Wednesday, September 14, 2011

சந்தோஷ செந்தோசா
Merlion Park
"ஜாய்புல் சிங்கப்பூர்"

வெளிநாட்டு பயணிகளுக்காகவே அழகாக வடிவமைக்கப்பட்ட இடம் செந்தோசா.
 
த்ரில் அதிகமான கேபிள் கார் பிரயாணம் -உள்ளே சென்று விட்டால் பஸ்ஸில் எங்கே போனாலும் இலவசம்.

திறந்த மொட்டை மாடி பஸ்கள்.  அழகிய சிங்கப்பூரை ரசித்துக் கொண்டே போகலாம். 
Santosa 004
13மாடிகள் கொண்ட பெரிய ஸ்டார் விர்கோ கப்பல் பிரம்மாண்டமாக கட்சியளித்தது.

கடலில் சென்றுகொண்டிருக்கும் வித விதமான கப்பல்களைக் காணமுடிந்தது. மிகப்பெரிய கட்டுமரம் போல இருந்தகப்பலில் மணலை நிரப்பி அதை இன்னொரு ஃபெரி இழுத்துக் கொண்டு போனது ஆச்சரிய காட்சி Sensational live water show based on the film "Waterworld".

 Universal Studio Singapore - Worlds of Wonder

சிங்கப்பூரின் சரித்திரத் தகவல் நிலையமும் இசைக்கு ஏற்ப ஆடும் 
நடன நீரூற்றுகளும் ரம்மியமானவை.

அண்டர் வாட்டர் வோர்ல்டில் ஒரு கன்வேயர் அமைத்திருக்கிறார்கள். கால்களுக்கும் ஓய்வு யாரும் ‘ஜருகண்டி’ சொல்லாமலே கூட்டம் நகர்ந்து கொண்டே இருக்கிறது.
Underwater World - Sentosa
create animated gif
டால்பின் ஷோவில் டால்பின்களுக்கு அப்பாற்பட்டும் அழகிய ரசனையான காட்சிகள் கிடைத்தன.

டால்பின்கள் டிரைனர்கள் பேசுவதைப் புரிந்து கொண்டு மனிதர்கள் மாதிரியே செய்தது வியப்பாகவும். ரசனையாகவும் இருந்தது. 

டிரம் பீட்டுக்கு ஏற்றாற்போல் மார்ச் செய்கின்றன. 

பந்தை கொண்டு வந்து கையில் தருகின்றன. 

வளையத்துக்குள் குதிக்கின்றன. அந்தர் பல்டி அடிக்கின்றன. 

உயரக் குதித்து நின்றவாக்கில் சுழல்கின்றன. 

வளைந்து குட் பை சொல்கின்றன.


Sentosa 4D Magix presents an interactive movie experience 
with 4-dimensional digital effects. 


சிங்கப்பூரின் பெருமை சொல்லும் புதிய ஸ்கை பார்க் : 
உச்சி வானில் ஒரு நீச்சல் தடாகம்! 


சிங்கப்பூரின் 
“மரினா பே சேண்ஸ்” உல்லாச - சூதாட்ட நகரம் (சிலருக்கு நரகம்) . 
தரையிலிருந்து 200 மீட்டர் உயரத்தில், மூன்று கட்டிட தூண்களால் தாங்கப்பட்டிருக்கிறது. 


உலகின் விலையுயர்ந்த சூதாட்ட மையங்கள், பார்கள், உணவகங்கள் என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதுடன்,  150 மீட்டர் நீளமான திறந்தவெளி நீச்சல் தடாகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சென்று நீச்சலடித்தால், உச்சி வானில் பறந்துகொண்டு நீந்துவது போல ஒரு பிரமிப்பை உணர்வீர்கள் என்கிறார்கள் இந்த கட்டிட நிபுணர்கள்.

நவீன கலை அம்சம் பொருந்திய அருங்காட்சியம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

Marina bay singapore, 24 hour nonstop entertainmentஉலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாக இருக்கின்ற போதிலும், சிங்கப்பூரின் சுற்றுலாத்துறை ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக வளர்ச்சி அடைந்து வருவதற்கு இந்த ஸ்கை பார்க்கும் ஒரு நல்ல சான்று!

 டி.என்.ஏ ஏணி மாதிரி நடைபாலம்… க்ளாஸ்… 
அது ஒரு ஆர்கிடெக்சுரல் மார்வல்!!


"ஜாய்புல் சிங்கப்பூர்"
தன் கடற்பரப்பில் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலைக் கொட்டி கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பரப்பளவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது அழகிய சிங்கப்பூர்.


Sentosa Island: jellyfish
நான்கு மொழிகளில் பறவை ஒன்று அழைக்கும் காட்சி மனம் கவர்ந்தது. "தமிழிலும் " பேசி கவர்ந்தது அந்த பொம்மைப் பறவை.

ஜுரோங் பறவைப் பூங்காவில் ராட்சதக் கிளிகள் சைக்கிள் ஓட்டும். மிருகக்காட்சிசாலையில் குரங்குகள் செய்யும் மாஜிக் நிகழ்ச்சி, யானைகளின் கூட்டணி, கடல் சிங்கங்களின் விளையாட்டு, மலைப்பாம்பைக் கழுத்தில் அணிவித்து போட்டோ, என்று நிறைய பொழுதுபோக்குகள் உண்டு.


பெங்குவின்கள் காட்சி அண்டார்டிகாவுக்கு அழைத்துச்சென்றது
போல் இருந்தது.

ஒருநாளும், ஒருபதிவும் போதாது -  செந்தோசாவைப் பார்க்கவும் விவரிக்கவும் -அற்புதம் நிறைந்த உலகம்! 

SingaporeFountain of Wealth


Fountain of Wealth
அழகிய திரையில் பலவண்ண கதிர் இயக்க(லேசர்) ஒலி/ஒளியுடன் பார்வையாளர்களை மகிழ்விக்க பல வர்ண வான வேடிக்கை இசை அதிர்ந்து முழங்க கண்கொள்ளா காட்சி!
[8.jpg]
[10.jpg]

30 comments:

 1. வாவ் கலர்புல் சிட்டி சிங்கப்பூர்

  ReplyDelete
 2. உலகை சுற்றிய தாரிகை அப்டின்னு உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கபடுகிறது

  ReplyDelete
 3. கண்களை கவரும் படங்கள்.கருத்தை கவரும் வர்ணனைகள்.

  ReplyDelete
 4. சந்தோஷ செந்தோசா:

  சிங்கப்பூர் போலவே தங்களின் இந்தப்பதிவும், அழகோ அழகு தான்.
  பார்க்கவே சந்தோஷமாக உள்ளது.

  தொடர்ந்து 5 வருடங்களாக அங்குள்ள என் நெருங்கிய சொந்தங்கள் எனக்கு அன்பான அழைப்புகள் விடுத்தும், விசாவுடன் வாய்ப்புகள் வந்தும், ஏனோ புறப்படமுடியாமல் போய் விட்டது.

  அவர்கள் பலரும் நேரில் வரும்போது என்னிடம் மணிக்கணக்காக அமர்ந்து, சிங்கப்பூரைப்பற்றி மிகப்பெருமையாக சொல்லுவார்கள்.

  தங்கள் பதிவும் அதையே சொல்லுகிறது. பார்ப்போம். பிராப்தம் இருந்தால் ஒரு முறை சென்று வர முயற்சிக்கிறேன்.

  அழகிய பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

  ReplyDelete
 5. பார்க்க திகட்டாத அழகை விவரிக்கும் புகைப்படங்கள் சிறப்பாக உள்ளன.

  ReplyDelete
 6. மிக அருமை!...ஆக்கம், படங்கள் அனைத்தும் பிரமாதம்! வாழ்த்துகள்!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 7. படிச்சுக்கிட்டே படங்களில் மனதை பறிகொடுத்துக்கிட்டே வரும்போது அச்சச்சோ தீர்ந்துப்போச்சே.. அதாம்பா ட்ரிப் முடிஞ்சு வீட்டுக்கு திரும்புவோமே மனசே இல்லாமல் அது போல ஆகிவிட்டது உங்க கட்டுரையின் கடைசி வரியில் வரும்போது....

  இந்தோனேசியாவில் இருந்து எல்லா மணலும் எடுத்து சிங்கப்பூரை அழகு படுத்திட்டாங்க.. பாவம் இந்தோனேசியால இருந்து தான் இங்க நிறைய கத்தம்மாக்கள் வருவது... சின்சியர் உழைப்பாளிகள்....

  சிங்கப்பூர்ல திறந்தவெளி பஸ்ல உட்கார்ந்து ( அட டிக்கெட்டே இல்லையாப்பா ஜாலி தான்.... இங்க பிள்ளைகள் 10 வயது வரை ஃப்ரீயா பஸ்ல போகலாம்)சிங்கப்பூரின் அழகில் மயங்கி சொக்கி போகலாம்.. நானும் படங்கள் பார்த்துக்கொண்டே வந்தபோது அப்படி தான் இருந்ததுப்பா....

  அதிசய நீரூற்று லைவ்வா ஒருத்தங்க மேலே தொப தொபன்னு நீர் விழுவதை பார்க்க முடிந்தது...

  என்ன அழகா வகை வகையா மீன்கள்பா... அழகா க்யூட்டா கலர் கலரா இருக்கு... ஜரகண்டி லேதா திருப்பதி லாக அக்கட? ஹை அப்ப நிம்மதியா பார்க்கலாம்....

