Friday, September 30, 2011

ஐஸ்வர்யம் அருளும் அஷ்டலஷ்மி



 
images of goddess saraswati. Goddess

யாதேவீ ஸர்வபூதேஷு மஹாலட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:


சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக சென்னை பெசன்ட் நகர் .அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்விளங்குகிறது.
கடற்கரைக்கு அருகே, பிரம்மாண்டமாய் விரிந்திருக்கிறது கோவில்.
 பீச்சுக்கு அருகில் அமைந்துள்ளதால் பக்தர்கள் தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.
சக்தி வழிபாட்டில் ஒர் அம்சமாக லட்சுமியை முதன்மைப்படுத்தி அமைக்கப்பட்ட சிறப்புமிக்கத் திருக்கோயில் என்பது தனிச்சிறப்பு.
Lakshmi Maa Goddess of Wealth
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் இருக்கும் பெருமாள் கோயிலைப் போலவே அஷ்டலட்சுமிகோயில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம்.

அருமையான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள கோயிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். 
தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.

திருமண கோலத்தில் மகாலட்சுமி நாயகனுடன் நிற்கும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கும் விரைவில் திருமணம் முடியும் என்பது நம்பிக்கை. 

வேண்டுபவர்களுக்கு வேண்டிய வரம் தருகிறார்கள் அஷ்டலட்சுமிகளும்.

கோபுரம் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக  அமைந்துள்ளது. (ஓம்கார ஷேத்திரம்)

கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.

இந்தத் திருக்கோயிலே ஓம்கார க்ஷேத்திரம் என்பதாலும், அருகிலேயே கடல் இருப்பதாலும், தனியாக திருக்குளம் என இந்த திருக்கோயிலுக்கு அமைய தேவையில்லை என்பது தனிச்சிறப்பு.
வில்வ விருட்சமே இங்கு தலமரம்
அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். 

தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி சிறப்பைபெற்றதாக உள்ளது.
அஷ்ட லட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
உடல்நலம்பெற ஆதிலட்சுமியையும், 
பசிப்பிணி நீங்க தான்யலட்சுமியையும், 
தைரியம் பெற தைரியலட்சுமியையும், 
சௌபாக்கியம் பெற கஜலட்சுமியையும், 
குழந்தைவரம் வேண்டுமெனில் சந்தானலட்சுமியையும், 
காரியத்தில் வெற்றி கிடைக்க விஜயலட்சுமியையும், 
கல்வி ஞானம் பெற வித்யாலட்சுமியையும், 
செல்வம் பெருக தனலட்சுமியை வணங்க வேண்டும்.
அஷ்ட லட்சுமிகளும் நான்குநிலைகளில் நிறுவப்பட்டுள்ளனர். 

முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியலட்சுமி உள்ளனர்.

முதல்தளத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் உள்ளனர். 

கோயில் தரிசனத்தை இங்கிருந்தே துவக்குவர். 


சில படிகள் ஏறி மூன்றாம் தளமடைந்தால் அங்கு சந்தான லட்சுமி, விசயலட்சுமி வித்தியா லட்சுமி மற்றும் கஜலட்சுமி சன்னதிகளைக் காணலாம். 

மேலேறினால் உள்ள நான்காம் தளத்தில் தனியாக உள்ள 
தனலட்சுமியைக் காணலாம்.


அட்டலட்சுமிகளைத் தவிர பத்து தசாவதார அவதாரங்களுக்கும் குருவாயூரப்பன், கணபதி, தன்வந்திரி மற்றும் அனுமன் சன்னதிகளும் உண்டு.

Chennai - Ashtalakshmi temple!
புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் 
பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும்

தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி, ஆடி வெள்ளி ஆகிய
 நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்

தீபாவளி திருநாள் அன்று சதுர்தசியில் பிறந்த லட்சுமி அமாவாசையன்று பெருமாள் கரம் பிடிக்கிறார்.

எனவே அன்று ஸ்ரீசுத்தயோகலக்ஷ்மி குபேரபூஜை நடைபெறும்.

கோகுலாஷ்டமி தினத்தன்று, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து
வைத்து மாலையில் உறியடித்திருவிழா நடக்கிறது.

திருக்கார்த்திகை தினத்தன்று பெருமாள் சொக்கப்பனை கொளுத்துவார்.

மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளிலும், அதிகாலையில் தனுர்மாத பூஜை நடைபெறும். சுதர்சன ஹோமம், திருமஞ்சனம் நடைபெறும்.

மாசி மாதம் 'கடலாடுதல்' என்கிற பிரமாண்ட நிகழ்ச்சியில் (விஷ்ணுவின்) செல்வர் கடல் நீராடுவாராம்.

அதற்குமுன் கடவுளுக்கு நடப்பது போலவே அனைத்து பூஜை புனஸ்காரங்களும் கடலுக்கும் வெகுஜோராக நடக்கும்.

வரலட்சுமி பூஜையில் சுமங்கலி பெண்களுக்கு மங்கல தாம்பூலம்
தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பொன்னும் மணியும் புவி ஆள் செங்கோலும் மென்பூந்துகிலும் 
மின்னும் மகுடம் முதலாய பூணும் வியன் அழகும் 
மன்னும் வல்வீரமும் வாகையும் ஆதிய வாழ்வு அனைத்தும் 
நன்னுதற் செந்திரு மங்கைதன் நாட்டங்கள் நல்குபவே. 




20 comments:

  1. சாமி தங்கம் விக்கிர விலையில தங்கம் வாங்க நீதான் அருள் புரியனும்
    (/\)

    ReplyDelete
  2. அஷ்டலக்ஷ்மியின் பூரண கடாட்சம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்....

    படங்கள் அருமை...

    ReplyDelete
  3. நவராத்திரி வெள்ளிக்கிழமையாகிய இன்று ஐஸ்வர்யம் அருளும் அஷ்டலக்ஷ்மிகளை தரிஸிக்க வைத்துள்ளீர்கள்.

    சுபலாபம் தரும் முதல் லக்ஷ்மியிலிருந்து, சங்கு சக்ரங்கள் உள்ள கடைசி பெருமாள் கோயில் நுழைவாயில் வரை அனைத்துப்படங்களும் அழகோ அழகு.

    கோபுர தரிஸனம் கோடி புண்ணியம் என்பார்கள். பல கோபுரங்களைக் காணச்செய்து, பலகோடி புண்ணியம் கிடைக்க வழிவகை செய்து விட்டீர்கள்.

    சந்தோஷம்.

    ReplyDelete
  4. பக்திப்பரவசமூட்டும் பதிவு

    ReplyDelete
  5. வெள்ளியன்று செல்வத்தை அள்ளித்தரும்
    அஷ்ட லக்ஷ்மியை தரிசிக்கத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    கோவிலின் பின்புலத்தில் கடலிருக்க
    பதிவிட்டிருந்த காட்சி மிக மிக அற்புதம்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. லக்ஷ்மி கடாட்சம் பெற்றோம் சகோதரி...

    ReplyDelete
  7. அஷ்டலக்ஷ்மியின் பரிபூரண அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

    படங்கள் அருமை.

    பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  8. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வழக்கம்போல படங்களும் பதிவும் சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  10. படங்கள் அருமை...பதிவும்...

    ReplyDelete
  11. காணக்கிடைக்காத படங்கள் அருமை.

    ReplyDelete
  12. பல வருடங்களுக்கு முன் சென்னை வந்தபோது இக்கோயிலுக்குப் போயிருக்கிறேன். உங்கள் பதிவில் அதன் இன்றைய அழகைக் காண முடிந்தது. நன்றி

    ReplyDelete
  13. பல வருடங்களுக்கு முன் சென்னை வந்தபோது இக்கோயிலுக்குப் போயிருக்கிறேன். உங்கள் பதிவில் அதன் இன்றைய அழகைக் காண முடிந்தது. நன்றி

    ReplyDelete
  14. Very nice and fantastic. Thanks for sharing

    ReplyDelete
  15. அத்தனை லக்‌ஷ்மிகளையும் ஒருசேர தரிசிக்க கிடைத்த பாக்கியம்.. அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்க அருளும் அஷ்ட லக்‌ஷ்மி கோயிலை பற்றி அருமையான புகைப்படமும் பகிர்வும் மிக மிக அருமைப்பா....

    நான் 1989 அக்டோபர்ல போனதோடு சரி அஷ்டலக்‌ஷ்மி கோயிலுக்கு.... அதோடு இதோ இப்போது தான் தரிசிக்கிறேன் உங்கள் இந்த பகிர்வின் மூலமாக...

    என் அன்பு நன்றிகள்பா ராஜேஸ்வரி....

    ReplyDelete
  16. அஷ்டலக்சுமியைபற்றி அருமையான ஆன்மீக பதிவு .. பாராட்டுக்கள்

    ReplyDelete
  17. Very fine post about Beasentnagar Ashtalakshmi koil.
    viji

    ReplyDelete
  18. செல்வம் தரும் மகாலக்ஷ்மியைத் தரிசித்து பயனடைந்தோம்.

    ReplyDelete