Wednesday, May 8, 2013

வரமளிக்கும் வள்ளல்







வேண்டுவோருக்கு வேண்டியவற்றை வாரி வழங்கும் 
வள்ளல் விநாயகர் .. 

ஓங்கார வடிவமான வேழமுகத்தான் கோயில் கொண்டு, மாறுபட்ட வடிவிலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் ..
புதுச்சேரி மாநிலம், வமுதாவூர் சாலை, திலாசுப்பேட்டையில்  வலம்புரி முத்து விநாயகராக தரிசனம் தந்து புதுவாழ்வு அருள்கிறார் ...

பொதுவாக கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி காட்சி தரும் விநாயகர் வழக்கத்திற்கு மாறாக குரு அம்சத்துடன் தென்திசை நோக்கி மூன்று நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் கொண்டுள்ளார். 

திசை மாறிய தெய்வங்களுக்கு ஆற்றல் அதிகம் என்து ஐதீகம் ...

  வலம்புரி முத்து விநாயகரும் லிங்க வடிவில் சிவ பெருமானும் ஒன்றாக தரிசனம் தருகிறார்கள். 
வழக்கமாக விநாயகரின் கரங்களில் அங்குசம், பாசம் அல்லது சிறிய கோடரி, மோதகம் அல்லது லட்டு இடம் பெற்றிருக்கும். 

ஆனால், இங்கு வெண் சாமரங்கள், மூன்று வாழைப்பழங்கள், செந்தாமரையை ஏந்தி மாறுபட்ட அமைப்பில் காணப்படுகிறார். 

இதற்கு காரணம்? கஜமுகாசுரனால் ஏற்பட்ட துயரத்திலிருந்து அனைவரையும் காக்க விநாயகப் பெருமான் அவனோடு போரிட்டு வென்றதனால் ஏற்பட்ட பாவம் நீங்க கையில் சிவலிங்கம் ஏந்தி வலம்புரி விநாயகராக ஈசனை தியானித்து வணங்கும் நிலையில் பிள்ளையார்பட்டியில் தரிசனம் தருகிறார். 
அதே அம்சமாக இங்கும் வலம்புரி விநாயகராக ஈசனை வழிபடுகிறார். 

ஈசனை வழிபட மலர், பழம் வேண்டாமா? எனவேதான் தன் வலது மேற்கரத்தில் ஈசனுக்குச் சூட்ட செந்தாமரை மலரும், இடது மேற்கரத்தில் முக்கண்ணனுக்கு சமர்பிக்க மூன்று வாழைப்பழங்களையும் ஏந்தியிருப்பதோடு, சிவபெருமானை உபசரித்து பூஜிக்கும் விதமாக, அதே மேற்கரங்களில் கூடுதலாக வெண்சாமரம் ஏந்தியிருப்பதையும் வேறெங்கும் காண இயலாது என்றே சொல்லலாம்.
வலது கீழ் கரத்தில் உடைந்த தந்தமும், மற்றொரு கரத்தை தன் தொடையிலும் வைத்துக் கொண்டு பக்தியோடு சிவபெருமானை வழிபடுகிறார் விநாயகர். 
இவ்வாறு பல விதங்களில் பிள்ளையார்பட்டி விநாயகரோடு ஒன்றியிருப்பதால் புதுச்சேரியின் பிள்ளையார்பட்டியாகவே இத்தலம் கருதப்படுகிறது. 
விநாயகப் பெருமான் தென்திசை நோக்கி குரு அம்சமாக விளங்குவதால் கல்வித்தடை, கடன் தொல்லை, நவகிரக தோஷங்கள் என அனைத்து தடைகளையும் அகற்றி பக்தர்களுக்கு வரமளிக்கும் வள்ளலாக திகழ்கிறார். 
சிதறுகாய் உடைத்து, அறுகம்புல் சாத்தி இருபத்தொரு முறை வலம் வந்து வணங்கினால் போதும், நம் துயரங்கள் அனைத்தும் பொடிப் பொடியாக போய் விடும்.
வலம்புரி முத்து விநாயகரை வணங்கி ஆலயத்தை வலம் வந்தால் சிவபெருமான், உமையவள், விஷ்ணு துர்க்கை, வள்ளி-தெய்வானை சமேத முத்துவேல் முருகப் பெருமானையும் தரிசிக்கலாம். 

நவகிரக சந்நதியில், நவகிரகங்களும் விநாயகருக்கு கட்டுப்பட்டு, வட்ட வடிவமான பாதையில் நின்று பக்தர்களைப் பார்த்து அருள் புரியும் வண்ணமாக மாறுபட்ட அமைப்பில் தரிசனம் தருகின்றனர். 
தூணில் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். விநாயகரில் தொடங்கும் வழிபாடு ஆஞ்சநேயருடன் பூர்த்தி ஆவது ஆதியந்த வழிபாட்டை நினைவு கூறுகிறது.

Lord Ganesha

19 comments:

  1. தந்தைக்கு தனநயனின் வணக்கங்கள். புதிய விஷயங்கள். தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  2. படங்களும் விளக்கமும் அருமை. தொடருங்கள்

    ReplyDelete
  3. சிறப்பான படங்கள்.....

    புதிய தகவல்கள்....

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. புதன் தரிசனம் விக்கின விநாயகனாக அமைந்தது அதிர்ஷ்டமே.
    எத்தனை தகவல்கள்.
    தந்தையைப் போற்றும் புதல்வனாகக் காட்சி கொடுத்து எல்லா மக்களுக்கும் வழிகாட்டியாக இருக்கட்டும்.
    படங்கள் சேமித்து வணங்க வேண்டியவை. நன்றி மா.

    ReplyDelete
  5. புதுச்சேரியின் பிள்ளையார் பட்டி கோவில் செய்திகள், பிள்ளையார் பெருமைகள் எல்லாம் அருமை.
    படங்கள் எல்லாம் அழகு.
    வாழ்த்துக்கள்
    நன்றி.

    ReplyDelete
  6. ஆனை முகனை
    ஆதிமுதல்வனை
    அதிகாலையில்
    தொழுதிட்ட இன்பம்
    உங்கள் பதிவின் மூலம்...

    ReplyDelete
  7. superb pictures new information about lord vinayaga thanks for sharing

    ReplyDelete
  8. சுவாமிமலைக்குச் செல்லும் பாதையிலும் ஒரு வினாயகர்
    திருவலஞ்சுழி .

    இங்கு உள்ள வினாயகரும் வலஞ்சுழியாக தரிசனம் தருகிறார்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  9. “நான் 4 தருகிறேன், நீ 3 தா போதும்” என்று அவ்வையார் பேரம் பேசிய இறைவன், வினாயகர். அவருக்குக் கோபமே வராது என்பது தான் சிறப்பு. எங்கிருந்து பிடித்தீர்கள் இவ்வளவு படங்களை?

    ReplyDelete
  10. மிகவும் சிறப்பான படங்கள்... விளக்கங்கள்... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

    ReplyDelete

  11. 'வரமளிக்கும் வள்ளல்’ ஆகிய தொந்திப்பிள்ளையாரப்பா !

    GOOD EVENING டா அப்பா

    இன்னிக்கு ரொம்ப லேட்டாயிடுச்சுடுடா அப்பா.

    என்னை மன்னிச்சுடுடுடா அப்பா.

    இனிமேல் தான் நான் பொறுமையா இந்தப்பதிவையே படிக்கணும்டா அப்பா.

    ஏதோ இப்போ பத்தோடு பதினொன்றாக என்னையும் சேர்த்துக்குடா அப்பா!! ;)

    மீண்டும் உன்னை தரிஸிக்க வருவேண்டா அப்பா.

    >>>>>>

    ReplyDelete
  12. வலம்புரி முத்து விநாயகரின் சிறப்பினை அறிந்துகொண்டேன்! அழகான படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  13. / பொதுவாக கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி காட்சி தரும் விநாயகர் வழக்கத்திற்கு மாறாக குரு அம்சத்துடன் தென்திசை நோக்கி மூன்று நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் கொண்டுள்ளார். திசை மாறிய தெய்வங்களுக்கு ஆற்றல் அதிகம் என்து ஐதீகம் ...//

    ஆஹா இதைக்கேட்கவே இன்பமாக உள்ளதே.

    எங்கள் வடக்கு ஆண்டார் தெருவில், மொத்தம் உள்ளவை நான்கு பிள்ளையார் கோயில்கள் மட்டுமே.

    நான்குமே தென்திசை நோக்கி உள்ள பிள்ளையார்கள் தான்.

    அதில் ஒருவர் தான் ’ஏழைப்பிள்ளையார்’.

    அவருக்கும் தாங்கள் சொல்லும் ஐதீகப்படி ஆற்றல் மிகவும் அதிகம் தான்.

    http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_28.html

    >>>>>

    ReplyDelete
  14. //விநாயகப் பெருமான் தென்திசை நோக்கி குரு அம்சமாக விளங்குவதால் கல்வித்தடை, கடன் தொல்லை, நவகிரக தோஷங்கள் என அனைத்து தடைகளையும் அகற்றி பக்தர்களுக்கு வரமளிக்கும் வள்ளலாக திகழ்கிறார். //

    வரம் அளிக்கும் வள்ளல் பற்றிய தகவல்கள் அனைத்தையும் வள்ளலாகப் இந்தப்பதிவினில் பகிர்ந்துள்ள ஞானத்த்ங்கமான வள்ளலுக்கு நன்றிகள்.

    // சிதறுகாய் உடைத்து, அறுகம்புல் சாத்தி இருபத்தொரு முறை வலம் வந்து வணங்கினால் போதும், நம் துயரங்கள் அனைத்தும் பொடிப் பொடியாக போய் விடும்.//

    ஹைய்யோ! சூப்பர் ...... பொடிப்பொடியாய் ...... தூள் தூள்!!

    தூளாகச் சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    >>>>>

    ReplyDelete

  15. //வலம்புரி முத்து விநாயகரை வணங்கி ஆலயத்தை வலம் வந்தால் சிவபெருமான், உமையவள், விஷ்ணு துர்க்கை, வள்ளி-தெய்வானை சமேத முத்துவேல் முருகப் பெருமானையும் தரிசிக்கலாம். நவகிரக சந்நதியில், நவகிரகங்களும் விநாயகருக்கு கட்டுப்பட்டு, வட்ட வடிவமான பாதையில் நின்று பக்தர்களைப் பார்த்து அருள் புரியும் வண்ணமாக மாறுபட்ட அமைப்பில் தரிசனம் தருகின்றனர்.

    தூணில் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். விநாயகரில் தொடங்கும் வழிபாடு ஆஞ்சநேயருடன் பூர்த்தி ஆவது ஆதியந்த வழிபாட்டை நினைவு கூறுகிறது.//

    ஆஹா, அருமை அருமை. அனைத்தும் அருமை. மனம் குளிரச்செய்துள்ள அழகான நிறைவான பதிவு. ;)))))

    >>>>>>

    ReplyDelete

  16. எல்லாப்பிள்ளையார் படங்களும் ஜோராக இருக்கின்றன. சில மட்டும் அனிமேஷனில் அட்டகாசமாகக் கொடுத்துள்ளீர்கள். அதுவும் கடைசிபடம் உங்கள் அன்றாடப்பதிவுகள் போலவே சும்மா ஜொலிக்குதுங்க! கண்ணைப் பறிக்கிறது. ;)

    கீழிருந்து மூன்றாவது படம் மட்டும் இதுவரை தரிஸிக்க முடியவில்லை.

    அன்பான பாராட்டுக்கள். மனமார்ந்த நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.

    ooooo 903 ooooo

    ReplyDelete
  17. அந்த ஊஞ்சலாடும் பிள்ளையார் மனதை கொளையடிக்கிறார்.
    புதுச்சேரி பிள்ளையார்பட்டி விஷயங்கள் அறிந்து கொண்டேன்.
    பக்திமயமான பதிவு.

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "வரமளிக்கும் வள்ளல்"://
    /வழக்கமாக விநாயகரின் கரங்களில் அங்குசம், பாசம் அல்லது சிறிய கோடரி, மோதகம் அல்லது லட்டு இடம் பெற்றிருக்கும். ஆனால், இங்கு வெண் சாமரங்கள், மூன்று வாழைப்பழங்கள், செந்தாமரையை ஏந்தி மாறுபட்ட அமைப்பில் காணப்படுகிறார்.

    இதற்கு காரணம்? கஜமுகாசுரனால் ஏற்பட்ட துயரத்திலிருந்து அனைவரையும் காக்க விநாயகப் பெருமான் அவனோடு போரிட்டு வென்றதனால் ஏற்பட்ட பாவம் நீங்க கையில் சிவலிங்கம் ஏந்தி வலம்புரி விநாயகராக ஈசனை தியானித்து வணங்கும் நிலையில் பிள்ளையார்பட்டியில் தரிசனம் தருகிறார்.

    அதே அம்சமாக இங்கும் வலம்புரி விநாயகராக ஈசனை வழிபடுகிறார். ஈசனை வழிபட மலர், பழம் வேண்டாமா? எனவேதான் தன் வலது மேற்கரத்தில் ஈசனுக்குச் சூட்ட செந்தாமரை மலரும், இடது மேற்கரத்தில் முக்கண்ணனுக்கு சமர்பிக்க மூன்று வாழைப்பழங்களையும் ஏந்தியிருப்பதோடு, சிவபெருமானை உபசரித்து பூஜிக்கும் விதமாக, அதே மேற்கரங்களில் கூடுதலாக வெண்சாமரம் ஏந்தியிருப்பதையும் வேறெங்கும் காண இயலாது என்றே சொல்லலாம்.//

    ஆஹா, எவ்வளவு கூர்ந்து கவனித்து ஒவ்வொரு தகவல்களையும் புட்டுப்புட்டுத்தருகிறீர்கள். ;)))))

    தகவல் களஞ்சியம் வாழ்க வாழ்கவே! ;)////////


    Thank you Sir ....

    ReplyDelete
  19. முதலில் கணபதியை வழிபட்டு பின்னர் அனுமனின் அருள் வேண்டுவதையே 'பிள்ளையார் பிடிக்க குரங்காயிற்று' என்கிறார்கள்.
    புதுச்சேரி பிள்ளையார்பட்டி என்று அழகாச் சொல்லியிருக்கிறீர்கள்! வலம்புரி முத்து விநாயகர் பற்றிய
    நிறைய தகவல்கள் - புகைப்படங்கள் என்று வழக்கம் போல அசத்திவிடீர்கள் சகோதரி!

    ReplyDelete