Tuesday, April 1, 2014

நட்சத்திரக்கோவிலில் அருளும் நட்சத்திரநாயகன் - சுயம்பு சுப்பிரமணியர்


சுப்ரமண்ய புஜங்கம்..
தீராத வியாதிகளான வலிப்பு, தீமைமிகு காசம்
குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்ப்புண்
புற்றுநோய், பிசாசு, பொல்லாத மனப்பயம்,
இன்னபிற நோய்கள் அனைத்தும்
தாரகனை வதம் செய்தவனே
பன்னீர் இலையில் மடித்த உன் திருநீற்றைப்
பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடுமே (25)

என்ற புஜங்கப் பகுதி திருச்செந்தூரின் இடப் பெருமைக்கும், சொல் பெருமைக்கும், பொருள் பெருமைக்கும் சான்றாக அமைவது
SadacharamSadacharamSadacharam

Blessing Chellam
[Image1]

[Gal1]
  சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் செங்கம், வில்வாரணி தலத்தில்  லிங்க வடிவ சுப்பிரமணியராக கோலமயில் மேல் ஏறி காலமறிந்து கருணை பொழியும்  திருத்தலமான “நட்சத்திரக் கோயிலில்அருள்பாலிக்கிறார்.

ஜாதகரீதியாக ராகு, கேது தோஷமுள்ளவர்கள்  தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வில்வாரணி ஊரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திருத்தலம் வில்வாரணி முருகனை வழிபட்டு துன்பம் நீங்கி இன்ப வாழ்வு பெறுவர் என்பது நம்பிக்கை.

நெருப்பு சிவன். அதிலுள்ள வெப்பம் உமாதேவி,
நெருப்பின் நிறம் கணபதி, அதன் ஒளி முருகன். இவையாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், லிங்க வடிவில் முருகன் தோன்றியதால், சிவனே முருகன், முருகனே சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது.

ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும்  வில்வாரணி வந்து முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை ...

 
பல ஆண்டுகளுக்கு முன் கோயில் குருக்கள் ஒருவர் பல கோயில்களுக்கு பூஜை செய்து வந்தார்.

வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு குதிரையில் சென்று வருவார்.,

தன் சக குருக்கள் ஒருவருடன் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையன்று திருத்தணி சென்று முருகனை வழிபடுவார்.

 சில காரணங்களால் அங்கு செல்ல இருவருக்கும் தடங்கல் ஏற்பட்ட  மனம் நொந்த அவர்கள் அன்றிரவு உறங்கும் போது, இருவர் கனவிலும் தோன்றிய முருகன், ""நான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளியுள்ளேன். எனக்கு அந்த இடத்தில் கோயில் கட்டி கிருத்திகை நட்சத்திரங்களில் வழிபாடு செய்யுங்கள்,'' என கூறினார்.

மறுநாள் முருகன் குறிப்பிட்ட மலையில் சுயம்புவைத் தேடினர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது.

குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த 
நிலையில் சிலையாகி விட்டது.

குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை 
முருகனாக கருதி வழிபட்டனர்.

 வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது.

நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால், நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது.

,மூலவரின் பெயர் சுப்பிரமணியர், சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.
ஆதிசங்கரர் திருச்செந்தூரில் சுப்ரமணிய புஜங்கம் பாடி  நோய்நீங்கப்பெற்றது போல நட்சத்திரக் கோயில் ஆலயத்திலும் ஆதிசேடன் முருகனை வழிபட்டு நிழல் தந்து நிற்கும் அற்புதம் நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே” என்று எண்ணி எண்ணி வியக்க வைக்கும் அபூர்வ காட்சியாகும்


ஆடி கிருத்திகை மற்றும் இதர கிருத்திகை நாட்கள் இங்கு விழாக்கோலம் தான். பங்குனி உத்திரம் பத்து நாள் நடக்கிறது.

ஐந்தாம் நாளில் முருகன் மலையில் இருந்து கீழிறங்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் நாளில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக 16 லட்சம் ரூபாய் செலவில் தேர் உருவாக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்,
செங்கம், வில்வாரணி - திருவண்ணாமலை மாவட்டம்.

 
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் பஸ்களில் 35 கி.மீ., தூரம் அல்லது வேலூரில் இருந்து 45 கி.மீ., பயணம் செய்து போளூரை அடைந்து, அங்கிருந்து செங்கம் செல்லும் பஸ்களில் 10 கி.மீ., தூரம் சென்றால் வில்வாரணியை அடையலாம். பஸ்ஸ்டாப் அருகிலேயே கோயில் உள்ளது. கோயிலுக்கு செல்ல 300 படிகள் ஏற வேண்டும்.
[Gal1]
ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும்  திருத்தலத்திற்கு வந்து முருகனை வழிபடுவதாக நம்பிக்கை... எனவேதான் இது ‘நட்சத்திரக் கோயில்‘ என அழைக்கபடுகிறது.

ஆகையால் 27 நட்சத்திரங்களில் பிறந்த எல்லா உயிர்களும் இந்த முருகனை வழிபட்டால் எல்லா நலன்களும் பெறுவார்கள் என்பது உறுதி.

‘நட்சத்திரக் கோயில்’ என்ற பெயர் ‘ நல்ல க்ஷேத்திரக் கோயில்‘ – வழிபட சிறந்த தலம் – என்றும்  பொருள் கொள்ளலாம்..!.

கிருத்திகை நட்சத்திரத்தில் இத்திருக்கோயில் முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும், கார்த்திகைப் பெண்கள் இத்திருக்கோயிலில் வந்து ஒவ்வொரு கிருத்திகை அன்றும் முருகன் வழிபடுவதாக நம்பப்படுவதாலும் இது ‘ கிருத்திகைக் கோயில் ‘ எனவும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாத கிருத்திகையன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இத்திருமலையை வலம் வந்து வள்ளல் முருகன் அருளை அள்ளிச் செல்கின்றனர்.

அங்காரஹ தோசம் உள்ளவர்கள் நட்சத்திரக் கோயில் ஆறுமுகனை நம்பி அபிஷேக ஆராதனை செய்தால் மங்காத வாழ்வு பெறுவார்கள்.

கனவில் வந்து சுயம்புவாய் காட்சியளித்து ஆலயம் அமைக்கச் சொன்னவன் திருத்தணிகை முருகன்.  

ஆதிசேடன் வழிபாடு செய்து நிழல் தந்து நிற்பதால் திருசெந்தூர் முருகன் .

சிவபெருமான் ஓம் எனும் பிரணவத்திற்கு பொருள் கேட்க முருகன், என்னை குருவாக ஏற்று நீங்கள் சிஷ்யனாக அமர்ந்தால் சொல்கிறேன் என்றது போலவே இந்த ஆலயத்திலும் சிவலிங்கம் மூலவருக்கு கீழே அமைந்திருப்பதால் சுவாமிமலை முருகன். 

அருள்மிகு அன்னை வள்ளி மற்றும் தேவசேனாவுடன் காட்சியளிப்பதால் பழமுதிர்சோலை மற்றும் திருபரங்குன்றம் முருகன். 

தஞ்சமடைந்தோரின் நெஞ்சில் நின்று தரிசனம் தரும் தண்டாயுதான் தனிக்கோயில் கொண்டிருப்பதால் பழனி முருகன்.

எனவே இந்த ஆலயத்திற்கு வந்து முருகனை வணங்கினால் அறுபடை வீடுகள் எல்லாவற்றிற்கும் சென்று முருகன் அருள் பெற்றதற்கு ஈடாகும் என்பது ஆன்றோர் கண்ட அனுபவம்.




[Gal1][Gal1][Gal1]

21 comments:

  1. நட்ஷத்திரமலை பற்றியும் சுப்பிரமணியர் மகிமையையும் அறிந்தேன். அழகான படங்களும் நாகம் லிங்கத்திற்கு குடை பிடித்த படியே சிலையானதும். மெய் சிலிர்க்க வைத்தது. நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  2. சுயம்பு சுப்ரமணியர் ஆலயம் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. அழகான படங்களுடன் சிறப்பான விளக்கங்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நட்சத்திரக் கோவில்..... இது வரை கேள்விப்பட்டதில்லை...

    படங்களும் தகவல்களும் நன்று.

    ReplyDelete
  5. நட்சத்திர கோவில் மிக அழகு.
    இக் கோயிலை தரிசனம் செய்தால் அறுபடைவீடுகளையும் தரிசனம் செய்த பலன் என்பதை அறியும் போது மகிழ்ச்சி.
    இன்று உங்கள் புண்ணியத்தில்தரிசனம் கிடைத்துவிட்டது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. திருவண்ணாமலையிலிருந்து போளூர் செல்லும் பாதையில்
    செய்யாற்றின் மேல் கட்டப்பட்டிருக்கும் பாலத்தைக் கடந்தவுடன்
    இடதுபுறம் செல்லும் பாதையில் கலசபாக்கம் என்ற சிற்றூர். அதைக்
    கடந்தவுடன் பூண்டி என்ற சிற்றூரில் தோபா சுவாமிகள் என்ற சித்தரின் ஆலயம். அவரை தரிசித்து முன்னே சென்றால், போளூரிலிருந்து செங்கம் செல்லும் பாதையில் இடதுபுறம் திரும்பினால், 3 கி. மீ. தொலைவில்
    வில்வாரணி - நட்சத்திரக் கோவில்.

    எனக்கு பழக்கப்பட்ட இடம் என்பதாலும், தோபா சுவாமிகளை தரிசிக்கும் எண்ணமுடையவர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என்பதாலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன்.

    ReplyDelete
  7. சென்னை திருவான்மியூரில் சர்க்கரை அம்மாள் என்ற பெண் சித்தரின் ஆலயம் / சமாதி இருக்கிறது. இவர் போளூருக்கு அருகில் உள்ள தேவிகாபுரம் என்ற ஊரில் அருள்பாலிக்கும் " பெரிய நாயகி" யை வழிபாட்டு, பின் வில்வாரணியில் நட்சத்திர குன்றின்மேல் வீற்றிருக்கும் முருகனைச் சரணடைந்து, அங்கிருந்த மற்றொரு பெண்சித்தருக்குச் சிஷ்யையாகி, சில சித்துக்களைக் கைவரப் பெற்றவர். நட்சத்திரக் குன்றிலிருந்து சென்னைக்கு பறந்தே சென்றாராம்.

    ReplyDelete
  8. தங்களின் பகிர்வுகளால் செல்லமுடியாத, அறிந்திராத கோவில்கள், சுவாமிகளின் காட்சிகளை, அருமைகளை,சிறப்பான தகவல்களை அறியமுடிகிறது.மிக்க நன்றிகள்.
    நட்சத்திரக்கோவில் பற்றிய தகவல்கள்,விளக்கங்கள் ,அழகான படங்களுடன் பகிர்வு அருமை. நன்றி.

    ReplyDelete
  9. காணொளி கண்டோம். அருமை.

    >>>>>

    ReplyDelete
  10. சுப்ரம்ஹண்ய புஜங்கத்துடன் ஆரம்பமே ஜோர் ஜோர்

    >>>>>

    ReplyDelete
  11. படங்களும் விளக்கங்களும் அற்புதமாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  12. ஸ்தல புராணம், கோயில் அமைந்துள்ள இடம், அதன் சிறப்புகள் முதலியன கொண்ட நக்ஷத்திரப்பதிவாக அமைந்துள்ளது மேலும் மகிழ்வளிப்பதாக உள்ளது.

    ooooo

    ReplyDelete
  13. அழகிய படங்களுடன் சுயம்பு சுப்பிரமணியர் மற்றும் நட்சத்திரமலை பற்றியும் தெரிந்து கொண்டேன். அருமை.

    ReplyDelete
  14. நட்சித்திர மலைப் பற்றி , படங்களுடன், விவரங்களும் அருமை. சுப்பிரமணிய புஜங்கம் இனிமையில் லயித்தேன். பாடியது யாரென்று தெரிவித்தால் அதை டவுன்லோட் செய்து கொள்ள வசதியாயிருக்கும்.

    ReplyDelete
  15. அருமையான பகிர்வு. நட்சத்திர கோவில் - இதுவரை அறியாத தகவல்.

    ReplyDelete
  16. முருகப் பெருமானின் திவ்ய தரிசனம் ... நன்றி!

    ReplyDelete
  17. இதுவரை அறியாத ஒரு தகவல்! படங்கள் அருமை! பதிவும் அருமை!

    ReplyDelete
  18. நட்சத்திர கோயில் சுயம்பு சுப்ரமண்யர் தரிசனம் அருமை! அறியாத பல தகவல்கள்! படங்கள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  19. கோவில் பற்றிய பகிர்வு அருமை.ந ஜானாமி சப்தம் ந ஜனாமி சார்த்தம்!
    நன்றி











    ReplyDelete
  20. நட்சத்திர கோவில் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி அம்மா.

    ReplyDelete