Wednesday, September 17, 2014

சௌபாக்கியங்கள் அருளும் ஸ்ரீசௌந்தர நாயகி.தன்னடியார்க்கு அருள்புரிந்த தகவுதோன்றும் 
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் 
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் 
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும் 

துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்பும் 
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும் 
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் 
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. -திருநாவுக்கரசர்
ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர். அம்பாள்- ஸ்ரீமின்னம்மை என்கிற 
ஸ்ரீசௌந்தர நாயகி.அருளும் புஷ்பவனக் காசி’ 
என்று போற்றப்படும் திருப்புவனம் தலத்தில் 
பித்ருக்களுக்கான கடமையைச் செய்வது விஷேசம்..
திருப்புவனம். தலத்தில்... கோபுர விநாயகர், குடைவரை விநாயகர், 
அனுமதி பெற்றுக் காரியத்தில் இறங்க ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், 
ஸ்ரீமகா கணபதி, இறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி பெறவும், யாகம் சிறப்புறவும் அருளும் விநாயகர்கள், சூரியனார் வழிபட்ட ஸ்ரீபாஸ்கர விநாயகர், இரட்டை விநாயகர் உட்பட 14 விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

சூரியனின் சாபம் நீங்கப் பெற்ற தலம் என்கிற பெருமையும் திருப்புவனம் தலத்துக்கு உள்ளதை அறிந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இங்கு வந்து வழிபட்டு, பித்ருக்களை ஆராதித்து, சூரிய நமஸ்காரம் செய்து, விநாயகரை வழிபட்டுள்ளனர் என்கிறது ஸ்தல வரலாறு. 

ஸ்ரீபாஸ்கர விநாயகருக்கு அருகில் சூரிய தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்டு, ஸ்ரீபாஸ்கர விநாயகருக்கு அருகம்புல் சமர்ப்பித்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி, சௌபாக்கியத்துடன் வாழலாம் என்பது நம்பிக்கை 
விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் இங்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளைத் தரிசித்து வணங்கிட, நம் வாழ்வு வளமாகும்.
வைகை ஆற்றின் தென் கரையில் திருப்பூவணம் உள்ளது. 

திருக்கோயிலுக்கு நேர் எதிரே வைகைஆற்றின் வடகரையில் பார்வதி தேவியார் தவம் செய்த இடம் உள்ளது, 

இங்கே வந்த திருஞானசம்பந்தர் வைகை ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன.

காசியிலும், ராமேஸ்வரத்திலும் அஸ்தியாக இருந்தது இங்கு புஷ்பமாக இருந்ததால் காசி நகரத்தை விட 16 மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. இதை "காசிக்கும் வீசம் அதிகம்' எனும் சமயபெரியோர்கள் கூற்றிலிருந்து அறியலாம். 

காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது

பொன்னனையாளுக்கு நடராஜப்பெருமானை பொன்னார் மேனியாகக்காண வேண்டும் இறைவனை பொன்னால் செய்து பூஜிக்க வேண்டும் என்பது அளவிடமுடியாத ஆசையாக இருந்தது
பக்தையின் ஆசையை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார் சித்தர் வேடத்தில் வந்த சிவன். '

உன் வீட்டில் உள்ள பித்தளை, செம்பு, இரும்பு போன்ற உலோக பாத்திரங்களை எல்லாம் கொண்டு வா' என்று சொன்னார்.
சித்தர் வேடத்தில் வந்த சிவன் அந்த பாத்திரங்கள் மீது திருநீறு தெளித்து ஆசீர்வதித்தார். பின்னர் பொன்னனையாளிடம், 'அம்மா இந்த பாத்திரங்கள் அனைத்தையும் இன்றிரவு தீயில் இட்டு எடுத்தால் பொன்னாகி விடும். அதைக்கொண்டு உன் விருப்பப்படி இறைவனின் திருவுருவை பொன்னால் செய்து கொள்' என்று அருளி மறைந்தார்.

மதுரை சோமசுந்தரப்பெருமானே சித்தராய் வந்து ரச வாதம் எனும் திருவிளையாடல் செய்து அருளியதை அறிந்து நெகிழ்ந்து போய், அவர் சொன்னபடியே செய்தார் பொன்னனையாள். பாத்திரங்கள் எல்லாம் பொன்னாக மின்னின.

அவற்றைக் கொண்டு சிவபெருமானின் தங்கத்திருமேனியை உருவாக்கி அதனை பிரதிஷ்டை செய்தார். அந்தச்சிலையின் பேரழகினை கண்களால் அள்ளிப்பருகியபின்னும் ஆவல் தீராமல் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி முத்தமிட்டுத் தனது அன்பினை வெளிப்படுத்தினார்.

சிவத்தொண்டு புரிந்து பொன்னனையாள் முக்திபேறு பெற்ற பக்தி உணர்ச்சி மேலிடும் இந்த காட்சி திருபுவனம் கோவிலில் நடராஜர் சன்னதி எதிரே ஒரு தூணில் புடைப்புச்சிற்பமாக இன்றும் காட்சி தருகிறது. 
[Gal1]
மதுரைக்கு அருகில் தென்கிழக்கே வைகையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது திருப்பூவனம் எனப்படும் திருப்புவனம்.  

பாண்டிய தேசத்தின் 13-வது கோயில் இது என்கின்றனர். பாண்டிய மன்னன் கட்டிய இந்தக் கோயிலுக்கு திருமலை நாயக்க மன்னரும் பல திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்துள்ளார்.

 4 யுகங்களைக் கடந்த கோயில், 'ரசவாதம் செய்த படலம்’ எனும் 36-வது திருவிளையாடல் நிகழ்ந்த தலம் ஆகிய பெருமைகளும் உண்டு. '

ஆடித்தபசு மண்டபத்தின் சிறப்புகள்.
அம்பாள் ஆடிமாதம் தவம் செய்த இடம்.
திருஞானசம்பந்தருக்கு வைகை ஆற்றின் மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்த இடம்.
திருஞானசம்பந்தர் நின்று பாடிய இடம்.
நந்தியைச் சாய்ந்திருக்கச் சொல்லி திருஞானசம்பந்தருக்கு திருப்பூவணன் காட்சியருளிய இடம்.
திருஞானசம்பந்தனைப் பின்பற்றி, திருநாவுக்கரசர், சுந்தரர், கரூர்தேவர், அருணகிரிநாதர் முதலான நின்று பாடிப் பணிந்த இடம்.
[Image1]

13 comments:

 1. திருபுவனத்தின் சிறப்புகளையும், தொண்டர்களுக்கு இறைவன் அருளாட்சி புரிவதனையும் விளக்கியமைக்கு நன்றி!

  ReplyDelete
 2. தல வரலாறும்..சிறப்புகளும் அருமை...

  ReplyDelete
 3. வணக்கம்
  அம்மா.
  விளக்கமும் படங்களும் மிகச் சிறப்பாகஉள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. தல வரலாறு மிக அருமை!
  படங்களும் சிறப்பு!

  வாழ்த்துக்கள் சகோதரி!

  ReplyDelete
 5. திருபுவன திருத்தலத்தின் தகவல்கள்,சிறப்புகள், அழகான படங்களுடன் அனைத்தும் அருமை.நன்றி

  ReplyDelete
 6. காசியைவிட பதினாறு மடங்கு அதிக புண்ணியம் தரும் இத்தலம் பற்றிய பல விவரங்களையும் படித்து அறிந்தேன். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. திருப்பூவனம் தலக் குறிப்புகள் சிறப்பு! படங்கள் மிக அழகு! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 8. குழந்தைகளுடன் விடுமுறையில் போய் வந்து நானும் இக் கோவில் பதிவு எழுதினேன். அழகான கோவில்.அருமையான சுற்றுசூழல் அடங்கிய ஊர்.
  அழகிய படங்கள் விரிவான செய்திகள் அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 10. அருமை அனைவருக்கும் செளபாக்கியம் கிட்டட்டும்..

  ReplyDelete
 11. சிறப்பான படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 12. தல வரலாறும் படங்களும் வழக்கம்போல மிகச்சிறப்பாக இருக்கின்றன!!

  ReplyDelete