Tuesday, October 28, 2014

வெண்ணந்தூர்"ஸ்ரீமுத்துக் குமார சுவாமி' ஆலயம்




பாலோ தேனோ பாகோ வானோர் பாராவாரத்து அமுதேயோ
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான்முத்தென

நீளத் தாலோ தாலேலோ பாடாதே  தாய்மார் நேசத்து 
உனு சாரந் தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏசத் தகுமோதான்

ஆலோல் கேளா மேலோர் நாண்மாலானா தேனற் புனமேபோய்
 .ஆயாள் தாள்மேல் வீழா வாழா ஆளா வேளைப் ...... புகுவோனே

சேலோ டேசே ராரால் சாலார்சீரா ரூரிற்  பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே  தேவே தேவப் ...... பெருமாளே.



நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், திருமணி முத்தாநதி சூழ்ந்த வெண்ணந்தூரில் அமைந்துள்ள திருக்கோயிலில் முருகன்,
 "ஸ்ரீமுத்துக் குமார சுவாமி' என்னும் நாமம் கொண்டு நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வெண்ணந்தூர் முத்துக்குமாரசாமி திருக்கோயில் 1920 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோயில்.  பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்காந்தத்தில் இடம் பெறுகிறது கந்தனின் வரலாறு. அதில் சூரபதுமன் வதை படலம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெண்ணந்தூரில் 
"சூர சம்ஹார விழா' விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அசுர குலத்தைச் சேர்ந்த சூரபதுமன், ஈசனிடம் மிகுந்த பக்திகொண்டவன். அவன் தவம் செய்து ஈசனிடமே, ""உங்கள் சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியாலும் எனக்கு மரணம் நேரிடக் கூடாது'' என்ற வரத்தைப் பெற்றான். அதன் பின் தேவர்களுக்கும், இறையடியார்களுக்கும் பல தீங்குகள் செய்தான்.
பின்னர் தேவர்களின் வேண்டுகோளின்படி சிவ கிருபையால்,
"ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன்' உலகம் உய்ய!  சூரனை எதிர்த்துப் போரிடப் புறப்பட்ட முருகப் பெருமானிடம் உலக அன்னையாகிய பராசக்தி, ""என்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி உருவாக்கிய வேல் உன்னுடன் என்றும் இருக்கட்டும்'' என்று ஆசி கூறி வேலாயுதம் தந்து அனுப்பினாள். 

முருகப் பெருமானும் சூரனை வென்று, உலகமனைத்தையும் காத்தார்.
வெண்ணந்தூர் முருகன் கோயிலில் சூர சம்ஹார விழா, கந்த சஷ்டியன்று மாலை 3.00 மணிக்குத் தொடங்கும். அப்போது முருகன் தனது தாய் பார்வதி தேவியிடம் சென்று சக்திவேலை பெற்றுக் கொண்டு புறப்படும் நிகழ்ச்சி முதலில் நடைபெறும். பின்னர் "சூர சம்ஹாரம்' முடிந்ததும், அதைக் கொண்டாடும் வகையில் வண்ண வண்ண வாணவேடிக்கைகளுடன் மிக கோலாகலமாக விழா நிறைவுறும்.

 இவ்விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள்  சுற்று வட்டாரத்திலிருந்து வெண்ணந்தூர் வருவார்கள்.
ஆடி மாத கடைசி வியாழக்கிழமையன்று சுப்பிரமணியருக்கு பெரிய விழா எடுத்து கோலாகலமாக நடத்தப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும் கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம் விழா மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது. சூரசம்ஹாரம் விழா திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறுவதுபோல் இங்கும் நடைபெறுகிறது.


வெண்ணந்தூரில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு முத்துக்குமாரசாமியின் பேரருளைப் பெறலாம்.

  சஷ்டியன்று நடைபெறும் விசேஷ வழிபாடு சிறப்பு பெற்றது..


திருமணத் தடையுள்ளவர்கள் சஷ்டியின்போது வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும் என்பது  ஐதீகம்..




8 comments:

  1. முத்துக்குமரா
    வடிவேலா..
    நின் முன்னே அமர்ந்து
    என்றுமே யான் நின் நினைவில்
    பிறக்க, இறக்க
    அருள் புரிவாய்.

    சுப்பு தாத்தா.

    அற்புதமான பதிவு. படங்கள்.

    ReplyDelete
  2. ஸ்கந்த சஷ்டி வேளையில் அப்பனின் அருங் காட்சிகளும் அவன் பெருமைகளையும் கேட்டு மனம் மகிழ்ந்தது. அவன் அருளால் அனைவரும் ஆனந்தம் அடையட்டும் தோழி. தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  3. வெண்ணந்தூர் முருகன் அனைவருக்கும் நல்லருள் புரிவனாக!..

    ReplyDelete
  4. முருகா என்றழைக்கவா... முத்துக்குமரா என்றழைக்கவா... கந்தா என்றழைக்கவா...

    ReplyDelete
  5. அம்மா ரொம்ப நாளாக வலை பக்கமே வர முடியாதபடி பிஸி ஆயிட்டேன்மா. உங்க பதிவெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன்மா. இன்றைய பதிவும் சூப்பராக இருக்கு. நன்றி.

    ReplyDelete
  6. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  7. ரொம்ப நாளாக வலை பக்கமே வர முடியாதபடி பிஸி ஆயிட்டேன். உங்க பதிவெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன். இன்றைய பதிவும் சூப்பராக இருக்கு. நன்றி.

    ReplyDelete
  8. அருமையான படங்கள்....

    தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete