Sunday, October 13, 2013

வெற்றித்திருநாள் விஜய தசமி.!





மாதர்மே மதுகைடபக்னி மஹிஷா ப்ராணப  ஹாரோத்யயே
ஹேவா நிர்மித தூம்ரலோசன வநேஹே சண்ட முண்டார்த்திணீ

நீ: சேஷி - க்ருத - ரக்தபீஜ - தனுஜே நித்யே -  நிகம்பாபஹே 
சும்பத்வம்ஸினி ஸம்ஹராஸுதுரிதம் துர்க்கே நமஸ்தேம்பிகே

- இந்த தியான ஸ்லோகம்  பாவங்களை அகற்றி 
துர்கையின் பேரருள் கிடைக்கச்செய்யும் சக்தி வாய்ந்தது.... 

'மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம்’ துர்கா காயத்ரீ, துர்கா சரணம் துதிகள் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடியது. 

  நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தது நவமியில் நிகழ்ந்ததால் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியதால், விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது..!
ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய 
வாழை வெட்டுவது வழக்கம்..

பண்டாசுரனுடன் தேவி போர் செய்த போது சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அசுரன் வன்னி மரத்தில் ஒளிந்தான். 

தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்து சங்கநாதத்துடன்  வெற்றியை அறிவித்தாள்..!

 இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று வழங்கலாயிற்று. 

அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, அந்தி வானம் சிவக்கும் மாலை வேளையில்  இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.  
விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள பிரசாதங்கள் சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளை இசைத்து  வழிபடுகிறோம்..!
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் 



ராவணனைக் வென்று சீதையை மீட்ட ஸ்ரீராமர், விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்ததைப் போற்றும் விழாவாக, ஸ்ரீராமனின் வெற்றி விழாவாகக் கொண்டாடப்படுகிறது விஜயதசமி.





31 comments:

  1. வணக்கம்
    அம்மா

    அருமையான பகிர்வு கருத்துக்கள் அருமை படங்களும் மனதுக்கு விருந்தாக உள்ளது.. வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. விஜயதசமி வெற்றித் திருநாளாய் மலரட்டும். அனைவரும் ஒன்றிணைந்து வீணை வாசிக்கும் படம் அருமை. நன்றி

    ReplyDelete
  3. அறியாதன அறிந்தோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அழகான படங்களுடன் அற்புதமானப் பதிவு அம்மா. தங்களுக்கு விஜய தசமி வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் இறைப்பணியை தரிசனத்திற்கு காத்திருக்கிறோம். பகிர்வுக்கு நன்றீங்க அம்மா.

    ReplyDelete
  5. முக்திக்கான வழியை சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிங்க. விஜயதசமி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அனைவருக்கும் நல்லதாய் அமையட்டும்,,,

    ReplyDelete
  7. அருமையான படங்கள் + தகவல்கள்... விஜயதசமி நல்வாழ்த்துக்கள் அம்மா..,

    ReplyDelete
  8. படங்கள் + பாடல்கள் + பகிர்வு அருமை...
    இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சிறப்பான பகிர்வு!
    விஜய தசமி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அழகான படங்களுடன் அற்புதமான செய்திகள்.. எல்லாருக்கும் எல்லா நலன்களும் விளைவதாக!..

    ReplyDelete
  11. அழகான படங்களுடன் அற்புதமான செய்திகள்..எல்லாருக்கும் எல்லா மங்கலங்களும் விளைவதாக!..

    ReplyDelete
  12. படங்களே போதும் போல இருக்கிறதே நவராத்திரியின் சிறப்பை விளக்க.
    அற்புதம்.

    ReplyDelete
  13. விஜயதசமி நல்வாழ்த்துக்கள். அழகான படங்களுடன் அருமையான தகவல்கள்.நன்றி.

    ReplyDelete
  14. விஜயதசமி வாழ்த்துக்கள்! வீணைகளை மீட்டும் கைகள். படம் அருமை.

    ReplyDelete
  15. Very nice post and pictures.
    viji

    ReplyDelete
  16. விஜய தசமி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

    வழமைபோல் அருமை அனைத்தும் இன்று!

    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  17. படங்களும் பகிர்வும் அருமை. விஜய தசமி வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. இனிய நல் வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் .சிறப்பான படைப்புக்கு
    மிக்க நன்றி .

    ReplyDelete
  19. விஜயதசமி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. நல்லவேளையாக ‘வெற்றித்திருநாள் விஜயதஸமி’ நாளை வரும் முன்பே இந்தப்பதிவினை படிக்கும் பாக்யம் பெற்றேன்.

    காலையிலிருந்து பிஸியோ பிஸி. ஏராளமான வேலைகள். ஆத்து சரஸ்வதி பூஜை செய்து முடிக்கவே அதிக நேரம் ஆகிவிட்டது..

    விருந்தினர் வருகை. பேரன் அநிருத் வருகை .. என ஒரே அமர்க்களம் தான் .. இன்னும் நீடிக்கிறது.

    பொறுமையாக படித்துவிட்டு மீண்டும் வருவேன். ஆனால் தாமதமாகத்தான் வருவேன்.

    அம்பாள் மன்னிக்கணும்.

    >>>>>

    .

    ReplyDelete
  21. ஆஹா கடைசி மூன்று படங்களில் ..... எத்தனை வீணைகள் ... எத்தனை வித்வான்கள். வீணா கானம் .... ஆஹா சுகமான மழையாக வர்ஷித்து மகிழ்விக்கும் தானே !

    அற்புதம் ... ஆனந்தம் .... பார்க்கவே பரவஸமாக உள்ளது.

    >>>>>>

    ReplyDelete
  22. விஜயதஸமி என்ற நல்ல நாளின் சிறப்புக்களை உங்களுக்கே உரித்தான தனி ஸ்டைலில், சுருக்கமாகவும், சுவையாகவும் பகிர்ந்துள்ளது படிக்கபடிக்க திகட்டாத, பேரின்பமாக உள்ளது.

    எனினும் அபார உழைப்புத்தான் உங்களுடையது.

    பொறுமை .. பொறுமை .. பொறுமை .. அதுவும் ..
    அருமை .. அருமை ,. அருமை... !!!

    >>>>>

    ReplyDelete
  23. அன்றே காட்டிய சுண்டல்கள் தான் என்றாலும் ஏனோ எப்போதுமே ஃப்ரெஷ்ஷாகவே உள்ளன. தங்கள் கைராசி அதுபோல. ;)))))

    வழக்கம்போல 8வது காட்டியுள்ள நிலக்கடலை சுண்டலை மட்டும் அப்படியே எடுத்துக்கொண்டு விட்டேன். ருசியோ ருசி. மேலும் ஒரு ப்ளேட் தாங்கோ, ப்ளீஸ்.

    >>>>>

    ReplyDelete
  24. வன்னி மரத்துடன் கூடிய ‘கன்னிவாழை’ வெட்டு பற்றிய செய்திகள் புதிதாகத் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி.

    மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகம், துர்க்கா காயத்ரி, துர்க்கா சரணம் துதிகள், அம்பாள் 8-9 நாட்கள் போருக்கு உபயோகித்த ஆயுதங்கள், அவற்றிற்கான பூஜைகள்; அதுவே ஆயுத பூஜையின் துவக்கம் என எல்லாச்செய்திகளும் சூப்பர்.

    >>>>>

    ReplyDelete
  25. படங்கள் எல்லாமே வழக்கம்போல் அட்டகாசம். பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    சரஸ்வதி பூஜை + விஜயதஸமிக்கு, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    -oOo-

    ReplyDelete
  26. விஜயதசமி தகவல்கள் அருமை! இனிய சரஸ்வதி பூஜை விஜயதசமி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. வெண்தாமரை மேலமர்
    சாரதா தேவியின் அருளாசி
    நிறைந்திருக்கட்டும்
    இனிய சரஸ்வதி பூஜைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  28. அனைவருக்கும் வெற்றி திருநாளாய் அமையட்டும் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  29. சிறு வயதில் பாலக்காடு கல்பாத்தி ஆலயத்தில் விஜய தசமி அன்று வாழை வெட்டுவது பார்த்தது இப்பதிவு படித்தபோது மனத்திரையில் மங்கலாகத் தெரிந்தது. அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. விஜய தசமி தின சிறப்பு தகவல்கள் அனைத்தும் அருமை. அனைவருக்கும் வெற்றித் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. படங்களும், செய்திகளும் அருமை.
    வெற்றித் திருநாள் விஜய தசமி தகவல்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete