Friday, March 30, 2012

‘ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
‘ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானுகூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்.


ஸ்ரீராம நவமி. அன்று சுருக்கமாக, ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும். இதை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம். எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீரகுராமன் கதை கேளுங்கள்

2012 Feb6 Tirumanjanam 2 1 The Case of the Criminal Crow
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு.. குடி கொண்டு. அவள்
விழி கண்டு.. குடி கொண்டு..
மணமாலை தந்த ராமன் கதை கேளுங்கள்


சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க,
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி கண்ணெடுத்து பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்
புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்
இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார். ஆஹா…

நடந்தாள் சீதை நடந்தாள் விழி மலர்ந்தாள் சபை அளந்தாள்
வரவு கண்டு அவள் அழகு கண்டு
சிவ தனுசின் நாணும் வீணை போல அறுந்தது

ராமன் கதை கேளுங்கள், கதை கேளுங்கள்
வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார் சிலர் எழுந்தார் தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிடசிலர் சட்டென்று பூமியில் விழுந்தார். அஹா சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா வீரமில்லையா வில்லொடிக்க ஆண்கள் யாரும் 
இல்லையா தக தையதக்கத்தாதிமி தா
ராமாயா ராமபத்ராய ராமச்சந்தராய நமஹ
தசரத ராமன்தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்
படபட படபட படபட படபட ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு
ஜெயஜெய ராமா சீதையின் ராமா ஜெயஜெய ராமா சீதையின் ராமாதசரத ராமா ஜனகனு மாமா தசரத ராமா ஜனகனு மாமா

சீதா கல்யாண வைபோகமே ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
சீதா கல்யாண வைபோகமே ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
காணக் காண அழகாகுமே இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
சீதா கல்யாண வைபோகமே ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராமனே அதோ பாரப்பா

அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
அவள் விழி கண்டு.. குடி கொண்டு.
மணமாலை தந்த ராமன் கதை கேளுங்கள் 
ஸ்ரீரகுராமன் கதை கேளுங்கள் ராமன் கதை கேளுங்கள்

இந்த உலகில் நம் பூமிக்கு அருகில் இருக்கும் ஒற்றை சூரியனே இவ்வளவு பிரகாசமாக இருக்கிறதே! இவனோ இந்த அண்ட ப்ரபஞ்சங்களை கடந்த பிரம்மாண்டமான வெளியில் சூரியனுக்கெல்லாம் சூரியனாக பிரகாசிக்கும் மஹா விஷ்ணுவாயிற்றே! 

இப்படி இவன் இவ்வளவு சீருடன் விளங்க எது காரணம் என்று நினைத்து மஹாலக்ஷ்மியான சீதையே அந்த பிரகாசமாக இருப்பதற்கு காரணம் என்று முடிக்கிறார் தேசிகர். 
விஷ்ணுவை மட்டும் வழிபடுவது முறை அல்ல – மஹா லக்ஷ்மியையும் சேர்த்தே வழிபட வேண்டும். அதனால் தான் பெரியோர் ஸ்ரீவைஷ்ணவம் என்றே இந்த சமயத்தை சொல்லுவார்கள். 
இதில் ஸ்ரீ என்பது மஹா லக்ஷ்மியையே குறிக்கிறது.
தோள் கண்டார், தோளே கண்டார்; தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார், தாளே கண்டார்; தடக் கை கண்டாரும், அ·தே;
வாள் கொண்ட கண்ணார் யாரே, வடிவினை முடியக் கண்டார்? -
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.

- கம்பராமாயணம், உலாவியற்படலம்


ராம ராம ராம் ராம ராம ராம் ராம ராம ஹரே ராஜா ராம்
ராம ராம ராம் ராம ராம ராம் ராம ராம ஹரே சீதா ராம்

சுந்தர காண்டத்தில் ஹனுமான்  ஹ்ருதய கமலத்தில் 
ஸ்ரீ ராமனையும் சீதா பிராட்டியும் இருப்பதாக ஐதீகம். 


ஹனுமான் ஏற்கனவே நடந்த ஸ்ரீ ராம சீதா திருமணத்தை 
பார்க்க விரும்பினாராம். 
அந்த கல்யாணத்தை மானசிகமாக மறுமுறை நடத்தி பார்த்தாராம்.

தசரத மஹாராஜாவிற்கு வெகு காலம் பிள்ளை இல்லாமல் யாகம் செய்து,
பின் பாயச வடிவில் பகவான் மஹா விஷ்ணு வந்து, தசரதனுக்கு மகனாகப்
பிறந்தார். 
ஜனக மஹாராஜா சிறந்த ஞானியாக  வாழ்ந்தவருக்கு, பூமியிலிருந்து தேவியின் அம்சமாக சீதாதேவி கிடைத்தாள். 
Sri RanganAtha
இப்படி தேவதைகளின் நன்மைக்காகவும், உலகத்தில்தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் அயோத்தியிலும், மிதிலையிலும் அவதரித்த ராமனுக்கும், சீதைக்கும் மனித வாழ்க்கை முறைப்படி மனிதர்களுக்கு வாழ வேண்டிய வழி முறைகளை தெரிவிப்பதற்காகவே அவதாரம் எடுத்துக் கல்யாணம் முறைப்படி நடைபெறுகிறது.

இருவருடைய உள்ளத்தில் ஒரே சிந்தனை, ஒரே எண்ணம், ஒரே செயல் இவையெல்லாம் இருந்துவிட்டால் இதுதான் அமைதியுள்ள பாதையில் நமது வாழ்க்கையை எடுத்துச் செல்ல ஒரே மேட்சிங்.

இதைத்தான் சீதாதேவி தன் வாழ்நாளில் ராமருடன் கல்யாணம் ஆனது
முதல், அரண்மனையில் வாழ்க்கை நடந்தாலும், காட்டில் வாழ்க்கை நடந்தாலும் இரண்டையும் சமமாகப் பாவித்து கணவனைப் பிரியாமல் ஒரு மனதாக வாழ்க்கை நடத்த வேண்டுமென்பதை எடுத்துக் காட்டினாள். இதை வைத்துத்தான், "சீதா கல்யாண வைபோகமே" என்று பாடினார்கள்.

27 comments:

 1. ராமநவமி கொண்டாடியதைப்போலவே இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ஒம் ராம்! ஓம் ராம்! ஓம் ராம்!
  வாழ்த்துக்கள். அருமையான பதிவு.
  கண்களில் நிற்கின்றது அழகு எம்பெருமானின் திரு உருவங்கள்! நன்றி நன்றி!

  ReplyDelete
 3. "காணக் காண அழகாகுமே இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே”

  பதிவிற்கும் பொருத்தமான வரிகளே


  முதலில் இருக்கும் பாராயண வரிகளில் கடைசி வரியில் ’சத்தம்’ என்பதற்கு பதில் ‘சததம்’ என்றிருக்க வேண்டுமோ??
  (சததம் - for ever,constant என்ற அர்த்தத்தில்?)

  ReplyDelete
 4. raji said...
  "காணக் காண அழகாகுமே இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே”

  பதிவிற்கும் பொருத்தமான வரிகளே


  முதலில் இருக்கும் பாராயண வரிகளில் கடைசி வரியில் ’சத்தம்’ என்பதற்கு பதில் ‘சததம்’ என்றிருக்க வேண்டுமோ??
  (சததம் - for ever,constant என்ற அர்த்தத்தில்?)/

  கருத்துரைக்கும் ,திருத்தத்திற்கும் இனிய நன்றிகள்..

  புள்ளியை அகற்றிவிட்டேன்.. நன்றி..

  ReplyDelete
 5. முதல் படமே அசத்தல். தொடர்ந்து வந்த ராமன் கதை சொல்லிய விதமும் அருமை.

  ReplyDelete
 6. படங்களும் பதிவும் நல்லா இருக்கு நன்றி

  ReplyDelete
 7. ”ஸ்ரீராமம் ரகுகுல திலகம்”

  நெற்றித்திலகம் போன்ற அருமையான தலைப்பு.

  ReplyDelete
 8. படங்கள் யாவும் அழகோ அழகு!

  ஒன்பதே வரிகளில் உள்ள சுருக்கமான பாராயணம் தந்துள்ளது நன்று.

  ReplyDelete
 9. ’அலங்காரச் சீதை’ போன்ற பாடல்கள் ஆங்காங்கே எழுதியுள்ளது சிறப்பாக உள்ளது.

  ஸீதா கல்யாண வைபோகமே .....
  போன்ற கல்யாண மங்கள நிகழ்ச்சிகளில் ஸ்திரீகளால் பாடப்படும் வரிகளைப் படிக்கும் போதே மனதில் அந்த சுப நிகழ்ச்சிகள் வந்து மோதி வாயை முணுமுணுக்க வைக்கிறது.

  அனைவர் வீடுகளிலும் குழந்தைகளுக்கு விவாஹம் போன்ற சுப மங்கள நிகழ்ச்சிகள் கூடிவரும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. ;)))))

  ReplyDelete
 10. கம்பராமாயண உலாவியற்படலத்திலிருந்து
  “தோள் கண்டார், தோளே கண்டார்......”
  போன்ற மேற்கோள்கள் காட்டியிருப்பது தங்களின் த்னிச்சிறப்பு தான். ;)))))

  ReplyDelete
 11. மேலிருந்து மூன்றாவதாகக் காட்டியுள்ள படம் அந்தக்கால ஓவியங்களில் மிகவும் பெருமை வாய்ந்தது.

  /சுந்தர காண்டத்தில் ஹனுமான் ஹ்ருதய ....../ என்ற வரிகளுக்கு மேல் காட்டப்பட்டுள்ள படம் தான் என்னை இன்று மிகவும் கவர்ந்துள்ளது.

