Tuesday, November 13, 2012

தித்திக்கும் தீபாவளியில் திருமகள் பூஜை
ஒளி விளக்குகள் இல்லம் தோறும்  
ஒளிவீசிப் பிரகாசிக்க  உள்ளமெல்லாம் 
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி 
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரம ....
சித்திர பூப்போலே சிதறும் மத்தாப்புடன் 
தீயேதும் இல்லாமல் வெடித்திடும்  கேப்புடன்  
மகிழ்ச்சியாக  முகமோ மலரோ இது என்ன ரசிப்பு  என்று  குழந்தைகள் உற்சாகமாக  மின்னொளி வீசும் எழில் பிரவாகமாக கொண்டாடும் இனிய நாள் .தீபாவளி..
முத்திரை பசும்பொன்னாய் வல்லமை சேர வளமை பொங்க திருமகளின் அவதார நாளான தீபாவளியன்று  மகாலட்சுமி பூஜை செய்வது சிறப்பானது.


திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் 

தீப வடிவில் தீப லக்ஷ்மி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்கச் செய்வாள்

இல்லங்களில் ல்க்ஷ்மி பூஜையும்  லக்ஷ்மி குபேர பூஜையும்  செய்வது சிறப்பான நன்மைகள் அளிக்கும் ... 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த போது மகாலக்ஷ்மி தோன்றியதால் தீபாவளியன்று செய்யும் லக்ஷ்மி பூஜை  மகாலக்ஷ்மியின் பரிபூரண அருள் கிடைக்கும் 

 வாமன அவதாரத்தில் கண்ணன் மூன்றடி மண் கேட்டு மாபலியை மண்ணுக்குள் தள்ளிய வரலாற்றின் நாள் ....

வடக்கில் இராவணனை இராமர் வென்று அயோத்திக்குத் திரும்பிய தினமாக தீபாவளி திகழ்கிறது...
அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்துகொண்டு இறையருளால் துன்பங்கள் எல்லாம் நீங்கி  மெய்ப்பொருள் தத்துவத்தை, தகுந்த குருநாதர் விளக்கிச் சொன்னால், அது தெளிவாக விளங்கும்’ என்கிறார திருமூலர். '
தனக்குப் பாழ்அற்றறிவு இல்லாத உடம்பு’ என்கிறது நான்மணிக் கடிகை. மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம்.


செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமி தேவியின் பூரண அருள் பெற்று வற்றாத செல்வத்தை உடைய குபேரனையும் முறையாக பூஜித்து வழிபட்டால் வாழ்வில் செழிபடையலாம்...
ஸ்ரீலட்சுமி தேவியை பூஜிப்பவர்கள்   பொருள் செல்வம் , வீடு நிறைய தானியங்கள், மக்கட் செல்வம், தைரியம், வீரம், அறிவுச் செல்வம்  ஆகிய அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வில் பரிபூரண ஆனந்தத்தை அடைய முடியும் 

ராஜாதிராஜனாக யட்ச கணங்களின் தலைவனாக,  செல்வத்தை வழங்கும் சங்கநிதி, பதுமநிதி என்னும் பிரதிநிதிகள்  இருபுறமும் வீற்றிருக்க வடதிசைக்கு உரியவராக அஷ்டதிக் பாலகர்களில் இடம்பெற்ற குபேரனை .தீபாவளி மட்டுமின்றி, வெள்ளிக்கிழமைகளிலும் இவரை ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம என 108 முறை சொல்லி மல்லிகை மலர் தூவி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். ஸ்ரீ லக்ஷ்மி குபேர காயத்ரி:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் மஹாலக்ஷ்மிம்யை

கமல ஹாரின்னைய சிம்ஹவாஹின்யை

தனகரிஷ்ன்யை ஸ்வாஹா.செல்வத்தின் அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற நாள் தீபத் திருநாள்.
குபேரனை பூஜித்தால் செல்வம் தழைத்தோங்கும் 
திருவேங்கடவனுக்கே செல்வம் அளித்து கை கொடுத்து உதவிய குபேரன் விஷ்வரஸ் என்பவருடைய மகன். 

லட்சுமி தேவியின் பரமபக்தனாக  தேவியின் பூரண கடாட்சம் கிடைக்கப்பெற்று பெரும் செல்வந்தனாக மாறியவன்..

ஓம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய 
தநதா ந்யாதிபதயே தநதாந்ய ஸ்ம்ருத் திம் மே 
தேஹி தாபா யஸ்வாஹா

 என்னும் - குபேர மந்திரத்தை 108 முறை ஜபித்து வாழ்க்கையில் வறுமையாகிய இருளை விரட்டி, செழிப்பாகிய ஒளியைக் கொண்டு வரலாம்...


காயேன‌ வாச‌ ம‌ன‌சேந்திரியை வா 
புத்யாத்ம‌நா வா ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்


க‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை 
நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌யாமி !1

பாற்கடலைக் கடையும்போது திருமாலின் அம்சமாக கையில் அமுத கலசம், வைத்திய ஏட்டுச் சுவடிகளுடன் தோன்றிய மருத்துவக் கடவுளான .  தன்வந்திரி பகவானை. வணங்கி தீபாவளி லேகியம் செய்து சாப்பிட வேண்டும்.

