Monday, August 27, 2012

பொன் ஓணம் கொண்டாட்டம் !




.




மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக, அத்தப்பூ கோலம் மறறும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன்  ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தில் மிகப்பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது

கேரளாவை ஆட்சி செய்த மகாபலி சக்கரவர்த்தி மன்னனது ஆட்சியில் மக்கள் குறையின்றி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். 
வாமனன்   அவதாரத்தில் வந்து, 3 அடி நிலம் கேட்ட விஷ்ணு பகவானுக்கு, மூன்றாவது அடியாக தன் தலையையே கொடுத்த  மகாபலி. முக்தி பெற்ற பிறகும் ஆண்டுக்கு ஒரு முறை தனது நாட்டு மக்களை காணும் பாக்கியத்தை பகவானும்  அருளினபடி ஆண்டுதோறும் நாட்டு மக்களை காண வரும் மகாபலியை வரவேற்கும் பொருட்டு  ஓணம் பண்டிகையை கேரள மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

அறுவடைநாள் விழாவாக மலையாள மாதமான "சிங்கம்"( ஆகஸ்ட் - செப்டம்பர் ) மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

அத்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் விழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம், திருவோணம் என்று பத்து நட்சத்திரத்தில், பத்து நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. 

கடைசி நாளான திருவோணம் அன்று விழா மிகச் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது.
Pulikali
 
கேரள பாரம்பரிய மேளதாளத்துடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், பா‌ம்பு போ‌ன்று ‌நீ‌ண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் ஓணம் திருநாளையொட்டி நடத்தப்படுவது வழ‌க்க‌ம். 
image
 கேரளாவின் அழகுத் திருவிழாவாகத் திகழும் ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் விருந்து தான்...

 உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர். 

தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும். 
ஓண விருந்து பரிமாறுவதிலும், சாப்பிடுவதிலும் வழிமுறைகள் வகுத்துள்ளனர். 

தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும். 
காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும். 
அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு.

[Kerala+Onam+Pookalam+Image+15.jpg]

18 comments:

  1. ”பொன் ஓணக் கொண்டாட்டங்கள்”

    அழகோ அழகுப் படங்கள்.

    வாழ்த்துகள். ;)))))

    ReplyDelete
  2. ஆஹா இந்தப் பண்டிகையைப்பற்றி
    இப்பதான் நான் அறிந்துகொண்டேன் .
    படங்களுடன் பகிர்வு அருமை !..மிக்க
    நன்றி பகிர்வுக்கு .என் வாழ்த்துக்களும்
    இங்கே உரித்தாக்கடும் .

    ReplyDelete
  3. பூக்கோலங்கள் எல்லாம் என் மனதை கொள்ளை கொண்டன.

    சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு இன்னும் புதிய புதிய படங்கள் சேர்ந்துள்ளன.

    பூக்கோலங்களைப் பார்த்தாலே மனது பூப்போல மிருதுவாகி விடுகிறது.

    மனதில் எவ்வளவு எரிச்சல்கள் இருந்தாலும் அவற்றை நீக்கிடும் மாமருந்தாக அவைகள் உள்ளன.

    ReplyDelete
  4. வரிப்புலி வேஷ ஊர்வலங்களும்,

    கதக்களி நடனங்களும்

    அந்த மிகவும் கம்பீரமான யானைகளும் இந்தப்பதிவினை மிகச்சிறப்பாக்கிக் காட்டியுள்ளன.

    ReplyDelete
  5. ஒணத்திருநாள் வாழ்த்துக்கள்!! படங்கள் மிக அழகு...

    ReplyDelete
  6. படங்களுடன் பகிர்வு மிக அருமை !

    ReplyDelete
  7. // தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும்.
    காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும். அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு.// என்று தங்கள் பதிவினைப் படிக்கும்போதே விருந்தின் அறுசுவை நாக்கை சப்பு கொட்ட வைக்கிறது.

