Thursday, March 24, 2011

இயந்திர பூனை
பல துறை விற்பன்னர்களாகிய ஜப்பானியர் இயற்கைச் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட சாலையை ஏழே நாட்களில் சீரமைத்து சாதனை புரிந்திருக்கிறர்கள்.
நம் நாடானால் ஏழாண்டுகள் ஆனாலும் தோண்டிப்போட்டு, முடிக்காமல் காரணம் கண்டுபிடித்து சாதனை புரிந்திருப்போம். ரோபோ பூனை கண்டுபிடித்து இயந்திர உலகில் புரட்சி படைத்திருக்கிறார்கள், இந்த பூனையும் பால்குடிக்குமா என்று அமைதியாக காட்சிதரும் ஜப்பானியர்.
புலிக்குத் தெரியாத மரம் ஏறும் வல்லமை பெற்ற பூனைகள் வீடுகளில் விரும்பி வள்ர்க்கப்படும் செல்லப்பிராணிகளாகும்.
பூனையின் உரோமம் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும்.அதைத் தவிர்க்க கலப்பின பூனைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த வகைப் பூனைகளின்
உரோமம் உதிராதாம் . சுகாதாரத்திற்கு உத்திரவாதம் தருகிறார்கள்.

பூனை தன்னை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பாங்கினலேயே கோவையைச் சேர்ந்த கிளீன்விஸ்டா என்னும் தன்னார்வத்தொண்டுஅமைப்பு தன் அடையாளச் சின்னமாக தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையிலுள்ள பூனையை வைத்திருக்கிறார்கள்.
சயாம் தேசத்துப்பூனைகள் விலை மிகுந்தவை.
கிரேக்க,ரோமானிய தேசங்களில் கறுப்புப் பூனைகள் வணக்கத்துக்குரியவை.


இடம் போனாலென்ன வலம் போனாலென்ன? மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி. 
நாயும் பூனையும் மாதிரி.... cute ginger fluffy kitten and collie dog

ஆடும், பாடும்,ஓடும், எலியை மட்டும் பிடிக்காது.
பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா என்ன்??செல்லப்பூனைக்கு ரோபோ பூனையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி....


மியாவ் ..மியாவ் பூனை வீட்டைச் சுற்றும் பூனை..
இந்த பூனையும் பால் குடிக்குமா?

இயற்கை சீற்றத்தில் தப்பிப் பிழைத்த ஆனந்தம்....
cute kitty kiss cat island tashirojima japan
  கறுப்புப் பூனையை இருட்டிலே தேடிய மாதிரி .... 
cute black kitten kiwi
cute black kitten in the car

போகர் அந்தணர் குடியிருப்பிற்குச் சென்ற போது வேதம் ஓதிய அந்தணர்கள்
அவரை அவமதிக்க, அங்கு இருந்த பூனையைப் பிடித்து அதன் காதில் நான்கு
வேதங்களையும் ஓத, பூனை வேதம் அட்சர சுத்தமாக வேதம் ஓதியதாம்.
ருத்ராட்சப்பூனையின் வேடம் நம்ப வைத்து ஏமாற்றும்.
எலித்தொல்லைக்குப் பயந்து பூனை வளர்த்து சம்சாரியான சாமியாரின் கதை
உணர்த்தும்பாடம் சிந்திக்கத்தக்கது.
முறுக்குமீசை முண்டாசுக் கவிபாரதிபூனைக்குட்டிகளின் நிறத்தை வைத்தே
நமக்கு தேசீய ஒற்றுமையை விவரித்திருப்பார்.

9 comments:

 1. எப்போதுவும் எதுவும் நடக்கலாம் என்ற தெளிவில் இருப்பவர்கள் ஜப்பானியர்கள். வாழும் வாழ்க்கைக்கு impressionனாக எதையாவது செய்ய நினைப்பவரிகள். இயந்திரபூனையும் ஒரு அதுபோலத்தான். சரியான நேரத்தில் தந்த பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 2. யப்பானியரின் ஒற்றுமையும் சுறுசுறுப்பும் பொருளாதாரமும் மீண்டும் ஒரு புதிய யப்பானையே உருவாக்கிவிடும்.

  நாயாரும் பூனைக்குட்டியாரும் இணைந்திருக்கும் படம் மிக அழகு.கருப்புப் பூனையாரும்தான் !

  ReplyDelete
 3. @ஹேமா said...//
  கருத்துக்கும், வருகைக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 4. பூனையைப்பற்றிய தகவல்கள் யாவும் அழகாக, சுத்தமாக பரிசுத்தமான படங்களுடன் விளக்கிய விதம் பாராட்டுக்குரியது. நானும் பூனையைப்பற்றிய ஏதாவது பழமொழியை எடுத்துக்கூறலாம் என்று நினைத்தும், முடியவில்லை. எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நீங்களே கூறி விட்டீர்கள்.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  உங்கள் பதிவு ஜப்பான் ரோபோ பூனைபோல எப்போதுமே ஒரே பளிச் தான். தொல்லை தராதது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 5. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. சரியான நேரத்தில் தந்த பதிவிற்கு நன்றி
  படம் மிக அழகு

  ReplyDelete
 7. ;)
  கோவிந்தா! கோபாலா!!
  ஸ்ரீ ரங்கா ரங்கா!

  ReplyDelete