Friday, March 4, 2011

கங்காரு தேசம்

ஆஸ்திரேலியா என்றாலே முதலில் கங்காருதான் ஞாபகம் வரும்.
ஒரு திரைப்படத்தில் ஆஸ்திரேலியாவில் எத்தனை கங்காருகள் இருக்கின்றன?  என்று நேர்முகத்தேர்வில் கேட்ட கேள்விக்கு உங்கள் மனைவியைச் சேர்த்தா அல்லது சேர்க்காமலா? என்று குதர்க்கமாக பதிலளிப்பார் எண்ணற்ற தேர்வுகளைச் சந்தித்து வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர் ஒருவர்.
கங்காரு மோதி சேதமடைந்த வாகனம்,  டிரக் என்னும்  மிகப் பெரிய லாரியால்
மோதப்பட்டு விபத்தடைந்த வாகனத்தை விட அதிக சேதத்தை அடைந்திருக்குமாம்.  லெஃப்டினன்ட் ஜேம்ஸ் குக் அவர்கள்
. அங்கிருந்த பூர்வ குடிகளிடம் இது என்ன விலங்கு என்று அவர் கேட்ட மொழியை புரிந்து கொள்ள முடியாத மக்கள் கங்காரூ என்று சொன்னார்களாம்.
அவர்கள் மொழியில் கங்காரூ என்றால் தெரியாது என்று அர்த்தமாம்.   இப்பெயர் சூட்டும் விழா, 4.7.1770-ல் லெஃப்டினன்ட் ஜேம்ஸ் குக் அவர்களால் நடாத்தப்பட்டது.கங்காருகள் வசிக்கும் தாவரவியல் பூங்கா.

பூங்கா நுழை வாயில்அழகான பறவைகள்
கங்காரு காரு பாரு எப்படி போஸ் கொருக்கிறார்.
கங்காருக் கூட்டங்களை  troop or court of Kangaroos ,
mobs என்று பூர்வ குடிகள் அழைப்பார்களாம்.
ஆண்கங்காருகளை bucks, boomers or jacks என்றும், பெண்களை does, flyers or jills என்றும், இளஞ்செல்வங்களை joeys என்றும் அழைத்திருக்கிறார்கள்.


ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட அணிக்கு ஸாக்கரூஸ் என்று பெயரிட்டு, கங்காருவின் 
செல்லப் பெயரான ரூஸ் என்ற பெயரை உலகறியச் செய்திருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய நாணயங்களிலும் கங்காருகளின் உருவத்தைப் பொறித்திருக்கிறார்கள்.காங்ரூ பாயிண்ட் என்று ஒரு இடத்திற்குப் பெயரும்
சூட்டியிருக்கிறார்கள்.

தேசீய விலங்குகளை பொதுவாக கொல்வதைத் தடுக்கச் சட்டமிருக்கும்.
நம் நாட்டிலும் புலிகளையும் மயில்களையும், மான்களையும் கொல்வது சட்டப்படி 
தடை செய்யப்பட்ட நிகழ்வு. ஒரு பிரபல நடிகர் மானைச் சுட்டுவிட்டு ப்ட்ட பாட்டை நாடறியுமே!
ஆனால் இங்கு கங்காருவை இறைச்சியாக உண்கிறார்கள்.அபரிமிதமாகப் பெருகி
பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதாலும்,இரை தேடிச் செல்லும் போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழ்ப்பதுடன், நிறைய வாகனங்களை பலத்த
சேதத்திற்கு ஆளாக்குவதாலும் இவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு
நடவடிக்கை எடுத்து வருகிற்து.
எண்ணிக்கை குறைந்து வருவதால் கோலாவுக்குப் பாதுகாப்புச் சரணாலயம்!
அதிகரித்து சேதம் விளைவிப்பதால் அங்குள்ளவர்களின் வயிறே கங்காருகளின்
புகலிடம்.

சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பதாலேயே குறிஞ்சிப்பூவுக்கு இலக்கிய அந்தஸ்து. குறிஞ்சியாண்டவர் கோவில் என்ற சிறப்பிடத்தில் ஸ்தல மரம் என்ற 
பெருமை! நீ சிரித்தால் போதும் குறிஞ்சி பூக்கும் என்று கசிந்துருகும் காதல் பாட்டில்
காதலியின் சிரிப்புக்கு உவமானம்! அதுவே எப்போதும் பூத்துக்கொண்டே இருந்தால்?

பாவம் அதே கதை தான் கங்காருவிற்கும்!


Stellers Jay20 comments:

 1. கங்காருவைப் பற்றியும் அதன் தேசக்காரர்கள் பற்றியும் அறிந்து கொள்ள வைத்ததற்கு நன்றீஸ்!

  ReplyDelete
 2. அழகான - அருமையான பதிவு... படங்கள் - போனஸ் ட்ரீட்!

  ReplyDelete
 3. //வலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. //

  ஏங்க யாராவது கடன் மைமாத்து எதுவும் கேக்குறாங்களா..!! ஹா..ஹா.. :-))

  ReplyDelete
 4. நல்ல தகவல் மற்றும் அழகான படங்கள் :-)

  ReplyDelete
 5. எங்களையும் கூட அழைத்துப் போவதைப் போலவே
  இருந்தது விளக்கமும் படங்களும்
  நல்ல பிரயோஜனமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. @Ramani said...//
  வாழ்த்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 7. @ middleclassmadhavi said...
  @ Chitra said...//
  @ஜெய்லானி said...//
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 8. கங்காரு என்ற பெயர் காரணம் இதுவரை எனக்குத் தெரியாததாக இருந்தது. பூர்வகுடி மக்களின் அந்தத் தெரியாது என்பதைக் குறிக்கும் கங்காரூ என்ற சொல்லே, அதன் பெயரானது என்பது இப்போது தெரிந்து விட்டது. தெரியாத ஒன்றை இந்தப் பதிவில் தெரிய வைத்த உங்களுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. படங்கள் நன்றாக இருந்தது.மிக நல்ல பதிவு.நல்ல தகவல் பரிமாற்றமாய் இருந்தது.

  ReplyDelete
 10. "கங்காரு தேசம்"...

  நீங்கள் கூறிய "குறிஞ்சி மலர்"போல எதுவும் அரிதாய் இருந்தால்தான் சிறப்புக் கிடைக்கும்போலும்.

  ReplyDelete
 11. @வை.கோபாலகிருஷ்ணன் said...//
  @விமலன் said...//
  பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 12. மாதேவி said...
  "கங்காரு தேசம்"...

  நீங்கள் கூறிய "குறிஞ்சி மலர்"போல எதுவும் அரிதாய் இருந்தால்தான் சிறப்புக் கிடைக்கும்போலும்.//
  ஆமாங்க கட்டுப்படுத்த செலவு செய்கிறாகள்

  ReplyDelete
 13. @ஜெய்லானி said...
  //வலைப்பதிவின் நோக்கம் தகவல் பரிமாற்றம் மட்டுமே. //

  ஏங்க யாராவது கடன் மைமாத்து எதுவும் கேக்குறாங்களா..!! ஹா..ஹா.. :-))

  யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை
  என்பதைத தெரிவிகத்தான்.
  சிரிப்பிற்கு நன்றி.

  ReplyDelete
 14. கங்காரு படங்கள் அருமை.

  ReplyDelete
 15. குறிஞ்சிப்பூவும், குறிஞ்சியாண்டவர் தரிசனமும் அருமை.

  ReplyDelete
 16. நல்ல தகவல் மற்றும் அழகான படங்கள் :-)

  ReplyDelete
 17. Very interesting info...
  Lovely pictures...

  ReplyDelete
 18. ;)
  பாஹிக் கல்யாண ராம்!
  பாவன குண ராம்!!

  ReplyDelete