Wednesday, September 7, 2011

திருவோணத் திருவிழாபுராண மரபின்படி கேரள நாடு இரண்டு பேரரசர்களுடன் தொடர்புடையது. ஒருவர் பரசுராமர். மற்றொருவர் மாபலிச் சக்கரவர்த்தி.
பரசுராமர் நாராயணனின் ஆறாம் அவதாரம்.
ஏழாம் அவதாரமான இராமரிடம்  தோல்வியடைந்தார்.

தமக்கென ஒரு தனி அரசு வேண்டுமென்று தியானித்துச் சிந்தித்தார்.

 பின்னர் கடலரசனின் ஒப்புதல் ஆணையுடன் தம் பரசினை (கோடரியை) வீசி எறிந்தார்.

அது விழுந்த எல்லை வரையில் அமைந்த நாடே கேரள நாடு. எனவே,

இந்த நாட்டிற்குப் “பரசுராமர் திருத்தலம்” -
பரசுராம க்ஷேத்திரம் என்ற பெயரும் அமைந்தது.
மாபலிச் சக்கரவர்த்தி: கேரள மக்கள் ஆவணித் திருவோணத்தன்று மாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்று வழிபடுகின்றனர்.
அன்று பெரும்பாலும் நிறைமதி நாளாகவும் இருக்கும்.
Beautiful Pictures of Kerala for Keralites
ஆவணித் திருவோணம்: கேரளாவில் ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாம்.

ஆவணித் திருவோணத்தின் முன்வரும் அஸ்தநட்சத்திரம் தொடங்கிய பின் வரும் மக நட்சத்திரம் வரை மொத்தம் இருபத்தைந்து நாள்கள் திருவோண விழாவைப் பெரு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

அவரவர் வசதி, வளப்பங்களுக்குத் தகுந்தபடி விழா நாள்களின்
எண்ணிக்கை வேறுபடுகிறது.

அஸ்தப் பூக்கோலங்கள்: திருவோண நாளுக்குப் பத்து நாள்கள் முந்தியது அஸ்த நட்சத்திர நாள். இந்த நாளில் திருவோணவிழா பூக்கோலங்களுடன் தொடங்குகிறது.

அஸ்த நாளில், வண்ண வண்ணப் பூக்களைத் தொகுத்து, முற்றங்களில், விதவிதமான கோலங்களைப் புனைகின்றனர். 
இவற்றை “அஸ்தப் பூக் கோலங்கள்” என்பர்.

வண்ண வண்ணப் பூக்களில் குறிப்பாக வெள்ளை நிறத் தும்பைப் பூக்களை மிகுதியாகப் பயன் படுத்துகின்றனர். 
இப்பூக்கள் அனைத்தும் மக்களின் களிப்பின் வெளிப்பாடாக அடையாளமாகப் பொலிகின்றன.

கோலங்களின் மையத்தில், சதுர வடிவுடைய பிரமிடு போலக் கூம்பு தலையுடைய அமைப்பைப் பொருத்தி, அதில் நாராயணனையும், மாபலிச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளச் செய்து வழிபடுகின்றனர். 

பலர் குத்துவிளக்கை மையத்தில் வைத்து வழிபடுகின்றனர்.

சமுதாய விழா: கேரளத்தில் திருவோண விழா சமயத் தொடர்பான விழாவாக நடைபெறுவதில்லை.

மலையாளிகள் அனைவரும் ஒருங்கே திரண்டு, சமய வேறுபாடுகள் இல்லாமல் பக்திப் பரவசத்துடன் கொண்டாடுகின்றனர்.

திருவோண விழாவைச் சார்ந்து மகிழ்ச்சி பூக்கும் நிகழ்ச்சிகள்
 பல இடங்களில் நிகழ்கின்றன.

கத களி நடனம்: ஷோரனூரில் கதை பொதி நடனத்தைக் -
கதகளியைக் கண்டு களிக்கின்றனர்.

கை கொட்டிக்களி: மகளிர் ஒரு விளக்கை மையமாக வைத்து, வட்டமாக நின்றும், இயங்கியும் கைகளைக் கொட்டிக் களிப்பது களிப்படையச் செய்வது “கை கொட்டிக் களி”

இதனைத் தமிழகத்தில் “கும்மி அல்லது கொம்மியடித்தல்” என்பர்.
நடமாடும் மகளிருக்கு மலர் விரிப்புகளை விரிப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.
Get more Onam Glitters
வள்ளம் களி: ஆரன் மூலாவில் உலகப் புகழ்பெற்ற “வள்ளம் களி” என்ற படகுப் போட்டி மிக மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இவ்வாறு, கேரள மக்கள் தம்மையும், தம் வீடுகளையும், நாட்டையும் உயர் உச்சநிலைச் சிறப்புகளுடன் அழகு படுத்திச் சுற்றத்தினரையும், நட்பினரையும் விருந்தோம்பித் திருவோண விழாவை மிக்க சிறப்புடன் கொண்டாடுகின்றனர். 

அவர்கள் மிக்க சிறப்புடன் கொண்டாடுகிற ஒரே விழா 
இத்திருவோண விழாவேயாம்.
Get more Thirunam Glitters
கேரள நாட்டுத் திவ்ய தேசமான திருக்காட்கரை ஷோரனூர், எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் உள்ள இடைப்பள்ளி என்ற புகைவண்டி நிலையத்திலிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் உள்ளது.

மூலவர்: வாமன மூர்த்தி; அப்பன், வாமனன் சங்கு, சக்கரம், கதை, பத்மத் திருக்கைகளுடன் மாபலிக்குக் காட்சி கொடுத்த அதே திருக்கோலத்துடன் சேவை சாதிப்பதால் வாமனத் திருத்தலம். தாயார்: பெருஞ்செல்வ நாயகி.

திருக்காட்கரை அப்பனிடம் ஓர் அடியார் பொன் வாழைக்குலைகளைச் சமர்ப்பித்து நேர்ந்து கொண்டு வழிபட்டதால் “நேந்திர வாழை” என்ற இனமே உருவானதாம்.

நம்மாழ்வார் மட்டும் பதினொரு பாசுரங்களால் மங்களா சாசனம் செய்தார். ஒரு திருவாய் மொழி பாசுரம் 

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என்னுயிராய் என்னுயிருண்டான்
சீர்மல்கு சோலை தென் காட்கரை என்னப்பன்
கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேனே.

இத்திவ்ய தேசம் தோன்றிய பிறகே கேரளத்தில் திருவோண விழா மிக்க புகழ் பெற்றது என்று பலரும் கருதுகின்றனர்.
உழவர்கள் திருவோண விழாவை அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். அறுவடைக் காலத்தில் புதுப்பயிரை அறுவடை செய்து திருவோணத் திருநாளன்று விருந்தோம்பிக் களிக்கின்றனர்.

மாதந்தோறும் திருவோண நாளன்று நாராயணனை வழிபட்டு விரதங்காப்பது திருவோண விரதம். இந்த விரதத்தால், சீர் குலைந்த மனநலம் சீராகும். உறவினர் கொண்ட பகை அகலும். பகைவர் நண்பராவர். பொதுவாக, துன்பங்கள் அனைத்தும் நீங்கும் அல்லது தணியும்.
வாமன ஜெயந்தி விரதம்: வாமனன் அவதரித்த நாளான ஆவணி-வளர்பிறை-துவாதசி-திருவோண நாளன்று, வாமனனை வழிபட்டு மிக மிகப் பலர் உண்டு களிப்பர். மிக மிகச் சிலர் விரதமிருப்பர்.


Get more Onam Glitters

[Kathakali_performance_at_Thekkady.jpg]

27 comments:

 1. திருவோணம் கொண்டடப்படும் விவரங்கள் அருமை. படங்கள்,அதிலும் அந்த பரசுராமர் படம்,படகு போட்டிப்படங்கள் மிக அழகு.

  ReplyDelete
 2. கலக்கலான படங்கள், அருமையான பதிவு..
  பாராட்டுகள் தோழி..

  ReplyDelete
 3. பராக்கிரமர் பரசுராமனின் எல்லை கேரளாவில் கோடரி விழுந்ததில் ஆரம்பித்து மஹாபலி சக்ரவர்த்தியில் தொடர்ந்து படங்களும் கண்ணைபறிக்கும் அஸ்தப்பூக்கோலங்களும் திருவோணம் கொண்டாட்டங்களும் கதகளி நடனமும் ஷோரனூரில் பொதி நடனமும், கைக்கொட்டி களியும், வள்ளம் களி என்ற படகு போட்டியும்,வாமண ஜெயந்தி விரதமும் எல்லாம் கண்டு களித்து திவ்யமாக நீங்கள் படைத்த விருந்தை கண்ணுக்கும் வயிற்றுக்கும் படைத்து மனமும் வயிறும் நிறைந்து வாழ்த்துகிறேன் ராஜேஸ்வரி...

  இத்தனை அற்புதமாக சிரத்தை எடுத்து தினமும் இதற்கென சமயம் ஒதுக்கி எங்கள் எல்லோருக்கும் தினம் ஒரு திருவிழாவாக தரும் உங்கள் அன்பை கண்டு வியக்கிறேன்பா.... அத்தனை அசத்தலாக அருமையாக அழகாக காண்போரெல்லாமே அந்தந்த இடத்துக்கே போய் வந்த உணர்வையே தந்த உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாதுப்பா..

  என்றும் நீங்கள் குடும்பத்துடன் நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்..

  ReplyDelete
 4. ஓணப் பண்டிகையின்
  வரலாறும் அதன் விளக்கமும்
  மிக அருமை சகோதரி
  வழக்கம் போல படங்கள் களைகட்டுகிறது.

  ReplyDelete
 5. ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத சத்ருகன ஹநூமத் ஸமேத ஸ்ரீ இராமச்சந்திரமூர்த்தி திருவுருவம் போட்டு ஆரம்பித்துள்ள இந்தப்பதிவும் அழகு.

  /நேர்ந்து கொண்டு வழிபட்டதால் “நேந்திர வாழை” என்ற இனமே உருவானது/

  ஆஹா! என்னப்பொருத்தம்! ... இந்தப்பொருத்தம்,
  ஒரு வார்த்தையிலேயே.

  இங்கு நாம் வெள்ளைவெளேரென்ற பொன்னிப்பச்சரிசி, மல்லிகை புஷ்பம் போல, கண்ணுக்கு இனிமையாக, வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டு பழகிவிட்டதால், அங்கு கேரளா குருவாயூர் பக்கம் போனால், அந்த சாதத்தின் நிறத்தைப்பார்த்தாலே எனக்கு என்னவோ பிடிப்பதில்லை.

  ஆனால் அது பாலீஷ் செய்யாத கைக்குத்தல் அரிசி, உடம்புக்கு நல்லது என்று சொல்லுகிறார்கள்.

  ஒரு நாள் நான் தவியாய்த் தவித்து விட்டு,கொஞ்சூண்டு மட்டும் சாப்பிடுவது போல என் குடும்பத்தினருக்கு பாவ்லா காட்டிவிட்டு, தயிர் மட்டும் சாப்பிட்டுவிட்டு, எழுந்து போய் விட்டேன்.

  பிறகு ஒரு ஒரு மணி நேரம் கழித்து தங்கியிருந்த லாட்ஜ் ரூமிலிருந்து எஸ்கேப் ஆகி எனக்கு பிடித்தமான டிபன் ஐட்டம்ஸ் வேறு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்தேன்.

  படத்தில் காட்டியுள்ள இலையைப் பார்த்ததும் ... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

  நாமத்திற்கு பதில் பட்டை போட்ட யானைகளை நடுவில் புகுத்தி, ஹரியும் சிவனும் ஒன்னு தான் என்று உணர்த்தி விட்டீர்களோ?

  அனைத்துமே அருமையாக உள்ளது.
  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

  ReplyDelete
 6. உங்க பதிவிலேயே நீங்க ஓணம் பண்டிகையை கொண்டாடிங்க. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அருமையான பதிவு.
  அருமையான படங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. ஓணக்கொண்டாட்டங்கள் பற்றிய நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. RAMVI said...
  திருவோணம் கொண்டடப்படும் விவரங்கள் அருமை. படங்கள்,அதிலும் அந்த பரசுராமர் படம்,படகு போட்டிப்படங்கள் மிக அழகு./

  அருமையான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 10. வேடந்தாங்கல் - கருன் *! said...
  கலக்கலான படங்கள், அருமையான பதிவு..
  பாராட்டுகள் தோழி../

  அருமையான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 11. மஞ்சுபாஷிணி said.../

  மனம் நிறைந்த வாழ்த்துக்களுகும் ஆத்மார்த்தமான அன்பான கருத்துரைகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி சகோதரி.

  தங்கள் இல்ல நலத்திற்குப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 12. மகேந்திரன் said...
  ஓணப் பண்டிகையின்
  வரலாறும் அதன் விளக்கமும்
  மிக அருமை சகோதரி
  வழக்கம் போல படங்கள் களைகட்டுகிறது./

  களைகட்டிய அருமையான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 13. வை.கோபாலகிருஷ்ணன் said...
  ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத சத்ருகன ஹநூமத் ஸமேத ஸ்ரீ இராமச்சந்திரமூர்த்தி திருவுருவம் போட்டு ஆரம்பித்துள்ள இந்தப்பதிவும் அழகு./


  மலரும் நினைவுகளோடு அருமையான ஆத்மார்த்தமான நுணுக்கமான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 14. N.H.பிரசாத் said...
  உங்க பதிவிலேயே நீங்க ஓணம் பண்டிகையை கொண்டாடிங்க. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்./

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 15. Rathnavel said...
  அருமையான பதிவு.
  அருமையான படங்கள்.
  வாழ்த்துக்கள்.//

  அருமையான வாழ்த்துரைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 16. கோவை2தில்லி said...
  ஓணக்கொண்டாட்டங்கள் பற்றிய நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்./

  அருமையான வாழ்த்துரைக்கு நன்றி

  ReplyDelete
 17. I am celebarating Onam along with you Rajeswari, along with your beautiful pictures. I simply love it. viji/

  வாங்க விஜி. நாம் எல்லோரும் பொன் ஓணக்கொண்டாட்டம் மகிழ்ச்சியாக கொண்டாலாம். நன்றிங்க.

  ReplyDelete
 18. எத்தனை எத்தனை விவரங்கள்...நிறைய நிறைய விளக்கங்களுடன் பதிவு சுவாரஸ்யம் தருகிறது.

  ReplyDelete
 19. ஓண சதயம் சாப்பிட்டது போல் இருக்கிறது!

  ReplyDelete
 20. படகுச் சவாரி கண் கொள்ளாக்
  காட்சி
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. திருவோணத்தை அழகாக கொண்டாடி விட்டீர்கள்.பல புதிய தகவல்கள்,பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 22. கலக்கலான படங்கள்... அருமையான பதிவு...

  ReplyDelete
 23. உங்களின் பதிவு அருமையான பதிவு

  ReplyDelete
 24. 994+2+1=997 ;)))))

  என்னுடைய மிகப்பெரிய பின்னூட்டம். தங்கள் பதிலும் அழகு. நன்றி.

  ReplyDelete