    தங்களுக்கு எனது பொன் ஓணம் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. முதல் பூக்கோலத்திற்கு அடுத்துள்ள படத்தில், அந்த வெங்கலத்தில் செய்த மளையாள விளக்கும், அதன் அருகே உள்ள வெங்கல கிண்டியும் ஜோர் ஜோர்.

    கிண்டிக்கு வழவழப்பான தொப்பை, நீண்டு விரைப்பாக வளைந்து மேல் நோக்கி இருக்கும் நீர் சிந்தும் இடம்.
    பார்க்கவே பரவஸமாக உள்ளது.

    எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறும் சமயத்தை ஒட்டி, ஒரு நாள் சுமங்கலிப் பிரார்த்தனையும், ஒரு நாள் பெருமாளுக்கு தீப ஸமாராதனையும் செய்வோம்.

    அதில் இங்கு படத்தில் காட்டியுள்ளது போன்ற மரத்தால் செய்த உரலுக்கு, வெள்ளை சிவப்பு வர்ணங்கள் பட்டையாக அடித்து, அதை சற்று உயரமாக வைத்து, அதன் மேல் புறத்தில் பசுஞ்சாணியை நிறைய உருட்டி வைத்து விடுவோம்.

    ஓர் வாய் அகன்ற பித்தளை வாணாவில் முழுவதும் நெய் நிரப்பி, நடுவே கெட்டியாக கொழுக்கட்டை போல, எள் நிறைந்த முடிச்சும் மேலே கூர்மையான திரியும் வருமாறு புதுத்துணியால்கட்டி, அந்த நெய்ப்பாத்திரத்தின் நடுவே வைத்து, மலை தீபமாக ஏற்றிடுவோம்.

    வெங்கட்ரமணா கோவிந்தா ... ஸ்ரீநிவாஸா கோவிந்தா ... ஸ்ரீ வெங்கடேஸா கோவிந்தா என அனைவரும் சொல்லி, எல்லோருமாகச் சேர்ந்து அந்தப் பாத்திரத்தை, மேலே பசுஞ்சாணிமேல் வைத்து, நமஸ்கரிப்போம்.

    நிறைய கூடைகளில் புஷ்பங்களும் துளஸியும் வைத்துக்கொண்டு அர்ச்சனைகள், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்றவை சொல்லிவிட்டு பிறகு பிரஸாத நைவேத்யம் செய்து விட்டு, வைதீகாள் சாப்பிட்டு முடியும் வரை தீபம் எரியுமாறு, நெய்யை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக்கொண்டே இருப்போம்.

    ஏனோ இந்தத்தங்களின் அந்தப்படத்தைப் பார்த்ததும், என் வீட்டில் அடிக்கடி நடைபெற்ற அதுபோன்ற சுப மங்கல நிகழ்ச்சிகள் ஞாபகத்திற்கு வந்தன.

    வெங்கல கிண்டிபோல என் மனமும் பூரித்துப்போனது.

    ReplyDelete
  9. தலைவாழை இலைபோட்டு, ஏராளமான பதார்த்தங்களைத் தாராளமாகப் ப்ரிமாறி

    “ஓண ஸத்ய”

    என்ற தடபுடல் விருந்தினை இந்தப்பதிவின் மூலம் தந்து எனக்கு நல்ல பசியைக் கிளப்பி விட்டீர்கள்.

    ”உண்டறியணும் ஓணம்” ஆ ..

    ஓஹோ,
    உண்டு அறிய
    எனக்கும் ஆசை தான். ;)

    படத்தில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பயன்? ;(


    ஒவ்வொரு ஆண்டும் கேரள நண்பர்கள் சிலர் என்னை அழைப்பார்கள். நான் வழக்கம் போல பதில் சொல்லிவிடுவேன்.

    போனோமாம் .. ஸ்ரீகுருவாயூரப்பனை தரிஸித்தோமாம் .. வந்தோமாம் என்று இருக்க வேண்டும் ..

