Saturday, April 2, 2011

Griffith University



எனது மகன் தான் படிக்கும் பல்கலைக் கழக வளாகத்தைக் காண அழைத்துச் சென்றார்.


ஒரு சிறு அழகிய குன்றில் இயற்கைச் சூழலில் அற்புதமாக எழில் நிறைந்ததோற்றத்தில் தவழும் குளிரகாற்று தழுவ மெல்லிய பனிப்போர்வை போர்த்துக் காட்சியளித்தது.


எங்கும் பலவகை மலர்ச் செடிகளும், பச்சைப்பட்டாடை உடுத்திய மரங்களுமாக ரம்மியமான சூழல்.
உடும்பு போல் ஒருவகை விலங்கும்,மற்றும், சில விலங்குகள் பறவைகள்காணக்கிடைத்தன.
உயிரினங்களுக்கு தொல்லை தரக்கூடாதாம். உயர்ந்தோங்கிய மரங்களில் வண்ணப்பறவைகள் தாங்களும் பாடம் படிப்பதாக அறிவித்துக் கொண்டிருந்தன. 
பல்கலைக்கழக நூலகம் அருமையாக இருந்தது. காதில் அடைத்துக் கொள்ள, ரப்பர் அடைப்பான்கள், ஒரு பட்டனைத்தட்டினால் இரண்டு வருகிறது. காதில் அடைத்துக் கொண்டு மாணவர்கள் வெளிப்புற சத்தத்தை மட்டுப்படுத்தி,ஆழ்ந்து படிக்கிறார்கள்.

கணிணி அறை நிறைய கணிணிகளை இயக்கியவாறு மாணவர்கள் அனைத்து வயதிலும் இருந்தார்கள்.
பதினாறு வயது வரையேபெற்றோர் அரவணைப்பில் இருப்பவர்கள்,  பிறகு ஏதாவது வேலையில் சேர்ந்து சம்பாதித்தவாறேதான் படிக்கிறார்களாம்.
நிறைய சீன ஜப்பானிய மாணவ மாணவியர்களைப் பார்க்கமுடிந்தது. பல வண்ணப்பூக்களாலான அழகிய மாலை போல அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, இந்திய, மற்றும் பல்வேறு தேச மாணவர்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது மறக்க முடியாத அனுபவம்.


உணவகம் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாணவர்களின் குடியிருப்புப் பகுதி அனைத்து வசதிகளும் நிரம்பி இனிமயாக படிக்கும் சூழலில் அமைந்திருந்தது.


 சுற்றிலும், பூத்துக்குலுங்கும் மலர்ச் செடிகளும்,யூகலிப்டஸ் மரங்களின் இனிய காற்றும், தூய்மையான சுகாதாரமான வளாகமுமாக கருத்தைக் கவர்ந்தது.
ஆரம்பநாட்களில் மாணவர்கள் அறிமுகத்திற்காக விலங்கியல் பூங்காவில் இருந்து பெரிய வாகனத்தில் கூண்டுகளில் அடைக்கப் பட்ட விலங்குகளைக் கொண்டு வந்து ஒரு பெண்மணி பழகவைத்தாராம்.


 என் மகன் கழுத்தில் பாம்பு, மற்றும் விலங்கினங்களுடன் புகைப்படம் எடுத்து வந்து காட்டினார்.அவை பிரத்யோகமான் ஷாம்பு மற்றும் சோப்பு உபயோகித்து குளிக்கவைத்து வாசனைத்திரவியங்களாலும் குளிப்பாட்டப்பட்டிருக்குமாம். 

விலங்களிடமிருந்து மனிதருக்கோ, மனிதரிலிருந்து விலங்குகளுக்கோ நோய் தொற்றி விடாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்தபிறகே கூண்டுகளிலடைக்கப்பட்டு, பழக்கப்படுத்தி, பல்வேறு தேச மாணவர்கள் பழகும் விதமாகவும்,விலங்குகளையும், மனிதர்களையும் நேசிக்கக் கற்றுத்தரும் முகாந்திரமாகவும் இவ்வகை முகாம்கள் வருடந்தோறும் நடத்தப்படுகின்றனவாம்.

