Wednesday, April 9, 2014

இஷ்ட வரம் தரும் அஷ்டவிதார்ச்சனை..!ஜனனீ..ஜனனீ .. ஜகம் நீ அகம் நீ.. ஜஹத் காரணி நீ....

தெய்வங்களுக்கான பூஜைகளில் அர்ச்சனை 
செய்யும் நிகழ்ச்சி சிறப்பிடம் வகிக்கிறது.

அர்ச்சனை என்பது தெய்வங்களின் வீரதீரங்களையும், அளப்பரும் கருணையால் அவர்கள் விளைவித்த அற்புதச் செயல்களையும் குறிக்கும் சிறப்புப் பெயர்களைக் கூறி நமது வாழ்த்தையும் வணக்கத்தையும் தெரிவித்துப் பூக்களைத் தூவி வழிபடுவதாகும்.
தெய்வங்களை அவர்கட்கே உரிய தலை சிறந்த எட்டுப் பெயர்களைக் கூறி வாழ்த்தி வணங்கும் மரபு ஆதியில் இருந்தது.

பின்னாளில் அத்துடன் 100, 1000 என்ற எண்ணிக்கையில் பெயர்களைச் சேர்த்துக் கூறி வணங்கியபோதும், அவை எட்டுக்கும் அதிகமான நூறு (அஷ்டோத்ர சதம்),
ஸ்வர்ண புஷ்பங்கள்...!

எட்டுக்கும் அதிகமான ஆயிரம் ( அஷ்டோத்ர சகஸ்ர நாமம்) 
என்றே அழைக்கப்பட்டன.

ஆயிரம் பெயர்களை நூறு முறை கூறி வணங்கும் 
அஷ்டோத்திர லட்சார்ச்சனை முறையும் உள்ளது.

 தெய்வங்களின் இயல்புக்கும் சிறப்புக்கும் ஏற்ப பல்வேறு 
அர்ச்சனைகளும் செய்யப்படுகின்றன.
செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தன லாபம், தொழில் முன்னேற்றம் கூடும். சூரியனின் அருள் கிடைக்கும். 

மனோரஞ்சிதம், பவழமல்லி மலர்களால் அர்ச்சனை செய்தால் நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும். சந்திரன் அருள் கிட்டும். 

மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை, நந்தியா வட்டை மலர்களால் செய்யும் அர்ச்சனை மன சஞ்சலம் நீக்கும். புத்திக் கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்றவற்றைத் தரும். செவ்வாய் அருள் கிடைக்கும். 

புதனின் அருள் பெற, மருக்கொழுந்து, மாசி பச்சை ஆகியவற்றால் அர்ச்சனை செய்யலாம். வித்தைகளில் தேர்ச்சி கிட்டும்.

குருவின் அருள் பெற, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும்.

சுக்கிரன் அருள் பெற தெத்திப்பூ, செம்பருத்தி, அடுக்கு அரளி மலர்களால் அர்ச்சிக்கலாம். ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும்.

சனி பகவான் அருள் பெற, நீலநிற சங்கப்பூ அர்ச்சனை செய்யலாம். வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும். கருந்துளசி, வில்வம், மகிழம்பூ அர்ச்சனை, சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும். ராகு, கேது அருள் கிடைக்கும்

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் இருப்பதையொட்டி ஐந்து அர்ச்சகர்கள் சிவலிங்கத்தைச் சுற்றி நின்று ஐவகை மலர்களால் அர்ச்சிக்கும் முறைக்குப் பஞ்சமுகார்ச்சனை என்பது பெயர்.ஆறுமுகப் பெருமானுக்கு ஆறு பேர் சுற்றி நின்று செய்யும்
ஷண்முக அர்ச்சனை வழக்கில் உள்ளது.
[p9.jpg]
பைரவருக்கும் எட்டு என்ற எண்ணிற்கும் மிகுந்த தொடர்பு உள்ளது. அதையொட்டி அவருக்கு அஷ்ட விதார்ச்சனை என்னும் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.

இதில் எட்டு விதமான மலர்கள், எட்டு விதமான தளிர்கள், இலைகள் கொண்டு எட்டு பேர் சுற்றி நின்று பைரவரின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி அர்ச்சிக்கின்றனர்.

ஆகம நுல்கள் பல வகையான மலர்களைக் குறித்தாலும் நடைமுறையில் கிராமங்களில் எளிதில் கிடைக்கும் 1.தும்பை, 2.செம்பரத்தை, 3.வண்ண மலர் ஆத்தி, 4.கொன்றை, 5. மதமத்தம் 6. செண்பகம், 7 கள்ளி, 8. நெருஞ்சி ஆகிய எண் மலர்களைக் கொண்டும் பூஜிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து எட்டு விதமான நிவேதனங்கள் நிவேதிக்கப்படுகின்றன.

 வெண்ணெய், நெய்யில் நனைத்த வடை, தேனில் அமிழ்த்திய வடை, தேனில் ஊற வைத்த இஞ்சி, இளநீர், பானகம் முதலியவைகளும் நிவேதிக்கப்படுகின்றன. மிளகுசாதம்(சம்பா சாதம்), தயிர்சாதம், புளிசாதம், வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பருப்புசாதம், எள் சாதம், எலுமிச்சம் சாதம் போன்ற எண் வகை அன்னங்களும், பாயாசங்களும் நிவேதிக்கப்படுகின்றன.
அஷ்டவிதார்ச்சனை செய்வதால் பைரவர் மனம் மகிழ்ந்து அன்பர்களின் வாழ்வில் தோன்றும் அச்சத்தை நீக்கி, வாழ்வில் வளம் தந்து காப்பார் என்பது உறுதியான நம்பிக்கை.
 1008 வடைகளைக் கொண்ட மாலையுடன் அஷ்டவிதார்ச்சனை நடைபெறுவது சிறப்பு!
Photograph Courtesy : The Hindu

16 comments:

 1. அஷ்ட விதார்ச்சனை அறிந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. சிறப்பான படங்களுடன் ஒவ்வொரு விளக்கமும் அருமை அம்மா... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. பைரவருக்கு அஷ்டவிதார்ச்சனை !
  அறியாதன அறிந்தேன் ,
  பதிவிட்ட படங்கள் ஒவ்வொன்றும்
  சொல்லும் கதைகள் பல.
  நேர்த்தியான பதிவு.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 4. விரிவான தகவல்களுடன் , அழகிய படங்களுடன் - நிறைவான பதிவு!..
  வாழ்க நலம்..

  ReplyDelete
 5. எத்தனை வகையான அர்ச்சனைகள். பைரவருக்கு செய்யும் அர்ச்சனை
  தெரிந்துகொண்டேன். காணொளி பாடல் விரும்பிக்கேட்கும் பாடல். ஆரத்தி சுற்றும் படம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.நன்றி.

  ReplyDelete
 6. இந்த ஆண்டின் வெற்றிகரமான 100வது பதிவு பல்வேறு மலர்களின் மணங்களை வீசி மனதை மயக்குவதாக உள்ளதே !

  >>>>>

  ReplyDelete
 7. இன்று மலர்களால் மலர்ந்து சுகந்தம் வீசும் பதிவு ஆரம்ப முதல் இறுதிவரை அழகோ அழகு.

  >>>>>

  ReplyDelete
 8. அடிப்படையான எட்டின் மஹிமைகள் அறிந்தோம்.

  அதிலிருந்து புறப்பட்டது தானோ

  108 அஷ்டோத்ரம்

  1008 சஹஸ்ரநாமம்

  லக்ஷார்ச்சனை

  கோடி அர்ச்சனை

  போன்றவை !

  அருமையான செய்திகளை
  பெருமையாகவும்
  பொறுமையாகவும்
  சொல்லி அசத்தியுள்ளீர்கள்..

  >>>>>

  ReplyDelete
 9. ஜனனீ,,ஜனனீ..
  ஜகம் நீ.. அகம் நீ..
  ஜகத் காரணி நீ ...

  காணொளியில் கேட்டு/பார்த்து மகிழ்ந்தோம்

  >>>>>

  ReplyDelete
 10. எல்லாப்படங்களும் வெகு அழகாக நன்னா இருக்கு.

  ஸ்வர்ணபுஷ்பங்கள் ஜொலிக்கின்றன.

  ooooo

  ReplyDelete
 11. இன்று தங்கள் வலைத்தளமும் வலைச்சரத்தில் அறிமுகம் ஆனது கண்டேன். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. அர்ச்சனைகள் குறித்த விளக்கமும் அஷ்ட விதார்ச்சனை குறித்த சிறப்பும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 13. அஷ்டவிதார்ச்சனை.... தெரியாத தகவல்கள். சிவனுக்கு ஐந்து பேர் செய்யும் அர்ச்சனையும் எனக்குப் புதிய தகவல்...

  நன்றி.

  ReplyDelete
 14. அம்மா வணக்கம்,
  அனைத்தும் அற்புதம் .புது வருடத்திற்கான ஒரு புதிய
  செய்தி .
  சித்திரை முதல் [14-04-2014] அன்று நாம் பஞ்சாமிருதம் சாப்பிடலாம். இது நமக்கு வருடம் முழுவதும் ஆரோக்கியத்தை அளிக்கும். வேலூர் மருத்துவர்
  கண்ணப்பர் அவர்கள் கூறியதாகும்.

  புதிய புளி [நரம்பு நீக்கியது] சிறிது
  மாங்காய் [மேல்தோல் நீக்கியது] சிறிது
  கனிந்த வாழப்பழம் ஒன்று
  வேப்பம்பூ சிறிது
  வெல்லம் சிறிது

  இவற்றை நன்கு கலந்து இறைவனுக்கு படைத்துவிட்டு
  காலையில் முதல்பிரசாதமாக சாப்பிடவும்.
  இது நமக்கு வருடம் முழுக்க பாதுகாப்பாக இருக்கும். நான் கடந்த 40 வருடங்களாக சாப்பிட்டு வருகிறேன். முருகன் அருளால் எந்த விதமான தொந்தரவும் இல்லாமல் இருக்கிறோம்.
  இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் தாய் தந்தையை வணங்கி சாப்பிடலாம்.
  மேலே குறிப்பிட்டது இருவருக்கு போதுமானது .
  குடும்பத்தில் நபர் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற்போல் கூட்டிக்கொள்ளவும்

  முருகன் அருளால் எல்லா நலனும் பெற வேண்டுகிறேன்.

  அன்புடன் S.v .

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்.. வாழ்க வளமுடன்..

   தங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்..

   எங்கள் இல்லத்திலும் காலம் காலமாய்
   சித்திரை முதல் நாளிலும்
   யுகாதி தினங்களிலும் செய்யப்படும்
   பஞ்சாமிர்தம் இதுதான்..

   Delete
 15. இன்றைக்குத்தான் அரச்சனைக்கு முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி அம்மா.

  ReplyDelete