பசுவின் உடலில் சகல தேவர்களும் இருப்பதாக ஐதிகம். வாழ்வு சிறக்கவும், வம்சம் தழைக்கவும் தீபாவளி தினத்தில் கோபூஜை செய்வது சிறப்பு.

துலாமாத அமாவாசை தினம் முன்னோர் வழிபாட்டிற்குரிய 
முக்கியமான தினம்...
 அவரவர் இல்லத்து முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடைதானம் செய்வதும் இல்லத்து இனிமையை  பொங்கச்செய்யும் ...

குல தெய்வ பூஜை  வாழ்வு பிரகாசிக்க வைக்கும் 

பூர்வஜென் மத்தில் பூமிதேவியாக இருக்கும்போது பிறந்த நரகாசுரன் பெற்ற வரத்தின்படியே தாயான தன் கையாலே  இறந்த நாளை மக்கள் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடையுடன் இனிப்பு சாப்பிட்டு கொண்டாட வேண்டும் ; அன்று மட்டும் கங்கை எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிக்க வேண்டும் என்றும் திருமாலிடம் வரம் பெற்ற  நாள்  தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.....


பூமா தேவியின் அம்சமாக கிருஷ்ண டன் சென்று நரகாசுரனை அழித்த 
சத்யபாமாவை வீரலட்சுமியாக  வழிபடுவது வட இந்திய வழக்கம்.. வாழ்வில் வரும் தடைகள் விலகும் ...

கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு நரக படலம், அகால மரணம், கோர மரணம், ரோகம் ஏற்படாது. 

. தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள். 

அன்று நாம் எங்கிருந்து குளித்தாலும் அது கங்கா ஸ்நானம்தான்.

அன்று எல்லா தேவதைகளும் பண்டிகைப் பொருட்களில் வாசம் செய்வர்.

எண்ணெயில் லட்சுமி, அரப்புத் தூளில் கலைவாணி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கௌரி, மலரில் மோகினி, தண்ணீரில் கங்கை, புத்தாடையில் விஷ்ணு, பட்சணத்தில்அமிர்தம், தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.


தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டம்....
உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம். 
மகாலக்ஷ்மியும் பாற்கடலில் தானே அவதரித்தாள் !

கங்கா ஸ்நானம் செய்தபின்  மகாலக்ஷ்மி  பூஜையில்  வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்க  வீட்டில் செல்வம் பெருகும்;

காசியில்  கங்கையில் நீராடி  அன்னபூரணியை தங்கமயமாக- முழுமையாகத் தரிசிக்கலாம். அன்று இரவு லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னபூரணி வலம் வருவாள். 

பவனி முடிந்ததும் அந்த லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படும். தங்கத்தாலான கால பைரவரும்  தீபாவளி  தினத்தில் மட்டுமே வீதியுலா வருவார்.

Sri Lakshmi Kubera Yanthra

Moola Mantra

Om Shreem Hreem Im Kubera Lakshmiai 

Kamaladharinyai Dhana Akrashinyai Swaaha


http://www.vallamai.com/special/deepavali/diwali-2012/160
வல்லமை சிறப்பிதழில் வெளியான ஆக்கம்..

23 comments:

 1. //எண்ணெயில் லட்சுமி, அரப்புத் தூளில் கலைவாணி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கௌரி, மலரில் மோகினி, தண்ணீரில் கங்கை, புத்தாடையில் விஷ்ணு, பட்சணத்தில்அமிர்தம், தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.//

  எல்லாவற்றையும் ஸ்வீகரித்துக் கொள்வோம். ஆம்பிளைங்க மலர் மட்டும் சூட முடியாது!

  ReplyDelete
 2. அருமை... நன்றி...

  தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. திருமகள் வரவுடன் உங்கள் தீபாவளி ஒளிதருகின்றது.

  மகிழ்கின்றேன்.

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வெற்றிகரமான

  7 2 5 ஆவது

  பதிவுக்குப்

  பாராட்டுக்கள்.!

  வாழ்த்துகள் !!


  அனைவருக்கும்

  இனிய தீபாவளி

  நல்வாழ்த்துகள்!!!


  -oOo-

  ReplyDelete
 5. வரும்
  14.01.2013
  திங்கட்கிழமை
  உத்தராயண
  புண்யகாலம்...

  தை மாதம்
  முதல் தேதி...

  மகர
  சங்கராந்தி
  புண்யதினமான
  பொங்கல்
  பண்டிகையன்று

  தங்களின்
  வெற்றிகரமான
  8 0 0 ஆவது
  பதிவு
  வெளியிடப்பட
  வேண்டும்

  என்ற
  அன்புக்கோரிக்கை
  நேயர்கள்
  சார்பில்
  வைக்கப்பட்டு,
  இலக்கு
  [TARGET}
  நிர்ணயம்
  செய்யப்பட்டுள்ளது.

  ஆனால்
  இலைக்கினை
  அடைய
  அடுத்த
  62 நாட்களில்
  75 பதிவுகள்
  தரவேண்டி
  இருக்குமே!

  சற்றே சிரமமான
  சாதனையாகவே
  இது இருக்கக்கூடும்.

  தங்களால
  மட்டுமே
  இது
  நிச்சயமாக
  சாத்யமாகும்.

  இலக்கினை
  வெற்றிகரமாக
  அடைய
  இனிய
  நல்வாழ்த்துகள்.

  -oOo-

  ReplyDelete
 6. Aha arumaiyana padivu.
  Happy LakshmiKubra pooja to you and your family.
  viji

  ReplyDelete
 7. கவியாழி கண்ணதாசன் said...
  நன்று ....

  நன்றி ..


  இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 8. பழனி.கந்தசாமி said...
  //எண்ணெயில் லட்சுமி, அரப்புத் தூளில் கலைவாணி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கௌரி, மலரில் மோகினி, தண்ணீரில் கங்கை, புத்தாடையில் விஷ்ணு, பட்சணத்தில்அமிர்தம், தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.//

  எல்லாவற்றையும் ஸ்வீகரித்துக் கொள்வோம். ஆம்பிளைங்க மலர் மட்டும் சூட முடியாது! //

  கருத்துரைக்கு நன்றி ஐயா..

  விரும்பினால் காதில் பூ வைத்துக்கொள்ளலாம் ..
  "காதிலே பூ "

  இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete

 9. திண்டுக்கல் தனபாலன் said...
  அருமை... நன்றி... //

  தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... //

  நன்றி..

  இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 10. மாதேவி said...
  திருமகள் வரவுடன் உங்கள் தீபாவளி ஒளிதருகின்றது.

  மகிழ்கின்றேன்.

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். //

  மகிழ்ச்சியான கருத்துரைக்கு நன்றி ..

  இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 11. viji said...
  Aha arumaiyana padivu.
  Happy LakshmiKubra pooja to you and your family.
  viji ..//

  அருமையான கருத்துரைக்கு நன்றி ..

  இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 12. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பு தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்பா இராஜேஸ்வரி...

  ReplyDelete
 14. சகோதரி....உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருட்கடாட்சம் கிடைத்திட வேண்டி, இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களையும் கூறுகின்றேன்.

  //தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் ........வீட்டில் செல்வம் பெருகும்//

  தீபாவளி ஸ்நானம் பற்றியும் வழிபாட்டு முறை பற்றியுமான விளக்கம் இப்போதுதான் உங்கள் மூலம் அறிகிறேன்.

  அருமையான அழகான பதிவு. பகிர்வுக்கும் வாழ்த்திற்கும் மிக்கநன்றி சோதரி!

  ReplyDelete
 15. அருமையான ஆன்மீகத்தகவல்கள்! படங்கள் வெகு சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. தீபாவளி பற்றிய உங்கள் எல்லாப் பதிவுகளும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் இருக்கிறது.

  படங்கள் மனதுக்கு நிறைவைத் தருகின்றன.


  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 17. தீபாவளி வாழ்த்துகள் .தீபாவளி பற்றிய சிறப்பான பதிவு ஒன்று தந்திருக்கின்றீர்கள். உங்கள் பதிவு எப்போதும் ஆக இருக்கும் . அழகாகவும் இருக்கும் .

  ReplyDelete
 18. மன மகிழ்வுடன் என்றும் மங்கலமாய் வாழ்ந்திட இறையருள் துணை நிற்கட்டும். அன்பு சகோதரிக்கும், சகோதரியின் குடும்பத்தார்க்கும் இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 19. தீபாவளி வாழ்த்துக்கள்!
  நரகாசுரன் தாயின் கையால் இறந்தானா? சுருக்கமாகச் சொல்லி நகர்ந்து விட்டீர்களே? நரகாசுரன் பூமாதேவியின் புதல்வனா? சுவாரசியமான கதையாக இருக்கும் போலிருக்கிற்தே?

  ReplyDelete
 20. தீபாவளி அன்று கடைபிடிக்கும் கேதார கெளரி விரதத்தைப் பற்றி ஒருமுறை சொல்லுங்களேன்.

  ReplyDelete
 21. தித்திக்கும் தீபாவளியில் திருமகள் பூஜை என்ற தங்களின் 725 ஆவது பதிவுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  ஸ்ரீலக்ஷ்மி குபேர யந்திரப்படம் நல்லா இருக்கு.

  வல்லமையில் வெளிவந்த கட்டுரைக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  அழகான பதிவு ;)

  ReplyDelete
 22. வை.கோபாலகிருஷ்ணன் said...
  தித்திக்கும் தீபாவளியில் திருமகள் பூஜை என்ற தங்களின் 725 ஆவது பதிவுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  ஸ்ரீலக்ஷ்மி குபேர யந்திரப்படம் நல்லா இருக்கு.

  வல்லமையில் வெளிவந்த கட்டுரைக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  அழகான பதிவு ;)//

  வணக்கம் ஐயா..

  பாராட்டுக்களுக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete