Thursday, October 23, 2014

அபூர்வ அன்ன லிங்கம் வழிபாடு...
நித்யானந்தகரீ வரஅபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|
நிர்தூதாகிலகோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|
ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ


என்று ஸ்ரீ ஆதி சங்கரர் அன்னபூரணியைத் துதித்துள்ளார். 
உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. 

ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள். 

வெறும் வயிற்றுப் பசியை அல்ல; ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்துடன் காசியில்  எழுந்தருளியிருக்கிறாள். 

பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சீவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும்  
தங்க அன்னபூரணியாக காசியில் அருளிபாலிகிறாள்..
சாம வேதத்தில்  "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 அன்னை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.!

அன்னத் தினாலேயே லிங்கம் ஸ்தாபித்து. அதில் காசி விஸ்வநாதரை எழுந்தருளச் செய்து, அந்த அன்னலிங்கத்திற்கு விபூதி, சந்தனம், குங்குமமிட்டு, மலர் மாலை, ருத்ராட்ச மாலை சாற்றி, அன்னலிங்கத்தைச் சுற்றி லட்டு, வடைகளை சமர்ப்பித்து, பெரிய தட்டுகளில் இனிப்பு களையும் பழங்களையும் படைப்பார்கள்.
ஒரு சிறு நந்தியின் உருவத்தை அன்னத் தினால் உருவாக்கி, பச்சை மிளகாயினால் காது, வால் வைத்து, புளியங்கொட்டையினால் கண்கள் வைத்து அலங்கரித்து அன்னலிங்கத்தின்முன் வைப்பார்கள்.

காலை சுமார் பத்து மணியளவில், அங்கு கூடியுள்ள பக்தர்கள் மற்றும் காசிக்கு வந்திருக்கும் யாத்திரிகர்கள் முன்னிலையில், வேதம் அறிந்த அந்தணர்கள் கணபதி பூஜையில் ஆரம்பித்து அன்ன சிவனுக்குப் பூஜை செய்வார்கள். பிறகு, அங்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவரும் பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 

பக்தர்கள் பூஜை செய்தபின் தேங்காய் உடைத்து, அன்னதானத்திற்காக தயார் செய்திருக்கும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயசம், இனிப்பு வகைகள் முதலியவற்றை நைவேத்தியமாக சமர்ப்பிப்பார்கள். மீண்டும் அனைவரும் பூஜை செய்தபின்,  அந்த அன்னலிங்கத் திலிருந்து சிறிதளவு அன்னத்தையும் இனிப்பு மற்றும் காய்கறிப் பதார்த்தங் களையும் இலையில் வைத்து, எதிரில் ஓடிக்கொண்டிருக்கும் கங்கை நதிக்கு சமர்ப்பித்து வழிபடுவார்கள். 
anna lingam
அதற்குப்பின் பூஜை செய்த இடத்திற்கு அருகிலேயே பக்தர்கள் வரிசையாக அமர்ந்த தும், இலை போடப் பட்டு அன்ன சிவலிங்கத்திலிருந்து அன்னத்தை எடுத்து அவர்களுக்கு வழங்கி, மற்ற பொருட்களையும் பரிமாறுவார்கள்.

கங்கை நதியில் நீராடிவிட்டு அந்தப் பாதை வழியாக மகான்கள், புனிதர்கள், பக்தர்கள் நடந்து சென்றிருப்பதால், அவர்கள் பாதங்கள் பட்ட புண்ணிய இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதை உயர்வாகவே நினைக்கிறார்கள். 

இதுபோல் அன்னம் உண்பது வருடத்திற்கு ஒருநாள் தீபாவளி அன்று மட்டும் என்பதால் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். அனைவருக்கும் அன்னசிவன் பிரசாதம் கிடைக்கும் என்பது சிறப்பாகும்.

ஒவ்வொரு அன்னத்திலும் சிவலிங்கம் காட்சி தருவதாக ஐதீகம் என்பதால் அன்னத்தை சிறிதளவுகூட வீணாக்காமல் உண்பார்கள். இந்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெறும். அதற்குப்பின் அந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவது வழக்கம். 

இந்த வைபவத்தை காசியிலுள்ள மகாலட்சுமி யாத்ரா சர்வீஸ் என்ற அமைப்பு காசியில் மீராகாட் என்ற இடத்தில் நடத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், காசி விஸ்வநாதரையும் அன்னை விசாலாட்சி யையும் தரிசித்தபின் அன்னபூரணி ஆலயத்திற்குச்  சென்று, தங்கத்தாலான அன்னபூரணியை தரிசிப்பார்கள். 

பிறகு லட்டு தேரில் அன்னபூரணி பவனி வருவதைக் கண்டுகளித்து, அந்த லட்டுகளையே பிரசாதமாகவும் பெற்று மகிழ்வர். 
அதன்பின் தங்க பைரவர் விக்கிரகத்தை தரிசித்து, தீபாவளி தினத்தை புனிதம் மிக்க வகையில் கழிக்கிறார்கள்.
மாலை ஆறு மணிக்குமேல் கங்கை நதிக்கு நடைபெறும் ஆரத்தி மிகவும் ஜெகஜோதியாய்த் திகழும். அங்கு கங்காதேவியின் தங்க விக்கிரகத்தை பஞ்ச கங்கா படித்துறையில் எழுந்தருளச் செய்து, சப்தரிஷிகள் பூஜையாக ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாகும்
அன்னபூரணியை தங்கமயமாக- முழுமையாகத் தரிசிக்கலாம்.  தீபாவளி அன்று இரவு லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னபூரணி வலம் வருவாள். பவனி முடிந்ததும் அந்த லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படும். 


தங்கத்தாலான கால பைரவரும் தீபாவளி தினத்தில் மட்டுமே
 வீதியுலா வருவார்

12 comments:

 1. அன்னலிங்கம், லட்டு தேர்.. எல்லாமே புதிய செய்தி எனக்கு.

  ReplyDelete
 2. சிறந்த பக்திப் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 3. சிறந்த பக்திப் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 4. heartening .
  All the Best .
  subbu thatha.

  ReplyDelete
 5. அபூர்வ அன்ன லிங்க வழிபாடு அறிந்தேன் உணர்ந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 6. அபூர்வ அன்னலிங்க வழிபாடு பற்றிய தகவல்கள் அறிந்திராதது. சிறப்பான பல தகவல்கள்,அழகான படங்கள்.1,3வது அன்னபூரணி படங்கள் கொள்ளை அழகு. நன்றி

  ReplyDelete
 7. அழகு சொட்டும் அற்புதப் படங்களும் அருமையான தகவல்களும்
  பகிர்ந்தீர்கள்! மிக அருமை சகோதரி!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. லட்டு தேர், அன்னலிங்கம் . தங்கபூரணி, தங்க பைரவர் அனைத்தும் தரிசனம் செய்தோம் உங்கள் தளத்தில்.
  நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அன்ன லிங்க வழிபாடு..
  அருமையான தகவல்களுடன் இனிய பதிவு!..

  ReplyDelete
 10. அன்னலிங்கம்,அன்ன நந்தி,லட்டு தேர்..என அனைத்தையும் பார்த்து வணங்கினேன்.
  அறியாத விஷயங்கள் அம்மா. காலபைரவர், பஞ்சகங்கா ஆரத்தி என அருமையான தகவல்கள் அம்மா. நன்றி

  ReplyDelete
 11. அறியாத செய்திகள் அறிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 12. அற்புதமான படங்களுடன் அறிய பல செய்திகளை அறிந்து கொண்டேன்.

  ReplyDelete