Wednesday, August 28, 2013

கோலாகல கோகுலாஷ்டமி - ஸ்ரீ கிருஷ்ண கவசம்








ஸ்ரீகிருஷ்ணர். அவதரித்ததால் அஷ்டமி  திதி கோகுலாஷ்டமி என்று சிறப்பிக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

 கண்ணைபோல் காப்பவன் என்பதால் “கண்ணா“ என அழைக்கிறோம். 

, “முகுந்தா”, ”மு” என்றால் முக்தியை அருள்வது 
“கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. 
உலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என “முகுந்தா” என்று அழைக்கிறோம்.
முரன் அசுரனை வென்றதால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு 
“முராரி” என்று பெயர் ஏற்பட்டது. 

“ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே அசுர சக்தியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் ..! .

அர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போது, தேரில் ஏறுவதற்கு வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீது ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான். தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து உதவி செய்வார் பகவான் கிருஷணர்.

நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின்  வீட்டுக்கும் சென்றபோது எல்லா இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

 பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார்.

ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் கிருஷ்ணபரமாத்மா.“

நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறோம் ..!

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி 
ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்நாமி ப்ரயதாத்மந: 

பக்தியையே பகவான் பெரிதும் பாராட்டுகிறபடியால் இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே  அளிப்பவன் ஆயின், 
சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் ஏற்றுகொள்வேன்.“ என்றார் கீதையில் கண்ணன். 

ஆவணி 12ம் நாள்(28.8.2013) புதன் கிழமை அன்று 
கிருஷ்ண ஜயந்தி பூர்ணமாக வருகிறது.

 அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரம், ஹர்ஷண யோகம், நள்ளிரவு, சந்திர உதயம், ரிஷப லக்னம் என அனைத்து அம்ஸங்களுடன்  சேர்ந்து வருவது மிகவும் சரியான ஸ்ரீஜயந்தி நாளாகும். இது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அரிதாக ஏற்படும். கிருஷ்ணர் பிறப்பின் காலசூழலுடன் ஒத்துப்போகும் நிலையாகும்.






கண்ணதாசனின் "ஸ்ரீ கிருஷ்ண கவசம்' என்ற  புத்தகத்தில் 

துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்த கவசத்தைத் தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று முன்னுரையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். 

அகரம் முதலே அழியாப் பொருளே ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே ஈதல் பரமாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே ஏழை மனதில் வாழும் அருளே !

ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே அடியேன் சரணம் சரணம் சரணம் !
அறமே அறமே அறமே அறமே திறமே திறமே திறமே திறமே

தவமே தவமே தவமே தவமே வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளையவே நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய் உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!

பொய்யா மொழியே பொங்கும் நிலவே பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க பாஞ்சஜன்யம் பக்தனை காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க தேடும் விழியைத் திருமால் காக்க

கேலிப் பொருளை கிருஷ்ணன் காக்க கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க தூயோன் வருக ! துணையே தருக ! மாதர் கற்பும் மடவார் நோன்பும் மாயோன் காக்க மலைபோல் வருக !
தகிடத் தகிடத் தகிடத் தகவென தறிபடு துன்பம் தறிகெட ஓட

திகிடத் திகிடத் திகிடத் திகிடத் திசைவரு கவலை பசைஇலதாக !துருவத் துருவத் துருவத் துருவிடத் தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக கர்மசந் யாசக் களமே வருக !
ஞானம் யோகம் நல்குவன் வருக ! நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !

அடியேன் துயரம் அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !
பொங்கும் வேலும் புண்ணாக் காது பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன் தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !
மதுசூதனனே மனிதன் சரணம் ! இருடீ கேச இயலான் சரணம் !

கீதா சாரிய கிருஷ்ணா சரணம் ! வேதா சாரிய வேந்தே சரணம் !
தேவகி மைந்தா சிறியேன் சரணம் ! யசோதா குமரா அடியேன் சரணம் !
உன்னை விட்டொரு உறவுகளில்லை என்னை விட்டொரு இனியவனில்லை
நம்மை விட்டொரு நண்பர்களில்லை நன்மையில் உன்போல் நாயகனில்லை

எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,அங்கங்கே நீ அருள் செய வருக !
கோசலை ஈன்ற குமரா வருக ! கோதையின் மாலை கொண்டவன் வருக !
ரகுவம் சத்தின் நாயகன் வருக !யதுவம் சத்தின் யாதவன் வருக !
மதுவை வென்ற மாதவன் வருக !மலைக்குடி கொண்ட மாலவன் வருக !

