Tuesday, March 15, 2011

மரங்களின் உபயம்

மரங்கள் ஆண்டவனின் அற்புத சிருஷ்டி.

மரங்களின் மகிமையைக் கூறவே ஆலயங்களில் ஸ்தல விருட்சங்கள் ஏற்படுத்தப்பட்டன.
Banyan tree
நன்கு வளர்ந்த மரம் நூறு மின் விசிறிகள் வழங்கும் காற்றை விடவும் , குளிர்சாதனப் பெட்டிகளை விடவும் அதிகமான இனிய சுகாதாரமான
குளிர்ந்த காற்றைத் தரவல்லவை.

ஒரு ஏக்கர் நிலத்திலுள்ள மரங்கள் பத்துமில்லியன் கன மீட்டர் காற்றை சுத்தப்படுத்தும் திறமை படைத்தது.

நூறு பேர் வெளியிடும் கரியமில வாயுவை உள்ளிழுத்து,பிராணவாயுவை வெளிப்படுத்தும் வல்லமை பெற்றவை.

மரங்களே ஓசோன் படலத்தைச் செப்பனிடும் திறமை வாய்ந்தவை.

ஆகாயத்தைத் தூய்மைப் படுத்தி காற்றின் வெப்பத்தையும், வேகத்தையும் பூமியில் மேற்புறத்தில் தடுப்பவை 

மரங்களே.பூகம்பத்தினாலும், பிரளயத்தாலும்
புதையுண்ட மரங்களும், தாவரங்களுமே இன்று மதிப்பு மிக்க வைரமாகவும்,நிலக்கரி,பெட்ரோலியம், எரிசக்தியாக மறுவடிவில் கிடைக்கிறது.

மொத்தத்தில் பஞ்சபூதங்களின் ஆதாரமே மரங்கள் தாம்.

கண்ணன் கைப் புல்லாங்குழல் மூங்கில் -

அவன் விரும்பி அமர்ந்தது புன்னைமரம்.

கணபதி காத்திருப்பது அரசமரம்

வேலவன் மாறி நின்றது வேங்கை மரமாக

சிவனுக்கு ஏற்றது வில்வமரம்

சக்திக்கு உகந்தது வேப்பமரம்

ராமன் பஞ்சவடியில் அரசு,வேம்பு, அத்தி, ஆல், வில்வம் என்று ஐந்து பூதங்களின் ஆற்றல்களையும் ஈர்க்கும் மரங்களின் ந்டுவே தவம் புரிய,

சீதையோ அசோக வனத்தில் காத்திருந்தாள்

கடம்பவனத்தில் காமாட்சி தவம் புரிந்து ஈசனை மணந்தாள்.

நாவல் மரத்தடியில் ஜம்புலிங்கமாய் அருளுகிறார் சிவன்.
[Picture+293.jpg]
இறவாப் பனையாக ,பிறவாப்புளியாக சதுர்யுகங்களைக் கடந்து பேரூருக்குப்
பெருமை சேர்ப்பவை மரங்கள்.
[Picture+533.jpg]
[Picture+580.jpg]

குரா மரத்தடியில் ராகு தோஷம் நீங்க அருளுகிறார் முருகப் பெருமான்.

மருதமரத்தடியில் மருதாச்சலமூர்த்தியாகிறார் முருகன்.

வன்னிமரத்தடி அருளும் விநாயகர் புத்திர பாக்கியமருளியதை அங்கு தொங்கும் தொட்டில்கள் கட்டியம் கூறும்.

 மிளிர் கொன்றை அணிந்த சிவனைப் பாடும் தேவாரம்!!!
[Picture+295.jpg]
கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி மவுன வியாக்கியானம் புரிவார்.
  
நாகலிங்க மரம் ஆயிரம் சிவலிங்க தரிசனத்தைத் தரும்.

நாகலிங்கப்பூவே சிவாலயத்தைக் காட்சிப்படுத்தும்.

முருங்கைப்பூவால் அர்ச்சிக்கப்ப்டும் சிவாலயம் உண்டு.

