Showing posts with label ஆயிரமாவது பதிவு ..... Show all posts
Showing posts with label ஆயிரமாவது பதிவு ..... Show all posts

Tuesday, August 13, 2013

ஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு




.
ஆயிரமாவது பதிவு ...

Number one floral, vector. See more on my portfolio Stock Photo - 9077510Number zero floral, vector.  stock photographyNumber zero floral, vector.  stock photographyNumber zero floral, vector.  stock photography

animation, counter, gif, love, numbers
 photo SHIVA_FAMILY_by_VISHNU108.gif



நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்த விநாயகர் அகவல் விநாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குகிறது.

விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார் ..எனவே பொருளுணர்ந்து சொல்லிப் பலனடைவோம் ..

நம் அனுபவங்கள் கூடக்கூட வயது ஏற ஏற பொருளும் அதற்கேற்றபடி மெருகேறும் அற்புதத்தை உணரலாம் ..!

அற்புதம் நின்ற கற்பகக் களிறாய் ’ஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை  வழிபட்டு உய்வதற்காகவும்  அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளிய  விநாயக வடிவம் திருவருளால் மட்டுமே நிகழ்வது.....!

அரும்பி மலர்ந்த திருநெறிகளின் வழியே திருவருள் வெளிப்பட்டுத் தோன்றிய அழகிய ஞானநூல்களில் ஒன்று, ஔவையார் அருளிய விநாயகர் அகவல். 

அகவல் பாவால் ஆகிய துதிநூல் மயில் அகவுவது போலும் ஒலி கொண்டதால் அகவல் எனப் பெயர் பெற்ற , எழுபத்துஇரண்டு அடிகளைக் கொண்டு   கோலமயில் போல் துதித்து மனதில் எண்ணிப்பார்க்கும் தோறும் புதிய அர்த்தங்கள் தோன்றும் பொருள் பொதிந்த பெருமை கொண்டது ...




விநாயகர் அகவல் :

சீதக்களபச் செந்தாமரைப் பூம் 
பாதச் சிலம்பு பலஇசை பாட

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் 
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப் 

பேழை வயிறும் பெரும் பாரக் கோடும் 
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்


குளிர்ச்சியும் நறுமணமும்  பொருந்திய செந்தாமரை போன்ற பாதத்ததில் இருக்கும் சிலம்பு பல விதமான இசைகளை ஒலித்து சப்திக்க, 

இடுப்பினில் பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற,அழகு ததும்ப அணிந்து கொண்டு இருக்கின்ற.. 

பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், 

அஞ்சு கரமும் அங்குச பாசமும் 
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும் 

நான்ற வாயும் நாலிறு புயமும் 
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் 
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்

ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும், மூன்று கண்களும், 

அங்குசம் என்பது அடக்குவதற்கான கருவி.யானையை அடக்குவதற்காக அங்குசத்தை யானைப்பாகன் உபயோகிப்பதைப்போல எப்போதும் யானை போல அசைந்துகொண்டிருக்கும் மனதை  .அடக்கும்  அங்குசத்தையும் , 

பாசம் என்பது தளைப்பது,பிணைப்பது-உலகில் பலவித பொருள்கள் மற்றும் மனிதர்கள் உறவுகள் ஆகியவற்றின் மீது ஏற்படும் பாசத்தினாலும் ஆசையினாலும்தான் பல வித உலகியல் நடவடிக்கைகளுப் அவை சார்ந்த துன்பங்களும் நேர்கின்றன.

விநாயகர் தளைகளை ஏற்படுத்துகின்ற பாசத்தையும் அவற்றை கட்டுறுத்தி,மட்டுறுத்தி வைக்கின்ற அங்குசத்தையும் ஒருங்கே கொண்டு இலங்குகின்றார்

அகன்ற பெரிய வாயும்,நான்கு புயங்களும், மூன்று கண்களும்-இரண்டு கண்கள் முகத்திலும் தும்பிக்கையில் நடுவில் ஒரு கண்ணும்- 

மும்மதம் பொழிந்த சுவடான அடையாளமும், இரண்டு செவிகளும், பொன்னாலான கிரீடமும் அணிந்து, திரண்டு விளங்குகின்ற மூன்று நூல்களால் முறுக்கி அமையப்பெற்ற முப்புரி நூல் விளங்குளின்ற ஒளி பொருந்திய மார்பும்...

சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான 
அற்புதம் நின்ற கற்பகக் களிறே

முப்பழம் நுகரும் மூசிக வாகன 
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந்தருளி 
மாயப்பிறவி மயக்கம் அறுத்தே

திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே 
வந்தென் னுளந் தன்னில் புகுந்து

குருவடிவாகிக் குவலயந்தன்னில் 
திருவடி வைத்து திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி 
கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே


சொற்களால் விவரிக்க இயலாத வண்ணம்  துரிய நிலையில் அற்புதமாகத் திகழ்கின்ற உண்மையான ஞானமானவனே,

 ( உடல் புற வெளியின் உலகியல் காரணிகளால் ஆளப்பட்டிருப்பினும் ஆன்மா அருள் உணர்வில் இறைத்தத்துவத்தில் ஒடுங்கி நிற்கும் நிலையில் விழிப்போ,மயக்கமோ அல்லது உறக்கமோ அல்லாத ஒரு நிலை கை கூடும்,அந்த நிலையை துரிய நிலை என்று அழைக்கப்படுகிறது ..!)

மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே,

மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே,

இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே,

மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே,

திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க

ஆன்மாவிற்கு குருவின் வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, 

எது திறம் எது உண்மையான மெய்ப் பொருள் என்று விளக்கி, 

துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, என்னை ஆட்கொண்டு, என்னை வாட்டத்திலிருந்த மீட்டு மெய்யான மகிழ்வு நிலையை அருள்வதற்காக உனது கையில் இருக்கும் தந்தத்தினால் அமைந்த கோடாயுதத்தால் எனது தீவினைகள்,கொடு வினைகள் அனைத்தையும் அகற்றி அருளும் பெருமானே...


உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 
இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து 
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி 
மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே

உபதேசம் கேட்பது சலிப்பேற்படுத்தும் ஒரு செயல்;விரும்பி ஏற்கமுடிவதில்லை; ஆனால் ஔவையார்  அமுத வாக்கில் விநாயகரின் வாக்கில் வரும் உபதேசம் சலிப்பேற்படுத்தாத,இனிமையுடன் கூடியதாக இருப்பதோடு ஞானத் தெளிவையும் காட்டுகிறது.

உலகில்  பிறந்த உயிர் விடுதலை பெற்று இறைத் தன்மை அடைவதற்கு ஐம்புலன்களின் பிடியில் இருந்து உயிர் விடுபட வேண்டும்.


ஐம்பொறிகளையும் அவித்தவன் இறைவனாகவும் கூடும் -பொறி வாயில் ஐந்தவித்தான் என்பது திருக்குறள்.
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின்
வகை தெரிவான் கட்டே உலகு

என்று இறை நிலையை அடையும் ஆசை அல்லாத ஒருவனுக்கும் கூட, இந்த உலகம் ஐம் பொறிகளையும் தன் கைக் கொண்டு அவற்றை அடக்கி ஆளத் தெரிந்தவனிடம் , அவனது கைப்பிடிக்குள் இருக்கும் என்கிறது.


அந்தப் பெருநிலையை,சிறப்பு நிலையை அடையும் வழியாக ஐமபுலன்களையும் அடக்கி ஆளும் உபாயத்தை, என்மீது இயல்பாகவும்  இனிமையாகவும் பிரியமாகவும்  இருக்கும் அன்பின் பாற் பட்ட கருணையினால் இனிதாக எனக்கு அளித்து ரட்சிக்கும் விநாயகப் பெருமானே....


வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி,

தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி,

ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து,

நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி,

இருவித நிலைகளில் திகழும் சுவாச சூட்சுமத்தை அறிவித்து கடைசி ஆதாரமாகிய சுழிமுனைக் கபாலத்தில்,சூரிய சந்திர அக்னி மண்டலங்களில் இழைந்து முட்டி நிலவும் ஆன்ம சக்தியான குண்டலினி சக்தியை,அசையாது சுழிமுனையில் நிறுத்தி நிலைபெறச் செய்வதோடு மட்டுமல்லாது ,அந்த நிலைபெறச் செய்த ஆன்ம சக்தியின் சுவையை எனது நாவிலும் உணர்த்தும் வல்லமை பெற்று அருளுகிற விநாயகப் பெருமானே.....

1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் தந்து,

 நான்கு தலங்களின் வழியாக உயிர் நான்கு விதமான நிலைகளை அடைய முடியும்.இந்த மொத்த செயல்பாடுகளுக்கிடையே மும்மலங்கள் ஏற்படுத்தும் மாயா நிலைகளும் உயிரை அலைக்கழிக்கும்.

 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து,

உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி,

1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி

அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,
-சிவமே தன்னுள் கலந்து தான் அவன் வேறுபாடு இல்லாத நிலை- ஆகிய நிலைகளை இனிதாக அடையும் வண்ணம் எனக்கருளும் விநாயகப் பெருமானே...

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் 
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறு ஆதாரத்து அங்குச நிலையும் 
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே

ஒன்பது வாயில்- இரு கண்,இரு செவி,இரு நாசி,வாய்,கருக்குழி,எருக்குழி என்னும் ஒன்பது வாயில்களைக் கொண்டது உடலம்.

ஐம்புலன்கள் - கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் வழி பார்த்து,கேட்டு,முகர்ந்து,ருசித்து,உணர்ந்து ஆன்மா வினைகளின் வழிப் படுகிறது.
ஆறாதாரம்-மூலாதாரம்,சுவாதிஷ்டானம்,மணிபூரகம்,அநாகதம்,விசுத்தி,ஆஞ்ஞை போன்ற ஆறு ஆதார நிலைகள்.ஆன்ம சக்தி நிலைபெறும் ஆறு இடங்களாக இவை வகைப் படுத்தப் படுகின்றன.
பேறா நிறுத்தி- அசையாது நிறுத்தி நிலைபெறச் செய்வது


ஆன்மா செயல்படும் மனித உடலானது ஒன்பது வாயில்களைக் கொண்டது;இந்த ஒன்பது வாயில்களைப்  பயன்படுத்தி ஐம்புலன்களின் வழியாக கருவிகள் செயல்பட்டு ஆன்மாவை வினைகளின் வழி செலுத்துகிறது;

கருவிகள் ஐம்புலன்களின் வழி ஒன்பது வாயில் உடலில் குடி கொண்டிருக்கும் ஆன்மாவை வினைப்படாமல் தவிர்க்க, ஒரு மந்திரம் போல  தனது எல்லையற்ற அருளைச் செலுத்துவதன் மூலம், புற உலக மாயை,கருவிகளை நிறுத்தி, பேச்சற்ற மோன நிலையை நல்கி,ஆன்மசக்தியை ஆஞ்ஞை எனப்படும் சுழிமுனையில் அசையாது நிறுத்தி அருளும் விநாயகப் பெருமானே...



இடை பிங்கலையின் எழுத்தறிவித்து 
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்


குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்து மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே .

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் 
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி,

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறி அதுவாமே - என்பது  திருமந்திரம்...

 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம்

நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி,

மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து,

குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும்

குண்டலினி எனப்படும் ஆன்மசக்தியை சுழிமுனையில் அசையாது நிலைநிறுத்திய நிலையை குண்டலி அதனில் கூடிய அசபை என்ற வாக்கியம் விளக்குகிறது;இந்த நிலையை ஒரு சொல்லவொன்னாத இனிய ஆன்மநிலை என்று யோகம் கூறுகிறது.


சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி,

இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும்,

உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி,

யோகப் பயிற்சி வழிகளின் ஊடாக சுழிமுனையில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரைக் குறியீட்டு நிலைக்கு, ஆன்ம சக்தியை மூலாதாரத்தில் இருந்து எழுப்பி சந்திர மண்டலத்தினின்று கீழ் வழி உயிர்ச்சக்தி வழியாது மேல்வழி திருப்பி,சுழி முனைப் பீடத்தை திறக்கும் வல்லமை பெறும் போது,ஆன்ம சக்தி பேரானந்த நிலைக்கு, பிறப்பற்ற நிலைக்குச் செல்கிறது.

இந்த வழிமுறைகளை உடலியக்க சக்கரங்கள் மற்றும் உறுப்புக்களின் இயக்க நுணுக்கங்களை விளங்கச் செய்து சூரிய இடைச் சக்கரத்தின் நிலை, திங்கள் மண்டலத்தினின்று வழியும் உயிர்ச் சக்தி, அது இயங்கும் ஆதித்த-சூரிய மண்டல இயக்க விளக்கம், இவற்றையெல்லாம் ஆன்ம சக்தி கடந்து சுழி முனைப் பீடத்தை உடைத்துத் திறக்கும் வித்தையை அறிவித்து அருளும் விநாயகப் பெருமானே....

சண்முக தூலமும் சதுர்முக சூக்குமமும் 
எண்முகமாக இனிதெனக்கு அருளி

புரியட்ட காயம் புலப்பட எனக்கு 
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினில் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி

என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்து


அறு கோணம் ஞான நிலையைச் சார்ந்தது; பல எந்திரச் சக்கரங்கள் எழுதும் போதும், வீடுகளில் எளிய கோலம் போடும் போதும் கூட இரண்டு முக்கோணங்களை ஒன்றன் மீது ஒன்று தலைகீழாகப் பொருத்தி அறுகோணச் சக்கரம் வரையப்படும் ...!

சிவசக்தியின் உட்பொருள் சக்தி ,நான்முகத்தின்னுள் அமைந்த அறுகோண வடிவத் தூலத்தில் திகழ்கிறது என்பதை உணர்த்தவே, முருகனுக்கு அறுகோணச் சக்கரத்துடன் தொடர்பு ஏற்படுத்தி வைக்கப்பட்டது.

இந்த சிவ சக்தி உட்பொருளை ஆன்ம உயிர் உணரும் வண்ணம் உடலின் எட்டு நிலைகளிலும் எனக்கு அறிவிக்கச் செய்து, சிந்தனை வழி எண்ணித்தெளியும் முகமாக(எண்முகமாக) உடலியக்கத்தின் எட்டு நுட்பத் தன்மைகளை புலப்படும் வண்ணம் எனக்கு அறிவித்து அருளும் விநாயகப் பெருமானே....

உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி,

மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி

அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி
கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து,

சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி,

நான் யார் என்பதை எனக்கு அறிவித்து,

பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி,

சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து
அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி,

இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி,

அருள் நிறைந்த ஆனந்தத்தை என் காதுகளில் அழுத்தமாக கூறி

உடலில் உயிர் நிலவவும்,உடலத்திலிருந்து விடைபெறும் நிகழ்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தது கபாலப் பெருவெளி.

உயிர் உடலில் நிலவும் ஆயுட்காலத்திலேயே ஆன்ம உயிர் சக்தியை சுழிமுனை மற்றும் கபாலப் பெருவெளி வரை உலவச் செய்யும் திறனை அடைபவர் ஆன்ம உயிரை உயர்நிலையில் செலுத்தும் நிலையை அடைகின்றனர்.

அந்த நிலையே யோகத்தின், ஞானத்தின் உயர்நிலை.


