ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
வில்வமங்கள சுவாமிகள் கேரளத்தில் இளா நதியில் நீராடி, மண்ணால் கிருஷ்ணர் திருவுருவம் செய்து அதற்கு மலரிட்டும், மந்திரங்கள் கூறியும் பூஜைகள் செய்வார்
வில்வமங்கள சுவாமிகள் கண்ணனின் அற்புத லீலைகளில் மனம் ஒன்றிப் போய், இனிய கவிதைகளைப் பாடும் கவிதைகளைக் கேட்டு, கண்ணனின் களிமண் விக்கிரகமும் தலையை அசைத்துப் பாராட்டுமாம்!
குருவாயூருக்குச் சென்று கருவறையில் பாலகிருஷ்ணனைக் கண்டு களித்தார். குருவாயூரப்பன் அவருக்குப் பல கோலங்களில் தரிசனம் காட்டி அருளினான். குருவாயூர் அவருக்கு ஆயர்பாடியாகத் தோன்றியது!



சிறுவன் கண்ணன் ஆயர் சிறுவர்களுடன் ஓடி விளையாடக் கண்ட வில்வமங்களர், கண்ணனைப் பிடிக்க முயன்றார்.
ஆனால், அவன் அவரிடம் பிடிபடவில்லை!
“எப்படியும் கண்ணனைப் பிடிப்பேன்!” என்று உறுதி கொண்டு
தவமியற்றிக் கண்ணனைக் கண்டார்.
தவமியற்றிக் கண்ணனைக் கண்டார்.
கண்ணன் அவர் விரும்பியவாறு திருவருள் செய்தான். 

கண்ணனை வில்வமங்களர் போற்றிப் பாடிய இனிய பாடல்களே, '
ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிர்தம்' என்ற நூலாகத் திகழ்கிறது.
வில்வமங்கள சுவாமிகளே, 'லீலாசுகர்' என்று பெயர் பெற்றார்....
வில்வமங்கள சுவாமிகளைத் தன் குருநாதராகக் கொண்டு உபதேசங்கள் பெற்ற.கோழிக்கோடு நகரத்திலிருந்து அரசாண்டு வந்த மானவிக்ரமன் என்னும் மன்னன் வில்வமங்கள சுவாமிகள் குருவாயூர் கோவிலில் அமர்ந்து, கண்ணனை உள்ளே கண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அத்தகைய காட்சிகளைத் தனக்கும் காட்ட வேண்டுமென்று சுவாமிகளிடம் வேண்டினான்.
வில்வமங்களர் தன்னைத் தொட்டுக் கொண்டு, கோவில் நந்தவனத்தில் இருந்த இலஞ்சி மரத்தைக் காணும்படி கூறினார்.
இலஞ்சி மரக் கிளையில் பாலகிருஷ்ணனைக் கண்டு பரவசம் எய்தினான் மன்னன்.
குழந்தை கண்ணனை வாரி அணைத்துக் கொள்ள எண்ணி அருகில் சென்றான். கண்ணன் தலையில் அணிந்திருந்த மயிற்பீலி மட்டும் மன்னனின் கையில் கிடைத்தது!
வில்வமங்களரை வணங்கி மயிற்பீலியைப் பத்திரப்படுத்தி பாலகிருஷ்ணன் கொடுத்த மயிலிறகைக் கொண்டு, 'கிருஷ்ணாட்டக் களி' என்ற நூலை எழுதினான்.

வில்வமங்கள சுவாமிகளின் ஆசியுடன் கிருஷ்ணாட்டக் களியை நாடக வடிவத்தில், குருவாயூர் கோயில் கூத்தம்பலத்தில் அரங்கேற்றினான்.
பாலகிருஷ்ணனாக வேடம் ஏற்று நடிக்க இருந்த சிறுவன் வர இயலாமல் போயிற்று. எவரும் எதிர்பாராத விதமாக மற்றொரு சிறுவன் அந்த வேடத்தை ஏற்க முன்வந்து நாடகம் இனிதே அரங்கேறியது.
கண்ணனாக நடித்தவன் பாலகிருஷ்ண லீலைகளை, தத்ரூபமாக நடித்து அனைவரையும் வியக்கச் செய்தான்.
சாமூதிரி மன்னன் அச்சிறுவனை வலம் வந்து வணங்கினான்!
விலையுயர்ந்த இரண்டு மோதிரங்களை அச்சிறுவனுக்கு அணிவித்தான்.
சாமூதிரி மன்னன் அச்சிறுவனை வலம் வந்து வணங்கினான்!
விலையுயர்ந்த இரண்டு மோதிரங்களை அச்சிறுவனுக்கு அணிவித்தான்.
அடுத்தநாள் காலையில் நிர்மால்ய தரிசனத்திற்கு நடை திறந்தபொழுது, குருவாயூரப்பன் திருவடியில் மன்னன் கொடுத்த மோதிரங்கள் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
கபட நாடக சூத்திரதாரி என்று பெயர் பெற்ற கண்ணனே சிறுவனாக வந்து நடித்ததை எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர்.


