Wednesday, March 7, 2012

‘மாசிக் கயிறு பாசி படியும்ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே


சரணாகத தீணார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹ குடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
அமுதைப்பொழியும் நிலவு மாசி பௌர்ணமியன்று பூமியின் 
அருகே வந்து சற்று களங்கம் குறைந்து ஒளி மிகுந்து 
அமிர்தகிரணங்களை வர்ஷித்து ஆனந்தப்படுத்தும் நாள்

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் காரடையான் நோன்பு மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் விரதம் அனுஷ்டிக்கப்படும்..


காரடையான் நோன்பு பூஜையை செய்வதால், கணவன், மனைவி இடையே இருக்கும் பூசல்கள் மறையும். ஜாதகத்தில் அஷ்டம ஸ்தான கிரக தோஷங்கள் நீங்கும். பிரிந்தவர் ஒன்று சேருவார்கள். 
குழந்தை பாக்ய தடை நீங்கி வம்சம் துளிர்க்கும் என்பது ஐதீகம்

சாவித்திரியின் வெற்றிக்கு காரணம் தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியன. இவை அத்தனையும் ஒருங்கே இணைந்த தெய்வப் பிறவியாக அவள் திகழ்ந்து பெண்களுக்கு, எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதை நிரூபித்தவள்..
‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் சரடானது பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும்கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.

தன் கணவன் நலமுடனிருக்க சுமங்கலிகளால் கடைப்பிடிக்கப்படும் மாங்கல்ய பாக்கியம் தரும் மகத்தான வழிபாடு காரடையான் நோன்பு. 


சாவித்திரி தன் கணவனுடன் காட்டில் வாழ்ந்தபோது செந்நெல்லையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெய்யுடன் ஸ்ரீகாமாட்சிஅன்னைக்குச் சமர்ப்பித்து வழிபட்டதாலும், மாசி மாதக் கடைசியிலும் பங்குனிஆரம்ப நிலையிலும் விரதமிருந்து கணவன் உயிரைக் காக்க மனபலம் பெற்றதாலும்,அன்று காரடை தயார் செய்து,
"உருகாத வெண்ணெயும் ஓரடை யும் வைத்து நோன்புநோற்றேன். ஒரு நாளும் என் கணவர் பிரியாமலிருக்க வேண்டும்' என்றுசுமங்கலிகள் பூஜையின்போது வேண்டிக் கொள்ள வேண்டும் என்பார்கள்.
kaaradaiyaan-nonbu-kozukkattaikaaram.JPG
"வாழையடி வாழையாக என் வம்சம் தழைக்க வேண்டும்'' என்று வரம் கேட்டாள்சாவித்திரி. யமனும் சற்றும் யோசிக்காமல்,
""நீ கேட்ட வரம் தந்தோம். உன்வம்சம் வாழையடி வாழையாக வளரும்'' என்றான்.

""யமதர்மரே, மகிழ்ச்சி. உங்கள் வரத்தின்படி என் கணவர் இல்லாமல் என் வம்சம்எப்படித் தழைக்கும்?'' என்று கேட்கவே, கொடுத்த வரத் தைத் திரும்ப பெறமுடியாத நிலையில் எடுத்த உயிரை மீண்டும் கொடுத்து வாழ்த்திவிட்டுச்சென்றான் யமன்.

தான் விரதம் கடைப்பிடித்து பூஜை செய்த நாளிலேயே தன் கணவன் மீண்டும் உயிர்பெற்றதைக் கண்ட சாவித்திரி, ""திருமணமான பெண்கள் தன் கணவனுடன் நீண்ட காலம்வாழ, இப்பூஜை செய்து நல்ல பலனைப் பெறும் பாக்கியத்தை அருள வேண்டும்''என்று 
அன்னை காமாட்சியிடம் வேண்டி அருள் பெற்றாள் சாவித்திரி.

