Sunday, March 25, 2012

தேன்மதுர தேன் சிட்டுக்கள்

Hummingbird bird graphics
fall scenes
சின்னஞ்சிறு குருவி போலே - நீ
திரிந்து பறந்து வா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனத்தில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா
என்ற பாரதியின் தேன் மதுர வரிகளில் மனம் மயங்கும்,..
Hummingbird Dream Animated Layout
கண்களைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்ட தேன்சிட்டுக்கள் என்னும் சின்னஞ்சிறு குருவிகள் எப்போதும் ஆச்சரியப்படுத்தும்.. 

தேன் சிட்டுக்கள் ஒரு நொடியில் 80 தடவை 
இறக்கைகளை அசைக்கும் வல்லமை கொண்டது.
இதனால் மனித கண்ணுக்கு இறக்கை துடிப்பது தெளிவாக தெரிவதிலை.
அப்போது இனிய ஹம்மிங் இசை எழுவதால் 
ஹம்மிங் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.. 
தேன்சிட்டு பறவையின் முக்கிய உணவு தேன்..  பூச்சி , பூக்களின் மகரந்தம் , மரங்களில் இருந்து வடியும் பிசின் போன்றவற்றையும் உணவாக ஏற்கிறது..
தேன்சிட்டு பறவைகள் இதயத்துடிப்பு , சுவாசம் என்பன மிக வேகமும் , 
அதிக உடல் வெப்பமும் கொண்டவை ,
இதனால் தேன்சிட்டு பறவைகள் அடிக்கடி உணவை உட்கொள்கின்றன. ஒருநாளில் தனது மொத்த எடையின் 
மூன்றின் இரு பகுதியளவு (2/3) உணவை உட்கொள்கின்றது.
தேன்சிட்டு பறவை மற்றய பறவைகள் போல் 
நடப்பதோ அல்லது தத்துவதோ கிடையாது , 
மாறாக இவை இருந்த இடத்தில் அதிக வேகமான 
இறக்கை துடிப்புடன் பறந்து செல்கின்றன.
Hummingbird bird graphics
மிக அதிவேகமாக மணிக்கு 27 மைல் பறக்க வல்லதேன்சிட்டு பறவை திடீரென ஓரிடத்தில் நிறுத்த வல்லன என்பதுடன் வேண்டிய இடத்தில் மிருதுவாகத் தரை இறங்கும் திறமையும் கொண்டவை.

தனது நாக்கினை இசை மீட்டவும் , 
பூச்சிகளை பிடிப்பதற்கும் உபயோகிக்கின்றது.
காலநிலை மாற்றத்தின் போது வெவ்வேறு இடத்திற்கு 
நாட்டிற்கு இடம்பெயரும் ..... 2,000 மைல் தூரம் வரை பறக்க வல்லன..

இறக்கை அதன் தோள் பட்டையில் மட்டும் 
பல கோண அசைவுகளுக்கு அசையவல்லது .

பல அற்புத தன்மை கொண்ட இந்த பறவையினை படைத்த ஆண்டவன் இந்த பறவை மட்டும் தேன் அருந்தும் வசதி உடைய மலரை படைத்துள்ளார் 

தேன்சிட்டுக்களின் உணவில் பூந்தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. உடல் வளர்ச்சிக்குத்தேவையான புரதச் சத்து பூச்சிகளை உண்பதால் பெறுகின்றன.

நீளமான மெல்லிய அலகுகள் இருப்பது தேன்சிட்டு இனத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இப்பறவையின் பிளவுபட்ட இரட்டை நாக்கு அலகுகளுக்கு வெளியேயும் நீண்டு பூவின் அடியே இருந்து பூந்தேன் உண்ண வசதியானதாக வளர்ச்சி அடைந்துள்ளது. நாக்கு, குழல்போல் உருண்டு தேனுண்ன ஏதுவாக அமைந்துள்ளது.

சிட்டுகளின் கீழ் அலகு (கீழ்த்தாடை) பூச்சிகளைப் பிடிக்க 
வசதியாக விரிந்து கொடுக்கக்கூடியது.

சிட்டுகள் பூந்தேன் நிறைந்த பூக்களை நாடிப் பூவில் இருந்து பூந்தேன் உண்கின்றன. 
இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன.
படிமம்:Hummingbird hovering in flight.jpg
Hummingbirds with Iris Art Print
மனிதருக்கு தீங்கு எதுவும் செய்யாத உயிரினம் ..

 உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்), கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற்காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்கின்றன. 


பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது

சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான பூந்தூள் சேர்க்கை (மகரந்த சேர்க்கை) நிகழ்கின்றது.
பறவைகளிலேயே இந்த பறவையினால் மட்டும் வலம் , இடம் , மேல் , கீழ் , பின்பக்கமாக , தலைகீழாக பறக்க முடியும்.

