந்தகமணியுடன் அந்த குகைக்கு வந்தது. 

சிங்கத்தைப் போராடிக் கொன்று அந்த மணியைத் தன் மகள் ஜாம்பவதிக்கு அணிவித்தார்.


ஜாம்பவதியின் கழுத்தில் மணியைப் பார்த்த கிருஷ்ணர் அவளைத் துரத்திக்கொண்டு குகைக்கு வந்தார்.

சிறந்த மல்யுத வீரரான ஜாம்பவான், தன் மகளைத் துரத்தி வருபவனுடன் கடுமையான கோபத்துடன் மோதினார்.


தனக்கு ஈடான சக்தியுள்ள ஒருவனுடன் போராடிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.

மல்யுத்தத்திற்காக கட்டிப்பிடித்தபோது இனம் புரியாத பரவசத்தால் தன் உடல் சிலிர்ப்பதை ஆனந்தத்துடன் அனுபவித்தார் ஜாம்பவான்.

இருபத்துஏழு நாட்கள் நடந்த போட்டியில் ஜாம்பவான் ஒரு கட்டத்தில் தளர்ந்துவிட்டார்.

இவ்வளவு வலிமை மிக்க தாங்கள் யார்? எனக் கேட்ட போது இராமனாகக் காட்சி அளித்தார் நாராயணன்.

அவருக்கு சியமந்தகமணியுடன் , தன் மகள் ஜாம்பவதியையும் திருமணம் செய்துவைத்தார்.


ஒரு முறை ஆலிங்கணத்துக்கு ஆசைப் பட்ட பக்தனுக்கு 
27 முறை நிறைவேறியது. பகவானுக்குத் தெரியாதா 
'எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று!'




Friday, January 21, 2011

பூகோளப் பிழை

தன் சாம்பலில் இருந்தே உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல
தன் வரலாற்றுப் பிழைகளில் இருந்தும் உலகம் உயிர்த்தெழாவிட்டால் . . . ? ? ?


. . . பூகோளப் பிழையாக உலகபந்தில் ஒடுங்கிவிடும் சாத்தியமிருக்கிறது ! ! !

அன்று. . .
ஜலியன்வலாபாக்,
ஹிரோஷிமா,
நாகசாகி..

இன்று. . .
ஆப்கான் அவலம்,
இஸ்ரேல் பயங்கரம்,
வர்தகமைய தகர்ப்பு,
குஜராத் படுகொலை,
கோத்ரா கொடூரம்..

இந்த உலகம் தன்னைத்தானே அஸ்தியாக்கிக்கொல்லும் அவசரத்தை நிறுத்திகொள்ளாவிட்டால் மொஹஞ்சதாரோ, ஹாரப்பா போல பூமிப்பந்தும் புதையுண்ட உருண்டை ஆகிவிடாதா??

ஆயுதவிற்பனையாளன் அமைதியை விரும்புவானா??
சமாதான உடன்படிக்கைக்கு உடன்படுவானா??

காயத்ரீ மந்திரம்




ஓம் பூர் புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்க தேவஸ்ய தீமஹி

தியோ யோந: ப்ரசோத யாத்



அந்த பிராண ஸ்வரூபமான,
துக்கத்தை நாசம் செய்யும் 
சுகஸ்வரூபமான உன்னதமான தேஜஸ்வியான
பாபத்தை நாசம் செய்யகூடிய தேவஸ்வரூபமான
பரமாத்மாவை நாம் அந்தராத்மாவில் வைத்துக்கொள்வோமாக !!
அந்த பரமாத்மா நமது புத்தியைத் தூண்டி வழிநடத்தட்டும் !!