இதனால்தான் ஸ்ரீகாமாட்சி படம் வைத்து இப்பூஜையை இன்றும் 
பெண்கள் செய்கிறார்கள்.

ஒரு சமயம் இறைவன் பரமசிவனார் தனிமையில் இருக்கும்போது, அன்னை பார்வதிஇறைவனின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள். அதன் விளைவால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்து, உலகில் வாழும் ஜீவன்கள் மிகவும் துன்பத்திற்குஆளாயின. 


அதனால் கோபம் கொண்ட இறைவன், பார்வதியை பூலோகம் சென்றுதவமியற்றும்படி கட்டளை யிட்டார். பூலோகம் வந்த பார்வதி, 
மாங்காட்டில் தவமிருந்து, பிறகு, காஞ்சி மாநகருக்கு வந்து கம்பா நதிக்கரையில் அமர்ந்துமண்ணால் சிவலிங்கம் நிறுவி விரதம் மேற்கொண்டு பூஜித்துக் கொண்டிருந்தாள்.
கம்பை யாற்றினில் அன்னை தவம்புரி ... 
கச்சிச் சொக்கப்பெருமாளே. ---
என்பது திருப்புகழ்..

அந்த வேளையில், இறைவனின் திருவிளை யாடலால் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து, பார்வதி பூஜை செய்யும் லிங்கத்தை அடித் துச் செல்ல வந்தது. உடனேசிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இறைவனை வேண்டினாள் பார்வதி.இறைவனும் நேரில் காட்சி கொடுத்தார். வெள்ளம் வடிந்தது. இந்த விரத மகிமையால் ஈசன் அம்பாளுக்குத் தரிசனம் தந்து திருக்கல்யாணம் செய்து கொண்டார்.
காமாட்சி ஏகாம்பரேசுரர் திருக்கல்யாண வைபத்தால் இந்த விரதத்திற்குக்
காமாட்சி விரதம் என்று பெயர். 
அன்னை காமாட்சி இந்த விரதத்தினை மேற்கொண்டதால் காரடையான் நோன்பு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் பெற்றது.

உமாதேவியின் திருமாங்கல்யம், ஈசனை சிரஞ்சீவியாக்கியது’ என்கிறது புராணம். உலகின் தாயான பார்வதிக்கு, உலகின் தந்தையான பரமேஸ்வரன் திருமாங்கல்யத்தை அணிவித்தார் என்ற தகவலை ‘காமேசபந்த மாங்கல்ய சூத்ர சோபித சுந்தரா’ என்னும் தொடரின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ‘

சாவித்ரி, நளாயினி, திரௌபதி, சீதை, அகல்யை, மைத்ரேயி முதலியவர் களின் தாலிபாக்கியம் அவர்கள் கணவர்களின் ஆயுளை நிலைநிறுத்தியது. 


திருமாங்கல்யத்தின் அடையாளம் மூன்று கோடுகளாக அம்பிகையின் கழுத்தில் பதிந்திருப்பதாக ஆதிசங்கரர், சௌந்தர்ய லஹரியில் குறிப்பிடுகிறார்


ஸர்வமங்களா என்று பார்வதிக்கு ஒரு பெயருண்டு. 
கௌரி என்றும் குறிப்பிடுவார்கள். ‘கௌரீ கல்யாண வைபோகமே’ என்று பார்வதி | பரமேஸ்வரர்கள் போல் தம்பதியை பாவிக்கிறோம். 

பார்வதி, லக்ஷ்மி இருவரது சாந்நித்தியமும் திருமாங்கல்யத்தில் இருப்பதால் செல்வத்தையும் வீரத்தையும் பெற்றுவிடுகிறாள் பெண். 


வாழ்க்கைக்குத் தேவையான இவ்விரண்டும் அவர்களின் ஒற்றுமையைப் பாதுகாத்து தாம்பத்தியத்தைச் சிறப்பாக்கும். 


ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து. கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும்.

கார்காலத்தில் (முதல் பருவம்) விளைந்த நெல்லைக் குத்தி கிடைக்கும் அரிசி மாவில், இனிப்பு சேர்த்து அடை தயாரிக்க வேண்டும். இதுவே, காரடை ஆகும். இந்த பெயராலேயே இந்த விரதத்திற்கும்ச பெயர் அமைந்தது. அன்று நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக்கொள்வர்.

பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள்..

கேரளாவிலும், உத்தரப் பிரதேசத்திலும் கொண்டாடப்படும் 
கர்வா சௌத் எனும் பிரசித்தி பெற்ற நோன்பே தமிழ்நாட்டில் 
காரடையான் நோன்பு என்று பெண்களால் கொண்டாடப்படுகிறது.


கதை, புராணக்கதையாக இருப்பினும், காதல், வீரம், விவேகம் கலந்த இந்த சாவித்ரி மட்டும் இக்கால புதுமைப்பெண்களின் உருவமாகத் தான் தெரிகிறாள் என்பது யாரும் மறுக்க முடியாது ..

எதிர் நீச்சல் போட்டு, துணிச்சலுடன் முன்னேறுகின்ற பல கோடி பெண்களின் பிரதிநிதியான இந்த சாவித்ரி நூற்ற நோன்பே இந்த காரடையான் நோன்பாகும்.


மங்களத்தை தரும் மங்கள நாயகியே !
என்றென்றும் மங்கள வாழ்வை அளிப்பாயாக.

இராமாயணத்தைப் படிக்கும் இடத்தில் அனுமனின் சாந்நித்யம் பிரத்யட்சமாவது போலவே இந்த பதிவிரதையான சாவித்ரியின் சரித்திரம் படிக்கப்படும் = கேட்கப்படும் இடத்தில் சாவித்ரிதேவியின் பிரத்யட்சமும் காமாட்சி அன்னையின் அனுக்ரஹமும்
இணைந்து வர்ஷிக்கும்... வாழ்வை வளமாக்கும்..


மனபுள்ளிகாவு, பகவதி அம்மன்

20 comments:

 1. ”மாசிக் கயிறு பாசி படியும்”

  எவ்வளவு ஒரு உள் அர்த்தம் பொதிந்த அழகான வாக்கியம் இது.

  அதுவே தலைப்பு! அருமையோ அருமை!! ;)))))

  ReplyDelete
 2. ஆஹா! காரடையான் நோன்பு பற்றிய அழகான விளக்கங்களுடன் கூடிய மிக நேர்த்தியான பதிவு. ;)))))

  ReplyDelete
 3. ஸர்வ மங்கல மாங்கல்யே
  .............

  சரணாகத தீணார்த்த பரித்ராண பராயணே ......

  பொன்ற திவ்யமான ஸ்லோகங்களுடன் ஆரம்பித்திருப்பது அழகோ அழகு.

  ReplyDelete
 4. ஆரம்பத்தில் காட்டியுள்ள அம்பாள், பிறகு காட்டியுள்ள தீர்க்க சுமங்கலிப்பெண்ணின் அழகிய முகம், நெற்றிப்பொட்டு, அதன் கீழ் பசுமஞ்சள், எடுப்பான மூக்கு, மூக்குத்தி, அழகிய வளைந்த புருவம், கருணை கொண்ட கண்களின் பார்வை, உதடுகள், இழுத்துத் தலையை மூடி முக்காடு போட்டிருக்கும் பாந்தமான துணி என எல்லாமே அழகாக உள்ளது.