  அதில் வாழைமரப் பந்தலிட்டு, முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்திருந்து அக்னி சாட்சியாக ஸ்ரீராமர் ஸீதாதேவியை கரம் பிடிப்பது போல, ஸீதாக்கல்யாண வைபவம் வெகு அழகாக வரையப்பட்டுள்ளது.

  மகிழ்ச்சியோ மகிழ்ச்சியளிக்கும் வர்ணப்படம். வெகு ஜோர் !

  ReplyDelete
 12. அந்தக் குறிப்பிட்ட படத்தில் வஸிஷ்டர் கையில் ஒரு கெண்டி அதிலிருந்து தீர்த்தம் ஸ்ரீராமர்+ஸீதா இணைந்த கரங்களில் விழுவதாகக் காட்டப்பட்டுள்ளது, அருமை.

  [இருப்பினும் அந்த தீர்த்தம் கீழேயுள்ள அக்னியீல் சொட்டிடும் விதமாக வரையப்பட்டுள்ளது சரியல்ல என்பது என் கருத்து.]

  மற்றபடி அந்தப்படம் எல்லாவிதத்திலும் மிக மிக அருமையாக தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கணும் போன்ற ஆவலைத்தூண்டும் படியாக வெகு அற்புதமாக தீட்டப்பட்ட வண்ண ஓவியமே!

  அதை வரைந்த ஓவியருக்கும், அதைத் தேடிக்கண்டுபிடித்து பதிவிட்ட உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. Aha arputham.
  Very nice post Rajeswari.
  I am repeatly seeing the pictures, reading SeethaRamakalyanm.....
  Thanks Thanks a lot for the post.
  viji

  ReplyDelete
 14. Aha arputham.
  Very nice post Rajeswari.
  I am repeatly seeing the pictures, reading SeethaRamakalyanm.....
  Thanks Thanks a lot for the post.
  viji

  ReplyDelete
 15. Aha arputham.
  Very nice post Rajeswari.
  I am repeatly seeing the pictures, reading SeethaRamakalyanm.....
  Thanks Thanks a lot for the post.
  viji

  ReplyDelete
 16. Aha arputham.
  Very nice post Rajeswari.
  I am repeatly seeing the pictures, reading SeethaRamakalyanm.....
  Thanks Thanks a lot for the post.
  viji

  ReplyDelete
 17. மிகச் சிறப்பான சிறப்புப் பதிவு
  பதிவையே கோவிலாக்கிவிட்டீர்கள்
  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 18. அருமையான பகிர்வு. ராமரின் விதவிதமான படங்களை தரிசித்து மகிழ்ந்தேன்.

  பாப்பா ராம் அழகாக சமத்தாக தூங்குவதாக ரோஷ்ணி ரசித்து சொன்னாள்.

  ReplyDelete
 19. ரகுகுல திலகம் ஸ்ரீ ராமம் என ஒன்பது வரிகளிலே ராமாயணத்தினையே ரசித்து ரசித்து பயனும் பெற
  அருளியிருக்கிறீர்கள்.

  இதை ஸ்ரீ ராம நவமி அன்று படித்து பயன் பெற வேண்டுமென விண்ணப்பித்து இருப்பது கண்டேன்.
  படிக்க மட்டும் அல்ல, பாடியும் பயன் பெற வேண்டும் என பாடுகிறேன்.

  இங்கே கேட்கலாம்.

  .
  இங்கே

  you may click above to listen to this song
  சுப்பு ரத்தினம்
  http://menakasury.blogspot.com

  ReplyDelete
 20. பானகம் போன்ற பகிர்வு.

  ReplyDelete
 21. படங்களைப் பார்க்கவென்றே வருகிறேன்.அவ்வளவு அழகு !

  ReplyDelete
 22. மிக சிறப்புடன் படங்களும் சேர்ந்து அழகு. ஆலயம் செல்வது போல உள்ளது. பாராட்டுகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 23. வணக்கம்! ராமநவமி வாழ்த்துக்கள்! வழக்கம் போல படங்கள் அருமை! சீதையின் மணக்கோலம் கண்டதும் எனது நினைவில் ஒரு காட்சி. நான் படித்த கல்லூரி அருகே இருந்த ஒரு டீக் கடையில் அப்போது அடிக்கடி ஒலித்த ஒரு பாடல்....

  வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
  வைதேகி காத்திருந்தாளோ... தேவி
  வைதேகி காத்திருந்தாளோ
  - பாடல் :கண்ணதாசன் (படம்: மூன்று தெய்வங்கள்)

  ReplyDelete
 24. அருமையான பதிவு.
  அத்தனை படங்களும் அருமை.
  தினம் 12 மணி நேர மின்வெட்டு எல்லாம் தாமதமாகிறது.
  வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 25. 67. கஸ்தூரி திலகா கோவிந்தா

  ReplyDelete