Saturday, October 11, 2014

ஸ்ரீ வாமன நாராயண சுவாமி ஆலயம்ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த 
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!


வாமன நாராயண சுவாமி அருளும் அற்புத ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்.

வாமனன் தமிழில் குள்ளப்பா என்று அழைக்கப்படுகிறார்.

ஶ்ரீ குள்ளம்மா- குள்ளப்பா- அருளம்மா அருள்புரியும் ஆலயத்தில் 
ஆவாரம் செடி ஸ்தலவிருட்சமாகத்திகழ்கிறது.. மிக்ப்பெரிய மரமாக காட்சிரும் ஆவாரம்செடி  இங்கு விஷேசமாக அனைத்துக் காலங்களிலும் பூக்கும் அபூர்வத்தை அறியத் தந்தார்கள்..
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..” என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது
ஒருபுறம் தும்பிக்கை ஆழ்வாரும் ,மற்றொருபுறம் அனுமனும் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்..
துளசிமாடம் அருமையாக அமைந்திருந்தது.. 
திருமண மண்டபமும் உண்டு.
திருப்பதி பெருமாளைப்போல உயரத்திலும் ,திண்டுமாலை ,மலர், நகை அலங்காரங்களிலும் சுவாமி ஜொலித்துக்கொண்டிருந்தார்..

அதிதி காஷ்யபர் தம்பதியருக்கு வாமனராக அவதரித்த பெருமாளின் சிறப்பு வானளவிய பெருமை பெற்றது..

அதிதி ,கஷ்யபர் ,வாமனர் மூவரும் ஒரே கல்லில் சிற்பமாக இருந்த அதிசய உருவம் புனருத்தாருணத்தின் போது பின்னமாகிவிட்டதாம்.. எனவே புதிய உற்சவர் செய்து அதனடியில் பின்னமான விக்ரஹத்தை புதைத்துவிட்டார்களாம்..
தாயார் வஜ்ரவல்லி விக்ரஹம் சமீபத்தில் புதிதாகச் செய்திருக்கிறார்கள்.
கன்னட தேவாங்கர்களின் குலதெய்வமாக ஆலயம் விளங்கிவருகிறது..

சொர்க்கவாசல் அமைந்திருக்கிறது..

மிகப்பெரிய சக்கரத்தாழ்வாரும்  மஹாலஷ்மி தாயாரும் அற்புதக்காட்சி அளிக்கிறார்கள்.

சிறிய ஒரு கிராமத்தில் இத்தனை சிறப்பான ஒரு ஆலயத்தை எதிர்பாராமல் தரிசித்ததில் அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது..

மிகச்சிறு ஆலயமாகப் பார்த்தது இன்று பெரும் வளர்ச்சி கண்டு மக்களை ஈர்த்து வருகிறது..

திருச்செங்கோட்டிலிருந்து சேலம் செல்லும் வழியில் ஆட்டையாம்பட்டி ஏரிக்கரையில் சிறிது தூரத்திலேயே வெண்ணந்தூர் -மின்னக்கல் சாலையில் ஆலயம் அமைந்திருக்கிறது..!

பல ஆண்டுகளுக்கு முன் ஆலயம் சுற்றுச்சுவர் எழுப்பப்படாமல் கர்ப்பக்கிரஹம் மட்டும்  இருந்த நிலையில் அர்ச்சகரும் அவர் தந்தையும்  ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திவைத்துவிட்டு நள்ளிரவில் ஊர் வந்து சேர்ந்து ஆலயத்தில் களைப்புடன் உறங்கிக் கொண்டிருந்தார்களாம்..

அப்போது வழிப்போக்கர்கள் இருவர் ஆலயத்தின் முன்புறம் வந்து  ஆலயக்கதவுகள் திறந்திருக்கிறதே இந்த நள்ளிரவில் ..பெருமாள் திண்டுமாலையும் , நகைகளுமாக திருப்பதியில் உள்ளது போலவே ஜொலிக்கிறாரே .. என்று நின்று வணங்கிவிட்டுப் போனார்களாம். அர்ச்சகரின் தந்தை கோவில் கதவைச் சார்த்த மறந்துவிட்டோம் போலிருக்கிறதே என எண்ணி உறக்கம் கலைந்து எழுந்து பார்த்தால் கதவு பூட்டியபடியே இருந்ததாம்..

தன்னை உண்மையான பக்தியுடன் வழிபடும் அன்பர் கண்களுக்கு பிரத்யட்சமாகக் காட்சி கொடுக்கும் பெருமாள் என்று அன்றுமுதல் போற்றப்படுகிறார்..புரட்டாசி சனிக்கிழமைகள் , மற்ற விஷேச நாட்களில் சிறப்பான அலங்காரங்கள் விஷேச வழிபாடுகள் நடைபெறுகின்றன.. 
  

6 comments:

 1. இவ்வாலயம் பற்றி கேள்விபட்டிருக்கின்றேன்/ இன்று தங்களால் எங்கு அமைந்துள்ளது என்றறிந்தேன்! அமைவிடம் அறிந்தது மட்டுமல்லாமல், அய்யனை தரிசிக்கவும் செய்ய வைத்த தங்களுக்கு நன்றி! கிருஷ்ணனின் கருணையை என்னவென்று சொல்வது. கிருஷ்ணன் சகல நன்மைகளும் அருள பிரார்த்திக்கிறேன்!

  கிருஷ்ணார்ப்பனம்!

  ReplyDelete
 2. அழகிய படங்களுடன் இனிய பதிவு.. வாழ்க நலம்..

  ReplyDelete
 3. கோவில்களின் என்சைக்க்லோபிடியாவுக்கு நன்றி.

  ReplyDelete
 4. இதுவரை அறியாத கோவிலைப் பற்றி அழகான படங்களுடன் அறியத் தந்தீர்கள் அம்மா...
  வாமனரை குள்ளப்பர் என்பதை உங்கள் பகிர்வின் மூலமாகத்தான் அறிந்தேன்...

  ReplyDelete
 5. தெரியாத கோவிலைப் பற்றிய அறியாத தகவல்கள் . அறிந்து கொண்டேன் . பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 6. பக்தி பரவசமடைந்தேன். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete