Wednesday, March 28, 2012

தங்க மழை சொரியும் சரக் கொன்றை


 பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத்
தேம்படு காயா மலர்ந்த தொன்றியொடு
நன்னலம் எய்தினை புறவே  -- என்கிறது ஐங்குறுநூறு 
சரக்கொன்றை மரங்கள் கண்ணைப் பறித்த பொன்னிறப் பூங்கொத்துக்களைச் சரம் சரமாகத் தொங்க விட்டுக் கொண்டு பரந்து  தங்க மழை போன்று சொரியும்  மஞ்சள் பூக்கள் மனதிற்கு மகிழ்ச்சிதரும்.. 
 
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
 
தென்னாடுடைய சிவன் ! எந்நாட்டவர்க்கும் இறைவனாம் மாசற்ற மாணிக்க ஜோதியாய் பொன்னாய் ஒளிரும் முக்கண்ணனின் மின்னல் செஞ்சடைமேல் அணியும் அழகுமல்ர் !
பக்தனுக்கு பூத்தொடுக்கும் சிரமம் கூட தராமல் தானே சரம் சரமாய் கொத்துக் கொத்தாய் மலர்ந்து ஈசனின் சடையிலும், பக்தர்கள் மனதிலும் ஜாஜ்வல்யமாய் ஜொலிக்கும் தங்கப் பொன்மலர் சரக்கொன்றை .. 

கோடைக்காலத்தில் இலைகளே தெரியாமல் தங்க நகை அணிந்த மங்கையாய் மஞ்சள் மலர் சூடிய மணப்பெண்ணாய் மனம் கவரும்.. 

 
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துரின் புராண பெயர் கொன்றைவனம். 

 பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சரக்கொன்றை மரங்கள் நிறைந்த கொன்றை வனமாக திகழ்ந்து தவம் செய்வதற்கு ஏற்ற பூமியாக சிறந்த தவநிலையுடைய இடம் என்ற பேறுபெற்ற ஸ்தலமாக  திருத்தளிநாதர் கோயில் திகழ்கிறது,,

பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்திய ஈஸ்வரனின் சிறப்பான கௌரி தாண்டவம் காண விரும்பி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்த.ஸ்ரீ மகாலட்சுமிக்குக் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடம்.  

திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கை 

உமாதேவியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இந்திரனின் மகன் ஜயந்தன் இங்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். .

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார் 
திருத்தளிநாதர் கோவிலில் தனிச் சன்னதியில் எழுந்தருளி கம்பீரத்துடன் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீயோக பைரவர்தான் ஆதிபைரவர்.  

காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே! நம்மை ஆட்டிப் படைக்கும் கிரகங்களை ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். 

இந்த பைரவர் மிக உக்ரமானவர். அவர் தம் உக்ரத்தைக் குறைக்க, வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக, அவரை சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளதே இதற்குச் சான்று. . 

பூஜை முடிந்த பிறகு அவர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு ஆலய அர்ச்சகர்களே கூட செல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு உக்கிரமானவர். 

தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுகின்றனர். ராகுகாலம் போன்ற நேரங்களிலும் இவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகின்றது. 

சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமணத்தடைகள் போன்றவை விலக பைரவரை வழிபடுதல் சிறப்பு. அதற்காக ஹோமங்களும் அர்ச்சனை வழிபாடுகளும் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. 

 கடலூர் மாவட்டம் திருவதிகை ஸ்ரீவீரட்டேஸ்வரர் கோயில், மதுரை மாவட்டம் திருப்பனூர் கொன்றை வேந்தனார் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களின் தலவிருட்சம்- சரக்கொன்றையே! 


ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கும் அச்சிறுபாக்கம் ஆலயப் பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடியீஸ்வரர் சன்னதியில் சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். இக்கொன்றை மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு.

சரக்கொன்றை இலை உடல் அரிப்பை நீக்கும்

க்கொன்றை மரத்தின் பூவும் காயும், மரப்பட்டையும் பல மருத்துவ குணங்கள் கொண்டவை

  http://capnbob.us/blog/wp-content/uploads/2008/08/crassula.jpgYellow and Purple Flowers Photographic PrintPurple and Yellow Flower, Malaysia Photographic Print        

   

20 comments:

 1. கொன்றையைப் பற்றிய தகவல்கள் படங்களுடன் பார்ப்பதற்கே கொள்ளை அழகு.

  ReplyDelete
 2. அன்பின் ராஜராஜேஸ்வரி,

  சிவனுக்குகந்த நறுமலர் கொன்றை பற்றி மிக அழகாக படங்களுடன் வர்ணித்துள்ளீர்கள். வாழ்த்துகள். எங்கள் வீட்டிலும் சரக் கொன்றை மரம் தாங்கள் சொன்னது போல தங்க இதழ்களை வாரி இரைத்துக் கொண்டுள்ளது

  ReplyDelete
 3. எங்கெங்கும் பூக்கள்.... கண்ணைப் பறிக்கும் அழகு....

  ReplyDelete
 4. சரக்கொன்றை அழகான மலர்.சிவ பெருமானுக்கு உகந்தது என்ற இரண்டு விஷயஙளைத் தவிர எனக்கு இதைப் பற்றி வேறெதுவும் தெரியாதிருந்தது.

  இப்பொழுது பல தகவல்களை அறிந்தேன்.படங்கள் கண்ணைக் கவருகின்றன.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 5. இது கொன்றைப் பூக்களின் காலம். பச்சை மரம் பொன்னாடை போர்த்த துவங்கியாச்சு. சரியான நேரத்தில் அழகிய பதிவை பூக்கவைதிருக்கேரீர்கள்.

  கேரளா மாநிலத்தில் புதிய வருடப் பிறப்பான 'விஷு' தினம், கண்ணனுக்கு கொன்றை சரங்களை அர்பணித்து விடியற் காலையில் 'கணி' காண்பார்கள். எனக்கு அவை மரங்களில் பல நாட்கள் வாடாமல் மலர்ந்து மகிழ்ச்சித் தரும் அந்தக் 'கணியே' மிகவும் விருப்பம்.

  தளவரலாற்றுடன் படங்களும் அருமை. மிகவும் ரசித்துப் படித்தேன்.

  ReplyDelete
 6. கொன்றையைப் பற்றிய தகவல்கள் படங்களுடன் பார்ப்பதற்கே கொள்ளை அழகு.

  ReplyDelete
 7. "தங்க மழை சொரியும் சரக் கொன்றை” என்ற இந்தப்பதிவு வெகு அருமையான படங்கள் மற்றும் தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

  நாங்கள் BHEL Quarters இல் சுமார் 20 வருடங்கள் [1981-2000] குடியிருந்தபோது, எங்கள் வீட்டுக்கு எதிர்புறத்தில் இந்த மரம், தாங்கள் சொல்லியுள்ளது போல தங்க ஆபரணங்கள் அணிந்து மஞ்சள் பூசிய மங்கை போல பூத்துக்குலுங்கும் கண் கொள்ளாக்காட்சிகளை சீசன் நேரங்களில் பல நாட்கள் கண்டு களித்துள்ளேன்.

  எங்கள் வீட்டுக்கும் அந்தப்பெரிய மரம் இருந்த பகுதிக்கும் நடுவில் மிக நீண்ட சாலை உண்டு. சாலை முழுவதும் மஞ்சளில் கம்பளம் விரித்தது போலக் காட்சி தரும்.

  இருப்பினும் தெருவை சுத்தம் செய்யவரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

  தினமும் சிவபூஜை செய்யும் என் பெரிய அண்ணா அவர்கள், அடிக்கடி இந்த சரக்கொன்றை புஷ்பங்களுக்காகவே, தன் சிவ பூஜைப்பெட்டியுடன் எங்கள் ஆத்துக்கு வருகை தந்து, மிகவும் சிரத்தையாக எங்கள் ஆத்திலேயே சிவ பூஜை செய்வதுண்டு. என்னைவிட 20 வயதுகள் பெரியவர். அவர் காலமாகி 2 ஆண்டுகள் ஆகப்போகிறது. கடைசிவரை தினமும் சிவபூஜையும், மற்ற அனுஷ்டானங்களும் தவறாமல் செய்த புண்ணிய ஆத்மா.

  தங்களின் இந்தப்பதிவைப் படித்ததும், அவரின் பல ஞாபகங்கள் எனக்கு வந்து, என்னைக் கண்கலங்கச் செய்தன.

  அழகான பதிவினை அளித்ததற்கும், அந்த நாள் ஞாபகங்களை நெஞ்சிலே நிறுத்தியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. Rajeswari, Today very early, I happened to travel. While travelling i had seen sarakontrai flowers are hanging the row.
  I felt very happy viewing it and continueous thought of SIVA came in my mind and I spend this morning travel very happily.
  After reaching home and opened the computer.....
  Wow
  Here is also the same sarakontrai malarkal.
  What a co incident.
  Fin post dear.
  viji

  ReplyDelete
 9. பல நிறமுடைய மலர்களின் படங்களும் சரக்கொன்றை பற்றிய அரிய தகவல்களும் கண்களையும் மனதையும் வசீகரித்தன.

  ReplyDelete
 10. கொன்றை மலர்களின் அணிவகுப்பு பிரமாதமாக இருந்தது.

  ReplyDelete
 11. தகவல்களும் கொன்றையும் அழகு...

  ReplyDelete
 12. நந்தவனத்திற்குள் உலவிய சந்தோஷம்.எனக்கு இன்றுதான் தெரியும் இதன் பெயர்தான் கொன்றை என்று.நன்றி ஆன்மீகத்தோழிக்கு !

  ReplyDelete
 13. அருமை!
  தங்களின் ஈ மெயில் முகவரி....ப்ளீஸ்
  mravikrishna46@gmail.com
  http://atchaya-krishnalaya.blogspot.com/

  ReplyDelete
 14. வணக்கம்! எங்கள் ஊர் மழபாடி மாணிக்கத்தைப் பாடிய தேவாரம் மற்றும் அழகிய கொன்றை மலர்களின் படங்களோடு அருமையான பதிவு!

  ReplyDelete
 15. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. 65. லக்ஷ்மீவல்லப கோவிந்தா

  ReplyDelete
 17. மார்ச் மாத மத்தியில் சரக்கொன்றை மரங்களில் இலைகள் உதிர்ந்து புதிய தளிர்கள் தோன்ற, அப்போதே மொட்டுகளும் மெல்ல தலை நீட்டும். தினமும் அவைகளை பரர்த்து பார்த்து, ஒருநாள் மொட்டுக்கள் பளிசின்று மஞ்சளாக பூத்து கொத்து கொத்தாக மரம் முழுவதும் தோரணம் கட்டிக்கொள்ளும் அழகை காலை கல்லூரி செல்லும் போதும், மாலையில் வீடு திரும்பும் போதும் பார்த்து பார்த்து மகிழ்ந்த காலங்கள்.

  ReplyDelete