Monday, November 9, 2015

தீபாவளி ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்






ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருளைப் பெற முதன்மையாக இருக்கும் விரதம் ஸ்ரீலக்ஷ்மி குபேர விரதம்தான்.
ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை செய்பவர்கள் பெரும் நிதியினைப் பெறுவார்கள்’’
ஐப்பசி மாதம் அமாவாசையன்று பூஜை செய்வது விசேஷம்.

 வெள்ளிக்கிழமையிலோ, பௌர்ணமி தினங்களிலோலக்ஷ்மி பூஜை செய்யலாம்.
ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத்திம் மே தேஹி தாபா யஸ்வாஹா
என்னும்  குபேர மந்திரத்தை 108 முறை ஜபிக்க ஸ்வாமிக்கே கடன் கொடுத்த குபேரனை வணங்குவோருக்கு குசேலருக்கு நிதி கிடைத்தது போல், அயாசகன் என்ற ஏழை பிராமணனுக்கு ஆதிசங்கரர் அருளால் தங்க நெல்லிக்காய் மழையாக அவர் வீட்டில் பெய்தது போல்,
பெரும் செல்வம் தேடி வரும்.
 குபேரன் தான் இழந்த தன் நிதிகளை திரும்பப்பெற்றது
 தீபாவளி தினத்தில்தான்

 ஸ்ரீசூக்தத்தால் மஹாலக்ஷ்மிக்கு சோடச உபசாரங்கள் செய்து அர்ச்சித்து வழிபாடும், லோக பாலகர், நவக்ரஹ பூஜை விரிவாக செய்து குபேர பகவானையும் வழிபாடு செய்துஅர்ச்சித்து பூஜை செய்து  மந்திரத்தையும் ஜபிக்கலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  தீபாவளி பண்டிகையின்போது வரும் அமாவாசை தினத்தில் `தீபாவளி  ஆஸ்தான உற்சவத்தையொட்டி, காலை சுப்ரபாத சேவையுடன், சுவாமியை துயிலெழுப்பும் நிகழ்ச்சி நடைபெறும்.கோயிலுக்குள் உள்ள மணி மண்டபம் அருகே மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், கருட சிலைக்கு எதிராக சர்வ பூபாள வாகனத்தில் கொலு வைக்கப்பட்டு எழுந்தருள்வார்.


கௌதம முனிவர் பார்வதி தேவிக்கு கேதார விரதத்தின் மகிமைகளைக் கூறி,  இறைவன் திருவருளைப் பெற கூற. கௌரிதேவி கேதாரம் என்னும் தலத்தில்  அந்தக் கரணங்களையும் ஐம்பொறிகளையும் அடக்கித் தவம் செய்து,  துதித்தாள்.  இறைவன் கௌரிதேவியை ஏற்றுத் தன் இடப்பாகத்தில் அமரச் செய்தார்.


.

15 comments:

  1. அருமையான தகவல்கள்.

    ReplyDelete
  2. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  3. தீபாவளி வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. அருமை அம்மா...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. படங்களும் பதிவும் அருமை!
    தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களது பதிவு பார்க்க, படிக்க சந்தோஷம்.
    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. நல்ல தகவல்கள் . படங்களும் பிரமாதம் .
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
    அன்புடன் இனிய வாழ்த்துகள்.!
    இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.

    ReplyDelete
  9. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    அழகிய படங்களுடன் இனிய பதிவு..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  10. மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      இனிய தீப திருநாள் வாழ்த்துகள்
      நட்புடன்,
      புதுவை வேலு

      Delete
  11. தீபாவளி வாழ்த்துக்கள் படங்களும் தகவல்களும் அருமை

    ReplyDelete
  12. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா.!!
    அழகான படங்கள், நல்லதொரு பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  13. அருமையான தகவல்கள் - சிறப்பான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  14. குபேர லஷ்மி பூஜை வட இந்தியாவில் அதிகமாக நிறைய பேர்களின் வீடுகளில் செய்து வருகிறார்கள். நாலு வருஷத்துக்கு ஒரு முறை தீபாவளிக்கு அடுத்த நாள் அமாவாசை திதி வரும் பேஸின் லட்டுதான் முக்கிய பிரசாதமாக இருக்கும்.

    ReplyDelete