

நம் நாட்டில் அழகுப்பறவையான கிளி மதுரை மீனாட்சி அம்மனின் தோளில் அழ்காக அமர்ந்து இருக்கும் ...
சூடித்தந்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் தோளிலும் அமர்ந்திருக்கும் தூது சென்று தன் தலைவியின் சொற்களை கண்ணனிடம் சொல்லும் திறமை பெற்றது ..
அருணகிரி நாதர் கிளி வடிவில் இருந்து
கந்தர் அனுபூதி பாடியதாக வரலாறு கூறும் ..
பூலோக வைகுண்டமாம் திருவரங்கம் மண்மூடிக்கிடந்தபோது அந்த மண்மேட்டில் அமர்ந்து ரங்கா ரங்கா என்று இடைவிடாமல் கூவ , சோழமன்னன் அந்த இடத்தை அக்ழ்ந்து அரங்கனை தரிசித்து கோவிலும் கட்டியதாக புராணம் தெரிவிக்கும் .. கிளி மண்டபம் திருவரங்கத்தில் பிரசித்தி பெற்றது ..

காம தேவனின் வாகனம் கிளி...
கிளி அழகானது. கிளி பேசுவது இனிமை.
பல தெய்வங்களும் திருவிழாக்களில் கிளி வாகனங்களில்
ஊர்வலம் வந்து அருள்பாலிப்பதுண்டு ...
திருமயிலை மயூரவல்லித்தாயார்
கிளி வாகன சேவை

இப்படி நம் நாட்டில் தெய்வீகப்பற்வையாக , ஜோதிடம் சொல்லும் பறவையாக வீடுகளில் விரும்பிவளர்க்கும் செல்லப்பறவையாக , சர்கஸ்களிலும் , சிங்கப்பூர் போன்ற காட்சிச்சாலைகளில் சைக்கிள் ஓட்டி , சாகசங்கள் பல் செய்து மகிழ்விக்கும் வண்ண எழில் மிகு கிளிகள் மனதை கொள்ளைகொள்ளும் ...

நியூசிலாந்து நாட்டில் காணப்படும் கியா என்ற கிளி வகைகள்
வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்டு வியக்கவைக்கின்றன ...
கியா வகை கிளிகள் மிக சாமர்த்தியமானவை.
நன்கு பூட்டி வைத்து இருக்கும் உணவை சாமார்த்தியமாக எடுப்பதில்
மிகுந்த வல்லமை படைத்தது.
கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் தின்பவை.
அதன் பலம் மிகுந்த அலகு மற்றும் கால்களால் எதை வேண்டுமானாலும் சாமர்த்தியமாக உடைத்து விடும்.
நியூசிலாந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் உடமைகளை காருக்குள் பூட்டி வைத்துவிட்டு சென்று இருந்தாலும், இந்த கியா கிளிகள் கார் கண்ணாடிகளை தங்கள் அலகால் உடைத்து உள்ளே சென்று உணவு பொருட்களை திருடி சென்று விடும்
அதே போன்று கார் பீடிங், டயர் மற்றும் ஏரியல்களை சேதப்படுத்தி விடும்.
இந்த கியா கிளிகளை பற்றி அறியாத சுற்றுலா பயணிகள் தனது லாட்ஜ் ஜன்னல் கதவை திறந்து வைத்துவிட்டு போட்டோ எடுக்க வெளியில்
சென்று விட்டால் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து அலகில் கிடைத்தவ்ற்றை எல்லாம் சேதப்படுத்திவிடுமாம் ...
.


கொலம்பியா நாட்டில் உள்ள ஹோட்டலில் வளர்க்கப்படும் பஞ்ச வர்ண கிளிகள் இரண்டும் குரங்கு ஒன்றும் பிரிக்க முடியாத நண்பர்களாக
கிளிகளும் குரங்கிடம் அன்பு பாராட்டுவது ஆச்சரியப்படுத்துகிறது ...