  அம்பாளே நேரில் வந்து நிற்பது போன்ற சாமுத்ரிகா லக்ஷணங்கள் உள்ள படம் அது. Superb ;)))))

  ReplyDelete
 5. அடுத்த படத்தில் பூர்ண கும்பம் வஸ்திரமாக நூல் சுற்றப்பட்டு , கழுத்தில் தாலி போல கட்டப்பட்டு, புஷ்பங்கள் அழகாக ரோஸ் + மஞ்சள் வண்ணத்தில் மாலையாக சுற்றப்பட்டு, மாவிலை விரித்து அதன் மேல் மஞ்சள் பூசிய முரட்டுத் தேங்காய் மோத முழங்க, கீழே அரிசித்தாம்பாளம், ரவிக்கைத்துணி என எல்லாமே மிக அருமையாக மங்களகரமாக பார்க்கவே சந்தோஷமாக ...... ;))))))

  அதனடியில் திருமாங்கல்யச் சரடு, புது குண்டுகளும் புதுத் திருமாங்கல்யமும் கட்டியது, பார்க்கப் பார்க்க அழகு .... விவாஹம் ஒன்று நெருங்கி வர இருக்கிறது என்பதைக் கூறுவது போல அல்லவா உள்ளது.

  படத்தேர்வுகள் மிகவும் பாந்தமாகவே செய்கிறீர்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! ;))))))

  ReplyDelete
 6. உருகாத வெண்ணெயும்.............
  ...................... வேண்டும்.

  ஸத்யவான் சாவித்ரி கதை எல்லாமே வெகு அழகாகச் சொல்லி விட்டீர்கள்.

  நல்ல அழகான பதிவு.
  மனமார்ந்த பாராட்டுக்கள்.
  அன்பான வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!

  ReplyDelete
 7. தங்களுக்கு “சர்வதேச பெண்கள் தின” அன்பான வாழ்த்துகள். 08.03.2012

  ReplyDelete
 8. கார‌டையார் நோன்பு ப‌ற்றிய‌ முழுமையான‌ த‌க‌வ‌ல்க‌ள் ம‌கிழ்வுக்குரிது. தாலிய‌ணித‌ல் ப‌ற்றியும் விலாவாரியான‌ செய்திக‌ள்! நேர‌த்துக்கேற்ற‌ ப‌திவுக‌ள் த‌ங்க‌ள் சிற‌ப்பு. பிராம்ண‌ பெண்க‌ள் வ‌ழி கேள்வியுற்று அம்மா வீட்டில் செய்த‌துண்டு. புகுந்த‌ வீட்டில் ப‌ழ‌க்க‌மின்மையால் அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌து ம‌ன‌க்குறைதான். விட்ட‌தை தொட‌ர‌லாமா என்ற‌ எண்ண‌மெழுந்த‌து த‌ங்க‌ள் ப‌திவை ப‌டித்து.

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு.... நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது உங்கள் பகிர்வு மூலம்....

  தொடருங்கள்.

  ReplyDelete
 10. காலம் காலமாக கடைபிடிக்கப்படும் நோன்பை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  ReplyDelete
 11. மகளிர்தின வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி.

  மாசிக் கயிறு, காரடையான் நோன்பு குறித்து விரிவாக அறிந்து கொண்டேன். என் பெரியம்மா பலவருடங்களாக இதைத் தொடருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் கயிறினை எனக்கும் சகோதரிகளுக்கும் தவறாமல் அனுப்பி வருகிறார்கள்.

  ReplyDelete
 12. நல்ல அழகான பதிவு.
  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. vERY NICE POST DEAR.
  i CANNOT MISS YOUR POST.
  VIJI

  ReplyDelete
 14. அருமையான பதிவு.
  நன்றி அம்மா.

  ReplyDelete
 15. காரடையான் நோன்பு விளக்கங்கள் அருமை.

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.in/

  ReplyDelete
 16. காரடையான் நோன்பு பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி.

  ReplyDelete
 17. மாசிக் கயிறு - காரடையான் நோன்பு - விளக்கங்களுடன் கூடிய படங்கள் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 18. 39. தரித்ரஜன போஷக கோவிந்தா

  ReplyDelete