Thursday, September 18, 2014

ஆனந்தம் அருளும் ஸ்ரீ அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்



யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத மஸ்தகா அஞ்சலிம்
பாஷ்ப வாரி பரிபூர்ண லோசனம் மாருதிம் நாமதா ராக்ஷஸா அந்தகம்

எங்கெங்கு இராமபிரானது புகழ் பாடப்படுகிறதோ அங்கெல்லாம் சிரத்தின் மேற்குவித்த கையனாய் ஆனந்தக் கண்ணீர் நிரம்பிய கண்ணனாய் அனுமன் நிற்பார் ...

அசாத்திய சாதக சுவாமின் அசாத்தியம் தவ கிம் வத
ராம துதோ கிருபா சிந்தோ மத் கார்யம் சாதக பிரப்ஹோ !!!

  புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
  அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்


சனிக்கிழமை இரவு கோவை அவினாசி சாலயில் அமைந்திருக்கும் அஷ்டாம்ச வரத ஆஞ்நேயர் ஆலயத்திற்குச்சென்றிருந்தோம்..

கர்பக்கிரஹ கதவுகள் மூடியிருக்க  வழக்கமாக முன்புறம் எரியும் நெய்விளக்கின் ஒளியில் பஜனை நடைபெற்றுக்கொண்டிருந்தது..
அமரப்போன எங்களை முன்புறம் வாருங்கள் என அழைத்துச்சென்று கர்பக்கிரகத்தின் வாசற்படி அருகில் அமரவைத்தது அந்த அனுமனைத்தவிர யாராக இருக்கும் ..!
அன்று மகனின் பிறந்த நாள்..வெளிநாட்டில் இருக்கும் அவருக்கு போனில்வாழ்த்துதெரிவிட்டு வந்திருந்தோம்..
பஜனைப்பாடல்களை உள்வாங்கி திருப்பிச்சொல்லி பஜனையில் கலந்துகொண்டோம்..நெய் விளக்கின் அற்புத தீபாரதனை மனம் நிறைத்தது..!
புரட்டாசி சனிக்கிழமைகளில் விஷேச அலங்காரகளை விளக்கினார் அர்ச்சகர் ஸ்வாமி..
புரட்டாசி சனிக்கிழமை கூட்டம் அதிகம் இருக்கும் காரணத்தால் கோவிலுக்கு வருவதை தவிர்க்கவேண்டாம் ..
ஒரு முறை அலங்காரத்தை தவறவிட்டால் மறுபடியும் அந்த அலங்காரத்தைப்போல் வேறு நாளில் காணமுடியாத நூதனமான வித்யாசம் இருக்கும் .. அன்று அந்த அலங்காரத்தை தவறவிட்டால் இனி அடுத்த ஜன்மாவில்தான் காணக்கிடைக்குமாம்..
திருப்பதியைப்போல் அண்டா அண்டாவாக சர்கரைப்பொங்கல் நைவேதம் நடைபெறுமாம்.. அதற்கு தரமான பச்சரி , புத்துருக்கு பசுநெய் , முந்திரி ,திராட்ஷை நெய் ஆகியவை விரும்புபர்கள் காணிக்கைகளாக அளிக்கலாம் என அறிவித்தார்கள்.

வஸ்திரம் சாற்றுவதற்கும் முன்பதிவு அவசியம் .. பட்டுப்புடவை மிக அலங்காரமாக சாற்றுகிறார்கள்..! 
புரட்டாசி சனிக்கிழமை பத்தாயிரக்காக்கான வடைகளால் வடை அலங்காரம் ,

கோடிக்கணக்கான ராமநாமம் ஜபித்து பெற்ற சுயரூப பச்சை சார்த்தி வானர அனுமன் அலங்காரம் ,