எனக்குத்தான் மிகப்பெரிய குறை இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லையே என்று.
என்மகன் அதனால் என்ன அம்மா  நீங்கள் பெற்ற எல்லா மகன்களையும் இந்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி படிக்க வைத்து பட்டமும் பெறவைத்து விட்டது சாதாரணமான விஷயமல்லவே. நாங்கள் இங்கு தந்தையின் பெயராலேயே இந்நாட்டு வழக்கப்படி அழைக்கப்படுவதும் அப்பாவிற்கும்,உங்களுக்கும் கிடைத்த பாராட்டாகவே நாங்கள் நினைக்கிறோம் என்று சமாதானம் கூறினார்.
ஆண்டின் துவக்க மாதத்தில் வெள்ளம் வந்தபோது இந்தவளாகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முகாம் அமைத்து, தங்குமிடமும், உணவும், மற்ற வசதிகளும் குறைவறச் செய்து கொடுத்து பாராட்டுப்பெற்ற குழுவில் என் மகன்களும் பங்கு பெற்றதில் பெருமிதம் தான்
.



Friday, April 1, 2011

பிரிஸ்பேன் கண்ணே...



  • முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் விமானம் தரை இறங்கும் முன், விமானத்தைத் தாழப் பறக்கவிட்டு, பசிபிக் கடலையும், பிரிஸ்பேன் நதியையும், நதியில் மிதக்கும் படகுகளையும், விரைந்து செல்லும் கப்பல்களையும் விமான ஓட்டி அருமையாகக் காட்சிப்படுத்தினார். பிரிஸ்பேன் நகருக்கு SUN SHINE CITY என்றே பெயர். பெயருக்கு ஏற்றார் போல் அழகாக வர்னவில்லின் வர்ணங்களை கிழக்கு வானில் அள்ளித்தெளித்து. சூரியன்வண்ணக் கோலங்களைத்தீட்டி உதிக்கும் நேரத்தில் கண்கொள்ளாக் காட்சியாகக் கண்டு களித்தவாறே ந்கரில் கால் பதித்தேம்.


இரவு நேர அழகை The South Bank Eye, Brisbane என்ற ஜெயண்ட வீல் போன்றஅமைப்பில்கண்டுமகிழ்ந்தோம்.



  • Wheel of Brisbane  அறுபது மீட்டர் உயரம் கொண்டது. இதன் முன்னோடி லண்டனில் இருபதை விட (London Eye's 135 metres) உயரம் குறைவென்றாலும், வசதிகளில் குறைவிலலை.

  • South Bank  இன் குறிப்பிடத்தக்க லேண்ட் மார்க் -அடையளத் தளமாகவும், சுற்றுலாப்பயணிகளையும்,உள்ளூர் மக்களையும்,மாணவர்களையும் கவர்ந்திழுக்கும் சிறப்பான இடமாகவும் விளங்குகிறது.
TV still of new year's eve firework display in Brisbane city, with Eye wheel in shot on Dec 31, 2008
  • நாற்பத்து இரண்டு குளிர்சாதன வசதி பொருத்திய அறைகள் உள்ளன.ஆறு பெரியவர்களும், இரண்டு குழந்தைகளும் அமரலாம்.


ஒவ்வொரு பயணமும் பதினைந்து நிமிடங்கள்.முன்னூற்று அறுபது டிகிரி பறவைப் பார்வையில் நகரைப் பார்க்க முடிகிறது.

photo
தூரத்தில் தெரியும் அடுக்குப் பாலத்தின் வண்ண விளக்குகளின் அலங்கார வெளிச்சமும், வானில் தெரிந்த முழுநிலவின் பால்பொழியும் அழகும்,கண்சிமிட்டும் விண்மீன்களும், வைர மாலை போல் ஜொலிக்கும் நகரின் ஆனந்தத் தோற்றமும், அமைதியாகச் செல்லும் நதியில் மிதக்கும் படகுகளுமாக -இந்திரலோகத்தினைத் தோற்கடிக்கும் அபாயமிருப்பதை உணர்த்துகிறது. 

  
மண்ணிலிருந்து விண்ணுக்கு அமைத்த விஞ்ஞானப் பாலம்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பத்து எட்டாவது வருடம் உலக எக்ஸ்போ பொருட்காட்சி நடைபெற்றது.அதன் நினைவாக 20 வது ஆண்டில் South Brisbane parklands. இல் மே மாதம் பத்தாம் தேதி சுற்றத் துவங்கியது.
பிரிஸ்பேன் நகரின் 150 வது வருடக் கொண்டாட்டத்தின் நினைவு நாளாகவும் அமைந்தது.
சிட்னியில் 46 மீட்டர் உயரத்தில் இதே போல ஒர் பார்வைச் சக்கரத்தை பிரிட்டிஸ்காரர் அமைத்திருக்கிறார்.