Thursday, September 22, 2011

இரயில் பயணங்களில்.......பயணங்களில் இனிமையானது ரயில் பயணம். அதிலும் மலைப்பாதைப்பயண அனுபவம் அலாதியான தனிச்சிறப்பு கொண்டது.  
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நீலகிரி மலை இரயில் பாதை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு அதன் பராமரிப்பிற்கு யுனெஸ்கோவின் உதவியையும் தென்னக இரயில்வே பெறுகிறது.

நமது நாட்டிலுள்ள புகழ்மிக்க கோடைச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிம்லாவிற்குச் செல்லும் கல்கா-சிம்லா இரயில் பாதை உலக பாரம்பரியச் சின்னமாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அறிவித்துள்ளது.வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் கோடைக்காலத் தலைநகராக சிம்லா இருந்தது. கல்காவிலிருந்து சிம்லாவி்ற்குச் செல்லும் 96 கி.மீ. இரயில் பாதையில் (இது ஒரு வழிப்பாதை) இன்று பல இரயில்கள் இயக்கப்படுகின்றன.
Image:KSR Train on a big bridge 05-02-12 71.jpeg
File:Nilgiri Mountain Railway on Bridge, May 2010.JPG

ஆனால் கல்காவிலிருந்து சிம்லா செல்லும் இரயில் பாதையில் மலைகள்தான் உள்ளனவே தவிர, கண்ணி்ற்கு குளுமையான பசுமை இருக்காது. சிம்லாவை நெருங்கும்போது ஓரளவிற்கு அழகாக இருக்கும். எனவே ஊட்டிக்குச் செல்லும் நான்கரை மணி நேர மலை இரயில் பயணத்திற்கும் கல்கா - சிம்லா இரயில் (கோடைக் கால) பயணத்திற்கும் இடையே வேறுபாடு அதிகம்.
Image:DHR 780 on Batasia Loop 05-02-21 08.jpeg

 ஒரு ருசியான பயண அனுபவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். கல்காவிற்கும், சிம்லாவிற்கும் நடுவில் உள்ள 103 சுரங்கங்கள் வழியாக இந்த இரயில் செல்கிறது. இதில் ஒரு சுரங்கத்தைக் (பரோக்) கடக்க 3 நிமிடங்கள் ஆகும்.


அதிகாலை இரயிலில் சிம்லா செல்பவர்கள் பரோக் (காலை உணவிற்காக நிறுத்தப்படும்) இரயில் நிலையத்தில் கிடைக்கும் கட்லட் - சூடான, மிகச் சுவையான உணவு - குறிப்பிடத்தக்கது. இதுதான் கட்லட் என்றால் நாம் இங்கெல்லாம் அந்தப் பெயரில் சாப்பிடுவது என்னவென்று கேட்கத் தோன்றும். அப்படியொரு ருசி. மூன்று கட்லட்டை விழுங்கிவிட்டு காஃபி அருந்தினால் போதுமானது. இப்பயணத்தில் கட்லட் முக்கிய அங்கம்.
Train Christmas Santa Claus Elves Fight Trains Railroad Merry Emoticon Emoticons Animated Animation Animations Gif
இந்த இரு மலைப்பாதை ரயில் பயணங்களும் மறக்கமுடியாதவை!

File:NMR train at Ketti 05-02-26 75.jpeg

File:KSR Steam special at Taradevi 05-02-13 56.jpeg45 comments:

 1. ரயிலோ குயிலோ மயிலோ தங்கள் கை வண்ணத்தில் அவை அழகோ அழகு தான்.

  ReplyDelete
 2. அனைத்துப்படங்களும் அழகோ அழகாக உள்ளன.

  பல்சக்கரங்கள் நகர்வது அருமையோ அருமை தான்.

  //நமது நாட்டிலுள்ள புகழ்மிக்க கோடைச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிம்லாவிற்குச் செல்லும் கல்கா-சிம்லா இரயில் பாதை உலக பாரம்பரியச் சின்னமாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அறிவித்துள்ளது.//

  மிகவும் மகிழ்வளிக்கும் செய்தி.

