






ஈரோட்டில் ஒரு தெருவெங்கும் வேப்பிலைத் தோரணங்களாக கண்களைக் கவர்ந்தது..விசாரித்தோம்..
அலங்காரமாக தென்னை ஓலைகளாலும், வாழைப் பந்தல்களாலும் அந்தத்தெருமுனையில் அமைத்திருந்த மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச்சென்று கூழ் குடிக்கிறீர்களா என உபசரித்தார்கள்..

பக்கத்தில் அம்மனில் எதிரில் ஆடுபலியிட்ட தடயம் ..எனவே தயக்கம் ..!

அரிசி, கம்பு .ராகி மூன்றையும் அரைத்து மாவாக்கி கூழ்காய்ச்சி கொத்துமல்லி இலைகள், மாங்காய்த்துண்டுகள் , வெள்ளரிக்காய் துண்டுகள் சேர்த்து வைத்திருந்தார்கள்.. உப்புப் போடமாட்டார்களாம்...
மற்றொரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரைப்பொங்கல் இருந்தது..
அந்தத்தெருவில் இருக்கும் வீடுகளில் இருந்து ஒவ்வொரு வீட்டுக்கும்
600 ரூபாய் இந்த கொண்டாட்டத்திற்கு வசூலிப்பார்களாம்..

அந்தத்தெருவே திரண்டு மேளதாளத்துடன் காவிரி ஆற்றிற்குச்சென்று ஒரு கல்லை அம்மனாக பாவித்து பேழையில் வைத்து எடுத்து வருவார்களாம்..

அரிசி மாவில் அம்மனின் உருவம் செய்து சந்தனம் பூசி ,
மஞ்சள் குங்குமம் இட்டு அம்மனாக்குகிறார்கள்..

காவிரி ஆற்றிலிருந்து பக்தியுடன் தீர்த்தம் எடுத்து வந்த ஒரு கும்பத்தை பூச்சரங்கள் சுற்றி அம்மனுக்கு அருகில் வைத்து தங்கள் பிரார்த்தனைகளைவேண்டிக்கொள்க்கிறார்கள்..

பஞ்சலோகத்தால் ஆன அம்மன் சிலையையையும் அழகாக அலங்கரித்து வைத்திருந்தார்கள்..

அம்மை நோய் தாக்காமலிருக்கவும் , தொழில் வியாபார அபிவிருத்திக்காகவும் , உடல் நல மேம்பாடுகளுக்காகவும் மற்ற பிரார்த்தனைகளுக்காகவும் தெருமக்கள் கூடியிருந்து சந்துபொங்கல் என்று கோலகலமாக கொண்டாடுகிறார்கள்..

வெயில் காலங்களில் இல்லங்களில் வெப்பத்தின் தாக்கம்அதிகமாக இருக்கும் என்கிற காரணத்தால் தெருவெங்கும் இடை வெளிவிடாமல் வேப்பிலைத்தோரணங்களால் குளிர்ச்சிப்படுத்தி மக்களை தற்காலிகமாக அமைக்கப்பட்ட வாழைக்குலைகள் , தென்னை ஓலை, மாவிலை ,வேப்பிலைதோரணங்கள் கொண்ட இடத்தில் குழுமச்செய்து கூழ் வார்த்து குளிர்ச்சிப்படுத்தும் பண்பாட்டு நிகழ்வாகவும் இந்த சந்துப்பொங்கல் என்கிற நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கலாம்..
ஒரே தெருவைச்சேர்ந்தவர்களின் ஒற்றுமையும் பலப்படுமே..!
அம்மனின் முன்னிலையில் கடாவெட்டு நிகழ்ந்த ரத்தத்தடயம் இருந்தது..அறுநூறு ரூபாய் கட்டியவர்களுக்கு ஒரு கிலோ ஆட்டுக்கறியாம்..
மற்றபடி பணம் கொடுத்தவர் கொடுக்காதவர் என்கிற பேதம்பார்க்காமல் அந்த தெருவாசிகள் அனைவருக்கும் பொங்கலும் , கூழும் விநியோகிப்பார்களாம்..!
விழா முடிந்த பின் அலங்கரித்த அம்மனை பிரியாவிடை கொடுத்து மேளதாளத்துடன் கூடி மீண்டும் ஆற்றில் விட்டுவிட்டு வருவார்களாம் .
அப்புறம் அடுத்த சித்திரை மாததத்தில் கொண்டாட அழைத்து வருவார்களாம்..
அங்கே ஆப்பிரிக்காவிற்கும் ,சவூதி அரேபியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் துணிவகைகளை பார்வையிட்டோம் ..
இருபக்கமும் அழகானபார்டர்களுடன் உயரம் குறைந்த சேலைகள் காட்சிப்பட்டன..ஆப்பிரிக்கப்பெண்களின் சாரங் என்னும் உடை அது..
அரேபியாவிலிருந்து ரெகுலராக ஆர்டர் வருகிறதாம்.. முஸ்லீம்கள் தொழுகையின் போது விரிப்பாவும் , தோளில் ,தலையில் , இடுப்பில் அணிய என்று எட்டு துண்டு துணிகள் செட்டாக தேவைப்படுமாம்.. பத்து நாட்கள் நமாஸ் செய்யப் பயன்படுத்திவிட்டு நெருப்பில் போட்டு விடுவார்களாம்..
அந்த எட்டு துண்டுகள் கொண்ட செட் அவர்கள் செலாவணியில் ஒருடாலர் மதிப்பீடு என்றால் அதைத் துவைத்து சலவை செய்ய தேவைப்படும் தண்ணீரின் மதிப்பு இரண்டு டாலர்களாம்..
அங்கே தண்ணீர் பெட்ரேலைவிட மதிப்பு மிகுந்ததாயிற்றே.. எனவே துணிவகைகள் யூஸ் அண்ட் த்ரோ தானாம்.. துணி வியாபாரிகளுக்கும் ரெகுலராக ஆர்டர் கிடைக்க காரணமாவும் அமைகிறது..
என்று பல நிகழ்வுகளை இனிமையாக பகிர்ந்துகொண்டார்கள்..!
என்று பல நிகழ்வுகளை இனிமையாக பகிர்ந்துகொண்டார்கள்..!
சமயபுர நாயகியே...பாடல்..







