Friday, March 9, 2012

அன்னை சௌபாக்ய லஷ்மி ஆதிமகாலஷ்மிDevi Laxmi Graphics Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs[Image1]

ஜல் ஜல் ஜல் எனச் சதங்கைகள் ஒலிக்க
கண கண கண என வளையல்கள் குலுங்க
கல் கல கல எனக் கால் சிலம்புகள் இசைக்க
கருணையால் நம் கஷ்டங்கள் பறந்தோட
நமது மனை மங்களம் பொங்கித் ததும்பி நிறைய
சௌபாக்ய லஷ்மியாய் வந்தருள்வாள் அன்னை மகாலஷ்மி 

பெருமிழலை நகரை ஆண்ட மன்னரிடம் பணிபுரிந்தவர் குரும்பநாயனார்63நாயன்மார்களில் ஒருவர்


குரும்பநாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரை வணங்கி அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார் ஆடி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் குரும்ப இனத்தில் பிறந்தார்.
தினமும் சிவனடியார்களுக்கு வேண்டிய உணவுஉடை மற்றும் பொருட்களை ஒரு கம்பளியில் கட்டி எடுத்துவந்து ஊர் எல்லையில் கொடுத்து அனுப்புவதை முதல் கடமையாகக் கொண்டிருந்தார்.
குரும்ப இனத்தவரின் தொழில் ஆடு மேய்ப்பது ஆகும்ஆட்டின் முடியில் செய்த கம்பளியில் அந்த பொருட்களை எடுத்து வருவார்.எல்லாரிடமும் பணிவாக நடந்து கொள்வார்.

 சுந்தரமூர்த்தி நாயனாரை இறைவன் கைலாயத்திற்கு அழைக்க முடிவு செய்ததை அறிந்த குரும்ப நாயனார் குருவை பிரிந்து தனித்துவாழ இயலாமல்  குருவுக்கு முன்னதாக யோகநெறியின் மூலம் சிவபெருமானின் திருவடியை சேர முடிவெடுத்த படி சிவலோகத்திற்கு சென்று சிவனின் திருவடியின்கீழ் அமர்ந்தார் என்பது பெரியபுராண வரலாறு 
குரும்ப நாயனாரின் குலதெய்வம் ஆதிமகாலட்சுமிஅசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது உருவானவள் மகாலட்சுமிஅப்போது பெருமாள் அமிர்தத்தை தேவர்களுக்கும்,விடத்தை அசுரர்களுக்கும் பங்கிட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்.

அந்தகாசூரன் என்பவன் இதை தனது ஞானத்தால் அறிந்துகொண்டு விடத்திலிருந்து தப்பிக்க ஓடிச் சென்ற போது மகாலட்சுமியைப் பார்த்து  அருகில் சென்றான்
மகாலட்சுமி காவிரிக்கரை வழியாக ஓடினாள்அசுரனும் விரட்டி வந்தான்அப்போது ஆடு மேய்க்கும் குரும்ப இனத்தவர்கள் மேட்டுமகாதானபுரம் என்ற இடத்தில் தங்கள் தொழிலை செய்து கொண்டிருந்தார்கள்மகாலட்சுமி அசுரனிடமிருந்து தப்ப குரும்பர் இனத்தவர் இருந்த இடத்தில் பூமிக்குள் ஒளிந்துகொண்டாள்.
அந்த இடத்தில் சிவபக்தனான ராவணன் ஈசனை நினைத்து தவமிருந்து கொண்டிருந்தான்

மகாலட்சுமி அங்கு ஒளிந்திருப்பதை அறிந்த ராவணன் தன்னை அழிப்பதற்கே அவள் வந்திருக்கிறாள் என கருதி இலங்கைக்கு சென்றுவிட்டான்.
மகாலட்சுமி குரும்பர்கள் கறக்கும் ஆட்டுப்பாலை அவர்கள் அறியாமலேயே குடித்துவந்தாள்இதை மக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர்ஒரு இடத்தில் ஈரமாக இருந்ததை பார்த்த மக்கள் அந்த இடத்தை தோண்டினர்அப்போது மகாலட்சுமி சுயம்புவாக காட்சி தந்து தெய்வமான மகாலட்சுமி மக்களிடம் அவர்களை சோதிக்க அசுரனிடமிருந்து தன்னை காக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாள்.

உடனே மக்கள் மகாலட்சுமியை ஒரு கம்பளியில் சுற்றி மறைத்து வைத்துவிட்டார்கள்.


அசுரன் இதைத் தெரிந்து கொண்டு அவர்களுடன் சண்டை செய்து அம்மனையும் பிடித்து விட்டான்மக்கள் இறைவனிடம் அந்த பெண்ணைக் காக்க வரவேண்டும் என வேண்டினர்
முக்கண் உடைய சிவபெருமானை நினைத்து உருகி பாடல்கள் பாடினர்
 முக்கண் உடைய தேங்காயை எடுத்து சிவபெருமான் அங்கு வரும்வரை தங்கள் தலையில் உடைத்து வணங்குவோம் என வேண்டிக்கொண்டு அவரவர் தலையில் தேங்காயை உடைக்கத் தொடங்கினார்கள்
மக்களின் பக்தியை மெச்சிய சிவன் அங்கு தோன்றி அம்மனை காப்பாற்றினார்.இந்த அம்மன் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது


கோயிலை சுற்றிவர மூன்று பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆடிப்பெருக்கு திருவிழா இங்கு விசேஷமாக நடைபெறும்அன்று பக்தர்கள் மொட்டை அடித்துதங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
திருமணத்தடை நீங்ககுழந்தைச் செல்வம் பெற கல்வியில் சிறந்து விளங்க கரூரில் உள்ள இந்த மகாலட்சுமி ஆலயத்தில் வேண்டுகிறார்கள்.
இப்படி ஒரு கதை கிடைத்தது கரூர் மஹாலக்ஷ்மி ஆலயத்தில்...


20 comments:

 1. Being Friday, You made my day happy by writing about Mahalakshmi.
  By way of newspapaer I heard about coconut breaking on head.Now only I am hearing the exact story.
  Nice writeup and very good pictures as usual.
  Thanks Rajeswari.
  viji

  ReplyDelete
 2. அந்த விழா குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன்
  அது தொடர்பான நம்பிக்கை தங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்
  படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை


  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. மொட்டையடித்து அதற்குப் பிறகு தலையில் தேங்காய் உடைப்பார்களா?.... ....

  நல்ல பகிர்வு....

  ReplyDelete
 6. அழகான படங்களுடன் இனிய செய்திகள்..

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.in/

  ReplyDelete
 7. அழகான படங்களுடம் பகிர்வும் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்

  ReplyDelete
 8. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 9. ;)வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அருமயான பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 10. ”அன்னை செளபாக்ய லக்ஷ்மி ஆதி மகாலக்ஷ்மி” அருமையான தலைப்பு.;)

  ReplyDelete
 11. ”மொட்டைத்தலையில் தேங்காய் உடைத்தல்” நினைத்துப்பார்க்கவே என்னவோ செய்கிறது. இதுபோல ஆங்காங்கு இன்றும் நடைபெற்று வருவதாக செய்திகள் படிக்கிறேன்.

  ஓரளவு முடியுடைய என் தலையில் தேங்காய் உடைத்தது போல எனக்கு ஒரு feeling ஏற்பட்டு, நடுக்கமாக இருக்கும், இதுபோன்ற செய்திகளைப் படிக்கும் போது.

  உடலை வருத்திக்கொண்டு செய்யும் பக்திகளில் சில இப்படித்தான்.

  உடம்பு பூராவும் அலகு குத்திக்கொள்வது. நாக்கில் வேல் குத்திக்கொள்வது. தீச்சட்டி ஏந்திச் செல்வது. பூமிதித்தல் என்ற பெயரில் தீமிதித்தல் என இதுபோல பல வகையறாக்கள் உள்ளன.

  படு பயங்கரமானவைகள் தான்.

  ReplyDelete
 12. முதல் படம் திறக்க மறுக்கிறது.

  Last but one அழகாக அசைந்தாடும் விளக்குகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

  ReplyDelete
 13. மேலிருந்து 4 ஆவது படம் கருப்பு Background இல் விளக்குகள் ஜொலிப்பது போல நன்றாக உள்ளது.

  வழக்கமாக எனக்குத் தகவல் கிடைக்கும் பாக்யம், இன்று ஏனோ தரப்படாமல், மறந்து போய் விட்டு விடப்பட்டதால், அம்மனை தரிஸிக்க வருவதில் மிகவும் தாமதம் ஆகிவிட்டது.

  எல்லாம் வழக்கப்படியே நல்லபடியாக என்றும் நடக்கவேணுமாய் அன்புடன் அம்மனைப் பிரார்த்திக்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 14. நல்லதொரு பகிர்வு.

  புதுமையான தகவல்.

  ReplyDelete
 15. வழக்கம் போல் படங்களும் விளக்கங்களும் தகவல்களும் நிறைந்த பதிவு - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 16. பதிவின் அழகைக் கூட்டி நீங்கள் பகிர்ந்திடும் படங்கள் மகுடம்.

  ReplyDelete
 17. 42. ஆபத்பாந்தவ கோவிந்தா

  ReplyDelete