Monday, August 17, 2015

நாகசதுர்த்தி வழிபாடு

Nag Panchami Graphic
நாகராஜ துதி
ஓம் அனந்தம் வாஸுகிம் சேஷம் பத்மநாபம் ஸகம்பலம்
ஸங்கபாலம் த்ருதராஷ்டிரம்: தட்சகம் காளியம் ததா: 
ஏதானி நவ நாமானி சமகாத்மனாம் சாயங்காலே படேந்நித்யம்
ப்ராதாகாரல விசேஷதக நஸ்யவிஷ பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்!
        
- அனந்தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மநாபன், கம்பலன், சங்கபாலன், த்ருதராஷ்டிரன், தட்சகன், காளியன் முதலான ஒன்பது நாக  ராஜாக்களே நமஸ்காரம். 
ராகு-கேது கிரகங்கள் மற்றும் பிற நாக தோஷங்களை விலக்கி
 நற்கதி அருள்வீராக. நமஸ்காரம். 
தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும்  நாகராஜனின் ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி வந்தால் நாக தோஷங்கள் விலகி பலன் பெறலாம்

"நாகராஜ மஹாபாகு ஸர்வா பீஷ்ட பலப்ரத நமஸ்கரோமி
தேவேச த்ராஹிமாம் கருணாநிதே உமா கோமள ஹஸ்தாப்ய 
ஸம்பாவித லலாடகம் ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் பஷ்கரஸ்ரஜம்'.
நாக விரதம் ஆடி மாத சதுர்த்தியில் கொண்டாடும் வழக்கம்
ஆடி அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமி திதி கருட மற்றும் நாக பஞ்சமி என அழைக்கப்படுகிறது.
 பறவைகளில் கருடனையும் மற்றும்  நாகப் பாம்பையும் போற்றி வழிபடுவதற் கென்று ஏற்பட்டுள்ள பண்டிகையாக நாக சதுர்த் தியும் கருட பஞ்சமியும் திகழ்கின்ற
நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்து பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசிக் குங்குமம் வைத்து  பால், முட்டை முதலியவற்றை நிவேதன பொருளாக வைத்து வழிபடுவார்கள். 
மூன்று அல்லது ஒன்பது முறை கோவிலை சுற்றி வலம் வந்து  நாகசதுர்த்தி விரதத்தை தொடங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் இந்த விரதத்தை பின்பற்ற வேண்டும். 
Happy Nag Panchami
யமுனை நதியில் வாழ்ந்துவந்த காளிந்தீ என்ற நாகத்தினால்  மக்களுக்கு ஏற்பட்ட இன்னல் களுக்கு முடிவு கட்ட கிருஷ்ணர் அந்தப் பாம்பினை அடக்கி, அதன் மீது நர்த்தனம் ஆடிக் களித்தாராம். அவ்வாறு காளிந்தீ நர்த்தனம் செய்த நாளே நாக பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது.
காஸ்யபருக்கும், கத்ருவுக்கும் பிறந்த நாகர்.  தாய் சொல்லைக் கேட்காமல் தன் போக்கில் நடக்கத் தொடங்கவே கோபம் கொண்ட தாயர் கத்ரு-
தாய் சொல்லை கேளாததால் தீயில் விழுந்து இறந்து போகும்படிமகனுக்கு சாபம் கொடுத்தாள். 

ஜனமேஜயன் மூலம் அந்த சாபம் நிறைவேறியது
.பாம்புகளின் தலைவனாக விளங்கிய `தட்சகன்' என்ற கொடிய நாகத்தால் பரிசட்த் என்ற மன்னன் கடிக்கப்பட்டு இறந்தான்
பரீட்சித் மகாராஜாவின் புதல்வன் ஜனமேஜயன்,தன் தந்தையின் மரணத்துக்குக் காரணமான நாகராஜன் தட்சகனைப் பழி தீர்க்கவும்,
பாம்பு இனத்தையே பூண்டோடு ஒழிக்கவும சபதமிட்டுசர்ப்ப யாகம் -  `சர்ப்பயக்ஞம்' என்ற வேள்வியை நடத்தினான்.
பல பாம்புகள் அவன் நடத்திய வேள்வித்தீயில் விழுந்து மாண்டன. 

அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி  நாகர்களுக்கு சாப நிவர்த்தி  கொடுத்த நாள் நாக சதுர்த்தி
பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்து கற்பூர ஆராதனை செய்தல்  நாகசதுர்த்தியில் விரதம் இருந்தால் நாகதோஷம் விலகும்.
அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, கோரிக்கைளை நிறைவேற்றித் தரும்படி நாகசதுர்த்தி நாளில் வேண்டிக்கொள்ளலாம். 
naag panchami
திருமணத்தடை, தீர்க்க சுமங்கலி பாக்கியம், வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க,நாகசதுர்த்தி நாளில் விரதம் மேற்கொள்ளலாம். 

நாகசதுர்த்தி அன்று வாசலில், சிறிய அளவில் பாம்புக்கோலம் இட வேண்டும். 
பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து, செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும். சதுர்த்தி என்றால் நான்கு. 

இந்த நான்கு என்ற அலைவரிசை எண் கணித சாஸ்திரப்படி ராகுவை குறிப்பதாகும். எனவே நான்காவது திதியான சதுர்த்தி அன்று  வழிபடுவது மிகவும் விசேஷமாகும். 

ஆடி மாதம், வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தி திதியில் 
நாக சதுர்த்தியையும்,  ஐந்தாம் நாளாகிய பஞ்சமி திதியில் 
நாக கருட பஞ்சமியையும் கொண்டாடுவார்கள்.

நாகசதுர்த்தி அன்று நாகர் சன்னதியில் விசேஷ பூஜைகள், அபிஷேகம் உண்டு.
நாகசதுர்த்தி நாளில் நாகருக்கு மஞ்சள் காப்பு அணிவித்து
புது வஸ்திரம் கட்டி பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
இதர வளர்பிறை சதுர்த்தி தினங்களிலும் நாகரை வழிபடலாம் !

நாகதோஷம் உள்ளவர்களும் ராகு, கேது தோஷங்களால் பாதிப்பு உள்ளவர்களும் ஆடிமாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து நாகதேவதையை வழிபட்டு அனுசரிப்பதே நாகபஞ்சமி விரதம்.

ஆடி பஞ்சமி முதல் ஒவ்வொரு மாதமும் பஞ்சமி திதியன்றுஇந்த விரதத்தை மேற்கொண்டு 12ம் மாதமானஆனிமாத வளர்பிறை பஞ்சமி அன்று விரதத்தை முடிப்பர்.புற்றுகளுக்கு சந்தனம், குங்குமம் இட்டு நாகத்தை வழிபடுவதோடு, புற்று மண்ணைப் பிரசாதமாக எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதுண்டு.
 நாக சதுர்த்தி மற்றும் பஞ்சமி நாட்களில் நிலத்தைத் தோண்டுவதோ, 
உழுவதோ, மரங் களை வெட்டுவதோ கூடாது என்ற கட்டுப் பாடு உண்டு..
தேவர்களும் அசுரர் களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது 
முதலில் வெளிப் பட்ட ஆலகால விஷத்திலிருந்து  மக்களைக் காப்பாற்ற சிவபெருமான்  விஷத்தை அருந்திய போது கீழே சிந்திய துளிகள் நாகங்களுக்கு விஷத்தை அளித்ததாகவும்,  அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள நாக சதுர்த்தி அன்று  நாகங்கள் வழிபடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சிக்மகளூர் டவுனிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலுள்ள ஹிரேமகளூர் பிரதேசத்தில் அமைந்துள்ள கோதண்ட ராமஸ்வாமி கோயில் உள்ள இடத்தில் .சர்ப்ப யாகம் செய்ததன் நினைவாக  ராஜா ஜனமேஜயனால் எழுப்பப்பட்ட ஒரு கற் தூணை, நாக பஞ்சமியன்று தரிசித்தால் நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
பரசுராமர் இங்கு வாசம் செய்துள்ளதால்   ‘
பார்க்கவபுரி’ என்றும்அழைக்கப்படுகிறது.

பரசுராமரை ராமபிரான் கர்வபங்கம் செய்த இடம் 
பரசுராமரின் வேண்டுகோளின்படி, கல்யாணக் கோலத்தில் ராமர், சீதாதேவி வலப் பக்கத்திலும், இலக்குவன் இடப் புறமாகவும் இருந்து சேவை சாதித்தார்..

2 comments:

  1. துதிப்பாடல்களோடு நாகராஜ வழிப்பாட்டு முறையும் தகவல்களையும் சிறப்பாக அளித்தமைக்கு நன்றி! படங்கள் அழகு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமையான படங்கள். தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete