Friday, November 2, 2012

நலம் நல்கும் நிலவு !


காலை (சூரிய உதயம்) முதல் மாலை (நிலவு உதயம்) வரை திருமணமான பெண்கள் உண்ணாமல் நோன்பிருந்து தங்கள் கணவரின் உடல்நிலனுக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும்  பிரார்த்திக்கும்
பண்டிகையாக கார்வா சௌத்   கொண்டாடப்படுகிறது...

நிலவு வந்ததும் அதை நீரிலோ,  சல்லடை வைத்தோ பார்த்து பின் கணவன் முகம் பார்ப்பார்கள். பிரார்த்தனை செய்வார்கள்...

ஐப்பசி மாத  முழு நிலவு கழிந்த நான்காம் நாள் கொண்டாடப்படுகிற நோன்பு சரத் பூர்ணிமா முடிந்து சதுர்த்தி அன்று வரும், நமக்கு அன்று சங்கட சதுர்த்தி இருக்கும். 

chowth என்றால் சதுர்த்தி. அன்று அவர்கள் காலை சூரியன் உதித்த பின், தண்ணீர் கூட இல்லாமல் இரவு வரை விரதம் இருந்து பின் சந்திரனைக் கண்டபின் சப்பிடுகிறார்கள்,

கர்வா என்றால் மண்கலசம். சௌத் (சௌதா) என்றால் நான்கு  - பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள்.

 மண் கலசத்தில் நீரையோ அல்லது பாலையோ நிரப்பி அதில் பஞ்ச ரத்தினங்களை இட்டு தானமாகக் கொடுத்து கணவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் பண்டிகை என்று பொருள்.
மருதாணியின் குளுமை உடல் சூட்டைத் தணிக்க வல்லது. 

கர்வா சௌத் விரதம் மேற்கொள்ளும் போது கையில் மருதாணி இட்டுக் கொண்டு, கை நிறைய வளையல்  அழகாய் அடுக்கி  
முகூர்த்த புடவைகளை கட்டிக்கொண்டு தெருவில் உள்ள பெண்களெல்லாம் ஒன்றாய் கூடி பூஜை செய்கிறார்கள்.

மாலை வட்டமாக உட்கார்ந்து, நடுவில் ஒரு பெரிய விளக்கு வைத்து பேணி என்ற விரத சேவை , பல வித பழங்கள், கேசரி போல் பிரசாதம் வைத்து பூஜை ஆரம்பிக்கிறார்கள். 

கையில் ஒருதட்டில் கோதுமை மாவில் செய்த விளக்கேற்றி நடுவில் வைத்து, வீராவதி  கதையைப் பாட்டாகப் பாடி, ஒவ்வொருவராகத் தட்டை பெற்று ஆரத்தி எடுக்கிறார்கள் 

ஏழு சகோதர்களுக்கு நடுவில் செல்லப் பெண்ணாக் பிறந்த  வீராவதி விரத்தத்தின் போது - சகோதரன் காட்டிய  கண்ணாடியின் பிரதிபிம்பம் மரத்தின் இடுக்கு வழியாகத் தெரிய, வீராவதி சந்திரன் என்று நினைத்து நோன்பை முடித்து சாப்பிட்டுவிட்டதால் உடல் நலம் குன்றிய  கணவரின் நலனுக்காக இடைவிடாப் பிரார்த்தனையில் பிரத்யட்சமாகிய சிவன் பார்வதியிடம்   வீராவதி மனமுருகி மன்னிப்புக் கேட்க கணவன் பிழைத்து எழுந்தாரம் ....


அன்றிலிருந்து கடும் விரதமாக சந்திரனைப் பார்க்கும் வரை பட்டினி கிடக்கும் கொள்கை வந்ததாம்.  
சாவித்திரி சத்தியவான் கதை  மாதிரி இருக்கிறது..


 கர்வா சௌத் தினத்தில் நிலவைப் பார்ப்பதென்பது பகீரதத் தவம்! 

சாதாரண நாட்களில் மாலை ஏழு மணிக்கெல்லாம் குளிர் முகம் காட்டும் நிலவு, இரவு பத்து மணியான போதும் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க இயலாத வண்ணம் மேகங்களுக்கிடையே சென்று ஒளிந்து கொள்ளும்; ! அன்று தான் அளவுக்கு அதிகமாக மேக மூட்டம் காணப்படும்.18 comments:

 1. புதிய தகவல்.
  படங்கள் அத்தனையும்
  அழகு.

  ReplyDelete
 2. சூரியனைத்தான் நேரடியாகப்பார்கமாட்டார்கள்.
  சந்திரனையுமா!

  ReplyDelete
 3. விளக்கத்துடன் நல்ல தகவல்... படங்கள் மிகவும் அருமை...

  நன்றி அம்மா..

  ReplyDelete
 4. வடக்கில் மிகப் பிரபலமான ஒரு பண்டிகை....

  ReplyDelete
 5. எத்தனை எத்தனை ஹிந்தி படங்களில்
  இந்த காட்சிகள் கண்டு இருப்போம்?! .
  அதன் பின்னணி தெரியும் போது
  சுவராச்யமாகத் தான் உள்ளது .
  அருமை.

  ReplyDelete
 6. உங்கள் தேடல் மிகச் சிறப்பானவை!!!!.... .வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete

 7. இதைப் படித்தவுடன் நான் எழுதிய சௌத்வின் கா சாந்த் என்னும் சிறுகதை நினைவுக்கு வருகிறது. நீங்கள் படித்தீர்களா.?

  ReplyDelete
 8. படங்களும் அதற்கான விளக்கங்களும் மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 9. எனக்கு எல்லாமே புதிய தகவல். முதல் மரியாதை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய "அந்த நிலாவைத்தான் கையிலே பிடித்தேன்..." என்று தொடங்கும் பாடல் நினைவுக்கு வந்தது. படங்களுக்கும் பதிவிற்கும் நன்றி!

  ReplyDelete
 10. வடமானிலங்களில்தான் கர்வா சௌத் கொண்டாடி பாத்திருக்கேன்.

  ReplyDelete
 11. இது போன்ற பண்டிகைகள் முற்காலங்களில் குழ்ந்தைத் திருமணம் நடைபெருவதால் தாய் வீட்டார் மகளின் புகுந்த வீட்டிற்கு வந்து செல்வதற்கான ஒரு நடைமுறையாகத் தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தால் தாய் வீட்டு சீரும் மாமியாரின் பதில் சீரும் என்றுத் தொடரக் காரணம் என்று நினைக்கிறேன்.

  அருமையான படங்கள்.

  ReplyDelete
 12. கர்வா செளத் பற்றி சிறப்பான தகவல்கள் அழகிய படங்கள்.அருமையான பதிவு.

  ReplyDelete
 13. வடக்கில் அமர்க்களமான இந்த பண்டிகை பற்றி உங்கள் பதிவில் படங்களும், தகவல்களும் அருமை.

  ReplyDelete
 14. தோழி, கேள்விப்படாத தகவல் தெளிவான படங்கள் உங்கள் ஆன்மீக தேடலுக்கும் பகிர்விற்ரும். நன்றி

  ReplyDelete
 15. அருமையான படங்கள். மருதாணி இட்ட விரல்களைப் பார்க்கும்போது மருதாணி இலை கிடைப்பதில்லையே என்ற வருத்தம் வந்தது,. நேற்று நிலவு வந்ததா தெரியவில்லை. கர்வாசௌத் விரதங்களைச் சினிமாவில் ஆட்டம் பாட்டங்களுடன் பார்த்து அவ்வளவு மனதில் பதியவில்லை. அந்த வேலையை உங்கள் பதிவு செய்துவிட்டது. நன்றி.

  ReplyDelete
 16. நல்ல தகவல்களுடன் அழகிய படங்களும் பதிவுக்கு சிறப்பு தருகின்றன.

  ReplyDelete
 17. நலம் நல்கும் நிலவு

  நல்ல தலைப்பு.

  அழகான படங்கள்.

  இதுவரை கேட்டறியாத புதிய தகவல்கள்.

  கணவருக்காகவா ? மகிழ்ச்சி !!

  அத்தனைக்கும் நன்றி.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. வை.கோபாலகிருஷ்ணன் said...
  நலம் நல்கும் நிலவு

  நல்ல தலைப்பு.

  அழகான படங்கள்.

  இதுவரை கேட்டறியாத புதிய தகவல்கள்.

  கணவருக்காகவா ? மகிழ்ச்சி !!

  அத்தனைக்கும் நன்றி.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.//

  வணக்கம் ஐயா ..

  அருமையான கருத்துரைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா ..

  ReplyDelete