Wednesday, December 26, 2012

வசீகரிக்கும் மீட்பர் கிறிஸ்து சிலை





Christ the Redeemer – High Resolution View of Brazil's Iconic Statue on Corcovado Mountain in Rio de Janeiro

உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் 
துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்"

என்று போதித்த  சுயநலமற்ற அன்பின் சுய உருவம் இயேசு.

நல்ல விதைகள் எப்போதுமே பயன் தராமல் போவதில்லை
நிரந்தர மீட்பைத் மக்களுக்குத் தரவே மீட்பரின் உயிர்ப்பு வரமானது.

மண்ணில் விழுந்து
மனதில் முளைக்கும் விதை.

கேட்கச் செவியுள்ளவன் 
கேட்கட்டும்.


புதிய உலக அதிசயமாகக்கொண்டாடப்படும் பிரம்மாண்டமான இயேசு சிலை பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனீரே (Rio de Janeiro) என்னுமிடத்தில் அமைந்துள்ளது..

வசீகரிக்கும் பிரம்மாண்டமான சிலையின் உயரம் 130 அடி...இயேசு சிலையின் சிறப்பம்சமே அது ஒரு மலையின் உச்சியில் இருக்கிறது என்பது தான்.

வானத்திற்கும் பூமிக்கும் இடையே கம்பீரமாய் நிற்கும் இந்தச் சிலை தரையிலிருந்து 2296 அடி உயரத்தில் கொர்கோவாடோ (Corcovado) மலையில் 1931ம் ஆண்டு கட்டப்பட்டது.. 

எட்டு மீட்டர் உயரமுள்ள பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையில் இரண்டு கைகளின் விரல்களுக்கும் இடையே உள்ள தூரம் 28 மீட்டர்கள் !

சிலையின் அடியில் சுமார் நூற்று ஐம்பது பேர் அமரக்கூடிய வகையில் ஒரு ஆலயமும் அமைந்துள்ளது. 


பெட்ரோ மரியா பாஸ் எனும் பாதிரியார் இந்த மலையின் அழகில் சொக்கிப் போய் இந்த மலையில் ஒரு மிகப்பெரிய நினைவுச் சின்னம் உருவாக்க எண்ணிய சிந்தனையே விதையாக அமைந்தது ..

ரியோ டி ஜெனீரோ கத்தோலிக்க மறைமாவட்டம் சார்பில் இயேசுவின் சிலை ஒன்றை கலை நயத்துடனும், பொருளுடனும், கற்பனை வளத்துடனும் நிறுவும் கனவு நனவானது ...

சிலுவை வடிவிலான இயேசுவின் சிலை கான்கிரீட் கொண்டு  கட்டி சிலையின் வெளிப்பாகம் காலநிலை மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக மார்பிள் கொண்டு வடிவமைக்கலாம் என தீர்மாணிக்கப்பட்டு பிரஞ்ச் சிற்பி பால் லாண்டோஸ்கி  கை வண்னத்தில் எழிலாக உருவாக்கம் கொண்டது ...

சிலை பல பாகங்களாகச் செய்யப்பட்டு மலையுச்சிக்கு ரயில்வே பாதை மூலம் கொண்டு சென்று ஒன்று சேர்க்கப்பட்டு பணி நிறைவுற்றது.
1931 அக்டோபர் 12 சிலை திறப்பு விழா கொண்டாடப்பட்டது ...
அதன் பின் காலமாற்றத்துக்கு ஏற்ப இடமும் எஸ்கலேட்டர்  வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டன.

பத்து கோடிக்கும் அதிகமான பேர் கலந்து கொண்ட சுவிட்சர்லாந்திலுள்ள நியூ ஓப்பன் வேர்ல்ட் கார்ப்பரேஷன் எனும் அமைப்பினால் ஜூலை 7, 2007ம் ஆண்டு போர்ச்சுக்கல்லில் அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பில் உலக அதிசயம் எனும் சிறப்பைப் பிடித்திருக்கிறது  இயேசு சிலை



Christ the Redeemer was struck by lightning. 



Tuesday, December 25, 2012

கிறிஸ்துமஸ் திருநாள் ...



Jesus Stars Light Green

வானளந்த திருக்குமரா!மனிதகுல மருத்துவனே!
தேனளந்த திருவாயில் சித்திரங்கள் தீட்டவந்தாய்!

மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம்
ஆநிரைக் கொட்டிலுக்கு யார்கொடுத்தார் எங்கோவே!

தச்சனுக்குப் பிள்ளையென்றும் தாயொருத்தி கன்னியென்றும்
இச்சனங்கள் சொன்னாலும் இறைவனது திருக்குமரா

கண்ணதாசன்  இயற்றிய இறவாக்காவியம் ஏசு காவியத்தில் ஏசுநாதர் அவதாரம் செய்யும் நிகழ்வை அருமையான தாலாட்டுப் பாடலாய் அலங்கரிக்கிறார் ...

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது  இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து  தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும் இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே இயேசுவை நம்புவமே!"

கவியரசு கண்ணதாசன் இயற்றிய 

இயேசு காவியம் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் அழகாகக் கூறும்  நூல் 
Jesus animated gif
 ஏசு காவியத்தை கவிஞர் நிறைவு  செய்து  நம்பிக்கைக்கு அரண் சேர்க்கிறார்..

குளிர்காலம் நீங்குவதை சிறப்பிப்பதோடு  எதிர்வரும் வசந்தகாலத்தை வரவேற்கத் தயாராகின்றஎழுச்சியோடும்மகிழ்ச்சியோடும்,
அமர்க்களமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும்திருநாள்கிறிஸ்துமஸ்திருநாள்...

கிறிஸ்துமஸ் மரம் மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் 
திருஉருவங்கள் போன்றவற்றால் 
அலங்கரிக்கப்படுகின்றது. 


“ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் பெல்ஸ், ஜிங்கிள் ஆல் த வே”

universe glittering stars explosion graphicuniverse glittering stars explosion graphicuniverse glittering stars explosion graphic