Sunday, November 2, 2014

அழகுப்பூக்களும் விநோதப்பூச்சிகளும்..




இயற்கை தன்னுள் எத்தனை ஆச்சரியங்களைப் பொக்கிஷங்களாகப் பொதிந்து வைத்திருக்கிறது என்று  எண்ணும் தோறும் வியப்பளிக்கிறது..

விந்தைகள் சிந்தும் விண்மீன்கள் கூட்டத்தில் விளையாடும் வெண்ணிலவாய் எண்ணிறந்த உயிரினங்கள் தாவரங்களாய் மாறுவேடம் தரித்து எளிதில்  கண்களுக்கு சிக்காமல் உயிர்வாழ்கின்றன.. 

தாவரங்களைப்பார்த்து உயிரினங்கள்
 தங்களைத் தகவமைத்துக்கொண்டதோ 
என விசித்திர உருவ ஒற்றுமை வியக்கவைக்கிறது,,
Photo
ஆர்கிட் மலர் பூச்சி (orchid flower mantis). ஆர்கிட் மலர்களை அச்சு அசலாக ஒத்திருக்கும். வெள்ளை, இளஞ் சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும். கால்கள் ஆர்கிட் மலர்களின் இதழ்களைப் போல இருக்கும். 

இரையைக் கண்டதும் தாவரங்கள் மீது மெதுவாக ஏறி, பூக்களுக்கு அருகே வரும். இரையாகும் உயிரினம் இது பூவா, பூச்சியா என்று குழப்பம் அடையும். அப்போது இரையைப் பிடித்துச் சாப்பிட்டுவிடும். 

மலேசியா, இந்தோனேசியாவில் ஆர்கிட் மலர் பூச்சி காணப்படுகிறது.
 வட அமெரிக்காவில் நிறையக் காணப்படுகின்ற  "வீனஸ் ஃப்ளை ட்ராப்' என்ற செடியின் இலைகள் எப்போதும் திறந்த வாய் போல இருக்கும். 

இவை, தங்கள் மீது வந்து உட்காரும் பூச்சிகளை சில நொடிகூட தாமதிக்காமல் கவ்விப் பிடித்து, வாயை மூடுவது போல மூடிக் கொள்கின்றன.
ஒரு முறை கவ்விய பூச்சியை ஜீரணிக்க அதிகபட்சமாக 
12 நாட்கள் இவற்றுக்குத் தேவைப்படுகின்றன.
அதன்பிறகு மூடப்பட்ட இலை திறந்து, செரிமாணம் ஆகாத பூச்சிகளின் மிச்சசொச்ச ஓடுகள் வெளியே துப்பிவிடப்படுகின்றன
"வீனஸ் ஃப்ளை ட்ராப்' 
Photo: "வீனஸ் ஃப்ளை ட்ராப்' என்பது ஒரு செடியின் பெயர். வட அமெரிக்காவில் இந்தச் செடி நிறையக் காணப்படுகின்றது. இச்செடியின் இலைகள் எப்போதும் திறந்த வாய் போல இருக்கும். இவை, தங்கள் மீது வந்து உட்காரும் பூச்சிகளை சில நொடிகூட தாமதிக்காமல் கவ்விப் பிடித்து, வாயை மூடுவது போல மூடிக் கொள்கின்றன.
ஒரு முறை கவ்விய பூச்சியை ஜீரணிக்க அதிகபட்சமாக 12 நாட்கள் இவற்றுக்குத் தேவைப்படுகின்றன. 
அதன்பிறகு மூடப்பட்ட இலை திறந்து, செரிமாணம் ஆகாத பூச்சிகளின் மிச்சசொச்ச ஓடுகள் வெளியே துப்பிவிடப்படுகின்றன

இலைப் பூச்சியை (leaf insect) ‘நடக்கும் இலை’ என்றே அழைக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற் போல இலையைப் போலவே இருக்கிறது இந்தப் பூச்சி. இப்பூச்சியால் பறக்க முடியாது. பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகளைத் தின்று வளரும்போது பச்சை நிறத்துக்கு மாறிவிடும். 
2.3 அங்குலமே இருக்கும் இந்த இலைப் பூச்சிகள் இலைகளுடன் சேர்ந்திருந்தால் சுலபத்தில் கண்டுபிடிக்கவே முடியாது. 

இந்தியா, ஃபிஜி தீவுகளில் இலைப் பூச்சிகள் வாழ்கின்றன. 
இவற்றின் நெருங்கிய உறவினர்தான் குச்சிப் பூச்சிகள்.

இலைப் பூச்சிகள் 


கும்பிடு பூச்சியின் (praying mantis) முன்னங்கால்கள் இரண்டும் சேர்ந்து கும்பிடுவதுபோல இருப்பதால் இந்தப் பெயர்! 

180 டிகிரிக்கு இப்பூச்சித் தலையைத் திருப்பி, சுற்றுப்புறத்தைக் கவனிக்க முடியும். 

பச்சை, பழுப்பு வண்ணங்களில் காணப்படும் இந்தப் பூச்சியும் எளிதில் நம் கண்களுக்குத் தெரியாது.