    அங்கு அவர்கள் தரும் பால் பாயஸம் மட்டும் சாப்பிடலாம் ......

    சிவப்புக்கலரில் [தீட்டப்படாத அரிசியில் சமைத்து] அவர்கள் போடும் சாதம் .. நமக்கு ஒத்து வராது.

    ஏற்கனவே எனக்கு அங்கு நடந்த அனுபவத்தை தங்களின் வேறொரு பதிவினில் பின்னூட்டத்தில் விபரமாகச் சொல்லியுள்ளேன். நினைவிருக்கலாம்.

    இது தங்களின் மிக அருமையான பதிவுதான். மேலும் ஏதாவது புதிதாகத் தோன்றினால் வந்து கருத்துக் கூறுவேன்.

    ReplyDelete

  10. மலையாள நண்பர்கள் வீட்டுக்கு ஓணம் முடிந்த மூன்று நான்கு நாட்களுக்குள் சென்றால் ஓணத்துக்குச் செய்த பதார்த்தங்களே கிடைக்கும். இருந்தால் ஓணம் இல்லாவிட்டால் ஏகாதசி.!வழக்கம்போல் அருமையான படங்களுடன் உங்கள் ஓணப் பதிவு பிரமாதம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாமனர் அவதாரத்தில் ஸ்வாமி குட்டியூண்டு பையனாக கையில் பிடித்து வந்த தாழங்குடையும் ஒர் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

    தாழங்குடை என்றால் என்னவென்றே இன்றைய இளைஞர்கள் யாருக்குமே தெரியாமல் அது புழக்கத்திலிருந்து மறைந்து போய் விட்டது.

    அதை மடக்கவே முடியாது. அப்படியே அதை வைக்க கிராமத்தில் தனியாக ஒரு ரூமோ அல்லது பெரிய பரணையோ [LOFT] இருக்கும்.

    இன்று நாகரீகமாக கலர் கலராக கையடக்கமாக Folding Umbrellaக்கள் வந்தாச்சு.

    இதை, இந்தத் தாழங்குடையை யார் இப்போது சீந்தப்போகிறார்கள்?

    அந்தத் தாழங்குடைப்படத்தில் எழுதியுள்ள ஆங்கிலச் சொற்றொடரும் அருமையாகவே உள்ளது.


    [தாழங்குடையை பிடித்துக்கொண்டு நடந்து செல்லவே ஒரு தனி தெம்பு வேண்டும்.

    அதன் மீது அடித்து மழைபெய்யும் போது, நம் தலையில் இடி விழுகிறதோ என அஞ்சும்படி மிகப் பெரிய சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

    இந்த சப்தத்தைத்தான் ......

    ’.... [யாரோ] பனமட்டையில் ..... [எதையோ] அடிச்சாப்போலன்னு’

    ஒரு பழமொழியாக் கூடச் சொல்லுவார்கள்.] ;)

    ReplyDelete
  12. ஓணம் குறித்து அறிந்திருந்த்தாலும்
    ஓணம் விருந்து குறித்து தங்கள் பதின் மூலமே
    அறிகிறேன்
    படங்களுடன் பதிவு மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. அருமை! வழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. அறியாத பல தகவல்கள் அம்மா...

    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  15. அற்புதமான படங்கள். புதிய தகவல்கள் இந்தப் பதிவில். வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
  16. Anonymous has left a new comment on your post "பொன் ஓணம் கொண்டாட்டம்.":

    திருவோணம் பற்றிய சுவையான விவரங்கள்,படங்கள் மிக அழகு.
    வாமன அவதாரம் பற்றிய அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி. sridhar_kri@dataonein //

    Thank you Sir...

    ReplyDelete
  17. படங்களோடு விளக்கம் அறிந்ததில் சந்தோஷம்.எவ்வளவு விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறீர்கள் தோழி.பெருமையாயிருக்கு !

    ReplyDelete