Friday, November 30, 2012

கார்த்திகை தீப ஒளித் திருநாள்
”அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ”கார்த்திகை மாதத்தில்  மாலையில் விளக்கேற்றி வழிபட அருமையான துதி !

சிவனுடன் சக்தி சேர்ந்த பொன்னாள்

ஆறுமுகம் அவதரித்த சுப நாள் கார்த்திகை  தீபத் திருநாள்..!

அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது அஷ்டலட்சுமிகளும்  இல்லத்தில் இஷ்டமாக வந்து குடியேறி மங்களங்கள் மலர்விக்கும் பொன்னாளாகத் திகழ்கிறது...


தமிழ் மக்களின் வாழ்வியலில் கலாசார பண்பாடுகளில் சிறப்புக்குரிய  ஒளித்திருநாள் கார்த்திகைத் தீபம் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது....
.
 பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்  இவைகளால் ஆனதே பிரபஞ்சம். 

அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா. 

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில்தான். மகா தீபம் ஏற்றப்பட்டு பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. 

கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தால் சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தீபத் திருவிழா நாட்களில் தேரோட்டம் நடைபெறும்; 
உண்ணா மலை அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துச் செல்கிறார்கள்....

தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் பரணி தீபமும், மாலையில் மலையுச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.
திருவண்ணாமலை ஜோதிக்கு நிகர் வேறெதுவும் இல்லை. 

பஞ்சபூத லிங்கத்தில் அக்னி லிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலையாம் அருணாசலமே.
திருவண்ணாமலை கிரிவலத்தில் முதல் அடியில்
உலகை வலம் வந்த பலனும், 
இரண்டாவது அடியில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும், 
மூன்றாவது அடியில் அஸ்வமேத யாகம் செய்த பலனும், 
நான்காவது அடியில் அஷ்டாங்கயோகம் செய்த பலனும் கிடைக்கும்.
திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்.
அருட் பெருஞ்ஜோதியாம் ஆண்டவன் அருவமாகவும், உருவமாகவும் விளங்குவது போன்று அக்னியும் பிரகாசிக்கின்றது. 

அக்னியிலே பல விதமான தீபங்கள் தோன்றுவது போல் 'சிவம்' என்ற நாமம் ஒன்றே பல தத்துவங்களைக் கடந்து பற்பல ஜோதி ஸ்வரூபமாகக் காட்சி தருகிறது. 

அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது. 

பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர். 

ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். 

அதுவே ”லிங்கோத்பவ மூர்த்தி” ஆகும். 

சிவ கார்த்திகை, விஷ்ணு கார்த்திகை என கார்த்திகை இரண்டாக கொண்டாடப்படுகிறது. 

 திரிபுர அசுரர்களை அடக்கிய திருநாள் சிவகார்த்திகை என்றும், 

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த நாள் விஷ்ணு கார்த்திகை என்றும் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். 

கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்

கார்த்திகைத் திருநாளன்று அவல் பொரியில் வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றி 'கார்த்திகைப் பொரி' செய்து நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பு.

 கார்த்திகைப் பொரியில் ஒரு தத்துவம் உண்டு. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் பொரியுடன் தேங்காய் துருவலைச் சேர்க்கிறோம். 

தூய்மைக்கு அடையாளமாக வெல்லத்தைச் சேர்க்கிறோம். 

வெண்ணீறு பூசிய சிவபெருமானை இந்த வெண்மையான நெல் பொரியும், வள்ளல் தன்மை கொண்ட மாவலியை தேங்காய் துருவலும் உணர்த்துகிறது. 

பக்திக்கு வசப்படும் இறைவன், பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே கார்த்திகைப் பொரி நமக்கு உணர்த்தும் தத்துவம்.

சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால் சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர். ‘சொக்கப்பானையை வணங்குவது சொக்கப்பனை.........’. 
சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை .
கார்த்திகை சோமவாரத்தன்றும், தமிழக புராதன சிவாலயங்கள் யாவற்றிலும் அந்திப்பொழுதில் அதுவும் மகா பிரதோஷ காலத்தில் “நூற்றியெட்டு” சங்காபிஷேகம் இறைவனுக்குச் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

இயற்கையாகவே ஐப்பசி, கார்த்திகை மாதத்தில், அதிக மழை பெய்யும்.  காலங்களில் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், இல்லம் வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் வேண்டும் 


கார்த்திகைதீபம் உயரமாக மலைமீது ஏற்றப்படுவத்ற்கு
 விஞ்ஞான விளக்கம் உண்டு..

சுழல் காற்றை சமன் செய்யும் குணம் அக்னிக்கு உண்டு.. தை மாதம்  அறுவடையாக வேண்டிய பயிர்கள் பால்பிடிக்கும் பருவத்தில் காற்று சுழன்றடித்தால் விளைச்சல் பாதிக்கப்ப்டும்.. அதனைக்குறைத்து திசைதிருப்பவே மலைமீதான தீபமும், வீடுகள் தோறும் ஏற்றிவைக்கும் தீபமும் பல்வழிகளில் பயன்படுகின்றன்.. 

ஆன்மீகத் தேனில் குழைத்துத் தந்த அருமையான விழா.. 

பன்முகப்பயன்பாடு.. சந்திர ஒளிக்கிரணங்கள்,,,மலையின் ஆன்மீகக்கதிவீச்சு எல்லாம் கிடைக்கும் அரிய தத்துவ விளக்கம்...

சகல ஜீவராசிகளும் பயன் பெறும் ஜீவகாருண்ய விழா.  

ஐப்பசி பட்டாசு வெடிப்பும் வாணவேடிக்கைகளும் வெறும் விளையாட்டல்ல.. மழை அந்தப்பருவத்தில் பெய்தால் பயிர்கள் பாதிக்கப்படும் 

.பட்டாசுகளின் கந்தகப்புகை மழை மேகங்களை கலைத்து வானிலையை சமப்படுத்தச் செய்த அற்புதக்கொண்டாட்டம்!  


சமுதாயமாகசேர்ந்து பல கைகள் தட்டினால் ஓசை பெரு வெடிப்பாய் நிகழ்வதைப்போல வானிலை கால நிலையை மாற்றவே தீபத்திருநாட்கள் கொண்டாட்டம். 

பெரும் புயலைத் தடுக்கும் வெப்பம் ..
காற்றை திசைதிருப்பும் அழல்.
.
உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம் நம் மெய்ஞானிகளை.. 


http://www.vallamai.com/literature/articles/29068/
வல்லமை மின் இதழில் வெளியான எமது ஆக்கத்தை
இங்கும் பகிர்ந்துகொள்கிறோம்...

16 comments:

 1. வரிசையாக தங்களிடமிருந்து அந்த கார்த்திகை மகிமைகளை பற்றிய பதிவுகளில் இப்பதிவும் மிக அருமை.கருத்துக்களும் இதுவரை தெரியாத பல தகவல்களும் அறிந்துக்கொள்ள ஏகுவாக அமைந்துவிட்டது..வழக்கம் போல படங்களும் சிறப்பு..நன்றி.தொடருங்கள்.
  .http://kumaran-filmthoughts.blogspot.com/2012/11/color-of-paradise-1999.html

  ReplyDelete
 2. படங்கள் ஒவ்வொன்றும் அருமை.. நன்றி...

  ReplyDelete
 3. அருமையான படங்களுடன் விளக்கங்கள் அருமை...

  நன்றி அம்மா...

  ReplyDelete
 4. All photos are very good...never seen Deepam from so near...Thanks for sharing

  ReplyDelete
 5. திருவண்ணாமலை தரிசனம் கிடைத்தது! மிக்க நன்றி!

  ReplyDelete
 6. வெள்ளிக்கிழமை உங்கள் பக்கம் வந்து வாசித்து,படங்களைப் பார்த்தாலே மனதிற்கு ஒரு ஆறுதல் !

  ReplyDelete
 7. தென்னாடுடைய சிவனே போற்றி
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....

  ReplyDelete

 8. இப்போது கார்த்திகைத் தீப நாள் என்றால் என் மக்களுக்கு நினைவுக்கு வருவது பிரசாதமான அப்பமும் பொரி உருண்டையும்தான். சிறுவயதில் சொக்கப்பனை சுழற்றியதுண்டு. ஆனால் செயல்முறை கற்கவில்லை. நகரத்துக் குழந்தைகளுக்கு இவை ஏதும் தெரிய வாய்ப்பு இருக்கிறதா.? வழக்கம்போல் பதிவு அருமை.

  ReplyDelete
 9. படங்களும் விளக்கங்களும் மிக அருமை.....

  ReplyDelete
 10. It is very great that you have given the sciencetific reasons for the karthigai deepam. very nice.
  Thanks for the photos. Sitting at home enjoyed the darshinam.
  viji

  ReplyDelete
 11. அருமையான புகைப்படங்கள்,விளக்கங்கள்!

  பாராட்டுக்கள். நன்றிகள்!

  ReplyDelete
 12. படங்களும் விளக்கமும் அருமை.

  ReplyDelete
 13. அத்தனைப்படங்களும் சும்மா ஜொலிக்குதுங்க.

  அதுவும் அடியிலிருந்து மூண்ரு + ஐந்து.

  மேலிருந்து இரண்டு மூன்று அற்புதங்கள்.

  சான்ஸே இல்லை.

  உங்களைப்போல யாராலுமே படம் காட்ட முடியதூஊஊஊஊ.

  >>>>>>

  ReplyDelete
 14. பட்டாஸு வெடித்தல் / கொளுத்துதல்

  கார்த்திகையின் போது கொளுத்தும் சொக்கப்பானை

  மலைமேல் தீபம் ஏற்றுதல்

  போன்றவற்றிற்கு தாங்கள் கொடுத்துள்ள அறிவியல் காரணங்களான, காற்றையும், மழையையும் கட்டுப்படுத்தி, பயிர்களைக் காபாற்றி, அறுவடைக்கான வசதி செய்து கொடுப்பதாகச் சொல்லியுள்ளது மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.


  யூ ஆர் ஸோஓஓஓஓ கிரேட்டூஊஊஊ.

  ஸோ ஸ்வீத்த்த்த்தூஊஊ ஆல்ஸோ ;)

  >>>>>>

  ReplyDelete
 15. கார்த்திகை தீபத் திருநாள் பற்றிய வெகு அழகான அற்புதமான அசத்தலான பதிவு.

  கார்த்திகை தீப விளக்குகளாக பிரகாஸமாக ஜொலிக்கச்செய்துள்ளீர்கள்.

  மனதுக்கு சந்தோஷமாக உள்ளது.

  மனம் நிறைந்த பாராட்டுக்கள்

  இனிய நல்வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

  ooooo

  ReplyDelete 16. @@ வை.கோபாலகிருஷ்ணன் said...
  கார்த்திகை தீபத் திருநாள் பற்றிய வெகு அழகான அற்புதமான அசத்தலான பதிவு.//

  அசத்தலான கருத்துரைகளுக்கு மனம் நிரைந்த இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete