Wednesday, March 23, 2011

ராஜயோகமருளும் ஸ்ரீ ராஜ மாதங்கி

ராஜயோகமருளும் ஸ்ரீ ராஜ மாதங்கி


ஸ்ரீ ராஜ மாதங்கி
ருங்கள் மாலாம்...........










 ஸ்ரீராஜ மாதங்கி பக்தர்களின் குறை தீர்த்து சகல சவுபாக்கியங்களும் சவுகர்யங்களும்,  ஐஸ்வர்யங்களும் உண்டாகச் செய்ய வேண்டி
கருணை ததும்பும் முக விலாசத்துடன் அவதரித்த கலாதேவி.



 ஸ்ரீ ராஜ மாதங்கி மூன்று சக்திகளும் ஒருங்கே உருப்பெற்றவள். 

சேலம் மாநகர மன்னார் பாளையத்தில் சேலம் ஸ்ரீராஜ மாதங்கி அறக்கட்டளையினரால் இயற்கை எழில் கொஞ்சும் பசுமைநிறைந்த சுற்றுச்சூழலில் அருமையாக ஆலயம் அமைத்துள்ளனர்.


TheEternalMother

 ஸ்ரீசக்கர மகா மேரு ஸ்ரீசக்கரத்தின் முப்பரிமாண வடிவமாகும்.
திருவண்ணாமலை பறவைப் பார்வையில்ஸ்ரீசக்கரவடிவில்
தோன்றுவதால் அதற்கு ஸ்ரீசக்கரபுரி என்றும் பெயருண்டு.

பவுர்ணமி தினங்களில்  
 ஸ்ரீசக்கரத்திற்கே நவாவர்ணபூஜையும் அபிஷேகமும் குங்கும அர்ச்சனையும் உண்டு.



 ஸ்ரீமதங்க முனிவரின் தவத்தின் மகிமையால் அவருக்கு மகளாக மாதங்கியாக்
அம்பாள் அவ்தரித்தாள்.
  மாதங்க கன்யாய் வித்மஹே:
வீணா ஹஸ்தாய தீமஹி:
தன்னோ சியாமள்ப் பிரச்சோதயாத்:
 என்ற காயத்ரியை படம் பிடித்து கண் முன் பிரத்யட்சமாகத் தோன்றும் வண்ணம் கையில் வீணையுடன் இருபுறமும் சிவந்த அலகுகளுடன பச்சைக்கிளிகள் சிம்மாசனமாய் கர்பக்கிரகத்தின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் எழிலாய் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் அம்மன் ஸ்ரீ ராஜமாதங்கி



அன்னை பராசக்தியின் மந்திரிணியாக ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பெருமைப்படுத்தும் அறிவு வடிவமல்லவா அவள்!

குழந்தைகளின் கல்வி சிறக்கவும், மேல் படிப்பிற்கும் ஹோமங்கள் மிகச் சிறப்பாக அருமையாக சிரத்தையுடன் செய்யும் பாங்கு போற்றற்குரியது.

ஆலயத்தைச் சுற்றி நந்தவனம் அழகுறப் பராமரிக்கப்படுகிறது.

சுற்றிலும் மலைகளாலும் பச்சை வயல்களாலும் சூழப்பட்டு ரம்மியமாகத் திகழ்கிறது.
  

16 comments:

 1. ஸ்ரீ ராஜ மாதங்கி தரிசனம் ராஜ ராஜேஸ்வரி தயவால் கிடைத்தது..

  மிக்க மகிழ்ச்சி...

  தங்களின் பதிவுகள் இவ்வளவு புகைப்படங்களுடனும், பெரிய அளவிலான ரைட்டப்களுடன் வருவது பாராட்டத்தக்கது...

  வாழ்த்துக்கள்...

  ***********

  இதையும் பாருங்கள்...

  ”சித்தம்” என்னும் குறும்படத்தை வழங்கிய நம் “ப்ளாசம் கிரியேட்டர்ஸ்” உங்களை மீண்டும் மகிழ்விக்க ”விதை” என்ற புதிய குறும்படம் வாயிலாக வருகிறது...

