திருமாலுக்கு அவதாரங்களோ பலப்பல. அவற்றில் குறிப்பாக, பூர்ணத்துவமான அவதாரங்களாக இரமாவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தையும் சொல்ல வேண்டும்
பிரம்மாவுக்கு நாராயணணைத் தரிசிக்கவேண்டும் என்ற ஏக்கம் எழுந்த்தது.
ஜாம்பவான் என்கிற கரடி வடிவெடுத்து ராமரைத் தரிசித்தார்.
சீதையைப் பிரிந்து வருந்திய ராமருக்கு சீதையைக்கண்டுபிடிக்கும் முயற்சியில் மூளையாகச் செயல்பட்டார்.
அனுமாருக்கு அவரது பறக்கும் சக்தியை நினைவூட்டினார்.
இந்திரஜித்துக்குப் பதிலடி கொடுக்கமுடிந்தவர் ஜாம்பவன் மட்டுமே.
இராவனணைக்கூட மயக்கம் வருமளவுக்கு அடித்து வீழ்த்தியவர் ஜாம்பவன்.
அயோத்தியில் இராமர் பட்டாபிஷேகம் முடிந்து ஊர் திரும்பும் வேளை அனைவரையும் அன்புடன் ஆலிங்கனம் செய்தார் இராமபிரான்.
ஜாம்பவானுக்கு சொல்லொனாத ஆசை ராமரைக் கட்டித்தழுவிக் கண்ணீர் வடிக்க!
தன் உடலில் இருக்கும் அடர்ந்த உரோமத்தால் அழகனாக மென்மையான இராமரின் உடலுக்கு வருத்தம் உண்டாகுமோ!! என்று தன் ஆசையை அடக்கிக்கொண்டு கண்ணீர் உகுத்தார்.
அடுத்த துவாபரயுகத்தில் கிருஷ்ண அவதாரத்தில், சியமந்தகமணியைத்தேடி காட்டுக்குள் சென்றார் கிருஷ்ணபரமாத்மா!
ஜாம்பவான் தன் மகள் ஜாம்பவதியுடன் ஒரு குகையில் தங்கியிருந்தார்.
சிங்கம் ஒன்று பிரச்சேத்னனைக் கொன்று ,அவன் அணிந்திருந்த சியமந்தகமணியுடன் அந்த குகைக்கு வந்தது.
சிங்கத்தைப் போராடிக் கொன்று அந்த மணியைத் தன் மகள் ஜாம்பவதிக்கு அணிவித்தார்.
ஜாம்பவதியின் கழுத்தில் மணியைப் பார்த்த கிருஷ்ணர் அவளைத் துரத்திக்கொண்டு குகைக்கு வந்தார்.
சிறந்த மல்யுத வீரரான ஜாம்பவான், தன் மகளைத் துரத்தி வருபவனுடன் கடுமையான கோபத்துடன் மோதினார்.
தனக்கு ஈடான சக்தியுள்ள ஒருவனுடன் போராடிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.
மல்யுத்தத்திற்காக கட்டிப்பிடித்தபோது இனம் புரியாத பரவசத்தால் தன் உடல் சிலிர்ப்பதை ஆனந்தத்துடன் அனுபவித்தார் ஜாம்பவான்.
இருபத்துஏழு நாட்கள் நடந்த போட்டியில் ஜாம்பவான் ஒரு கட்டத்தில் தளர்ந்துவிட்டார்.
இவ்வளவு வலிமை மிக்க தாங்கள் யார்? எனக் கேட்ட போது இராமனாகக் காட்சி அளித்தார் நாராயணன்.
அவருக்கு சியமந்தகமணியுடன் , தன் மகள் ஜாம்பவதியையும் திருமணம் செய்துவைத்தார்.
ஒரு முறை ஆலிங்கணத்துக்கு ஆசைப் பட்ட பக்தனுக்கு
27 முறை நிறைவேறியது. பகவானுக்குத் தெரியாதா
'எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று!'
பகவானுக்குத் தெரியாதா 'எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று!'//
ReplyDeleteஅருமையாக கேட்டதற்கு மேலேயே கொடுத்திருக்கிறாரே!
//ஒரு முறை ஆலிங்கணத்துக்கு ஆசைப் பட்ட பக்தனுக்கு 27 முறை நிறைவேறியது.
ReplyDeleteபகவானுக்குத் தெரியாதா 'எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று!'//
அதானே! அழகான சொல் !!
ஸ்ரீராமனின் அருள் கிட்டும் வரை
நாம் பொறுமையாய் இருப்போம் !!!
link கொடுத்தற்கு நன்றி சுருக்கி எழுதினால் தான் உங்கள் தளத்திற்கு வருவார்கள்.
ReplyDeleteஒரு படம் இட்டால் போதுமானது அன்பரே
ReplyDeleteநன்றி.
கண்டிப்பாக உங்கள் தளத்தில் கட்டுபாடு இல்லை
ReplyDeleteஅருமையான் பகிர்வுகள்.. பாரட்டுக்கள்.
ReplyDeleteஹனுமத் ஸ்துதி
ReplyDelete[பயணங்கள் இனிமையாக அமைய]
ஹனுமான் அஞ்ஜனாஸூனு:
வாயுபுத்ரோ மஹாபல:
ராமேஷ்ட: பல்குணஸக:
பிங்காக்ஷ: அமிதவிக்ரம:
உதிதக் கிரமண ஸ்சைவ
ஸீதா சோக வினாசன:
லக்ஷ்மண ப்ராணதாதாச
தசக்ரீவஸ்ய தர்பஹா
த்வாத சைதானி நாமானி
கபீந்த்ரஸ்ய மஹாத்மன:
ஸ்வாபகாலே படேந்நித்யம்
யாத்ராகாலே விசேஷத:
தஸ்ய ம்ருத்யு பயம் நாஸ்தி
ஸர்வத்ர விஜயீபவேத்!
அபராஜித பிங்காக்ஷ
நமஸ்தே ஸ்ரீராம பூஜித !
ப்ரஸ்தானம் ச கரிஷ்யாமி
ஸித்திர் பவதுமே ஸதா!!
-oOo-
6+2+1=9
ReplyDelete