Showing posts with label லட்சுமி. Show all posts
Showing posts with label லட்சுமி. Show all posts

Tuesday, August 12, 2014

ஸ்ரீ .லக்ஷ்மி கடாட்சம்






ஸ்ரீலக்ஷ்மி வைகுண்டத்தில் மகாலக்ஷ்மியாகவும், 
இந்திரனிடத்தில் சொர்க்க லக்ஷ்மியாகவும், 
மன்னர்களிடத்தில் ராஜலக்ஷ்மியாகவும், 
வீரர்களிடம் தைரிய லக்ஷ்மியாகவும், 
குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள். 

மஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்..உப்பின் பிறப்பிடம் கடல்

வெள்ளிக்கிழமைகளில்  உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம்..


Gajalakshmi


மஹாலக்ஷ்மிமலரின் அழகு. அருள் பார்வையுடன் திகழும் செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.

திருப்பாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள்.  நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.

செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

கஜலக்ஷ்மி  பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன.

பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும்.

யானைகளின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.

கோலக்ஷ்மி என்று பசுக்களை அழைக்கின்றனர்.
கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், லக்ஷ்மி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது.

அஷ்ட லக்ஷ்மி,ஆதி லக்ஷ்மி, மகா லக்ஷ்மி, தனலக்ஷ்மி, தானிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஆகிய லக்ஷ்மியின் அம்சங்கள். .......        


16 விளக்குகள் நெய்யினால் ஏற்றி, மஹாலக்ஷ்மி அர்ச்சனைக்கு வில்வம் இலை, தாமரை பூ அல்லது வெள்ளி காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம்  லஷ்மி படம், அர்ச்சனை செய்ய காசுகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமைகளில் பூஜிப்பது விஷேசம்..


காயேன‌ வாசா ம‌ன‌சேந்திரியை வா புத்யாத்ம‌நா வா ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்
க‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌யாமி !!!




Friday, January 18, 2013

திருமகள் தேடிவந்தாள்...




தாமரையின் பெருமைதாமரையின் பெருமை
 பொன்தாமரை அமர்ந்த செந்தாமரை நிறத்தவளே
திருமகளே நீயிங்கு எழுந்தருள வேண்டுகிறேன்.

குளிர்நிலவே! தன்னொளி மிக்க சுடரொளியே
பத்மினியே தேவர்தொழும் ஈம்பீஜ மந்திரவடிவே
உலகொளியே கருணைவடிவே நின்தாள் சரணம் சரணம்

அம்புலியும் அமுதமு பாற்கடலில் உடன் பிறப்பாய் அழகுற உதித்த செல்வத்தின் அதிபதியான திருமகளாம் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும். 
தெய்வ மலர் என்று  போற்றப்படும் தாமரை மலரில்   மகாலட்சுமி மட்டுமன்றி, கலை மகளாம் சரஸ்வதி தேவியும் 
தாமரை மலரில் தான் வீற்றிருக்கிறாள்.
தாமரை மலருக்கு வேதங்களுக்கு உள்ள பெருமையும் மகிமையும் உண்டு கம்பர் தாமரை மலரை மறை என்ற பெயரால் குறிப்பிடுகிறார். 
தாமரை மலர் இறைவனை பூசிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை.
திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரை தான். 
திருமகளின் உருவம் தாமரை மலரை பிரதிபலிப்பதாகவே உள்ளது என்ற கருத்தினை தணிகை புராணப் பாடல் தெரிவிக்கிறது. 
திருமகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட காரணத்தால் தாமரை மலருக்கு தனி மகத்துவம் கிடைத்துள்ளது.
குதிரைகள் முன்செல்ல யானைகளின் மணியோசை
திருமகளின் வரவை எடுத்தியம்ப தேரேறி பவனி வரும்

ஸ்ரீ தேவி யுனைவேண்டி அழைக்கின்றேன்.
செல்வமகளே மகிழ்ந்து என்னிடம் உறைவாய்!

கருணைமிகு புன்னகை முகங்கொண்டு பொன்னகர்
தனில்வாழும் பேரொளியே! மகிழ்வுதரும் மகிழ்வடிவே

Friday, December 14, 2012

நிலவும் அமுதும்







 யாதேவீ ஸர்வபூதேஷு மஹாலட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா 
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
images of goddess saraswati. Goddess
தனம் கல்வி வீரம் தந்திடும் திருமகள் 
தண் கண்கள் கருணையுள்ள மேகம் 

மக்கள் வணங்கும் ஸ்ரீதேவி மகாலட்சுமி
மனது வைத்தால் வர்ஷிக்கும் பொன்மழை
நிலவும் அமுதும் தன்னோடு வந்தன 
மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் மகிழ்ச்சியை தந்தன 

வானவர் வணங்கிடும் நீ வேதத்தின் வடிவ
மலர்ந்த முகத்தினளே அடியவரை நோக்குவாய் 
பாற்கடலில் உதித்தவளே வறுமையை போக்குவாய் 
அன்னை ஆனவளே எனை செல்வந்தன் ஆக்குவாய் 
தங்கத் தாமரை மேல் வீற்றிருக்கும் தேவியே 
தாமரை மலர்களை கரத்தில் ஏந்தினாய் 



சங்கு சக்ரதாரி நமஸ்காரம்
சகல வரம் தருவாய் நமஸ்காரம்

பத்மபீட தேவி நமஸ்காரம்
பக்தர் தம்மைக் காப்பாய் நமஸ்காரம்


திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக



மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம்

அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலட்சுமி திருநாமம்!



வாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமீகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம், நெஞ்சினிலே லட்சுமீகரம்

அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் சேம மயம்
அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக


ஸர்வே பவந்த ஸுகின: ஸர்வே ஸந்து நிராமயா:!
ஸர்வே பத்ராணி பஸ்யந்து மா கச்சித் துக்கபாக் பவேத்!!


எல்லாரும் சுகமாக வாழ்க! 
எல்லாரும் நோயின்றி வாழ்க! 
எல்லாருக்கும் மங்களம் உண்டாகுக! 
ஒருவரும் துன்புறாமல் இன்புற்று இருப்பார்களாக!