 இதே நிறத்தில் உள்ள வெட்டுக்கிளி, விட்டில் பூச்சி, ஈக்கள்தான் இதன் உணவு. 

தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியக் கண்டங்களில் இந்தப் பூச்சிகள் காணப்படுகின்றன.
கும்பிடு பூச்சி (praying mantis) 




நடக்கும் குச்சி அல்லது குச்சிப் பூச்சிகள் (stick insect) நீண்ட உடலைப் பெற்றவை. அசையும்போதுதான் அது குச்சிப் பூச்சி என்றே அடையாளம் கண்டுகொள்ள முடியும். 

குச்சிப்பூச்சிக்கு நீண்ட ஆண்டெனாக்கள் உண்டு. ஒரு அங்குலத்தில் இருந்து ஒரு அடி வரை பல சைஸ்களில் குச்சிப் பூச்சிகள் உள்ளன. 

பூச்சிகளிலேயே மிகவும் நீளமானது இதுதான்! 

பார்ப்பதற்குச் சட்டெனத் தெரியாது. 

துர்நாற்றத்தைவெளியிட்டு,எதிரியிடமிருந்து
தன்னைப்பாதுகாத்துக்கொள்ளும். 

ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கக் கண்டங்களில் . 
பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றன.

காய்ந்த இலைகளைப் போன்ற தோற்றமுடைய இலை வால் பல்லி 
(leaf tailed gecko) ஆப்பிரிக்காவில் உள்ள 
மடகாஸ்கர் தீவில் காணப்படுகிறது. 

மரப்பட்டை, காய்ந்த இலைகளுடன் இருக்கும் 
இலை வால்பல்லியை  கண்டுபிடிக்கவே முடியாது. 

10 முதல் 30 செ.மீ. நீளம் வரையே இது இருக்கும். 
இலை வால் பல்லியில் எட்டு வகைகள் இருக்கின்றன.

ஒவ்வொன்றும் உருவம், நிறங்களில் 
சிறிய மாற்றங்களுடன் காட்சியளிக்கின்றன. 

பகல் நேரங்களில் மரப்பட்டை, கிளைகளில் ஓய்வெடுத்துவிட்டு, 
இரவு நேரங்களில் உணவு தேடிக் கிளம்பும்.

 பூச்சிகள், கொறிக்கும் சிறு விலங்குகள் இவற்றின் உணவு.
இலை வால் பல்லி
Photo: இலை வால் பல்லி 

காய்ந்த இலைகளைப் போன்ற தோற்றமுடைய இலை வால் பல்லி (leaf tailed gecko) ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் காணப்படுகிறது. மரப்பட்டை, காய்ந்த இலைகளுடன் இருக்கும் இந்தப் பல்லியை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. 10 முதல் 30 செ.மீ. நீளம் வரையே இது இருக்கும். இலை வால் பல்லியில் எட்டு வகைகள் இருக்கின்றன. 

ஒவ்வொன்றும் உருவம், நிறங்களில் சிறிய மாற்றங்களுடன் காட்சியளிக்கின்றன. பகல் நேரங்களில் மரப்பட்டை, கிளைகளில் ஓய்வெடுத்துவிட்டு, இரவு நேரங்களில் உணவு தேடிக் கிளம்பும். பூச்சிகள், கொறிக்கும் சிறு விலங்குகள் இவற்றின் உணவு.






Saturday, November 1, 2014

ஐஸ்வர்யம் அருளும் திருவையாறு



ஆதி, இடை, கடை என்னும் மூன்று அரங்கங்களையும் தன்னகத்தே கொண்டு, சதாசர்வ காலமும் பகவான் நாராயணனின் திருவடியைத் தழுவி வணங்கும் காவேரியின் பேறும் பெருமையும் தன்னிகரற்றது.
காசிக்கு சமமாகக் கருதப்படும் சிவஸ்தலங்களில் காவிரியில் 
23 புகழ்பெற்ற படித்துறைகள் உள்ள  தலம் திருவையாறு. 
காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். 
திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய தலமாகும். ஆரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணைமிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர் திருவையாறு. 
காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பேராற்றல் மிக்க தென்கயிலாயமாகிய அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள புனிதமிக்க திருவையாறு திருத்தலம். 
ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், ஐப்பசி மாதத்தில் குரு பகவான் துலா ராசியில் இருப்பதால், பிரம்ம கங்கை- காவேரியில் கலக்கிறது என்பது ஐதீகம்.
ஐப்பசி மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும். எனவே இம்மாதம் துலா மாதம் எனப்படுகிறது.  சூரியன் துலா ராசியில் பிரவேசிப்பதாலும் இப்பெயர் பெற்றதாகச்சொல்வர். 

ஐப்பசி மாதம் முழுவதும் காவேரியில் நீராடினால் பாவங்கள் அழியும்: புண்ணியம் சேரும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
தினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. 
துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். 

அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். 

அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன.
 துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். 
 துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டுமென்று துலாக் காவேரி மகாத்மியம் கூறுகிறது. 



ஐப்பசி மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே பிரம்ம முகூர்த்தத்தில் காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குமுன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக துலாக் காவேரி புராணம் கூறுகிறது.