எனது ஆன்ம உயிர்ப் பொருளை எனது சிந்தனைக்கு அறிவித்து, ஆன்மா தோன்றிய காலம் தொட்டு சேர்த்து வைத்திருக்கின்ற வினைகளை முதல் வரை களைந்து,முற்றாகக் களைந்து அருள்கிறார் விநாயகப் பெருமான் என்பது நுண்ணிய பொருள்)

எனது ஆன்ம உயிரை ஆதாரத்தின் இறுதி நிலையான சுழிமுனை மற்றும் பெருவெளியில் வாயிலைக் காட்டி நிறுத்தி எனது ஆன்மாவுக்கான பேரானந்த நிலையை எனக்கு அருளும் விநாயகப் பெருமானே....


வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன 
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி யென் செவியில்

வாக்கும் மனமும் இறந்த நிலை காணில் யாக்கைக்கு அழிவில்லையாம் என்பார் ஔவைப் பிராட்டி.

அத்தகு மோன நிலையை காட்ட மட்டும் செய்யாது,அந்த நிலையில் ஆன்மா தேங்கி நிலைத்து நிற்கும் வண்ணம் எனது சிந்தனையைத் தெளிவித்து, இருளும் ஒளியும் ஒன்றே என உணரும் நிலையில் எனது ஆன்மாவை அருளானந்த நிலையில் அழுந்தி இருக்கச் செய்தருளும் விநாயகப் பெருமானே....

எல்லையில்லா ஆனந்தம் அளித்து 
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 
கூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்

தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட 
வித்தக வினாயக விரை கழல் சரணே!
               
அளவில்லாத ஆனந்தத்தை தந்து,
 துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி,
அருள் வழி எது எனக்காட்டி,
சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி,

சித்தாந்தத்தின் மேன்மையான அனைத்தையும் கடந்த சதாசிவ நிலையை
 சிந்தனையில் சிவ சொரூபத்தை விளங்கச் செய்து,
மாயையின் பாற்பட்டும்,கருவிகளின் வினைகளின் பாற்பட்டும் அல்லலுறும் உலகாதாய சப்த சூழலிலும் ஆன்மாவிற்கு அந்த அல்லல்கள் அனைத்தையும் விலக்கி, ஆன்ம சக்தி சிவத்தின் இறுதி நிலையை அடையவல்ல அருள் வழியைக் காட்டி அருளி,

முடிவற்ற ஆனந்த நிலையை எனக்கு அருளச் செய்து,சிவத்தின் இறுதி நிலையான சதாசிவ நிலையை காட்டி அருளச் செய்யவல்ல விநாயப் பெருமானே..... .

மேன்மையான சிவத்தின் சக்தி அணுவிலும் அணுவிற்கு அணுவிலும்(போஸான் என்னும் கடவுள் துகள் !?) அவற்றிற்கு அப்பாலாகவும் திகழும் தன்மையை முற்றி நின்ற கரும்பின் இனிமை போலக் காட்டியருளி,

சிவ வேடமும் நீறணிந்த மேனியும் கொண்ட சிவத் தொண்டர் கூட்டத்தினருடன் எம்மை இணைத்து ,சிவத்தின் மேன்மைப் பொருளை விளக்கி அருளும் விநாயகப் பெருமானே.

ஐந்தெழுத்து மந்திரம் என்று சொல்லப் பட்ட நமசிவாய .மந்திரத்தின் விளக்கப் பொருள்தன்னை என்னுடைய நெஞ்சமும் அறிவும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் எனது சிந்தனை அறிவு நிலையையும் கருத்தில் கொண்டு, ஆன்மா சிவத்தினை அடைந்து திகழும் தத்துவ நிலையை எனக்குத் தந்து ஆட்கொண்டருளக் கூடிய,மேன்மை பொருந்திய,எனது நிலையைக் கடைத்தேற்ற விரும்பி ஆட்கொள்ளும் வண்ணம், விரைவாகச் செயல்படும் பாதாரவிந்தங்களைக் கொண்ட விநாயகப் பெருமானே....உனது கழல்களே சரணம் ! சரணம் !! சரணம் !!!


Lord Ganesh high resolution wallpaper