Friday, October 3, 2014

வெற்றித்திருநாள் விஜய தசமி..
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே, ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி அருள்வாய் அபிராமியே!

 நற்கரும்பு தமிழினிலே நளினமாய் அன்னையைப் பாட
கற்கண்டு கலந்திருக்கும் சுவை பாலுடனே உபசரிக்க 
கற்கின்ற கலை யெல்லாம் விலையின்றி தந்திங்கே
பொற்குவையும் அளித்திடுவாய் வீர விஜய சக்தித்தாயே..!

அசுரர்களுடன் போரிட்டு அவர்களை வதைத்த  சக்திதேவியின் வெற்றியை தேவர்கள் யாவரும் கொண்டாடி மகிழ்ந்த திருநாள் விஜய தசமி

பத்து தலைகளை உடைய ராவணனை வதம் செய்ததால் நவராத்திரியின் கடைசி நாளான விஜய தசமி’ 'தசரா’ என்றும் அழைக்கப்படுகிறது (தச ஹரா - தசரா). இதையட்டி, வட மாநிலங்களில் ராம்லீலா வைபவம் நிகழும். 
வில்லுக்கு விஜயன் எனப் போற்றப்படும் அர்ஜுனனுக்கு வெற்றி நல்கிய திருநாளாகவும் திகழுகிறது..! 

நாம் துவங்கும் நல்ல காரியங்கள் வெற்றி பெற துணையாக நிற்கும் திருநாளும்  விஜய தசமி ஆகும் ..!

எனவேதான்,  முன்னோர் கல்வி ஆலைகளையும், கலாசாலைகளையும் விஜயதசமி திருநாளிலேயே தொடங்கினார்கள். 

 புதிய கலைகளைத் துவக்கவும், வித்யையில் சிறந்து விளங்கிட அக்ஷராப்யாஸம் என்னும் வித்யாரம்பம்  சடங்கினை ஆரம்பிக்கவும் சிறந்த நாள் விஜய தசமி. 
பிரம்மாவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான் மகிஷன் என்னும் அசுரன், அவனது தவத்தில் மனம் குளிர்ந்த பிரம்மாவிடம், தனக்கு அழிவு என்பது நேரக்கூடாது அப்படி அழிவு நேர்ந்தால் ஒரு பெண்ணால் மட்டுமே நிகழவேண்டும் என்ற வரத்தை பெற்றான்.
தனக்கு அழிவேகிடையாது என்ற ஆணவம் கொண்டு  . தேவலோகத்தின் மீது போர்தொடுத்து தேவர்களை துன்புறுத்தினான். 
 பராசக்தியிடம் முறையிட்ட தேவர்களின் துன்பம் தீர்க்க  தேவி, உக்ர ரூபம் கொண்டாள். மும் மூர்த்திகளும் தங்கள் அம்சத்தை அவளுக்கு தந்து உதவினர்.
மகிஷனை வதம்செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்கிற பெயரை பெற்றாள். அந்த வெற்றி திருநாளையே விஜய தசமியாகக் கொண்டாடுகிறோம்

16 comments:

 1. விஜயதசமி நல் வாழ்த்துக்கள்.
  படங்கள், செய்திகள் அருமை.
  நன்றி.

  ReplyDelete
 2. அற்புதமாக அபிராமி அம்மைப் பதிகத்தோடு தொடங்கிய பதிவு கடன பின்னர் இன்றைய நாளை தொடங்குகின்றேன். விஜயதசமி வாழ்த்துகள்

  ReplyDelete
 3. அபிராமி அந்தாதிப் பாடலுடன், படங்கள் அருமை! வெற்றித் திருநாள் எல்லோருக்கும் வெற்றிகளைக் குவிக்கட்டும்!

  வெற்றித் திருநாளாகிய விஜயதசமி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. superb

  subbu thatha.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
 5. விஜயதசமி திருவாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 6. விஜயதசமி திருநாள் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 7. வணக்கம்
  அம்மா.
  அருமையானகதை மூலம் பதிவை விளக்கியுள்ளீர்கள். படங்கள் அனைத்தும் அழகு பகிர்வுக்கு நன்றி.
  -நன்றி-
  -அன்புடன்-
  - ரூபன்-

  ReplyDelete
 8. விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
  இந்நாளில் தங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் அன்னையின் அருள் கிடைக்க வாழ்த்துகின்றேன்.
  அபிராமிஅந்தாதி,அழகான படங்கள்,தகவல்கள் பகிர்வு அருமை.நன்றிகள்.

  ReplyDelete
 9. விஜயதசமித் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  சிறந்த தகவல்கள்! படங்களும் அருமை!

  ReplyDelete
 10. விஜயதசமி ஏன் கொண்டாடுகிறோம் யாருக்கு என்ன காரணமோ அதை வைத்துக் கொள்ளுங்கள் . நான் பாலக்காட்டில் என் சிறிய வயதில் கல்பாத்தி விசுவநாதர் கோவிலில் ஒரு வாழை மரத்தை அம்மன் வாளால் ஒரே வீச்சில் வெட்டிச் சாய்த்து கொண்டாடுவது கண்டது என் நினைவில் நிழலாடுகிறது

  ReplyDelete
 11. அபிராமி அந்தாதி பாடல்கள் மிக அருமையானவை. சிறந்த பதிவுக்கு நன்றி...

  ReplyDelete
 12. படங்களுடன் அருமையான பதிவு. விஜயதசமி வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. விஜயதசமி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 14. விஜய தசமி நல்வாழ்த்துக்கள் அம்மா...
  படங்கள் அருமை,.,

  ReplyDelete
 15. விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. சிறந்த பக்திப் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete