Sunday, October 26, 2014

வண்ணம் மிளிரும் வண்ணத்துப்பூச்சிக்ள்

















வானவில்லின் வண்ணக்கலவைகள் சிறகு முளைத்துப் 
பறந்து திரிகிறதோ என வன்ணஜாலங்களை சிறகில் தீட்டி
 மனம் கவரும் வண்ணத்துப்பூச்சிகள்..
தோட்டத்துப் பூக்களுக்கெல்லாம் சிறகு முளைத்து விண்ணில் பறப்பதாக எண்ணம் கொள்ளும் வண்ணம் கண்கவரும் அழகு மிளிரும் வண்ணத்துப் பூச்சிகள் மகிழ்ச்சியாகப் பறந்து திரிவதும், வாழ்வை வண்ணமயக்குகிறது..

மலர்கள் தோறும் நடந்து போகும் அந்த சிறிய ஜீவன் 
வசந்தத்தை மலர்விக்கிறது..
மொனார்க் அல்லது மில்க் வீம் என்னும் பெயர் கொண்ட கருஞ்சிவப்பு கலந்த பழுப்பு நிற வண்ணத்துப் பூச்சி அமெரிக்கா முழுவதும் காணப்படுகிறது. 
மொனார்க் வகை வண்ணத்துப் பூச்சி இனங்கள் கனடாவிலிருந்து, , வருடம் தோறும் கோடை காலத்தில். 4,000 கிலோமீட்டர் வரைகூட   பறந்து மெக்சிகோ செல்லும்...

இடம்பெயர்ந்த வண்ணத்துப் பூச்சிகள் முட்டையிட்டுக் குட்டி வண்ணத்துப் பூச்சிகள் வெளியே வரும்போது, தங்கள் பெற்றோர் பயணத்தைத் தொடங்கிய இடத்திற்கு வரும் ஆற்றல் பெற்றவை..
கோடை காலத்தில் அவை கூட்டம், கூட்டமாகப் பறந்து நீண்ட தூரத்திற்குப் பயணம் செல்கின்றன. 

வெட்டுக் கிளிப் பட்டாளம் போன்று அவை இலட்சக்கணக்கில் ஆணும், பெண்ணுமாகக் கூட்டமாகப் பறந்துவரும். 
தரைக்குமேல் 400 அடி உயரத்தில் இவை பல மணி நேரத்திற்குத் தொடர்ச்சியாக நெருக்கமாகப் பறந்து செல்வது உண்டு. இதனால் அப்பகுதிகளில், மேக மூட்டம் செல்வது போன்று தரையில் சூரிய வெளிச்சம் படாமல், நிழல் படியும்.
இந்தியாவில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளும் இடம்விட்டு இடம்பெயர்வதைக் கண்டறிந்திருக்கிறார்கள். 
இமயமலையின் அடிவாரத்தில் வாழும் சில வண்ணத்துப் பூச்சிகள் அங்கு கோடைக்காலம் வரும்பொழுது, அங்கிருந்து புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பறந்து சென்று விடுகின்றன.
பறக்கும்போது இவைகளின் வேகம் மணிக்குப் பத்து கிலோ மீட்டர் முதல் முப்பது கிலோ மீட்டர் வரை உள்ளது. பறந்து செல்லும்போது, தாங்கள் செல்லும் திசையை மிகச் சரியாக உணர்ந்து அதே திசையில் செல்கின்றன. 
திசை தெரியாமல் தடுமாறுவதில்லை. முட்டையிடுவதற்கென்றே 2,000 கிலோ மீட்டர் தூரம்வரைப் பறந்து சென்று முட்டையிடும் வண்ணத்துப் பூச்சிகளும் உண்டு‘பறக்கும் பூக்கள்’ என்றும், ‘இறக்கை கட்டிய ஆபரணங்கள்’என்றும் திகழும் பட்படக்கும் பட்டாம்பூச்சிகள் வியப்பளிக்கின்றன..







9 comments:

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. அழகுப் படங்கள்.

    நான்கு பூச்செடிகள் மட்டுமே வைத்துள்ள எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருக்கும் ஒரு நந்தியாவட்டை மலரில் ஒரு ஒற்றை வண்ணத்துப் பூச்சி சுற்றி வந்ததைப் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது.

    ReplyDelete
  3. வணக்கம்
    அம்மா

    அழகிய படங்கள் தெளிவான விளக்கம் பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. 2,000 மைல் தூரம் சென்று தன் முட்டைகளையிடும் என்று கேள்வி படும் போது வியக்க வைக்கிறது.
    தொட்டால் அதன் இறக்கைகள் நம் கையில் ஒட்டிக் கொள்ளும் அவ்ளளவு இலேசான் இறக்கைகளை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் பறக்கிறது !

    படங்களும் செய்திகளும் மிக அருமை.

    ReplyDelete
  5. 2000 கி.மி வரைப் பறந்து செல்லும் வகைப் பட்டாம் பூச்சிகள் செய்தி மலைக்க வைக்கிறது. அதனுடைய குறுகிய ஆயுளில் அதற்குத் தான் எத்தனை எத்தனை கடமைகள்.

    ReplyDelete
  6. வியக்கவைக்கும் தகவல்களுடன் அழகிய வண்ணத்துப்பூச்சிகள். பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  7. இயற்கையின் பேரதிசயம் அல்லவா...!! கண் கவரும் இவ்வண்ணப் பூச்சிகள்!!

    ReplyDelete
  8. வண்ணத்துப்பூச்சி வண்ணமயமாக, அவைகளைப்பற்றிய வியக்கும் தகவல்களை அழகழகான படங்களுடன் பகிர்வாக்கியமைக்கு நன்றி.

    ReplyDelete