  ReplyDelete
 3. //ஒரு ருசியான பயண அனுபவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். கல்காவிற்கும், சிம்லாவிற்கும் நடுவில் உள்ள 103 சுரங்கங்கள் வழியாக இந்த இரயில் செல்கிறது. இதில் ஒரு சுரங்கத்தைக் (பரோக்) கடக்க 3 நிமிடங்கள் ஆகும்//

  ஆஹா; நல்லதொரு ஆச்சர்யமான தகவல்.

  புனேயிலிருந்து மும்பை செல்லும் போது ஒரு சில குகைப்பாதைகள் வரும். ஒரே இருட்டாகிப்போகும். அதுவே ஆச்சர்யமாக இருந்தது எனக்கு.

  ReplyDelete
 4. //அதிகாலை இரயிலில் சிம்லா செல்பவர்கள் பரோக் (காலை உணவிற்காக நிறுத்தப்படும்) இரயில் நிலையத்தில் கிடைக்கும் கட்லட் - சூடான, மிகச் சுவையான உணவு - குறிப்பிடத்தக்கது. இதுதான் கட்லட் என்றால் நாம் இங்கெல்லாம் அந்தப் பெயரில் சாப்பிடுவது என்னவென்று கேட்கத் தோன்றும். அப்படியொரு ருசி. மூன்று கட்லட்டை விழுங்கிவிட்டு காஃபி அருந்தினால் போதுமானது. இப்பயணத்தில் கட்லட் முக்கிய அங்கம்.//

  காலை எழுந்தவுடன் எல்லோருக்கும் பசியைக் கிளப்பிவிட்டுட்டீங்களே! இது நியாயமா!!

  ReplyDelete
 5. //இந்த இரு மலைப்பாதை ரயில் பயணங்களும் மறக்கமுடியாதவை!//


  உங்களுடனேயே நாங்களும் இன்று ரயிலில் பயணித்து மகிழ்ந்தோம். கூடவே கூட்டிச்சென்று, மகிழ்வித்தத்ற்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  தொடரட்டும் பயணங்கள்!

  அன்புடன் vgk

  ReplyDelete
 6. ஒவ்வொரு பதிவுலும் உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது!
  கல்கா எங்கே இருக்குனு சொல்லியிருக்கலாமே? :)

  ReplyDelete
 7. படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு..
  பகிர்வுக்கு நன்று..

  ReplyDelete
 8. படங்களும் பதிவும் மிக மிக அருமை
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. @ வை.கோபாலகிருஷ்ணன் said.../

  தங்களின் அனைத்து கருத்துரைகளும் நிறைவாக மகிழ்ச்சி அளித்தன. மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 10. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  அழகு.../

  நன்றி.

  ReplyDelete
 11. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு..
  பகிர்வுக்கு நன்று../

  கருத்துரைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 12. Ramani said...
  படங்களும் பதிவும் மிக மிக அருமை
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்/

  தொடர்ந்து வாழ்த்துக்களை அளித்து உற்சாகப்படுத்தும் பணிக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 13. கூ கூ என்று ரயில் கூவாதோ... ஆஹா..ரயில் படங்கள் அருமை...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. சிம்லா கட்லெட் சாப்பிட ஆசை வந்துருச்சு

  ReplyDelete
 15. ஓட்டி ரயில் பயண அனுபவம் அனுபவிக்க ஆசை.ஆனால் புக்கிங் ஆகிடுமாமே..நிறைய ரயில் அரசு விட்டா நல்லது

  ReplyDelete
 16. தொடர் ஊர்ந்து பயண அனுபவம் படங்கள் ரசிக்கவைக்கின்றன.
  பல பயணங்கள் யாபகம் வருகின்றன

  ReplyDelete
 17. கப்பலுக்கு அடுத்து
  இப்போ இரயிலா ?
  இரயில் பயன்ம ஒரு சுகமான அனுபவம் தான்...
  ஓடும் இரயிலில் சாளரம் வழியாக
  இயற்கையை அதுவும் ஓடும் இயற்கையை ரசிப்பது
  கண்கொள்ளாக் காட்சிதான்....

  ReplyDelete
 18. நல்ல அழகான பயண பதிவு

  ReplyDelete
 19. சூடான கட்லெட்டுடன் சுவையான மலை ரெயில் பயணம்.அருமை.
  படங்கள் மனதை கவரும் வண்ணமாக இருப்பது அதைவிட அருமை.

  ReplyDelete
 20. சிம்லா (ஒரு வேளை) சென்றால் உங்கள் ஞாபகமும் கட்லெட் ஞாபகமும் கண்டிப்பாக வரும். ஹ்ம்ம்..புதிய விஷயங்கள்.

  ReplyDelete
 21. ரயில்கள் அழகு... பயணம் போலவே :-))

  ReplyDelete
 22. இதுவரை ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்தது இல்லை. அதே போல குகைக்குள்ளும் ரயிலில் போனதில்லை. கூடிய விரைவில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 23. அழகின் அற்புதங்களை அருமையாகக் கண்டு மகிழ்ந்தோம்.நன்றி.

  ReplyDelete
 24. இதுபோல அருமையான ரயில் பயணங்கள் படங்களில் தான் காணக்கிடைக்கின்ரன,

  ReplyDelete
 25. தகவல்களின் தொகுப்பாக இருக்கிறது. அரிய விஷயங்களைத் தொகுத்துள்ளீர்கள்..

  ReplyDelete
 26. தகவல்களின் தொகுப்பாக இருக்கிறது. அரிய விஷயங்களைத் தொகுத்துள்ளீர்கள்..

  ReplyDelete
 27. படங்கள் அருமை...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 28. மலைப்பாதை ரயிலில் பயணம் செய்ததில்லை.

  இந்த பதிவு ஆசையை தூண்டுகிறது.

  படங்கள் அனைத்தும் அருமை.

  சென்னை- தில்லி பயணத்தில் ஏழு குகைகள் வரும்.

  ReplyDelete
 29. நான் ரயிலில் பயணம் செய்ய அதிக வாய்ப்பு கிடைத்ததில்லை.இனி ரயிலில் தான் பயணம் செய்ய வேண்டுமென தூண்டுகிறது உங்கள் பதிவு!

  ReplyDelete
 30. எப்போதும் பார்க்க அலுக்காத விஷயங்கள்,ரயில்,யானை......அப்புறம் உங்கள் வலைப்பதிவு.

  ReplyDelete
 31. நல்ல பகிர்வு. படங்களும் அருமை.

  ஒரு விஷயம்.... கல்கா-ஷிம்லா இரயில் பாதையில் வரும் கல்கா, ஹரியானா மாநிலம் பன்ச்குலா மாநிலத்தில் மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு இடம். ஷிம்லா செல்லும் ரயில் இந்த இடத்தில் இருந்து தான் கிளம்புகிறது.

  தில்லியில் இருக்கும் கல்காஜிக்கும் இந்த இரயிலுக்கும் சம்பந்தம் இல்லை...

  ReplyDelete
 32. @ வெங்கட் நாகராஜ் said...
  நல்ல பகிர்வு. படங்களும் அருமை.

  ஒரு விஷயம்.... கல்கா-ஷிம்லா இரயில் பாதையில் வரும் கல்கா, ஹரியானா மாநிலம் பன்ச்குலா மாநிலத்தில் மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு இடம். ஷிம்லா செல்லும் ரயில் இந்த இடத்தில் இருந்து தான் கிளம்புகிறது.

  தில்லியில் இருக்கும் கல்காஜிக்கும் இந்த இரயிலுக்கும் சம்பந்தம் இல்லை...//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 33. உங்கள் பதிவுகள் இப்போது வித்தியாசமான தடத்தில்.
  அருமையான படங்கள்.
  அருமையான பதிவு.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு...

  ReplyDelete
 35. ஹைய்யோ!!!!!!!!

  அட்டகாஸமா இருக்கு படங்கள் எல்லாம்!!!!

  ReplyDelete
 36. @ அப்பாதுரை,

  சண்டிகர் நகரில் இருந்து 28 கிமீதூரத்தில் கல்கா இருக்கிறது.

  இங்கே ஒரு காளி கோவில் ரொம்ப ஃபேமஸ். சக்தி பீடம்.

  ReplyDelete
 37. அருமையான் அனிமேஷன் படங்கள், விளக்கங்கள்

  ReplyDelete
 38. 1051+6+1=1058 ;)

  ஏதோ ஒரு குட்டியூண்டு பதிலுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 39. ரசிக்கவைக்கும் ரயில்பயணங்கள்... படங்களும் தகவல்களும் சிறப்பு. பாராட்டுகள் மேடம்.

  ReplyDelete