திருப்பதி யாளும் திருமால் வருக !திருவரங் கத்துப் பெருமாள் வருக இராவணன் கொடுமை தீர்த்தாய்துன்பம் இராவணம் எமக்கும் இன்னருள் புரிக 
கம்சன் கொடுமை களைந்தோய் வருக !காலனை வெல்லக் கைவலி தருக !
நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்காதில் குண்டலம் கையில் வில்லொடு

தண்டைக் காலில் சலங்கை குலுங்க அண்டையில் வந்து அருளே புரிக !
கௌரவர் தம்மை களத்தில் வென்றாய் கெளரவம் காக்க கண்ணா வருக !
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய் படித்தவன் மகிழப் பரமே வருக !
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய சான்றோன் பாதம் தாவி யனைத்தேன்

சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன் பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் ;
இக்கணம் என்னை ஏங்க விடாமல்தக்கவனே நீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டுபெண்ணாய் ஆனது பிழையே யன்று !

உன்னால் தானே உலகம் இயக்கம் ! கண்ணனி லாமல் கடல்வான் ஏது ?
கண்ணனி லாமல் கடவுளுமில்லை கண்ணனி லாமல் கவிதையுமில்லை
கண்ணனி லாமல் காலமுமில்லை கண்ணனி லாவிடில் காற்றே இல்லை !
எத்தனை பிறவி எத்தனை பிறவி அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்

சத்திய நாதன் தாள்களை மறவேன் தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால் பிறவிகளில்லை ; நீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு ! உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு !
இங்கே நாங்கள் இருக்கும் வரையில் சங்கு முழங்கு தர்மம் நிலைக்க !

பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல் 
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல் இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியுமில்லாமல் தோற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல் படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்

சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினா றிளமை வழங்கு ! இப்பணி தொடர அற்புதம் காட்டு !
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு தாய்போ லிருந்து சாதம் ஊட்டு !
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு !

உலகில் ஒருவன் உத்தமன் இவனெனஉயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு !
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர் சரிசரி சரியெனத் தலையை யசைக்க
பொலி பொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவென காசுகள் சேர தளதள தளவென தர்மம் தழைக்க

வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம் ! அடியேன் வாழ்வில் நீயே கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் ! வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் ! வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம் !

அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்  
அவனே துணையென அறிவோம் ! அறிவோம்!
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம் அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா ...ஜெயஜெய ஜெயஜெய 
ஜெயஜெய ஜெயஜெயஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய...





Tuesday, August 27, 2013

ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருதம்







ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
கோபீ க்ருஹே வர்த்தனம்
மாயா பூதன ஜீவிதாபஹரணம்
கோவர்த்தனோத்தாரணம்
கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
குந்தீ ஸுதா பாலனம்
ஏதத் பாகவதம் புராண கதிதம்
 ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இது.  
எண்ணி எண்ணி இன்புறத் தக்க வகையில் கண்ணனின் லீலைகளைக் கூறும் வரிகள் ஒவ்வொரு வரியும்! கூடியிருந்து குளிர வேண்டும்!
பகவானின் குண அனுபவங்களை அழகான வரிகளில் உணர்த்துகிறது..

ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
முன்னொரு காலத்தில் தேவகி தேவியின் திருக்கர்ப்பத்தில் உதித்தான்!
கோபீ க்ருஹே வர்த்தனம் - 
யசோதா பிராட்டியாகிய கோபியின் வீட்டில் வளர்ந்தான்!
மாயா பூதன ஜீவிதாபஹரணம்
மாயையுடன் வந்த பூதனையின் உயிரைக் கவர்ந்தான்!

கோவர்த்தனோத்தாரணம் - கோவர்த்தன மலையைத் தூக்கினான்!

கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
கம்சனை அழித்து கௌரவர் முதலானவர்களை ஒழித்தான்!

குந்தீ ஸுதா பாலனம்
குந்தியின் மைந்தர்களான பாண்டவர்களைக் காத்தான்!

ஏதத் பாகவதம் புராண கதிதம் - 
இதுவே புராணங்களில் சிறந்ததான பாகவதம்!

 ஸ்ரீக்ருஷ்ண லீலாம்ருதம் ஸ்ரீ கிருஷ்ணனின் லீலைகள் என்னும் அமுதம்!
கண்ணனின் பிறந்த நாள் கோகுலாஷ்டமி! ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி! ஜன்மாஷ்டமி! என சிறப்பாகக்கொண்டாடுகிறோம்..!

கண்ணனின் லீலைகளைக் கூறும் புராணம் பாகவத புராணம்! 
வேதங்கள் அனைத்தையும் நான்காகப் பகுத்த பின்னரும், 
அவற்றின் உட்பொருளை சூத்திர வடிவில் பிரம்ம சூத்திரமாக எழுதிய பின்னரும், 
உபவேதமான ஐந்தாம் வேதமான மகாபாரதத்தை எழுதிய பின்னரும் 
முழு மன நிறைவும் பெறாத வியாஸ பகவான் நாரத மகரிஷியின் அறிவுரைக்கிணங்க இயற்றியதே கிருஷ்ண லீலாம்ருதமாகிய 
ஸ்ரீமத் பாகவதம்!
மிதமான அறிவு பெற்றவர்களானாலும் தமது சக்திக்கு ஏற்ப கிருஷ்ணனுடைய கதைகளை அனுபவிப்பது உசிதம்தான். 

அமுதம் கிடைக்குமேயானால் சாதாரணமானவர்கள் 
அதை பருகாமல் விட்டுவிடுவோமா என்ன?.

ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்
 - ஆதிசங்கரரின் க்ருஷ்ணாஷ்டகம்
எல்லா மக்களுக்கும் ஆனந்தத்தை அளிப்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம். தாமரை போன்ற இதயத்தில் மோகத்தை உண்டாக்குபவரே, 
சூரியனைப் போல பிரகாசிப்பவரே, 
பக்தர்கள் விரும்பியதை உடனே அளிப்பவரே, 
கடைக்கண்ணால் எங்களைக் கடைத்தேற்றுபவரே, 
இனிமையாக வேணுகானம் செய்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.

(கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீக்ருஷ்ணாஷ்டகம் துதியை பாராயணம் செய்தால் விருப்பமெல்லாம் நிறைவேறும்; கண்ணனின் திருவருள் கிட்டும்.)
கோகுலாஷ்டமியில் தோன்றியவனும் வைஜயந்தி என்ற வனமாலையை அணிந்தவனும் பிருந்தாவனத்தில் சஞ்சாரம் செய்த இடைச்சிறுமிகளுக்கு வல்லபனாய் திகழ்ந்த சோதியான கண்ணனை வணங்குகிறேன்। 

(ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ ரோஹிணியோடு கூடிய அஷ்டமி நாளுக்கு ஜெயந்தி என்று பெயர். ப்ருந்தம் என்றால் கூட்டம். கூட்டம் கூட்டமாக கூடும் இடம். அவனம் என்றால் காத்தல். கூட்டம் கூட்டமாக காத்த இடம் என்றும் கொள்ளலாம். எட்டாவதாக அவதரிக்கின்றவன் அஷ்டமியை வரித்தான்.


தனது பிறப்பிற்கு ஏற்றதாக அஷ்டமி திதியை ஸங்கல்பித்துக் கொண்டான். அஷ்டமி இதனால் ப்ரதமையாகி விட்டாள். ஆதலால்தான் யோகநித்ரை நவமியில் தோன்றினாள். நவமி த்விதியை ஆகிவிட்டது.
 எட்டாவது கர்ப்பம் கொல்லப்போகிறது என்ற ஆகாச வாணியை ஸத்யமாக்க எட்டிலேயே பிறக்க எண்ணினார். 
எட்டாவதாகப் பிறக்கப் போவதாலும் அஷ்டமியை வரித்தார். 
அஷ்ட வஸுக்களுக்கும் வஸுதேவர், தேவர் என்பதால் அந்நிலையை உணர்த்த அஷ்டமியை விரும்பினார். 
எட்டு எட்டு என்று எண்ணியே கம்சன் எட்டாத இடத்தை அடையப் போகிறபடியால் அஷ்டமியை தனது ஜன்மத்திற்கு ஏற்றதாக்கினார். 
Sri krishna janmashtami scraps, greetings, cards
அந்த அஷ்டமி திதிகள் எல்லாவற்றைக் காட்டிலும் சிறப்புற்று விளங்கியது. 
Sri krishna janmashtami scraps, greetings, cards
அஷ்டமி ப்ரதமையாவதும் நவமி த்விதியை ஆவதும் ஆச்சர்யம் தானே!.
ஸ்ரீய:பதி  எதையும் செய்யும் ஆற்றல் பெற்றவன்.எங்கும் இருப்பவன்.தனக்கு நிகர் எவருமில்லாத தனிப்பட்டவன்.முதலில் தானே தன்னிடத்திலேயே ஒரு சித்திரம் தீட்டுகிறான்.சித்திரம் வரைவதற்கு எழுதுகோலும்,வர்ணமும் வேண்டும்.
விளையாட்டு அவனுக்கு எழுதுகோல்.
வர்ணம் அவனது கருணை.
அவன் எழுதிய சித்திரம்தான் படைப்பு. அதுதான் இவ்வுலகம்.