இதன் இயக்கம் பட்டாம்பூச்சி இறக்கை இயக்கத்தில் இருந்து வேறுபடுகின்றது.
File:Haeckel Trochilidae.jpg

bird021bird021
படிமம்:Hummingbird.jpg

File:Hummingbird Aerodynamics of flight.jpg
Hummingbird bird graphics
File:Chlorostilbon portmanni, Gould.jpg

Hummingbird

25 comments:

 1. I feel a lot relaxed whenever in the morning hours, I see first your blog. Beautiful Nature is more depicted here than anywhere else. As Keats has verily said, "Beauty is Truth and Truth Beauty, That's all ye knew on earth, And all ye need to know."
  How true is his couplet, is best known on seeing and spending a few minutes in your blog.
  God Bless you.
  subbu rathinam.

  ReplyDelete
 2. தேன்சிட்டுக்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். படங்களும் செய்தியும் அவ்வளவு அருமை. அந்த அசைந்தாடும் குருவி கண்களுக்கு விருந்து.

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 4. ; தேனாக இனிக்கும் பதிவு.

  ReplyDelete
 5. ”தேன் மதுரத் தேன் சிட்டுக்கள்”
  தலைப்பைப் படித்ததுமே மிகவும்
  சுறுசுறுப்பானவர்களின் நினைவுகளைத் தந்து மகிழ்வித்தது.

  ReplyDelete
 6. ;) அனைத்து விளக்கங்களும்
  படித்து வியந்தேன்.

  ReplyDelete
 7. ;) படங்களைப் பார்த்ததும், விளக்கங்களைப் படித்ததும், இறைவன் படைப்பில் தான் எத்தனை எத்தனை விசித்திரங்கள் .... கல்லுக்குள் உள்ள தேரைக்கும் உணவை வைத்திருப்பது போல, இந்தத் தேன் சிட்டுக்களுக்கென்றே சில வகைப் பூக்களை படைத்துள்ளானே .....
  வியப்போ வியப்பு தான்.

  எதையும் தாங்கள் சொன்னால் சிறப்போ சிறப்பு தான்!

  மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. மனிதர்களுக்கு தீங்கு எதுவும் செய்யாத உயிரினம் என்பது கேட்க மகிழ்ச்சியளிக்கிறது.

  ஆனாலும் மனிதர்களால் அவற்றிற்கு தீங்கு எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே எனவும் அஞ்ச வைக்கிறது.

  ReplyDelete
 9. பறவைகளிலேயே இந்தப் பறவையினால் மட்டும் வலம், இடம், மேலே, கீழே, பின்பக்கமாக, தலைகீழாகப் பறக்க முடியும்!

  அருமையான ஆச்சர்யமான தகவல்கள் ! ;)))))

  ReplyDelete
 10. அழகிய பகிர்வு. மனம் கவர்ந்தது.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. தேனினும் இனிமையான பதிவும் படங்களும் அருமை ...

  ReplyDelete
 12. தேனினும் இனிமையான பதிவும் படங்களும் அருமை ...

  ReplyDelete
 13. இத்தனை படங்களுக்கும் விளக்கங்களுக்கும் - எவ்வளவு உழைப்பு!! ஆனந்தமான பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 14. அழகான படங்கள். ரோஷ்ணியும் நானும் கண்டுகளித்தோம்.

  ReplyDelete
 15. வணக்கம்! உங்கள் வலைப் பதிவிற்கே உரிய காணொளிப் படங்களோடு, தேன் சிட்டுக்கள் பற்றிய தகவல் களஞ்சியம் அருமை.

  ReplyDelete
 16. wow!!!!!!!!
  What a pretty post. I enjoyed each and every pictures.
  viji

  ReplyDelete
 17. தேன் சிட்டுகள் பற்றிய தகவல்கள் படங்களுடன் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.in/

  ReplyDelete
 18. தேன் சிட்டுகள் பற்றிய தகவல்கள் படங்களுடன் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 19. எத்தகைய மனநிலையில் இருப்பினும் உங்கள் பதிவில் இருக்கும் தேன் சிட்டுகளைப்பார்த்தால் மனம் லேசாகி விடும். அன்புக்கு நன்றிகள்..

  ReplyDelete
 20. உங்களுக்கு மட்டும் எப்படி மேடம் இப்படி விதம் விதமா மேட்டர் கிடைக்குது?
  அதையும் சுவாரசியத்துடன் சொல்லறது உங்களுக்கு கை வந்த கலையா இருக்கு :)

  பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 21. எழுத்து வல்லமையுடன், நவீன யுக்திகளுடன், வண்ணமயமான ஒரு அழகிய இயற்கையின் ரசிப்பினை ரசிக்க வைக்கும் பதிவு.

  ReplyDelete
 22. very nice post. Enjoyed the narration as well as the beautiful photos & animations.

  ReplyDelete
 23. கண்களை மட்டுமல்ல , கருத்தையும் கவர்ந்த பதிவு அழகுங்க .

  ReplyDelete
 24. 62. விரோதி மர்தன கோவிந்தா

  ReplyDelete