செந்தூர , வெண்ணைக்காப்பு அலங்காரங்கள் ,

ஒளிரும் முத்துக்களால் ஆன முத்தங்கி அலங்காரம் ,

தங்கக்கவசம் அலங்காரம் ,

 தக தக என ஒளிரும் கதிரவனுக்கு நடுவில் 
ஸ்வர்ணம் போல ஜொலிக்கும் அலங்காரம் ,



















ஐப்பசிமாதம் பொங்கலன்று கரும்பு அலங்காரம் , போன்றவற்றைப் பற்றியும் சிறப்பாக கூறினார்கள்..
Photo: பீளமேடு - ஆஞ்சநேயர்

 
சாளக்கிராமத்தால் ஆன மூலவர் அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர்  சிவலிங்கத்திற்குள் காட்சியளிப்பது சிறப்பம்சம். ஆஞ்சநேயரின் வால், குபேர திசையான வடக்கு நோக்கி இருப்பதால் வழிபடுவோருக்கு கிரகதோஷம் நீங்குவதோடு செல்வவளமும் பெருகும். உற்சவர் சிலை ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் வழங்கப்பட்டது. சுவாமியின் வலக்கையில் மகாலட்சுமி குடிகொண்டிருப்பதாக ஐதீகம்
ஆஞ்சநேயர் எட்டுவிதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்

 :1. அனுமனது  வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.

2.மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த. ஐந்து வகை ஆயுதங்களில்  கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு :

3.  மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி  மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார்.இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு :

4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு :

5.ஆஞ்சநேயரது மிகவும் சிறப்புபெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ள  .  அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது  இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. ""ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு :

6. ஆலவாயன்  சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு : ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு: ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.
எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு : ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது .. அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம் ..!

14 comments:

  1. அவினாசி சாலையில் ஆலயம் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள்? மிகச் சரியாக குறிப்பிட்டால், மறுமுறை கோவை பயணிக்கும் போது, தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும்! அற்புத தரிசனம்! ஓம் ராம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .. வாழ்க வளமுடன்..

      கருத்துரைகளுக்கு நிறைவான நன்றிகள்..

      அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் ஆலயம் கோவை அவினாசி சாலையில் சுகுணா கல்யாணமண்டபத்துக்கு அருகில் அமைந்துள்ளது

      Delete
  2. ஜெய் அஞ்சனை புத்ர...

    ReplyDelete
  3. கண்கவரும் படங்களுடன் - அரிய தகவல்களுடன் இன்றைய பதிவு.. அஷ்டாம்ச ஆஞ்சநேயர் அனைவருக்கும் நல்லருள் பொழிவாராக..

    ReplyDelete
  4. எத்தனை எத்தனை அலங்காரங்கள் அநுமனுக்கு. கண்கவரும் படங்கள்.
    அஷ்டாம்ச ஆஞ்சநேயரின் சிறப்பான தகவல்கள்+படங்கள் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. ஆனந்தம் தரும் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் அற்புதம் சகோதரி!

    எதிர்பாராத ஆனந்தம் எனக்கும் தந்திருக்கின்றான்!..
    அழகான படங்களுடன் சிறந்த பதிவு. அருமை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அருமை.அஞ்சிலே ஒன்று பெற்றவன் அருள் புரியட்டும்

    ReplyDelete
  7. தெய்வீக பதிவிடும் தங்களுக்கு தெய்வம் என்றும் துணையிருக்கும்.

    ReplyDelete
  8. காண்போர் எல்லோருக்கும் ஆஞ்சநேயர் அருள் கிடைக்கட்டும்!
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  9. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  10. ஆஞ்சநேயர் குறித்து மிகச் சிறப்பாக, அழகாக... காண்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டிய படங்களுடன் பகிர்வு அருமை அம்மா..

    ReplyDelete
  11. எட்டு வித அம்சங்கள் பொருந்திய அனுமனின் தரிசனம் - விதம் விதமான அலங்காரங்களில்....

    மிக்க நன்றி.

    ReplyDelete
  12. what is benefit of offering thanga deepam to hanuman sir.why they offer guava fruit sir.

    what is speciality of north facing god sir.

    ReplyDelete
  13. what is benefit of offering thanga deepam to hanuman sir.why
    gauva fruit garland is offered to hanuman sir.

    ReplyDelete