Tuesday, September 27, 2011

மோட்சபுரி ஹரிதுவார்


Temples at Rishikesh





















நம்நாட்டில் இருக்கும் முக்கியமான ஏழு மோட்சபுரிகளில் ஒன்று ஹரிதுவார். அவை காசி, காஞ்சி, துவாரகா, உஜ்ஜயினி, அயோத்தியா, மதுரா ,மாயாபுரி. 

ஹரிதுவார்தான் இந்த மாயாபுரி. 

இங்கிருந்து 'கிளம்பினால்,' நேரா மோட்சம் என்பதால் பலர் தங்கள் கடைசி காலத்தில் இங்கே வந்து தங்கிவிடுகிறார்கள்--மேட்சபுரி??

டெல்லியில் இருந்து பேருந்து மூலம் ஹரித்துவார் சென்றோம்.

இனிய பயணம்.கோவையில் அறிமுகமாகாதவர்களாகக் கிளம்பியவர்கள் நெருங்கிய குடும்பநண்பர்களாக மாறினோம்.

முகத்திலும் முதுகிலும் அறைந்த மாதிரி தகித்த டெல்லி வெயிலில்
இருந்து தப்பிய உணர்வு..

ஹரித்வாரில் இருந்து ரிஷிகேஷ் 16 கி,மீட்டர்கள்தான்.

புராணகாலத்தில் கங்கைக்கரையில் ரிஷிகள் வந்து கங்கையில் மூழ்கி 
எழுந்து தவமும் தியானமுமாக இருப்பார்களாம்.

நாளில் பலமுறை கங்கையில் குளித்துக்கொண்டே இருப்பதால் இவர்களின் ஜடாமுடியில் இருந்து எப்போதும் கங்கைநீர் சொட்டிக்கொண்டே இருப்பதால்.  ரிஷி கேசம் என்று பெயராம்..

 ஆசிரமங்களும் ,நிறைய பெயர்களின் ட்ரஸ்ட்களும் நிறைந்திருக்கின்றன.. சாரிட்டபிள் ட்ரஸ்ட்தான் எல்லாமே......

 ராம்ஜூலா பாலம். 650 அடி நீளம் -இரண்டு மீட்டர் அகலம் கொண்டது..பாலம் கடந்ததும் நிறைய கடைகள். பெருங்காயம் வாங்கினார்கள். உயர்ந்த தரமாம்.
 
சிவானந்தா பாலம் என்று தான் பெயர் பொறித்திருந்தது. ஆனால்....இந்த ஊரில் இருக்கும் லக்ஷ்மண ஜூலாவுக்குத் துணையாக இருக்க மக்கள் ராம்ஜூலான்னு கூப்பிடப்போய் இப்போ ராம்ஜூலா என்ற பெயரே வழக்கில்வழங்குகிறது

சிவானந்தா ஆஸ்ரமம்தான் பாலம் கட்டும் செலவில் பாதி கொடுத்திருக்கிறார்களாம். .

நாம் நடக்கும்போது பாலம் லேசாக  ஆடுகிறது... .
நிறைய குரங்குகள் தாவிக்கொண்டிருந்தன.

நடைப்பாலமென்றாலும் சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் எல்லாம் கூட இதன்மேல் ஓட்டுகிறார்கள்.

மாடுகளும் நிதானமாக நடந்து செல்கின்றன.
பாலத்தில் நடக்கும்போது மழைத்தூறல் ரசிக்கவைத்த்து.

கரையை ஒட்டிப்போகும் பாதையில் ஒரு கீதாபவன் கோவில், உச்சியில் குடையின் கீழ் நாலு பக்கமும் பார்த்தமாதிரி நாலு திருவுருவச்சிலைகள். ராமன், லக்ஷ்மணன், ஹனுமன்,சீதா.

கீதா பவன் ஆஷ்ரமம்.
Rishikesh, India: The entrance gate (from the inside)





















பரந்து விரிந்த. லக்ஷ்மிநாராயணன் கோவில்நிறைய அறைகள் பக்தர்கள் வந்து தங்குவதற்காக. 

அங்கங்கே பெரிய ஹால்கள் வகுப்புகள் நடத்த, பிரசங்கம் பண்ண இப்படி. ஆயுர்வேத சிகிச்சை நடக்கும் இடங்கள். மருந்து விற்கும் இடங்கள். ஏழைகளுக்கு இலவச மருந்து கொடுக்கும் இடம், தங்கியுள்ள பக்தர்களுக்கான பலசரக்கு சாமான் விற்கும் கடை கண்ணிகள் பெரிய முற்றங்களின் நடுவில் மரங்கள். தியானம் செய்ய பெரிய ஆலமரம் உள்ள தோட்டம், புல்வெளி, கங்கைக்குப்போகும் தனிப்பட்ட படித்துறைகள் இப்படி ஏராளம் ஏராளம். .

கங்கைக்கு ஒரு கோவில். 'ஸ்ரீ கங்கா கோயில்'தமிழிலும் எழுத்து! கவனத்தை ஈர்த்தது.

இமயம்வரை தமிழ் போய் வெற்றிவாகை சூடி இருப்பதாக சொல்லிக் கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே!.

கங்காமாதா ஆரத்தி கண்கொள்ளாக்காட்சி.
Uttaranchal Photo - haridwar
ஒரு பக்கம் கோவில்களுக்கே உரித்தான பாத்திரக்கடைகளில் தாமிரச்சொம்புகளாக அடுக்கி இருந்தது. .

வாங்கி கங்கையை நிறைத்து மூடிபோட்டு ஈயம் வைத்து ஸீல் செய்து வாங்கிக்கொண்டோம்.. .

நதியின் வேகத்தில் கால்தவறினால் இழுத்துச்செல்லும் அபாயத்தைத் தவிர்க்க இரும்புக்கம்பிகளை நட்டு அதில் இரும்புச்சங்கிலி போட்டு வைத்திருந்தது பிடித்துக்கொண்டு முங்கி எழவேண்டும்.

இமயத்திலிருந்து உருகி வந்த குளிர்ச்சியான நீர் நடுநடுங்க வைத்தது. 

பாதங்களைதேய்த்து ரத்தஓட்டத்தைச் சீராக்கிய பின் பிள்ளைகளுக்கு நீர்விளையாட்டு மிகப்பிடித்து விட்டது. எழுந்து வரமனமில்லை. .

பெண்களுக்குத் தனி இடமாக உடை மாற்றிக்கொள்ள ஒரு சின்ன அறை உண்டு .


Uttaranchal Photo - rishikesh
File:An array of jewellery being sold at Rishikesh.jpg


Monday, September 26, 2011

மங்களங்களை அருளும் மரகதவல்லித்தாயார்






அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி 
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.-
- என திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் செயத பெருமையுடன் அருள்மிகு விஜயராகவப் பெருமாள் திருக்கோயிலில் காஞ்சிபுரம் திருப்புட்குழி திருத்தலத்தில் மங்களங்களை அருளும் மரகதவல்லி தாயாருடன் 
விஜய வீர கோட்டி விமானத்தின் நிழலில் அருள்கிறார்.
புண்ணிய மிகு புரட்டாசி மாத அமாவாசை -மாளயபட்ச திதியில் வணங்க நலம் பல அருளும் சிறப்பான திவ்ய தேசமாகும்...
[vijayaraghavan2-small.jpg]

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பிரார்த்தனை செய்யும் தலம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் ஒன்று.
தாயார் வறுத்தபயிறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
[Thiruputkuzhi-gopuram-pushkarini._smalljpg.jpg]

ராமானுஜரின் குருவான யாதவப்பரகாசர் இங்கு தான் வசித்தார். 

அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் சிற்பக்கலையில்  ஒரு அதிசயமாகும். 

உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார்.
 
ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மஹாள்ய அமாவ்சை -புரட்டாசி மாதத்தில் நிகழும் புண்ணிய தினம் 
மிக விஷேச்ம். 

 திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. 
குழி என்றால் ஈமக்கிரியை செய்தல். 
ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை 
செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது.
ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. 

சீதையை தேடித அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. 

மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து 
அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. 

அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். 
இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. 
எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. 

ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். 

எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது. 

மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். 

பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் 
சகல மரியாதை உண்டு. 

ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு 
வெளியில் உள்ளது. 
[Image1]

விக்ருதி வருட திருப்புட்குழி பவித்ர உத்சவம்