  ஒரு சமுதாய பார்வையுடன், பார்வையாளர்களின் மனதில் விதைக்க... ஒரு வீரிய ”விதை”யுடன் வெளிவருகிறது இந்த “விதை” என்னும் குறும்படம்...

  எந்த ஒரு சாமான்ய மனிதனும், தன்னையும், தன் குடும்பத்தையும்.... பொறுப்புடன் பார்த்து ... தனது...!!!! என கொள்கிறான். அதுவே தன் ஊருக்கோ, அல்லது தான் சார்ந்திருக்கும் நாடு என்றோ வரும்போது, அதில் இருந்து அன்னியமாகி, தன் பொறுப்புக்களை விட்டு விலகி விடுகிறான்.

  ஒரு தனி மனிதன், தன் ஊரையும் நாட்டையும், தன் குடும்பத்தை போல் பார்க்கும்..... மாற்றம் நிகழுமா... !!! எனும் கேள்விக்கு விடை சொல்கிறான், இந்த ”விதை” குறும்படத்தின் கதாநாயகன்.

  வாழ்வின் ரகசியம் அறிய, சமூக அன்பின் அடிநாதத்தை, அறிந்து கொள்ள நகர்கிறது, இக்குறும்படம்.
  இக்குறும்படம் ஒரு ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி, சீரிய சிந்தனையை விதைக்கும் எனும் நம்பிக்கையுடன், பணிவுடன் சமர்பிக்கிறோம்.

  “விதை” குறும்படத்தை இங்கே கண்டுகளியுங்கள் :

  http://www.youtube.com/watch?v=AVkN6gtF33U

  உங்கள் கருத்துக்களையும், நல்லாதரவையும் என்றும் வேண்டும்

  ஆர்.கோபி
  www.jokkiri.blogspot.com
  www.edakumadaku.blogspot.com

  ReplyDelete
 2. ஸ்ரீ ராஜ மாதங்கி.. அருமையான பதவு.. உங்க பதிவுக்கு வந்தா அந்தந்த கோயிலுக்குள் போன மாதிரி ஒரு சந்தோசம்.. ஆனா நேர்ல போகமுடியலயே என்னும் வருத்தமும்..

  ReplyDelete
 3. தம்பி கூர்மதியன் said...
  ஸ்ரீ ராஜ மாதங்கி.. அருமையான பதவு.. உங்க பதிவுக்கு வந்தா அந்தந்த கோயிலுக்குள் போன மாதிரி ஒரு சந்தோசம்.. ஆனா நேர்ல போகமுடியலயே என்னும் வருத்தமும்..//
  அம்பாள் தரிசனம் நேரில் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 4. R.Gopi said...//
  வாழ்த்துக்களுக்கு நன்றி.
  தங்களின் விதை விருட்சமாகி வளர்ந்து வளம் கொழிக்க அன்னை அருள பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 5. ஸ்ரீ ராஜா மாதங்கி தரிசனம் அருமையாக செய்ய முடிந்தது.

  ReplyDelete
 6. @Lakshmi said...//
  நீண்ட நாட்களுக்குப் பிறகான தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.

  ReplyDelete
 7. தங்கள் ஒவ்வொரு பதிவிலும்
  தாங்கள் எடுத்துக்கொள்ளும்
  அதீத அக்கறையும் முயற்சியும்
  பிரமிப்பூட்டுகிறது
  படங்களும் விளக்கங்களும் அருமை
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. @Ramani said...//
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//
  Thank you Sir.

  ReplyDelete
 9. அம்பாள் கொள்ளை அழகு.

  ReplyDelete
 10. VERY WELL EXPLAINED DEAR.
  VIJI

  ReplyDelete
 11. @ viji said...
  VERY WELL EXPLAINED DEAR.
  VIJI//
  நன்றிங்க தங்கள் தரிசனத்திற்கு.

  ReplyDelete
 12. ஸ்ரீ ராஜ மாதங்கி.. அருமையான பதிவு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. அருமையான அழகான பதிவு.

  மீள் பதிவோ? அதனால் என்ன?
  மீண்டும் தரிஸிக்க முடிந்தது. ;)

  ReplyDelete
 14. ;)
  ஓம் ஹரி
  ஓம் ஹரி
  ஓம் ஹரி

  ReplyDelete