தனியே வள்ரும் போது உறுதியாக நிமிர்ந்திருக்கும் வேப்பமரம் அரசாகிய ஆண்மரத்துடன் சேர்த்து ஆனைமுகன் அடியிலிருந்து அருள்பாலிக்கும் போது, அரசைச் சுற்றி கொடியாகப் பின்னி
அரசினுள் ஊடுறுவி தழுவி நிற்கும் பாங்கு வழிபடப்படுகிறது.

பிறந்தோம்  தொட்டில் மரத்தின் உபயம்

நடந்து பழகினோம் -நடைவண்டி -மரத்தின் உபயம்

எழுதினோம் -பலகையும், எழுதுகோலும் மரத்தின் உபயம்

மணந்தோம்-மாலை சந்தனம் - முகூர்த்தக்கால் நாட்டுதல் - மரத்தின் உபயம்

துயின்றோம்- கட்டிலும் ,மெத்தையும் மரத்தின் உபயம்

நடந்தோம் பாதுகை ரப்பர் -மரத்தின் உபயம்

இறந்தால் -பாடையோ, சவப்பெட்டியோ மரத்தின் உபயம்

எரிந்தால் சுடலை விறகு -மரத்தின் உபயம்

மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்

மனிதன் மனிதனாக வேண்டுமானால்
மீண்டும் மரத்திடம் வந்தாகவேண்டும்

ஒவ்வொரு மரமும் ஒரு போதி மரமே

பசுமைப்புரட்சி எங்கும் ஓங்க வேண்டும்.

14 comments:

 1. ஒவ்வொரு மரமும் ஒரு போதி மரமே//true

  ReplyDelete
 2. நல்ல சிந்தனை உளம்கனிந்த பாராட்டுகள் இப்படி இந்த குமுகத்திற்கு தேவையான செய்திகளை செல்வது எல்லோராலும் இயலுவதில்லை அதேவேளை இப்படி பட்ட செய்திகளை எல்லோரும் விரும்புவதும் இல்லை .உண்மை இப்படியாக இருக்கிறது . கருத்துகள் மடல்கள் இல்லையே என உங்களின் கருத்துகளை மற்றிகொள்ளவேண்டம் ஏனெனில் இந்த கருத்துகள் சுற்று சூழல்பதுகப்பு தூய்மையான காற்று நீடித்தமக்களின் நலவாழ்வு எல்லாமே இவற்றில் அடங்கியுள்ளன .உளம் கனிந்த பாராட்டுகள் .

  ReplyDelete
 3. பாராட்டுகளுக்கும் உற்சாகமூட்டிய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 4. மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான்
  மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்
  மனிதன் மனிதனாக வேண்டுமானால்
  மீண்டும் மரத்திடம் வந்தாகவேண்டும்
  /// மிக அருமை ராஜேஸ்வரி.. சரியா சொன்னீங்க..:0

  ReplyDelete
 5. @ தேனம்மை லெக்ஷ்மணன் sa//
  அருமையான ரசிப்புக்குப் பாராட்டுக்கள்
  அம்மா.

  ReplyDelete
 6. பசுமைப்புரட்சி எங்கும் ஓங்க வேண்டும்.
  பாராட்டுகள்...

  ReplyDelete
 7. மரங்கள் வாழட்டும்
  மனித இனத்தைக்காக்கட்டும்.
  சமூக சிந்தனையுள்ள நல்ல பதிவு.
  விளக்கங்கள் கலங்கரை விளக்கமே.

  ReplyDelete
 8. @வை.கோபாலகிருஷ்ணன் s//
  நன்றி ஐயா.

  ReplyDelete
 9. @ சமுத்ரா said...//
  @ Mahalashmi said...//
  நன்றிகள் வருகைக்கும், கருத்துக்கும்.

  ReplyDelete
 10. மரங்களைப்பற்றிய பதிவு அருமை..

  ReplyDelete
 11. .உளம் கனிந்த பாராட்டுகள் .

  ReplyDelete
 12. அருமையான் இடுகை. படங்கள் அழகு. மனித உயிரின் பயனத்தில் மரங்களின் பயன்பாடு சிந்திக்க வைத்தது. எல்லா மரங்களையும் மனிதன் வெட்டாமல் வளர விட்டாலே நமக்கு புண்ணியம்.

  ReplyDelete
 13. ;)
  ஓம் ஹரி
  ஓம் ஹரி
  ஓம் ஹரி

  ReplyDelete