  டால்ஃபின்கள் அழகா குதித்து குதித்து நம்மை வசப்படுத்துவதை பார்த்திருக்கிறேன். ஆனால் ட்ரெயினர் சொன்னது போல சொன்னதை கேட்டு செய்யும் பிள்ளைகள் போல இருப்பதை நீங்க சொல்லி அறிய முடிந்ததுப்பா... டென்மார்க்ல ஒரு சீசன்ல நிறைய டால்ஃபின்களை வெட்டி வெட்டி கொன்றார்கள் :( அது அவர்களின் வீரத்தை நிரூபிக்கும் விளையாட்டாம் :(

  அட அட வித விதமா மொழில பேசும் பறவையா அட தமிழ்ல கூடவான்னு ஆச்சர்யமா படிச்சுக்கிட்டே போனால் பொம்மை பறவைன்னு சொல்லிட்டீங்களே....

  ஹப்பா இன்னைக்கு சிங்கப்பூர் ட்ரிப் அடிச்ச அலுப்புல இருந்தாலும் ரசிக்க வைத்த ரசனையான காட்சிகளும் கட்டுரையும் என்னை உடனே எழுதவெச்சிட்டுது...

  அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி எங்களை சிங்கப்பூருக்கு கூட்டிட்டு போய் அழகா சுத்தி காண்பித்ததற்கு...

  ReplyDelete
 8. சிங்கப்பூர்படங்கள் பதிவுகள் நல்லா
  இருக்கு கோவில் நிறையா இருக்கே போகலியா?

  ReplyDelete
 9. படங்கள் பிரமாதம். பல்வேறு கோணங்களில் அந்த சிங்க உருவம்,பிரம்மாண்டமான ரோலர் கோஸ்டர் என்று எல்ல படங்களுமே கண்ணுக்கு விருந்து.அழகான பதிவு பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 10. Bangkok அடுத்து சிங்கப்பூர்....

  ரொம்ப நன்றி... பகிர்வுக்கும் படங்களுக்கும்....

  ReplyDelete
 11. வண்ண மயமான சிங்கப்பூரை நேரில் பார்ப்பது போல் செய்தன உங்கள் படங்களும், வர்ணனையும்.
  வாவ்!

  ReplyDelete
 12. ஒவ்வொரு படங்களைவிட்டும் கண்களை எடுக்க
  மனம் வரவில்லை.தங்கள் சுற்றுலாத் தலப் படங்களைப்
  பார்பதென்றால் கொஞ்சம் நேரம் இருக்கும்படியானநேரத்திலும்
  வீட்டு சமையல் வேளைகளை முடித்தவுடன்
  மனைவியுடனும் சேர்ந்து பார்க்கிற பழக்கம் வைத்துக் கொள்வதால்
  வருகைக்கு தாமதம் நேர்ந்துவிடுகிறது
  மனத்தை கொள்ளை கொள்ளும் பதிவு
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. நானும் போகப்போறேனே!!!!!!!!!

  ReplyDelete
 14. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள் அம்மா.

  ReplyDelete
 15. சிங்கப்பூர் எப்போதும் தனியான காதல் எனக்கு தற்காலிகமாக நீங்கள் அதை முழுமையாக காண வைத்துவிட்டீர்கள் உங்களின் இதுகை மூலம் சிறப்பான படங்கள் வியக்கவைக்கும் காட்சிகள் உளம் நிறைந்த பாராட்டுகள் தொடருங்கள் அன்னையே

  ReplyDelete
 16. அட!

  சிங்கப்பூருக்கு வந்திருக்கீங்க. எங்களை சந்திக்காம போயிட்டீங்களே!

  ReplyDelete
 17. பிரமிக்க வைக்கும் தகவல்கள். ரசிக்க வைத்த பதிவு. அழகிய படங்கள். மஞ்சுபாஷினி சொன்ன டால்பின்களைக் கொன்ற புகைப் படம் பார்த்து நானும் நொந்திருக்கிறேன்.

  ReplyDelete
 18. சிங்கப்பூர் சூப்பராயிருக்குங்க. படங்களுடன் நல்ல பகிர்வு.

  ReplyDelete
 19. ஆஹா!சிங்கப்பூர் சூப்பர் படங்கள்.

  ReplyDelete
 20. அக்கரை சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே...

  ReplyDelete
 21. Fountain of Wealth நம்ம ஹிருத்திக் ரோஷன் க்ரீஸ் படத்துல தாவி தாவி போவாரே... அதான சூப்பர்

  ReplyDelete
 22. சிங்கபூரின் சூப்பர் படங்கள் பட்டைய கிளப்புதுங்க

  ReplyDelete
 23. அருமையான படங்களுக்கும் , பகிர்வுக்கும் நன்றி

  ReplyDelete
 24. சிங்கப்பூரின் படங்கள் கண்ணைப் பறிக்குது சகோதரி
  இப்பவே போகணும் போல இருக்குது.

  ReplyDelete
 25. ஆஹா!சிங்கப்பூர் அருமையான படங்கள்

  ReplyDelete
 26. சிங்கப்பூரைச் சிறை பிடித்து வலையில் பூட்டிவிட்டீர்கள்.அருமை

  ReplyDelete
 27. எப்படியோ உங்க தயவுல சிங்கப்பூரை சுற்றி பார்த்து விட்டேன் .நன்றி

  ReplyDelete